லவோதிக்கேயா - அறிந்து கொள்வோம் பகுதி-22

அறிந்து கொள்வோம்

பகுதி-22



லவோதிக்கேயா (Laodicea)


இது ஆசியாமைனரில்  எபேசு பட்டணத்துக்கு கிழக்கே 40 மைல் தொலைவில் பிரிகியா, லீதியாவின் எல்லை சேருமிடத்தில் இருந்தது.


லிக்கஸ் என்ற நதிக்கரையிலும்

சபாகஸ் என்ற மலைச்சரிவிலும் இந்த பட்டிணம் இருந்தது. 

லிக்கஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்த லவோதிக்கேயா மட்டுமின்றி, எராப்போலி, கொலோசெயர் பட்டணங்களும் இருந்தன.


ஆரம்பத்தில் இந்தப் பட்டணத்திற்க்கு டயாபோலிஸ் என்றும் பிறகு ரோவாஸ் என்றும் பெயர் இருந்தது.

சீரியாவின் ராஜாவாகிய இரண்டாம் அந்தியோகஸ் கி. மு. 260-இல் இந்தப் பட்டணத்தைத் திரும்பக் கட்டி தனது மனைவி லயோடிசின் பெயரில் இதற்கு

லவோதிக்கேயா என்று பெயரிட்டான்.

 கி. மு. 133 -ல் இது ரோமர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தது.


இது சின்ன ஆசியாவின் முக்கியமான பட்டணங்களில் ஒன்றாக இருந்தது. 

ஐபிராத்து நதியில் இருந்து எபேசு செல்லும் வாணி பாதையில் இந்தப் பட்டணம் இருந்தது. 

புராதன உலகத்தின் செல்வச் செழிப்பான பட்டணங்களில் இதுவும் ஒன்றாகும். 

ரோமர்களின் மூன்று நெடுஞ்சாலைகள் இந்தப் பட்டணத்தில் சந்தித்தன.


லவோதிக்கேயா பட்டணம் ஆடைகளுக்கும், கறுப்பு நிறக் கம்பளிக்கு மிகவும் பெயர் பெற்றது.


இங்கே உலக புகழ்பெற்ற மருத்துவப் பள்ளி இருந்தது. 

இந்த மருத்துவப் பள்ளி காரோ என்ற தெய்வத்தின் கோவில் சார்பில் செயல்பட்டு வந்தது. இங்கு கிரேக்க தெய்வ வழிபாடு இருந்தது


இந்தப் பட்டணத்தில் கிரேக்கர்களும், ரோமர்களும், யூதர்களும் குடியிருந்தார்கள். முதலாம் நூற்றாண்டில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் இங்கு வசித்தார்கள். இவர்கள் ஆண்டுதோறும் எருசலேமுக்கு 20 பவுன் தங்கத்தை அனுப்பி வந்தார்கள்.


பவுல் எபேசுவிலே  தனது 3-ம் ஊழிய பயணத்தில் இருந்த போது  இந்தச் சபை உருவாக்கப்பட்டிருக்கலாம். 

எப்பாப்பிராவினால் இந்த சபை ஸ்தாபிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இங்கு நிம்பா என்பவனின் வீட்டில் சபை கூடிவந்தது ( கொலோ. 4:15).


இது லவோதிக்கேயா சபை என்று அழைக்கப்படுகிறது.

 (கொலோ. 2:1; 4:15). 

இங்கிருந்த சபை கொலோசெயர் பட்டணத்தில்  இருந்த சபை உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது

பவுல்  கொலோசெயர் சபைக்கு

எழுதிய நிருபம் லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்பட்டது. 

லவோதிக்கேயருக்கென்று பவுல் ஒரு நிருபம் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த  நிருபம் வேதாகமத்தில் சேர்க்கப்படவில்லை.


வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்படும் ஏழு சபைகளில் லவோதிக்கேயா சபையும் ஒன்றாகும் (வெளி. 1:11).


இப்போ இந்தப் பட்டணம் இடிபாடுகளாய் காட்சியளிக்கிறது.

அகழ்வாராய்ச்சியில் ஒரு கிறிஸ்தவ ஆலய இடிபாடுகள் இப்போது தோண்டியெடுக்கப் பட்டிருக்கின்றன. இதிலுள்ள ஞானஸ்நான தொட்டியை வைத்து  இது கிறிஸ்தவ ஆலயம் இருந்த இடம்  என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.







Post a Comment

1 Comments