Friday, 30 April 2021

தீக்கோழி அறிந்து கொள்வோம் பகுதி -25

அறிந்து கொள்வோம்

பகுதி -25


தீக்கோழி

நெருப்புக்கோழி

(Ostrich)

 

தீக்கோழி குறித்து 

தமிழ் வேதாகமத்தில்

(லேவி.11:16;

உபா.14:15; புல.4:3; யோபு 39:13)

ஆகிய இந்த வசனங்களில் தீக்கோழி என்னும் சரியான பதத்தை நம்மால்  காண முடியும்.

ஆனால் இந்த குறிப்பிட்ட வசனங்கள் - யோபு 30:29; ஏசா.13:21, 34:13, 43:20; எரே.50:39; மீகா 1:8 ல்- நம் வாசிக்கிறது என்ன "கோட்டான்" அல்லது "ஆந்தை" என்று ஆனால்  "கோட்டான்" மற்றும் "ஆந்தை" என்ற வார்த்தைக்கு பதிலாக தீக்கோழி என்ற பதம் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் வேத பண்டிதர்கள்.

சில ஆங்கில வேதகமாத்தில் சரியாக தீக்கோழி

(Ostrich) என்று இருக்கிறது.


ஆப்பிரிக்கா கண்டத்திலும் அரபி தேசத்திலும் சீரியாவுக்குத் தென் கிழக்கில் உள்ள வனாந்தரங்களிலும் இந்த  தீக்குருவிகள் இருக்கின்றன. பெண் தீக்குருவி தன் முட்டைகளைப் பற்றி கவனிக்கிற தில்லை என்று யூதர்கள் நினைத்தார்கள். யோபு 39:15. 


ஆனால் இந்தத் தீக்குருவியின் இயல்பைப் பற்றி படித்த அநேகர் இப்படியாக சொல்லி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண் குருவிக்கும் மூன்று அல்லது நாலு பெண் குருவிகள் இருக்கும் என்றும் அவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வனாந்தரத்திலுள்ள மணலில் பள்ளந்தோண்டும் என்றும் பெண் குருவிகள் முப்பது அல்லது நாற்பது முட்டைகளை அந்த ஒரே குழியில் இட்டு, 

அத்தேசங்களில் போதிய சூரிய உஷ்ணம் இருக்கிறபடியினால், 

அந்த முட்டைகளைப் பகலில் அடைகாக்காமல், மணலை 

அந்த பள்ளத்தில் தள்ளி மூடிவிட்டு இரவுதோறும் அந்த மூன்று( பெண் + ஆண்) அல்லது நாலு கோழிகளும் மாறி மாறி அந்த முட்டைகளுக்கு குளிர் வராதபடி அவற்றை அடைகாக்கும்.


  • நெருப்புக்கோழி பறவை இனங்களில் மிகப்பெரிய உயிரினம். நெருப்புக்கோழி நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. 



63 kg முதல் 145 kg  எடை கொண்டது இது,நெருப்புக்கோழி சுமார் 2.5 மீட்டர் அதாவது, 8 அடி வரை உயரமாக வளரக்கூடிய பறவை.


நெருப்புக்கோழி ஓட்டம்

மணிக்கு 70 கிமீ (43 மைல்) வேகத்தில் ஓடக் கூடியவை. தொடர்ச்சியாக 45 நிமிடம் வரை ஓடக்கூடியது. சிறிய உடலமைப்பு உள்ள மனிதர்கள் சவாரி செய்ய கூடிய அளவுக்குத் தீக்கோழிகள் பெரியவையாகும். வட ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் இவை ஓட்டப்பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டன. ஒரு மாத வயது உள்ள நெருப்புக்கோழி மணிக்கு 55 கிமீ (35 மைல்) வேகத்தில் ஓடக் கூடியவை.


  • நெருப்புக் கோழியின் இறகுகள் அலங்காரப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் தொப்பியில் அலங்காரம் செய்யப்படுகிறது.


நெருப்புக் கோழியின் கால்கள் மிகவும் நீண்ட அளவுடையது. பயமுறுத்தப்பட்டால், தீக்கோழி தனது வலுவான கால்களால் உதைத்து, கடும் காயத்தை உண்டாக்கக்கூடியது. நெருப்புக்கோழிகளின் கால்களில் 2 விரல்கள் மட்டும் இருக்கும்.


  • தீக்கோழிகள் தான் முட்டைகளை அடைகாத்து

குஞ்சு பொரிக்க 42 முதல் 46 நாட்கள் ஆகலாம். பறவையினங்களில் தீக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும். ஒரு முட்டை 1.4 kg எடையும் 15 செ.மீ அளவும் கொண்டது.



நெருப்புக்கோழி 40- 45 ஆண்டுகள் வரை வாழும். இன்றும் ஆப்பிரிக்காவின் வறண்ட, சூடான வனப் பகுதிகளில் வாழ்கின்றன.


  • தீக்கோழிகளுக்கு பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து உண்பதற்காக கூடவே கற்களையும் விழுங்குகிறது. தாவரங்கள், விலங்குகள், கிழங்கு வகைகள், இலைகள், பழங்கள், கொட்டைகள்,வெட்டுக்கிளி, பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், ஊர்வன இனங்களை நெருப்புக் கோழி விரும்பி சாப்பிடும். தண்ணீர் தேவைப்படுவதில்லை தாவரங்களிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொள்கிறது.


தீக்குருவிகள் தங்கள் செட்டையை அசைவாடி ஓடுகிற வேகமான ஓட்டத்தையும் அவைகள் 

அலறுகிற துக்கமான சத்தத்தையும் பற்றி வேதாகமத்தில்

சொல்லியிருக்கிறது. 

(யோபு 39:13, 18; மீகா 1:8)


  •  யூதார்கள் அதன் இறைச்சியை புசிக்கிறதில்லை

(லேவி.11:16; உபா.14:15)





Thursday, 29 April 2021

வாற்கோதுமை - அறிந்து கொள்வோம் பகுதி -24

 அறிந்து கொள்வோம்

பகுதி -24


வாற்கோதுமை 




வாற்கோதுமை என்பது பார்லி என்றழைக்கப்படும் தானியம்

பழைய காலத்திலிருந்தே மக்கள் வாற்கோதுமை தானியத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சுமேரியர்களின் சிற்பங்களில் வாற்கோதுமை பயிரைக் நம்மால் காண முடியும்.


இது எகிப்திய மற்றும்  பாலஸ்தீனத்தில் தேசத்தில் அதிகமாக விளைவிக்கப் பட்டன. (யாத். 9:31,லேவி. 27:16, உபா. 8:8).


கானான் தேசத்தை குறித்து

 "அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ் செடிகளும் உள்ள தேசம், அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனும் உள்ள தேசம்,” என்று சொல்லப்பட்டிருக்கிறது.


எகிப்தில் தேவன் அனுப்பிய வாதையாகிய கல் மழையால் வாற்கோதுமை பயிர் அழிக்கப்பட்டது (யாத். 9:31).


யாத்திராகம நாட்களில் ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கும் நிலம் 50 வெள்ளி சேக்கல் மதிக்கப்பட்டது (லேவி. 27:16).


சில குறிப்புகள்


வாற்கோதுமை முதலில் குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் கொடுக்கப்படும் தீவனமாக இருந்தது (1 இரா. 4:28).


  • பிறகு ஏழைகள் அதை உணவாக உட்கொள்ள துவங்கினார்கள் (நியா. 7:13; 2 இரா. 4:42). 


இந்த வாற்கோதுமை அப்பங்களாக சுடப்பட்டு உண்ணப்பட்டது. 


  • ஒரு படி கோதுமையின் விலையில் மூன்று படி வாற்கோதுமை கிடைத்தது

 ( வெளி. 6:6). 


ஒரு மரக்கால் கோதுமை மாவின் விலையில், இரண்டு மரக்கால் வாற்கோதுமை மாவு கிடைத்தது 

( 2 இரா. 7:1).


  • ஏப்ரல் மாதத்தின் மத்தியில், பஸ்கா பண்டிகை காலத்தில் வாற்கோதுமை பயிர் முதல் அறுவடை காலம் வருகிறது

 (ரூத் 1:22; 2 சாமு. 21:9).


இது கோதுமை அறுவடைக்கு முன் வருவதாகும். இஸ்ரவேல் மக்களின் மத்தியில் வாற்கோதுமை, கோதுமை, திராட்சை அறுவடைகள் மூன்றும் முக்கியமானவை யாகும்!


