மேசா Mesha. அறிந்து கொள்வோம் பகுதி -68

 அறிந்து கொள்வோம்


பகுதி -68


மேசா Mesha


மேசா என்ற சொல்லுக்கு "இரட்சிப்பு” என்று அர்த்தம்.


மோவாபிய ராஜாக்களில் ஒருவன் பெயர் இது  அவனிடம் அதிகமான ஆடுமாடுகள் இருந்து அவன் கேமோஷ் காத் என்பவனின் குமாரன். கேமோஷ் அவர்களுடைய தெய்வத்தின் பெயர்.


இவன் இஸ்ரவேல் ராஜாவாகிய ஆகாபுக்குக் கப்பம் கட்டிவந்தான். 

லட்சம் ஆட்டுக் குட்டிகளையும், லட்சம் குறும்பாட்டுக்கடாக்களையும் கப்பமாகச் செலுத்திவந்தான்.(2 இரா.3:4).


 

இஸ்ரவேல், யூதாவோடு யுத்தம்:-

             (2இரா.3:25-27).


ஆகாப் மரித்த பிறகு இவன் இஸ்ரவேலுக்கு எதிராகக் கலகம் செய்து, கப்பம் கட்டுவதை நிறுத்தினான்.


யோராம் அரியணையில் ஏறியபோது, அவன் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் உதவியை நாடினான். இந்த இருவரின் ராணுவமும் மோவாபியரின் இராணுவத்தோடு மோதியது. வழியில் தேவன் இஸ்ரவேலரின் சேனைக்கு அற்புதவிதமாகத் தண்ணீரை அருளினார்.


கடுமையான போரில் மோவாப் இஸ்ரவேலுக்கு கீழ் வந்தது.

இஸ்ரவேல் மற்றும் யூதாவின் சேனைகள் மோவாபை கீழ்படுத்தினார்கள்.

ராஜா மேசா கிர்-ஹராசேத் என்ற

இடத்திற்கு ஓடிப்போனான். அந்தப் பட்டணத்தின் மதில் சுவற்றின் மீது  இஸ்ரவேலர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்

போதே தன்னுடைய மூத்த குமாரனை மோவாபியரின் அக்கினி தெய்வமாகிய கேமோஷூக்குப் பலியிட்டான்.

இதைக்கண்ட இஸ்ரவேலரின் இராணுவத்தினர் தாங்கள் கொள்ளையிட்ட பொருட்களோடு யோர்தானைக் கடந்து நாட்டுக்குத் திரும்பினார்கள்  

மோவாபியக் கல்


மேசாவின் காரியங்கள் எல்லாம் Stele of Mesha என்று அழைக்கப்பட்ட ஒரு கறுப்பநிறக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.


இந்தக் கல் மோவாப் பகுதியில் டிபோன் என்ற இடத்தில் 1868- ல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் மேசா ராஜா கப்பம் கட்டிய செய்திகளும், பிற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மோவாபிய மொழியில் எழுதப்பட்டுள்ள இவை வேதாகமத்தை மேலும் உறுதிப்படுத்துகிறதாய் இருக்கிறது.


இந்தக் கல் 1.5 மீட்டர் உயரமானது. இதில் 34 வரிகள் எழுதப்பட்டுள்ளன. இது கி. மு. 850ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள்.இது இப்போது பாரிஸ், லூவர் அருங்காட்சியகத்தில் இந்தக் கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments