Wednesday, 28 July 2021

மேசா Mesha. அறிந்து கொள்வோம் பகுதி -68

 அறிந்து கொள்வோம்


பகுதி -68


மேசா Mesha


மேசா என்ற சொல்லுக்கு "இரட்சிப்பு” என்று அர்த்தம்.


மோவாபிய ராஜாக்களில் ஒருவன் பெயர் இது  அவனிடம் அதிகமான ஆடுமாடுகள் இருந்து அவன் கேமோஷ் காத் என்பவனின் குமாரன். கேமோஷ் அவர்களுடைய தெய்வத்தின் பெயர்.


இவன் இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபுக்குக் கப்பம் கட்டிவந்தான். 

லட்சம் ஆட்டுக் குட்டிகளையும், லட்சம் குறும்பாட்டுக்கடாக்களையும் கப்பமாகச் செலுத்திவந்தான்.(2 இரா.3:4).


 

இஸ்ரவேல், யூதாவோடு யுத்தம்:-

             (2இரா.3:25-27).


ஆகாப் மரித்த பிறகு இவன் இஸ்ரவேலுக்கு எதிராகக் கலகம் செய்து, கப்பம் கட்டுவதை நிறுத்தினான்.


யோராம் அரியணையில் ஏறியபோது, அவன் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் உதவியை நாடினான். இந்த இருவரின் ராணுவமும் மோவாபியரின் இராணுவத்தோடு மோதியது. வழியில் தேவன் இஸ்ரவேலரின் சேனைக்கு அற்புதவிதமாகத் தண்ணீரை அருளினார்.


கடுமையான போரில் மோவாப் இஸ்ரவேலுக்கு கீழ் வந்தது.

இஸ்ரவேல் மற்றும் யூதாவின் சேனைகள் மோவாபை கீழ்படுத்தினார்கள்.

ராஜா மேசா கிர்-ஹராசேத் என்ற

இடத்திற்கு ஓடிப்போனான். அந்தப் பட்டணத்தின் மதில் சுவற்றின் மீது  இஸ்ரவேலர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்

போதே தன்னுடைய மூத்த குமாரனை மோவாபியரின் அக்கினி தெய்வமாகிய கேமோஷூக்குப் பலியிட்டான்.

இதைக்கண்ட இஸ்ரவேலரின் இராணுவத்தினர் தாங்கள் கொள்ளையிட்ட பொருட்களோடு யோர்தானைக் கடந்து நாட்டுக்குத் திரும்பினார்கள்  

மோவாபியக் கல்


மேசாவின் காரியங்கள் எல்லாம் Stele of Mesha என்று அழைக்கப்பட்ட ஒரு கறுப்பநிறக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.


இந்தக் கல் மோவாப் பகுதியில் டிபோன் என்ற இடத்தில் 1868- ல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் மேசா ராஜா கப்பம் கட்டிய செய்திகளும், பிற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மோவாபிய மொழியில் எழுதப்பட்டுள்ள இவை வேதாகமத்தை மேலும் உறுதிப்படுத்துகிறதாய் இருக்கிறது.


இந்தக் கல் 1.5 மீட்டர் உயரமானது. இதில் 34 வரிகள் எழுதப்பட்டுள்ளன. இது கி. மு. 850ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள்.இது இப்போது பாரிஸ், லூவர் அருங்காட்சியகத்தில் இந்தக் கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.




Tuesday, 27 July 2021

மெலித்தா அறிந்து கொள்வோம் பகுதி -67

 அறிந்து கொள்வோம்


பகுதி -67


மெலித்தா Malta


மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஒரு தீவு இப்போது இதை மால்டா என்று அழைக்கிறார்கள்.


அப் 27:3-44 - ல்

பவுல்  ரோமாபுரியில் விசாரிக்கப்

படும்படி கொண்டுசெல்லப்பட்டபோது, அவர் சென்ற கப்பல் புயலில் சிக்கியது

கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டாலும், பவுலுக்கும், மாலுமிகளுக்கும்,

சிறைப்பிடித்துக்கொண்டுபோக பட்டவர்களுக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அவர்கள் ஒரு தீவில் கரையேறினார்கள்.


"நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம். அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டார்கள்" என்று இதைக் குறித்துப் லூக்கா குறிப்பிட்டிருக்கிறார் (அப். 28:1, 


 விஷப்பாம்பு


நெருப்பு மூட்டுவதற்காக விறகுகளை எடுத்துப் போடும்போது, ஒரு கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு பவுலின் கையைக் கவ்வியது உடனே தீவில் உள்ள மக்கள் பவுல் ஒரு கொடியவன் என்று நினைத்தார்கள்.

ஆனால் பவுல் "அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப் போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்" (அப்.28:5).

பவுலுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பதைக் கண்ட அந்தத் தீவு மக்கள் பவுலை தேவன் என்று சொல்லிக்கொண்டார்கள் 


அந்தத் தீவின் முதலாளியாகிய புபிலியுவின் தகப்பன் சாவுக்கேதுவான நோயிலிருந்து பூரண சுகமடைய தேவன் பவுல் மூலமாக அற்புதம்செய்தார். அந்தத் தீவிலிருந்த வேறு பலரும் அற்புத சுகம் பெற்றார்கள்.


பவுல் மூன்றுமாத காலம் இந்தத் தீவில் தங்கினார். அவர்கள் பவுலை அதிக மதிப்போடும் மரியாதையோடும் நடத்தினார்கள். அவர்களுக்குத் தேவையானவைகளைக் கொடுத்தனுப்பினார்கள்.

என்றாலும் அந்த வேளையில் எவரும் மனந்திரும்பியதாகச் செய்தி கொடுக்கப்படவில்லை. நான்காம் நூற்றாண்டிலிருந்தே இங்கே சபை இயங்கிவந்ததாக வரலாற்றிலிருந்து அறிகிறோம்.


மால்டா தீவு


இது மத்திய தரைக் கடலில் சிசிலி தீவுக்குத் தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தீவாகும்.


அருகருகேயுள்ளை ஐந்து தீவுகளில் பெரிய மால்டா தீவு 28 கிலோமீட்டர் நீளமும், 15 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாகும். கோசோ, கோமினோ, கோமினோமோ, ஃபில்ஃபியா என்பவை மற்ற நான்கு தீவுகளின் பெயராகும்.


பவுல் அப்போஸ்தலனும் மற்றவர்களும் கரையேறிய இடம் இப்போது புனித பவுல் விரிகுடா என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையில் ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.


லூக்கா நங்கூரங்களை அறுத்து கடலிலே விட்டுவிட்டோம் என்று அப 27:40 வசனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லூக்கா குறிப்பிட்டுள்ள இடத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டபோது, முதலாம் நூற்றாண்டுக்கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஒரு நங்கூரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 ஜோ நவார்ரோ என்பவரே கடலில்

 மூழ்கி இந்த நங்கூரத்தை எடுத்துவந்திருக்கிறார். இப்போது இது வேலெட்டா என்ற இடத்திலுள்ள கடல் சம்பந்தப்பட்ட அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது முதலாம் நூற்றாண்டு அலெக்சாந்திரியா கப்பல்களில் பயன்படுத்தப்பட்டுவந்த நங்கூரமே என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.



துவக்கத்தில் பெனிக்கே தேசத்தவர் (தீரு) இந்தத் தீவில் குடியேறினார்கள்.


கி. மு. 736-லிருந்து இது கிரேக்கர்களின் வசம் வந்தது. பிறகு கி. மு. 528-ல் கார்த்தேஜியர்களால் பிடிக்கப்பட்டது. 

கி. மு. 242-ல் இது ரோமர்களின் கைகளில் வந்தது. பவுல் இந்தத் தீவில் கரையேறிய போது இந்தத் தீவு ஒரு ரோம ஆளுநரால் ஆளுகை செய்யப்பட்டது.


கி.பி. 1964ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் நாளிலிருந்து மால்டா ஒரு சுதந்திர நாடாக  இன்றும் இருக்கிறது.இந்த நாட்டின் மக்களில் 98 சதவீதத்தினர் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.


Monday, 26 July 2021

தீர்வை, வரி. அறிந்து கொள்வோம் பகுதி - 66

 அறிந்து கொள்வோம்

பகுதி - 66


தீர்வை, வரி.


பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ராஜாக்களுக்கு வருமானம் இப்படி கிடைத்தது.


1.யுத்தத்தில் ஜெயித்த ராஜாக்களிடத்திலிருந்து வாங்கும் கப்பம். - 2 நாளா.17:11.


2.வியாபாரிகள் கொடுக்கும் ஆயம். சாமான்களுக்கு வாங்க பட்ட வாரி.இதை ஆயக்காரன் மக்களிடம் வாங்குவார்கள்.


3.பிரஜைகள் செலுத்தும் பல வரிகள். (தானி.11:20;

எஸ்4:13. தீர்வை சகாயம். எஸ்தர் 2:18)


4.ஜனங்கள் பல தடவைகளில் செய்யும் அமஞ்சி வேலை. (1 இரா.5:13, 9;21, 10:14; 2 இரா.23:33; எஸ்றா 4:13, 7:24).


புதிய ஏற்பாட்டுக்காலத்தில் ஜனங்கள் கொடுக்க வேண்டிய வரிகள் பல  இருந்தது.


  • Telos.தெலாஸ்


ரோமர்கள் ஒவ்வொரு நாட்டிலும் பட்டணத்திலும் வியாபாரிகள் கொண்டு வந்த வர்த்தகத்தின்மேல் வரி வசூலிக்கும்படிக்கு ஆயக்காரரை  ஏற்படுத்தியிருந்தார்கள். கலிலேயா நாட்டில் இந்த வரி ஏரோது ராஜாவுக்குக் கொடுக்கப்படும். இந்த வரிக்குத் 'தீர்வை' என்னும் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. மத்.9:9, 17:25; ரோம.13:7.


  • Phoros. பாராஸ்


இது இத்தேசத்துத் தீர்வை வரி போலவே  நிலத்தீர்வை. ரோமராயனுக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தீர்வைக்கு வரி என்று சொல்லலாம். ரோ.13:7.


  • கென்சாஸ். தலைவரி.


(மத். 17:25, 22:17; மாற்.12:14).இதுவும் ரோமராயனுக்குச் செலுத்தப் பட்டது. இதற்காகத்தான் வரிக்காசைக் கொடுக்க வேண்டும். இதற்கு 'வரி' என்றே பெயர்.


  • Didrachmon. டிடிராக்மொன்

(மத்.17:24- ல் சொன்ன இந்த 'வரிப்பணம்' எருசலேம் தேவாலயத்து தேவஸ்தானத்துக்கு ஒவ்வொரு இஸ்ரவேலனும் வருடந்தோறும் செலுத்தவேண்டிய அரைச் சேக்கல்.- 'ஸ்தாத்திரயநாணயம்' 

யாத்.30:13.

இது ரோமர்களால் ஏற்படுத்தப்படாமல், யூதர்களே ஏற்படுத்திக்கொண்ட ஒரு தலை வரி.


மேற்கூறிய இவ்வரிகளைத்தவிர பல நாட்டிலும் ஊர்களிலும் வேறு விதமான வரிகளும் இருந்தன…..


Friday, 23 July 2021

மெத்தூசலா அறிந்து கொள்வோம் பகுதி - 65

 அறிந்து கொள்வோம்


பகுதி - 65


மெத்தூசலா


மெத்தூசலா என்றால்

“ஈட்டியின் மனிதன்” என்றும்

"இவனுடைய மரணம் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும்" என்றும் இந்த பெயருக்கு அர்த்தம் சொல்லுகிறார்கள்.


மெத்தூசலா இதுவரை வாழ்ந்தவர்களிலேயே நீண்ட காலம் உயிர் வாழ்ந்தவன். இவன் தன்னுடைய 969ஆம் வயதில் மரித்தான் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது.

(ஆதி. 5:21-27; 1 நாளா. 1:3; லூக்கா 4:37).


  • இந்த மெத்தூசலா ஏனோக்கின் குமாரன், லாமேக்கின் தகப்பன், நோவாவின் பாட்டனார்.


  • இவனுடைய தகப்பனாகிய ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்து மரிக்காமல் நேரடியாக எடுத்து கொள்ளப்பட்டான் என்றும் பார்க்கிறோம். இவன்

ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான் என்று யூதா 1:14, 15 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.


  • இந்த ஏனோக்கு ஒரு  தீர்க்கதரிசியாக இருந்தபடியால் தனது குமாரனுக்கு "மெத்தூசலா" என்று பெயரிட்டு, அவனுடைய மரணத்துக்குப் பிறகு தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்று முன்னறவித்தான் என்றும் சிலர்  விளக்குகிறார்கள்.


  • மெத்தூசலா ஜலப்பிரளயம் உண்டகும்  முன்பு அதே வருடத்தில் மரித்திருக்க வேண்டும்.


  • யூதா பாரம்பரியத்தின் இவன் உலகம் சிருஷ்டிக்கப்பட்ட பிறகு 1656ஆம் ஆண்டு செஷ்வான் மாதம் 11ஆம் நாளில் மரித்தான் என்று நம்பப்படுகிறது.

ஜலப்பிரளயத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இவன் மரித்து இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.


ஜலப்பிரளயத்துக்குப் பிறகு மனிதனின் சராசரி வாழ்நாட்கள் குறைந்து விட்டது என்பது நமக்கு நன்கு அறியப்பட்ட விஷயம்……,






Thursday, 22 July 2021

முத்தம் ஆய்வு கட்டுரைகள்

 முத்தம்


ஆய்வு கட்டுரைகள்


முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது


முத்தத்தைக் குறிக்க எபிரெய மொழியில் "nashaq" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.


புதிய ஏற்பாட்டில் முத்தத்தைக் குறிக்க Philema, kataphileo, Phileo என்ற கிரேக்கச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


வேதாகமரீதியான முத்தம் மரியாதை மற்றும் கனம்பண்ணுதலையும், அன்பையும், பற்றுறுதியையும், ஆழமான உணர்வுபூர்வமான ஈடுபாட்டையும், சந்தோஷம் அல்லது துக்கத்தையும், அன்பின் நெருக்கத்தையும் குறிக்கிறதாய் இருக்கிறது.


"வணக்கம் மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் விதமாகக் கிழக்கத்திய நாடுகளில் கன்னம், நெற்றி, தாடி, கைகள் மற்றும் கால்களில் முத்தமிடும் பழக்கம் உண்டு. ஆனால் உதடுகளில் முத்தமிடுவது கிடையாது! தன்னை மற்ற நபருக்குக் கீழ்ப்படுத்துவதற்கு அடையாளமாகப் பாதத்தில் முத்தமிட்டார்கள்.


வேதத்தில் பலவகைப்பட்ட முத்தங்களை குறித்து பார்க்கலாம்.


1.காட்டிக்கொடுத்த முத்தம்


இயேசு கெத்சமெனே தோட்டத்தில் இருந்த போது, அவருடைய 

எதிரிகளுடன் வந்த யூதாஸ் காரியோத்து அவரை முத்தமிட்டு, அவர்தான் இயேசு என்று முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான்.

 (மாற்கு 14:44, 45).


2.பாசத்தின் முத்தம்


யாக்கோபு ஏசாவை ஏமாற்றி, தன் தகப்பனாகிய ஈசாக்குக்கு உணவு சமைத்துப் பரிமாறிய பிறகு, அவன் யாக்கோபிடம் தன்னை முத்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டான். யாக்கோபு அவனை முத்தம் செய்தான் (ஆதி. 27:26, 27).


இயேசுவானவர் ஒருமுறை பந்தியிருந்தபோது, பாவியான ஒரு பெண் தன் கண்ணீரால் அவருடைய பாதத்தை நனைத்து, பாதத்தை முத்தமிட்டு, பரிமள தைலத்தைப் பூசினாள் - லூக்கா 7:38, 45). 

இப்படியே இயேசுவானவர் இருமுறை முத்தமிடப்பட்டிருக்கிறார். இந்தப் பாவியான பெண் அவர் பாதத்தில் முத்தமிட்டாள், வஞ்சகனாகிய யூதாஸ்காரியோத்து அவருடைய கன்னத்தில் முத்தமிட்டான்.