  • ரூத் கோதுமை மற்றும் வாற்கோதுமை அறுப்பின் போது சிந்திய கதிர்களை வீட்டுக்கு உணவாகக் கொண்டு வந்தாள் 

(ரூத் 2:23).


தாவீதும் அவரோடு இருந்தவர்களும் சாப்பிடுவதற்கு மற்றப் பொருள்கள் கூட வாற்கோதுமையும் கொண்டு வரப்பட்டது (2 சாமு. 17:28).


  • அப்சலோம் தாவீதின் சேனாபதியாகிய யோவாபின் வாற்கோதுமை வயலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி செய்தான் 

(2 சாமு. 14:30). யோவாப் தன்னிடம் வரவழைக்கவே அவன் இப்படிச் செய்தான்.


அம்மோன் புத்திரர் யூதாவின் ராஜாவாகிய யோதாமுக்கு வெள்ளியோடுகூட கோதுமையையும், வாற்கோதுமையையும் கப்பமாகக் கட்டினார்கள் (2 நாளா. 27:5).


  • காதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனும் விலைமதிப்புள்ளவையாக இருந்தபடியால் புதையல்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன 

(எரே.45:8). 


எலிசா தீர்க்கதரிசி 20 வாற்கோதுமை அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உணவளித்தார், மீதியும் இருந்தது

(2 இரா 4:42-44)


  • (யோவான் 6:9 -ல்

 இயேசு ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவளித்தார் மீதியான துணிக்கைகள் 12 கூடைகளில்

நிரப்பப்பட்டன.


கிதியோன் மீதியானியரின் பாளையத்தை வேவு பார்க்கப் போன போது, ஒருவன் மற்றவனிடம் சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டு வந்தது, அது கூடாரம் மட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப் போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது” என்று தான் கண்ட கனவைப் பற்றி கூறினான் (நியா. 7:13).

 மற்றவன் இது கிதியோனின் பட்டயம் என்று பதிலளித்தான். தேவன் அவர்களைத் தங்களிடம் ஒப்புக்கொடுப்பார் என்று கிதியோன் நம்பிக்கை பெற்றான்!




துருக்கியில் உள்ள பைபிள் - அறிந்து கொள்வோம் பகுதி -23

அறிந்து கொள்வோம்

பகுதி -23



துருக்கியில் உள்ள பைபிள்.


1500 ஆண்டுகள் பழமையான பைபிள் ஒன்று கிடைத்திருக்கிறது.துருக்கியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் அது இன்றும் உள்ளது.

ஆனால், அதை படிக்க யாரும் ஆர்வம் காட்டவே இல்லை.


பல ஆண்டுகளாக இந்த பைபிளை அதிக ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். ஆய்வின் முடிவில் இப்புத்தகத்தை பற்றி பல்வேறு விளக்கங்கள் கொடுத்தார்கள். அதில் இப்புத்தகம் சில உண்மைகள் மற்றும் பல புனையப்பட்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.


இந்த புத்தகம் காலத்தின் சோதனையாக நமக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பல வேத ஆராய்ச்சியளார்கள்  இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்ட கதைகள் மற்றும் வரலாறுகள் சரியானது என்றும் ஒரு கூட்டம் தவறு என்றும் பல ஆண்டுகளாக விவாதித்தும் தர்க்கம் பண்ணியும் வருகிறார்கள்.


இந்த புத்தகத்தில் உள்ளே


இந்த புத்தகத்திற்குள் சில வரலாற்று

நூல்கள் இருக்கிறது அவற்றில் இருப்பது என்னவென்றால்......


"இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவர் காப்பாற்றப்பட்டார் என்றும் 

இயேசு சிலுவையில் துன்பப்படுவதற்கு முன்பே பரலோகத்திற்கு எழுந்து சென்றார், அவரைக் காட்டிக் கொடுத்த சீடன் யூதாஸ் தான் அவருக்கு பதிலாக சிலுவையில் அறையப்பட்டார்"

என்று இந்த புத்தகத்தில் இருப்பதாக இந்த புத்தகத்தைபடித்தவர்களின் கூறுகிறார்கள்.


 "". இது நம்மால் ஏற்கமுடியாத ஒன்று...


