விக்கிரக ஆராதனை ஒரு ஆய்வு

 ஒரு ஆய்வு


விக்கிரக ஆராதனை



விக்கிரகாராதனை என்பது என்ன:


உருவாக்கப்பட்ட ஒரு பொருளைத் தெய்வமாக நினைத்து அதை ஆராதிப்பது தான் விக்கிரகாராதனை.



அப்போஸ்தலன்  பவுலின் பார்வையில் விக்கிரகாராதனை என்பது என்ன:-


ரோமர் 1:23-25 -ன் படி    ‌‌

"அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்... தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரை தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள். அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்" என்கிறார்.


வேதாகமத்தில் முதன் முதலில் விக்கிரக ஆராதனையைக் குறித்த 

ஆதி 31:19-ல்  காண முடியும். 

யாக்கோபின் மனைவியாகிய ராகேல் தன் தகப்பனாகிய லாபானின் சுரூபங்கலைத் திருடிக்கொண்டு வந்தாள். என்பதே அது

தாவீதின் மனைவியாகிய மீகாளும் அப்படிப்பட்டதொரு சொரூபத்தை வைத்திருந்தாள்  என்று 1 சாமு: 19- இல் பார்க்க முடியும்.


பல வகையான விக்கிரகாராதனைகள்


  • பூமியிலுள்ளவைகளை வணங்குதல்

(ஆறுகள், மரங்கள், மலைகள்மற்றும் கற்களை வணங்குதல்


  • இயற்கையை வணங்குதல்

(சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவையே இயற்கையின் சக்திகள் என்று நினைத்து வணங்குதல்

 (2 இரா.23:5).


  • மூதாதையரை வணங்குதல்.

(மரித்த தங்கள் குடும்ப பெரியவர்களை வணங்குதல். தேவதூதர்களை ஆராதிப்பது. (கொலோ.2:18, 19).)


  • தேவனுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை பணம், பெண், நிலம் போன்றவைகளுக்குக் கொடுக்கும் போது அதுவும் விக்கிரகாராதனையாகிறது. தேவனுக்கே மேலாக நாம் முன்னுரிமை கொடுக்கும் காரியங்கள் விக்கிரகங்களாகிவிடுகின் ன! பொருளாசை விக்கிரகாராதனை என்று சொல்லப் பட்டிருக்கிறது (கொலோ. 3:5).


வேத கட்டளைகள்


ஆபிரகாமின் தகப்பன் தோராகு நதிக்கு அப்புறத்தில் குடியிருந்தபோது அந்நிய தேவர்களைச் சேவித்தார்- என்று

 யோசு 24:2 -ல் நாம் காணலாம்.

ஆனால் ஆபிரகாம் உண்மையான தேவனை அறிந்து ஏற்றுக்கொண்டு அவரை மட்டுமே சேவித்தான்.


இஸ்ரவேலர்கள் மெய்யான தேவனை அறிந்து ஆராதித்து வந்தாலும் 

புறஜாதி மக்கள் மூலமாகவே விக்கிரகாராதனையைக் பார்த்து அதை குறித்து அறிந்து கொண்டார்கள்.

ஆகையால் தான் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் இடையிடையே பின்வாங்கி போவது வழக்கமாய் இருந்தது, ஆக வனாந்தரப் பயணத்தில்  பொற்கன்று குட்டியை வணங்கும்படி சோதிக்கப்பட்டது நாம் அறிந்ததே.


தேவன்  தான் ஜனங்கள் தன்னை தவிர யாரையும், எதையும் ஆராதிக்கிறதை  தடைசெய்தர்.

"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்..." என்று திட்டவட்டமாகச் சொல்லி இருந்தார் (யாத். 20:3-5)

 இது பத்துக் கற்பனைகளில் முதலாவது என்பது குறிப்பிடத்தக்கது.


யாத் 22:20

கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன். 


உபா 13:10

அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக்கடவாய். 


தேவனை ஆராதிக்காமல் வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவர்கள் சங்கரிக்கப்பட வேண்டும் என்றும் கர்த்தரை விட்டு விலகும்படி தூண்டுபவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.


உபா 7:5

நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்

கானான் தேசத்தில் இருந்த விக்கிரகங்களையும், விக்கிரகத் தோப்புக்களையும் அழித்துப்போட வேண்டும் என்ற கட்டளை இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டது.


கட்டளைகளை மீறிய இஸ்ரவேலர்கள்


கானான் தேசத்துக்குச் சென்ற பிறகு யோசுவா ஜனங்களை நோக்கி

 "நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்' என்று கட்டளையிட்டதை யோசு 24:14 பார்க்கிறோம்.


ஆனால் இஸ்ரவேலர்கள் கானான் தேசத்தில் ஒரு முறை அல்ல பலமுறை இந்தப் பாவத்தில் விழந்து போனார்கள். இதற்காகக் கடுமையாகத் தண்டிக்கவும் பட்டார்கள்.இஸ்ரவேலர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப்பலியிட்டு, 

தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய

குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தியாதல் தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது” என்று சங். 106:38-ல் 

சொல்லப்பட்டிருக்கிறது.


ஆசா, யோசியா, யோசபாத் போன்ற ராஜாக்கள் தங்கள் ஆட்சி செய்த காலத்தில் விக்கிரகங்களை தேசத்தை விட்டு அழித்துப்போட்டாலும்,

 மற்ற ராஜாக்களின் காலத்தில் விக்கிரகங்களை மறுபடியும் தேசத்தில் கொண்டுவரப்பட்டன.

ஆகையால் தேவனைவிட்டு விலகிச் சென்றதின் காரணமாகவே முதலில் இஸ்ரவேல்  ராஜ்யமும், பிறகு யூதா ராஜ்யமும் அந்நிய நாடுகளால் சிறைப்பட்டும் சிதறடிக்கப்பட்டும் போனர்கள்.(எரேமி 2:17)


வேதாகமத்தில் உள்ள

விக்கிரகங்களின் பெயர்கள்


  • அதாமலேக்கு, அன்னமலேக்கு 

(2 இரா. 17:31)

  • அசிமா (2 இரா. 17:30)

  • பாகால், அஸ்தரோத் (நியா. 2:13)

  • பாகால்பேரீத் (நியா.8:33)

  • பாகால்செபூப் (2 இரா. 1:2)

  • பேல் (எரே. 50:2)

  • கேமோஷ் (எண். 21:29)

  • தாகோன் (1 சாமு. 5:2), 

  • தியானாள் (அப். 19:24), 

  • யூப்பித்தர், மெர்க்கூரி (அப். 14:12)

  • மெரொதாக் (எரே. 50:2),

  • நிஸ்ரோக் (2 இரா. 19:37),

  • மோளேகு ,ரெம்பான் (அப். 7:43)

  • ரிம்மோன் (2 நாளா. 5:18)

  • தம்மூஸ் (எசே. 8:14) 


புதிய ஏற்பாட்டின் படி விக்கிரகாராதனை என்பது விக்கிரகங்களை வணங்குவது மட்டும் விக்கிரகாராதனை என்று சொல்லாமல் கொலோ. 3:5 - ன் படி

"விக்கிரகாராதனை ஆகிய பொருளாசை"என்று பவுல்  எழுதி உள்ளார்.அப்படிச் செய்கிறவர்கள் கிறிஸ்துவின் ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று எபே. 5:5 -ல் சொல்லப்பட்டுள்ளது.


விக்கிரகாராதனை மாம்சத்தின் கிரியைகள் ஒன்றாக இருப்பதை பவுல் கலா.5:19,20 -ல் சொல்லி இருக்கிறார்.


அப். 17:29 -ல் 

"மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்கும் என்று நினைக்கலாகாது" என்று பவுல் அத்தேனே பட்டணத்திலும்,


1 கொரி. 10:14 - ல்

'ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.


சிலை/படம்/உருவங்களுக்கு ஆராதனை செய்வது மட்டும் அல்ல அவைகளை உருவாக்க கூடாது என கர்த்தர் சொல்லி

இருக்கிறார்.


"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்" 

யாத்: 20:4


நம்மை சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தர் தனது மகிமையை வேறு எவருக்கும் கொடுப்பதில்லை ஏசா 42:8. 

எனவே நாமும் மகிமையை அவர் ஒருவருக்கு மட்டுமே கொடுப்போம்..

அவர் மட்டுமே எல்லா  துதி கன மகிமைக்கு பாத்திரர்


சிலை/படம்/உருவங்களுக்கு ஆராதனை செய்வது மட்டும் அல்ல. அவைகளை உருவாக்கவே கூடாது என கர்த்தர் சொல்லி இருக்கிறார். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

யாத்திராகமம் 20:4







Post a Comment

2 Comments