3.நேசத்தின் முத்தம்


யாக்கோபு தன் மாமன் மகள் ராகேலைக் கண்டபோது அவளை முத்தமிட்டு, சத்தமிட்டு அழுதான் (ஆதி. 29:11).


நேசிக்கும் இருவரிடையேயுள்ள முத்தத்தைக் குறித்து.

(உன்னதப்பாட்டு 1:2 )


4.ஒப்புரவாகுதலின் முத்தம்


விரோதத்திலிருந்த ஏசாவும், யாக்கோபும் ஒருவரையொருவர் கட்டி  தழுவி முத்தமிட்டுக்கொண்டார்கள்.

 (ஆதி. 33:4).


தாவீது ராஜா அப்சலோமை முத்தமிட்டான் (2 சாமு. 14:33).


5.நற்உறவின் முத்தம்


தாவீதும், யோனத்தானும் பிரியும்போது ஒருவரையொருவர் முத்தம் செய்து அழுதார்கள் (1 சாமு. 20:41).


6.விடைபெறும் முத்தம்


லாபான் தன்னை விட்டுச் செல்லும் தன் பிள்ளைகளையும், குமாரத்திகளையும் முத்தமிட வேண்டும் என்று விரும்பினார்.

(ஆதி. 31:28, 55). 


ஒர்பாள் தன் மாமியாகிய நகோமியை முத்தமிட்டு விட்டுப் பிரிந்துசென்றாள் (ரூத். 1:14).


தாவீது ராஜா பாசிலாவை முத்தமிட்டான். அவன் திரும்பிச் சென்றான்.

(2 சாமு. 19:39).


எலிசா தீர்க்கதரிசி அழைக்கப்பட்டபோது, அவர் தன் தகப்பனையும், தாயையும் முத்தமிட்டு, விடைபெற அனுமதிக்கும்படி எலியா தீர்க்கதரிசியிடம் கேட்டுக்

கொண்டார். (1 இரா. 19:20). 


7.நட்போடுள்ள அன்பைக் காட்டும் முத்தம்


சாமுவேல் தீர்க்கதரிசி சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்தபோது அவனை முத்தமிட்டார்.

(1சாமு. 10:1).


எபேசு சபையின் மூப்பர்கள் பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல் வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்.

 (அப். 20:38).


8.வஞ்சத்தின் முத்தம்


வேசியான ஸ்திரீ ஒரு ஆண்மகனைப் பிடித்து, அவனை முத்தமிட்டு ஏமாற்றுகிறாள் (நீதி. 7:13).


"சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

( நீதி 27:6)


யோவாப் முத்தம் செய்வதுபோல ஏமாற்றி, அமாசாவைக் கொன்றுபோட்டான்.

 (2 சாமு. 20:9,10).


9.பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான முத்தம்


யாக்கோபு தன் பேரப்பிள்ளைகளை முத்தமிட்டான்.

 (ஆதி. 48:10).


யாக்கோபு தன் தகப்பனை முத்தமிடுதல்.

 (ஆதி. 27:26.)


லாபான் தன் பிள்ளைகளை முத்தமிட்டான்- (ஆதி 31:28.55.)


யாக்கோபு யோசேப்பின் குமாரர்களை முத்தமிட்டான் (ஆதி.48:10).


யாக்கோபு தன் பிள்ளைகளை முத்தமிட்டான்- (ஆதி. 50:1.)


மோசே தன் மாமனை முத்தமிட்டான்

(யாத். 18:7.)


நகோமி தன் மருமகள்களை முத்தமிட்டாள். (ரூத் 1:9,14.)


10.மனதுருக்கத்தின் முத்தம்


கெட்டகுமாரனைக் குறித்து இயேசு சொன்ன உவமைக்கதையில் மனந்திரும்பி வந்த தன் மகனைக் கண்டு மனதுருகிய தகப்பன் அவனை அணைத்துக்கொண்டு முத்தமிட்டான் (லூக்கா 15:20).


11.உறவினர்களிடையே முத்தம்


லாபான் யாக்கோபை முத்தமிட்டு அழைத்துச் சென்றான்.

 (ஆதி. 29:13).


யோசேப்பு தன் சகோதரர்களை முத்தமிட்டு அழுதான்.

 (ஆதி. 45:15).


12.சகோதர அன்பைக் காட்டும் பரிசுத்த முத்தம்


ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்" என்று பவுல்  சபையாருக்கு எழுதியிருக்கிறார் (ரோமர் 16:16; 1 கொரி. 16:20; 2 கொரி. 13:12; 1 தெச. 5:26).

வணக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளுதலின்  அடையாளமாகவும், ஆசீர்வாதத்தைப் பகிர்ந்தளிக்கும் விதமாகவும் ஆதிச் சபை விசுவாசிகள் முத்தத்தைப் பாரிமாறிக்கொண்டார்கள்.


பாலுறவுரீதியான முத்தம் மற்றும் ஏமாற்றுதலின் மாய்மாலமான முத்தத்திலிருந்து இதை வேறுபடுத்திக் காட்ட பரிசுத்த முத்தம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.


புதிய விசுவாசிகள் பரிசுத்த முத்தத்தோடுகூடச் சபைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். இது நம் நாட்களில் இப்போது ஒருவரொருவர் கைகுலுக்கி வரவேற்பதற்கு இணையானதாக இருக்கிறது.


13.அன்பின் முத்தம்


ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள்" என்று  பேதுரு எழுதியிருக்கிறார் 

(1 பேதுரு 5:14).


14.விக்கிரகங்களை முத்தமிடுதல்


பாகால் என்ற விக்கிரகத்தை முத்தமிட்டு, வணங்கும் பழக்கம் இருந்தது.

 (1 இரா. 19:18)


வார்ப்பித்த விக்கிரகங்களை

 முத்தமிட்டும் பழக்கம்- (ஒசியா 13:2).


சூரியனையும், சந்திரனையும் வணங்கி கைகளை முத்தமிடுவது உண்டு.

 (யோபு 31:26, 27).




சங்கீதம் 85:10 சொல்லுகிறது:-


"கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்" என்று 

இது தேவனுடைய மீட்கும் கிரியையைக் குறிக்கும் முத்தம்……..

Taken from .Rajkumar



Tuesday, 20 July 2021

பெயர்களும் அதன் அர்த்தங்களும். அறிந்து கொள்வோம் பகுதி - 64

 அறிந்து கொள்வோம்

பகுதி - 64


பெயர்களும்  அதன் அர்த்தங்களும்


நம்முடைய கர்த்தராகிய தேவன் நமக்கு அருளியுள்ள ஆசீர்வாதங்கள் எல்லாவற்றிலும் மிகவும் விலையேறப் பெற்றது அவர் அருளின வேதமே. அதன் மகத்துவத்திற்கும் ஆழங்களுக்கும் எல்லையேயில்லை. அதன் ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் வசனமும் ஒரு சத்தியத்தை நமக்கு உணர்த்தும்.


பெரும்பாலும் வேதத்தில் நாமங்களின் (பெயர்கள்) வரிசையை நாம் கவனிக்காமலோ அல்லது வாசிக்காமலோ கூட விட்டு விடுவதுண்டு. அதிலே என்ன விசேசஷம் இருந்துவிடப் போகிறது என்றும் நினைக்கலாம். ஆனால் அவற்றிலும் பல ரகசியங்கள் அடங்கியுள்ளன. உதாரணத்திற்கு…

 

1 நாளாகமம் 1:1-4


(1) ஆதாம், சேத், ஏனோஸ்,

(2) கேனான், மகலாலெயேல், யாரேத்,

(3) ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,

(4) நோவா..

ஆதாம் துவக்கி நோவா வரையிலான முதல் பத்து தலைமுறையை நாம் சற்று கவனிக்கலாம். 


வேதத்தின் ஒவ்வொரு எழுத்திலும் வார்த்தையிலும் வசனத்திலும் ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயர்களில் அப்படி என்ன ரகசியம் இருக்கிறது ? அதைத்  நாம் பார்க்கப் போகிறோம்..

இந்த பத்து நபர்களின் பெயர்களோடு அதன் அர்த்தங்களை எல்லாம் பார்க்கலாம்….


பெயர்களின் அர்த்தங்கள்


1. ஆதாம் மனிதன் (Human)

2. சேத் - பதிலாக (Substitute)

3. ஏனோஸ் - சாகுதல் (சாகிறதற்கெண்று) (Mortal)

4. கேனான் - நியமிக்கப்பட்ட ஒருவன்.(Appointed One)

5. மலாலெயேல் தேவனுடைய புகழ்ச்சி (Praise of God)

6. யாரேத் - மேலிருந்து கீழிறங்கினவன்.(Descent One)

7- ஏனோக்கு - அர்ப்பணிக்கப்பட்ட (Dedicated)

8- மெத்தூசலா - அவன் மரணம் கொண்டு வரும்

9- லாமேக்கு - வல்லமையான (Powerful)

10- நோவா -இளைப்பாறுதல் (Rest)


இப்பொழுது இந்தப் பெயர்களின் அர்த்தங்களை மேலிருந்து கீழ் நோக்கி வரிசையாக வாசித்துப் பார்க்கலாம்…….


“ மனிதனுக்குப் – பதிலாக – சாகிறதற்கென்று - நியமிக்கப்பட்ட ஒருவர் - தேவனுடைய புகழ்ச்சியோடு- மேலிருந்து கீழிறங்கினவர் – அர்ப்பணிக்கப்பட்ட அவர் மரணம் கொண்டு வரும் – வல்லமையான – இளைப்பாறுதல் “


முதல் பத்து நபர்களின் பெயர்களில் எவ்வளவு மேன்மையான சுவிசேஷத்தின் ரகசியம் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது!! தேவ குமாரன் மனிதனுக்குப் பதிலாக மரணிக்கும்படிக்கு தேவனுக்குரிய அதே புகழ்ச்சியோடு மேலிருந்து (பரலோகத்திலிருந்து) கீழிறங்கி வரப் போவதையும், அவருடைய மரணத்தினாலேயே ஒருக்காலும் நாம் இழந்து போக கூடாத வல்லமையான இளைப்பாறுதல் கிடைக்கப் போவதையும் தேவன் எவ்வளவாய் முன்னறிவித்திருக்கிறார். .


பரிசுத்த வேதாகமத்தில் உள்ள அத்தனை பெயர்கள் வம்ச வரலாறுகள் அனைத்துக்குள்ளும் இதைப் போன்ற இரகசியங்கள் உள்ளன.

 ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையில் ஒன்றைக் கூட நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது….




Friday, 16 July 2021

PRAYER IN THE BOOK OF PSALMS. Mini - Articles

 PRAYER IN THE BOOK OF PSALMS


Mini - Articles


Prayer is human communication with God. Psalms could be described as a collection of song prayers. Probably the most striking feature of these prayers is their unedited honesty. The words often express our own feelings -  feelings that we would prefer no one, much less God, ever knew. Making these psalms our prayers can teach us a great deal about how God wants us to communicate with him. Too often we give God a watered-down version of our feelings, hoping we won't offend him or make him curious about our motives. As we use the psalms to express our feelings, we learn that honesty, openness, and sincerity are valuable to God.


Following are several types of prayers with examples from Psalms. Note that the psalm writers communicated with God in a variety of ways for a variety of reasons. Each of us is invited to communicate with God. Using the psalms will enrich your personal prayer life.


Prayers of Psalms


Praise to God  -Ps :100,113,117


Thanksgiving by a community  - Ps 67,75,136.


Thanksgiving by an individual -Ps 18,30,32.


Request by the community - Ps 79,80,123.


Request by an individual - Ps 3,55,86.


Sorrow by the community - Ps 44,74,137.


Sorrow by an individual - Ps 5,6,120.


Anger - Ps 35,109,140.


Confession - Ps 6,32,51.


Faith - Ps 11,16, 23…..



Taken From Dr.Gilbert Beers



டிடாகே (Didache) - அப்போஸ்தலர்களின் போதனை || அறிந்து கொள்வோம் _ பகுதி - 160 ||

அறிந்து கொள்வோம்  பகுதி - 160 டிடாகே (Didache) - அப்போஸ்தலர்களின் போதனை "அப்போஸ்தலர்களின் படிப்பினை" என்பது பொதுவாக Didache (டிடாக...