வத்திகான் அறிவிப்பு :


வத்திகன் தரப்பு ஒரு கேள்வி எழுப்பியது.

இந்த பைபிள் உண்மையில்  எழுதப்பட்டதா?அப்படி எழுதப்பட்டது என்று நம்பினால் இயேசு கிறிஸ்து மீது நம் வைத்து இருக்கும் ஆழமான நம்பிக்கைக்கு இந்த புத்தகத்தின் செய்தி என்ன?

எனவே இந்த கேள்விகள் மற்றும் குழப்பங்களுக்கு தீர்வு காண அந்த

பண்டைய பைபிளை குழப்பவாதி கூட்டமான வேத ஆராய்ச்சி குழுவுடன் படிக்கும்படிக்கும் ஆய்வு செய்யும் வத்திக்கன் தரப்பு துருக்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. 


ஆனால் துருக்கி அரசாங்கம் இப்புத்தகத்தின் பக்கங்களைப் படிக்க இதிலிருந்து ஒரு நகலையும் பெற கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் டாலர்களை செலுத்த வேண்டும் என மறு அறிக்கை விடுத்துள்ளது.

எனவே இதை வத்திகன் தரப்பு

ஆராய்ச்சி செய்வார்களா? என்பது

கேள்வி குறியாய் உள்ளது.


இந்த புத்தகத்தை இன்றும் துருக்கி அருங்காட்சியகத்தில் காணலாம். 












Wednesday, 28 April 2021

லவோதிக்கேயா - அறிந்து கொள்வோம் பகுதி-22

அறிந்து கொள்வோம்

பகுதி-22



லவோதிக்கேயா (Laodicea)


இது ஆசியாமைனரில்  எபேசு பட்டணத்துக்கு கிழக்கே 40 மைல் தொலைவில் பிரிகியா, லீதியாவின் எல்லை சேருமிடத்தில் இருந்தது.


லிக்கஸ் என்ற நதிக்கரையிலும்

சபாகஸ் என்ற மலைச்சரிவிலும் இந்த பட்டிணம் இருந்தது. 

லிக்கஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்த லவோதிக்கேயா மட்டுமின்றி, எராப்போலி, கொலோசெயர் பட்டணங்களும் இருந்தன.


ஆரம்பத்தில் இந்தப் பட்டணத்திற்க்கு டயாபோலிஸ் என்றும் பிறகு ரோவாஸ் என்றும் பெயர் இருந்தது.

சீரியாவின் ராஜாவாகிய இரண்டாம் அந்தியோகஸ் கி. மு. 260-இல் இந்தப் பட்டணத்தைத் திரும்பக் கட்டி தனது மனைவி லயோடிசின் பெயரில் இதற்கு

லவோதிக்கேயா என்று பெயரிட்டான்.

 கி. மு. 133 -ல் இது ரோமர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தது.


இது சின்ன ஆசியாவின் முக்கியமான பட்டணங்களில் ஒன்றாக இருந்தது. 

ஐபிராத்து நதியில் இருந்து எபேசு செல்லும் வாணி பாதையில் இந்தப் பட்டணம் இருந்தது. 

புராதன உலகத்தின் செல்வச் செழிப்பான பட்டணங்களில் இதுவும் ஒன்றாகும். 

ரோமர்களின் மூன்று நெடுஞ்சாலைகள் இந்தப் பட்டணத்தில் சந்தித்தன.


லவோதிக்கேயா பட்டணம் ஆடைகளுக்கும், கறுப்பு நிறக் கம்பளிக்கு மிகவும் பெயர் பெற்றது.


இங்கே உலக புகழ்பெற்ற மருத்துவப் பள்ளி இருந்தது. 

இந்த மருத்துவப் பள்ளி காரோ என்ற தெய்வத்தின் கோவில் சார்பில் செயல்பட்டு வந்தது. இங்கு கிரேக்க தெய்வ வழிபாடு இருந்தது


இந்தப் பட்டணத்தில் கிரேக்கர்களும், ரோமர்களும், யூதர்களும் குடியிருந்தார்கள். முதலாம் நூற்றாண்டில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் இங்கு வசித்தார்கள். இவர்கள் ஆண்டுதோறும் எருசலேமுக்கு 20 பவுன் தங்கத்தை அனுப்பி வந்தார்கள்.


