மெலித்தா அறிந்து கொள்வோம் பகுதி -67

 அறிந்து கொள்வோம்


பகுதி -67


மெலித்தா Malta


மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஒரு தீவு இப்போது இதை மால்டா என்று அழைக்கிறார்கள்.


அப் 27:3-44 - ல்

பவுல்  ரோமாபுரியில் விசாரிக்கப்

படும்படி கொண்டுசெல்லப்பட்டபோது, அவர் சென்ற கப்பல் புயலில் சிக்கியது

கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டாலும், பவுலுக்கும், மாலுமிகளுக்கும்,

சிறைப்பிடித்துக்கொண்டுபோக பட்டவர்களுக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அவர்கள் ஒரு தீவில் கரையேறினார்கள்.


"நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம். அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டார்கள்" என்று இதைக் குறித்துப் லூக்கா குறிப்பிட்டிருக்கிறார் (அப். 28:1, 


 விஷப்பாம்பு


நெருப்பு மூட்டுவதற்காக விறகுகளை எடுத்துப் போடும்போது, ஒரு கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு பவுலின் கையைக் கவ்வியது உடனே தீவில் உள்ள மக்கள் பவுல் ஒரு கொடியவன் என்று நினைத்தார்கள்.

ஆனால் பவுல் "அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப் போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்" (அப்.28:5).

பவுலுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பதைக் கண்ட அந்தத் தீவு மக்கள் பவுலை தேவன் என்று சொல்லிக்கொண்டார்கள் 


அந்தத் தீவின் முதலாளியாகிய புபிலியுவின் தகப்பன் சாவுக்கேதுவான நோயிலிருந்து பூரண சுகமடைய தேவன் பவுல் மூலமாக அற்புதம்செய்தார். அந்தத் தீவிலிருந்த வேறு பலரும் அற்புத சுகம் பெற்றார்கள்.


பவுல் மூன்றுமாத காலம் இந்தத் தீவில் தங்கினார். அவர்கள் பவுலை அதிக மதிப்போடும் மரியாதையோடும் நடத்தினார்கள். அவர்களுக்குத் தேவையானவைகளைக் கொடுத்தனுப்பினார்கள்.

என்றாலும் அந்த வேளையில் எவரும் மனந்திரும்பியதாகச் செய்தி கொடுக்கப்படவில்லை. நான்காம் நூற்றாண்டிலிருந்தே இங்கே சபை இயங்கிவந்ததாக வரலாற்றிலிருந்து அறிகிறோம்.


மால்டா தீவு


இது மத்திய தரைக் கடலில் சிசிலி தீவுக்குத் தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தீவாகும்.


அருகருகேயுள்ளை ஐந்து தீவுகளில் பெரிய மால்டா தீவு 28 கிலோமீட்டர் நீளமும், 15 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாகும். கோசோ, கோமினோ, கோமினோமோ, ஃபில்ஃபியா என்பவை மற்ற நான்கு தீவுகளின் பெயராகும்.


பவுல் அப்போஸ்தலனும் மற்றவர்களும் கரையேறிய இடம் இப்போது புனித பவுல் விரிகுடா என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையில் ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.


லூக்கா நங்கூரங்களை அறுத்து கடலிலே விட்டுவிட்டோம் என்று அப 27:40 வசனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லூக்கா குறிப்பிட்டுள்ள இடத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டபோது, முதலாம் நூற்றாண்டுக்கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஒரு நங்கூரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 ஜோ நவார்ரோ என்பவரே கடலில்

 மூழ்கி இந்த நங்கூரத்தை எடுத்துவந்திருக்கிறார். இப்போது இது வேலெட்டா என்ற இடத்திலுள்ள கடல் சம்பந்தப்பட்ட அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது முதலாம் நூற்றாண்டு அலெக்சாந்திரியா கப்பல்களில் பயன்படுத்தப்பட்டுவந்த நங்கூரமே என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.



துவக்கத்தில் பெனிக்கே தேசத்தவர் (தீரு) இந்தத் தீவில் குடியேறினார்கள்.


கி. மு. 736-லிருந்து இது கிரேக்கர்களின் வசம் வந்தது. பிறகு கி. மு. 528-ல் கார்த்தேஜியர்களால் பிடிக்கப்பட்டது. 

கி. மு. 242-ல் இது ரோமர்களின் கைகளில் வந்தது. பவுல் இந்தத் தீவில் கரையேறிய போது இந்தத் தீவு ஒரு ரோம ஆளுநரால் ஆளுகை செய்யப்பட்டது.


கி.பி. 1964ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் நாளிலிருந்து மால்டா ஒரு சுதந்திர நாடாக  இன்றும் இருக்கிறது.இந்த நாட்டின் மக்களில் 98 சதவீதத்தினர் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.


Post a Comment

0 Comments