பவுல் எபேசுவிலே  தனது 3-ம் ஊழிய பயணத்தில் இருந்த போது  இந்தச் சபை உருவாக்கப்பட்டிருக்கலாம். 

எப்பாப்பிராவினால் இந்த சபை ஸ்தாபிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இங்கு நிம்பா என்பவனின் வீட்டில் சபை கூடிவந்தது ( கொலோ. 4:15).


இது லவோதிக்கேயா சபை என்று அழைக்கப்படுகிறது.

 (கொலோ. 2:1; 4:15). 

இங்கிருந்த சபை கொலோசெயர் பட்டணத்தில்  இருந்த சபை உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது

பவுல்  கொலோசெயர் சபைக்கு

எழுதிய நிருபம் லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்பட்டது. 

லவோதிக்கேயருக்கென்று பவுல் ஒரு நிருபம் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த  நிருபம் வேதாகமத்தில் சேர்க்கப்படவில்லை.


வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்படும் ஏழு சபைகளில் லவோதிக்கேயா சபையும் ஒன்றாகும் (வெளி. 1:11).


இப்போ இந்தப் பட்டணம் இடிபாடுகளாய் காட்சியளிக்கிறது.

அகழ்வாராய்ச்சியில் ஒரு கிறிஸ்தவ ஆலய இடிபாடுகள் இப்போது தோண்டியெடுக்கப் பட்டிருக்கின்றன. இதிலுள்ள ஞானஸ்நான தொட்டியை வைத்து  இது கிறிஸ்தவ ஆலயம் இருந்த இடம்  என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.







Tuesday, 27 April 2021

வேதாகம பயண தூரங்கள் அறிந்து கொள்வோம் பகுதி-21

அறிந்து கொள்வோம்

பகுதி-21






வேதாகம பயண தூரங்கள்



இயேசு கிறிஸ்து கப்பர்நகூமை

மத்திய இடமாகக்கொண்டு ஊழியம் செய்தார்….


கப்பர்நகூம் to


பெதஸ்தா – 9. 7 கி.மீ


செசரியா, பிலிப்பி – 43.4 கி.மீ


கானா –  25. 7 கி.மீ


தல்மாத்தியா – 9.7 கி.மீ


கெனேசரேத்து (கலிலேயா) – 3.8 கி. மீ 


நாயீன்  –  35.4 கி.மீ


நாசரேத் – 32.2 கி.மீ


தீரு –    56.3 கி.மீ


சீதோன்  – 80. 4 கி.மீ


சீகார் (சமாரியா) –  88.5 கி.மீ  



 இயேசு எருசலேமில் இருந்து

 நடை பயணம் – கடல் பயணம் செய்த தூரம்;-


எருசலேம் to


பெத்தானியா  –  3.2 கி. மீ


பெத்லகேம்  – 9.6 கி. மீ


பெத்பாகேல்  – 1.6 கி.மீ 


செசாியா  – 91.5 கி. மீ 


செசாியா,பிலிப்பி  – 168 கி.மீ


கப்பா்நகூம்   – 136 கி. மீ


சவக்கடல்   – 9.6 கி. மீ


எம்மாவூர் – 25.6 கி. மீ


எாிகோ  –  24 கி. மீ


யோப்பா    – 56 கி.மீ


யோா்தான்   – 33.6 கி. மீ


மத்திய தரைகடல்   – 52.9 கி. மீ


நாசரேத்    – 104 கி. மீ


சாலேம்   – 80 கிமீ


சமாாியா    – 57.6 கி.மீ


கலிலேயா கடல்    – 112 கி.மீ  



செய்தி துளிகள்;


# தானியேல் தங்கியிருந்த கொலு மண்டபத்தில் இருந்து (பாபிலோன்)  எருசலேம் தேவாலயம் வரை 1448 கி.மீ. தூரம். அங்கிருந்து பலகணி திறந்து ஆலயத்தை நோக்கி ஜெபம் செய்தான். 


# எகிப்திலிருந்து கானான் தேசம் (இஸ்ரவேல் தேசம்) தூரம் – 613 கி.மீ  கால்நடை பயணமாக 11 நாளில் சென்று விடலாம், ஓய்வெடுத்து போனாலும் 15 நாளில் சென்று விடலாம். 

ஆனால் 40 வருடங்கள் ஆனது. 

41 இடங்களில் பயணம்  தடைப்பட்டது. காதோசு வனாந்திரத்தில் வெறுமனே சுற்றித்திருந்தார்கள். இதற்க்கெல்லாம் முழு காரணங்கள், 


1. இஸ்ரவேலர்களின் முறுமுறுப்பு    2. பயணத்தை வழிநடத்திய மூப்பர்களும் தலைவர்களும் 


# இயேசு பிறந்த பிறகு அவரை காண கிழக்கு தேசத்திலிருந்து வான சாஸ்திரிகள் வந்தார்கள். முன்னனையில் இருந்த இயேசுவை பார்க்கவில்லை. ஒரு வீட்டில் கண்டார்கள், அதுவும் பிறந்த குழந்தையை (Baby)  பார்க்கவில்லை, குழந்தையை (Child) கண்டார்கள். மேலும் ஏரோது ராஜா இரண்டு வயதிற்க்குட்பட்ட குழந்தைகளைத்தான் கொல்லச்சொன்னான். 

ஆக இயேசு 2 வயது குழந்தையாயிருந்தார். அவர்கள் குதிரையில் கிளம்பி எருசலேம் வர பயண தூரப்படி கணக்கிட்டால்  இரண்டு வருடமாகும். 


# எலியா கர்மேல் பர்வதத்தில் பாகால் தீர்க்கதரிசிகளை கொன்றுப்போட்ட பிறகு ஆகாப் ராஜா அந்த இடத்தைவிட்டு

 குதிரை இரதத்திலேறி யெஸ்ரயேல்க்கு போனேன். ஆனால் எலியா 27 கி. மீ 

தூரமுள்ள யெஸ்ரயேலுக்கு ஆகாப்க்கு முன்பே ஓடிப் போனான். குதிரை வேகத்திற்க்கு மீறி மனிதன் ஓட முடியாது. இது ஆவியானவர் எலியாவை எடுத்துச்சென்றார். (Transportation) 


# அதேபோல் சுவிஷேசகர். பிலிப்பு காசா பட்டணத்து வழியாக செல்ல  தேவதூதனால் பிலிப் ஏவப்பட்டு சென்றார். எத்தியோப்பியா  ராஜாஸ்தீரியின் மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு கரையேறினபோது பிலிப்பை காணவில்லை ஆசோத்தில் காணப்பட்டார் என உள்ளது.  ஆப்பிரிக்காவில் உள்ள காசா பட்டணம் ஆசோத்திலிருந்து 6000 கி. மீ தூரம். 

எப்படி போனார்? 

ஆவியானவரால் கொண்டு போகப்பட்டார். (Transportation)  பின்னர் யோப்பா வழியாக செசரீயா போய் சுவிஷேசகத்தை பிரசங்கித்தார்…..



Monday, 26 April 2021

ராமோத் கீலேயாத் அறிந்து கொள்வோம் பகுதி -20

அறிந்து கொள்வோம்

பகுதி -20


ராமோத் கீலேயாத் 

Ramath-Gilead



"ராமோத் கீலேயாத்" என்றால்

"கீலேயாத்தின் உயரமான இடம்" என்று அர்த்தம்,


இந்தப் பட்டணம் கீலேயாத்திலுள்ள ராமோத் என்று அழைக்கிறாா்கள். (1 இரா. 4:13).


இது லேவியருக்கு ஒதுக்கப்பட்ட அடைக்கலப் பட்டணங்களில் ஒன்றாகும் (உபா. 4:42, 43). 

இது காத் கோத்திரத்தின் எல்லைக்குள்ளே இருந்தது (யோசுவா 20:8; 21:38).


சீரியர் இந்தப் பட்டணத்தைப் பிடித்து வைத்திருந்தார்கள். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் சீரியரை எதிர்த்துச் சென்ற போது தீர்க்கதரிசியாகிய மிகாயாவின் எச்சரிப்பின் வார்த்தைக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை.  எனவே ஆகாப் ராஜா இந்தப் போரில் காயப்பட்டு, மரித்தான்.

 (1 இரா. 22:1-36).


பின்னாட்களில் யூதாவின் ராஜாவாகிய அகசியா ஆகாபின் குமாரனாகிய யோராம் கூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணி முடிவில் சீரியர் யோராமைக் மிகவும் காயப்படுத்தினார்கள்.

 (2 இரா. 8:28). 

அவன் தன்  காயங்களை ஆற்றிக்கொள்ளுவதற்காக யெஸ்ரயேலுக்குச் சென்றிருந்தபோது,யூதாவின் ராஜாவாகிய அகசியா அவனைப் பார்க்கச் சென்றான்.


கீலேயாத்திலுள்ள ராமோத் பட்டணத்திலிருந்த யெகூ எலிசாவின் கட்டளைப்படி தீர்க்கதரிசிகளில் புத்திரரில் ஒருவனால் இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். 

இவன் இஸ்ரேலின் ராஜா

யோராமைக் கொன்றுவிட்டு, 

தான் இஸ்ரவேலுக்கு

ராஜாவானான்.


இப்போது  இந்த இடம் மண்மேடாக   காணப்படுகிறது இதற்க்கு இப்போது டெல் ராமித் என்று அழைக்க படுகிறது.






Sunday, 25 April 2021

மீறாப் பட்டணம் - அறிந்து கொள்வோம் பகுதி-19

 அறிந்து கொள்வோம்

பகுதி-19


மீறாப் பட்டணம்


பவுல் செசரியாவிலிருந்து ரோமாபுரிச் சிறையிருப்புக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, லீசியாவிலிருந்த மீறாப் பட்டணத்தில் இத்தாலியாவுக்குச் செல்லும் கப்பல் ஏறினார்கள் 

(அப். 27:5). 


இது தானியங்களைக் கொண்டு செல்லும் கப்பலாகும்.


பத்தாரா, மீறா இரண்டுமே துறைமுகப் பட்டினங்கள் என்று குறிப்பிடுகின்றன.

இந்த பட்டணங்களில் பவுல் ஊழியம் செய்தாரா? இல்லையா? என்பதைக் குறித்து குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பட்டணங்களில் யூதர்களும் வசித்தார்கள் என்று நம்பப்படுகிறது.


பிந்திய காலத்தில் நிக்கோலாஸ் என்ற பேராயரின்

தலைமையில் இங்கே சபை இருந்ததை குறித்து குறிப்பு கிடைத்திருக்கிறது!




Saturday, 24 April 2021

லிபர்த்தீனர் - அறிந்து கொள்வோம் பகுதி-18

 அறிந்து கொள்வோம்

பகுதி-18



லிபர்த்தீனர் (Libertines)


அப்போஸ்தலர் 6:9 வசனத்தில் மட்டும் லிபர்த்தீனர் என்ற பெயர் வருகிறது.லிபர்த்தீனர் என்றால் "அடிமையாக இராமல் விடுதலை பெற்ற ஒருவன்" என்று  அர்த்தமாகும்.


இந்த இடத்தில் சொல்லப்படும்

லிபர்த்தீனர் பாம்பே மற்றும் பிற தளபதிகள் மூலம் ரோமாபுரிக்கு கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட யூதர்களை

குறிக்கிறது. இவர்கள் பின்னால் விடுதலை பெற்றார்கள்.


கி. பி. 19 ஆம் ஆண்டு இந்த யூதர்கள் ரோமாபுரியை விட்டு வெளியே விரட்டப்பட்டார்கள். இவர்களில் பலர் எருசலேமுக்குச் சென்று அங்கே ஒரு ஜெப ஆலயத்தை உருவாக்கினார்கள்.

இவர்களில் சிலரே ஸ்தேவானோடு விவாதத்தில் ஈடுபட்டார்கள்.


லிபர்த்தீனரின் தத்துவம் 


முதலாம் நூற்றாண்டின் பிற்பாதியில் லிபர்த்தீனர் என்பவர்கள் கிறிஸ்தவ சபையில் கள்ளப் போதகங்களை பரப்ப துவங்கினார்கள்.


ஆத்துமா தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்படுகிற படியால், சரீரத்தைக் குறித்துப் நாம் கவலைப்பட வேண்டியதில்லை, விருப்பப்படி வாழலாம் என்று இவர்கள் போதித்தார்கள்.


“பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5:20) என்ற வசனத்தை எடுத்துக் கொண்டு, நாம் பாவம் செய்தாலும் கிருபையினால் இரட்சிக்கப்படுவோம் என்று சொல்லி, பரிசுத்த வாழ்க்கை வாழ்வதை இவர்கள் புறக்கணித்தார்கள்.


காம t:4).


நமது தேவனுடைய கிருபையை

விகாரத்துக்கேதுவாகப்புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; 

அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது” என்று யூதா தனது நிருபத்தில் கடுமையாக எச்சரித்திருக்கிறார் (யூதா:1:4)


சோதோம், கொமோராவின் மக்களைப் போல "சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணி, மகத்துவங்களை தூஷிக்கிறார்கள் என்றும் யூதா எச்சரித்திருக்கிறார் (வச. 8). இஸ்ரவேலரைப் பாலுறவு 

ரீதியான பாவத்தில்

விழப்பண்ணிய பிலேயாமின் தந்திரத்தை இவர்கள் பின்பற்றுகிறார்கள்!


மோட்சப் பயணம் நூலை எழுதிய ஜான் பனியனின் காலத்திலும்கூட இந்தத் தத்துவத்தை பின்பற்றியவர்கள் இருந்தார்கள். பனியன் தனக சுயசரிதை நூலில் இவர்களைக் கடிந்து கொண்டதை குறிப்பிடுகிறார்….






Friday, 23 April 2021

ரோது தீவு - அறிந்து கொள்வோம் பகுதி-17


அறிந்து கொள்வோம்

பகுதி-17



ரோது தீவு 


 "ரோது"  என்றால் ''ரோஜா என்று அர்த்தமாகும்.


இது  ஆசியா மைனரின் மேற்குக் கரையில் மத்தியதரைக் கடலில் உள்ள ஒரு தீவாகும். இது கோஸ் தீவுக்கும் பத்தாராவுக்கும் நடுவில் இருக்கிறது. இது 75km நீளமும், 29km அகலமும் கொண்ட ஒரு முக்கியமான துறைமுகமாய் இருந்தது.


பவுல் அப்போஸ்தலன் தனது மூன்றாவது ஊழிய பயணத்தில் கிரேக்க நாட்டிலிருந்து சீரியாவிலுள்ள அந்தியோகியா வுக்குக் கடல் வழியாக பயணம் செய்தபோது இந்த தீவின் வழியாக தான் சென்றார்

(அப். 21:1).


ரோது தீவு பற்றி சில குறிப்புகள்


இந்த தீவு மத்திய தரைக்கடல் பகுதியில் மிகவும் முக்கியமான துறைமுகமாக இருந்தது.

இந்தத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹீலியோஸ் என்ற புறஜாதி தெய்வத்தின் கொலாசஸ் என்ற 100அடி உயரமான வெண்கலச் சிலை பழங்கால ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது. 

இந்த சிலையானது கி. மு. 290-ல் உருவாக்கப்பட்டது பின்பு கி. மு. 225 இல் ஒரு பூகம்பத்தின் போது விழுந்து விட்டது


இந்தத் தீவை சேர்ந்தவர்கள் தீரு பட்டணத்தோடு  வாணிபத்தில் தொடர்பு கொண்டிருந்தார்கள். (ஏசேக் 27:15 -இல் இவர்கள் தேதான் புத்திரர் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.


சிலுவைப்போரின் காலத்தில் இந்தத் தீவு போர் வீரர்கள் தங்கிச் செல்லும் இடமாக இருந்தது. இந்தத் தீவின் விரிகுடா பகுதி புனித பவுல் விரிகுடா என்று அழைக்கப்படுகிறது .

இந்தக் கடற்கரையில் பவுலின் நினைவாகக் கட்டப்பட்ட ஒரு

சிற்றாலயம் உள்ளது. 


இந்தத் தீவு கிரேக்க நாட்டின் கீழாக

1947ஆம் ஆண்டு வந்தது

21- ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிரேக்க மொழி பேசும் 20 யூதர்கள் மட்டுமே இங்கே வாழ்ந்தார்கள்.

இப்போ கிரேக்கர்கள் அதிகமாக இருக்கிறார்கள்!...






நளதம் (Spikenard) // வெள்ளைக்கல் பரணி (Alabaster box) // அறிந்து கொள்வோம் பகுதி -155 //

அறிந்து கொள்வோம் பகுதி -155 நளதம் (Spikenard) மற்றும் வெள்ளைக்கல் பரணி (Alabaster box)  விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்...