முத்தம் ஆய்வு கட்டுரைகள்

 முத்தம்


ஆய்வு கட்டுரைகள்


முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது


முத்தத்தைக் குறிக்க எபிரெய மொழியில் "nashaq" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.


புதிய ஏற்பாட்டில் முத்தத்தைக் குறிக்க Philema, kataphileo, Phileo என்ற கிரேக்கச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


வேதாகமரீதியான முத்தம் மரியாதை மற்றும் கனம்பண்ணுதலையும், அன்பையும், பற்றுறுதியையும், ஆழமான உணர்வுபூர்வமான ஈடுபாட்டையும், சந்தோஷம் அல்லது துக்கத்தையும், அன்பின் நெருக்கத்தையும் குறிக்கிறதாய் இருக்கிறது.


"வணக்கம் மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் விதமாகக் கிழக்கத்திய நாடுகளில் கன்னம், நெற்றி, தாடி, கைகள் மற்றும் கால்களில் முத்தமிடும் பழக்கம் உண்டு. ஆனால் உதடுகளில் முத்தமிடுவது கிடையாது! தன்னை மற்ற நபருக்குக் கீழ்ப்படுத்துவதற்கு அடையாளமாகப் பாதத்தில் முத்தமிட்டார்கள்.


வேதத்தில் பலவகைப்பட்ட முத்தங்களை குறித்து பார்க்கலாம்.


1.காட்டிக்கொடுத்த முத்தம்


இயேசு கெத்சமெனே தோட்டத்தில் இருந்த போது, அவருடைய 

எதிரிகளுடன் வந்த யூதாஸ் காரியோத்து அவரை முத்தமிட்டு, அவர்தான் இயேசு என்று முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான்.

 (மாற்கு 14:44, 45).


2.பாசத்தின் முத்தம்


யாக்கோபு ஏசாவை ஏமாற்றி, தன் தகப்பனாகிய ஈசாக்குக்கு உணவு சமைத்துப் பரிமாறிய பிறகு, அவன் யாக்கோபிடம் தன்னை முத்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டான். யாக்கோபு அவனை முத்தம் செய்தான் (ஆதி. 27:26, 27).


இயேசுவானவர் ஒருமுறை பந்தியிருந்தபோது, பாவியான ஒரு பெண் தன் கண்ணீரால் அவருடைய பாதத்தை நனைத்து, பாதத்தை முத்தமிட்டு, பரிமள தைலத்தைப் பூசினாள் - லூக்கா 7:38, 45). 

இப்படியே இயேசுவானவர் இருமுறை முத்தமிடப்பட்டிருக்கிறார். இந்தப் பாவியான பெண் அவர் பாதத்தில் முத்தமிட்டாள், வஞ்சகனாகிய யூதாஸ்காரியோத்து அவருடைய கன்னத்தில் முத்தமிட்டான்.


3.நேசத்தின் முத்தம்


யாக்கோபு தன் மாமன் மகள் ராகேலைக் கண்டபோது அவளை முத்தமிட்டு, சத்தமிட்டு அழுதான் (ஆதி. 29:11).


நேசிக்கும் இருவரிடையேயுள்ள முத்தத்தைக் குறித்து.

(உன்னதப்பாட்டு 1:2 )


4.ஒப்புரவாகுதலின் முத்தம்


விரோதத்திலிருந்த ஏசாவும், யாக்கோபும் ஒருவரையொருவர் கட்டி  தழுவி முத்தமிட்டுக்கொண்டார்கள்.

 (ஆதி. 33:4).


தாவீது ராஜா அப்சலோமை முத்தமிட்டான் (2 சாமு. 14:33).


5.நற்உறவின் முத்தம்


தாவீதும், யோனத்தானும் பிரியும்போது ஒருவரையொருவர் முத்தம் செய்து அழுதார்கள் (1 சாமு. 20:41).


6.விடைபெறும் முத்தம்


லாபான் தன்னை விட்டுச் செல்லும் தன் பிள்ளைகளையும், குமாரத்திகளையும் முத்தமிட வேண்டும் என்று விரும்பினார்.

(ஆதி. 31:28, 55). 


ஒர்பாள் தன் மாமியாகிய நகோமியை முத்தமிட்டு விட்டுப் பிரிந்துசென்றாள் (ரூத். 1:14).


தாவீது ராஜா பாசிலாவை முத்தமிட்டான். அவன் திரும்பிச் சென்றான்.

(2 சாமு. 19:39).


எலிசா தீர்க்கதரிசி அழைக்கப்பட்டபோது, அவர் தன் தகப்பனையும், தாயையும் முத்தமிட்டு, விடைபெற அனுமதிக்கும்படி எலியா தீர்க்கதரிசியிடம் கேட்டுக்

கொண்டார். (1 இரா. 19:20). 


7.நட்போடுள்ள அன்பைக் காட்டும் முத்தம்


சாமுவேல் தீர்க்கதரிசி சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்தபோது அவனை முத்தமிட்டார்.

(1சாமு. 10:1).


எபேசு சபையின் மூப்பர்கள் பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல் வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்.

 (அப். 20:38).


8.வஞ்சத்தின் முத்தம்


வேசியான ஸ்திரீ ஒரு ஆண்மகனைப் பிடித்து, அவனை முத்தமிட்டு ஏமாற்றுகிறாள் (நீதி. 7:13).


"சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

( நீதி 27:6)


யோவாப் முத்தம் செய்வதுபோல ஏமாற்றி, அமாசாவைக் கொன்றுபோட்டான்.

 (2 சாமு. 20:9,10).


9.பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான முத்தம்


யாக்கோபு தன் பேரப்பிள்ளைகளை முத்தமிட்டான்.

 (ஆதி. 48:10).


யாக்கோபு தன் தகப்பனை முத்தமிடுதல்.

 (ஆதி. 27:26.)


லாபான் தன் பிள்ளைகளை முத்தமிட்டான்- (ஆதி 31:28.55.)


யாக்கோபு யோசேப்பின் குமாரர்களை முத்தமிட்டான் (ஆதி.48:10).


யாக்கோபு தன் பிள்ளைகளை முத்தமிட்டான்- (ஆதி. 50:1.)


மோசே தன் மாமனை முத்தமிட்டான்

(யாத். 18:7.)


நகோமி தன் மருமகள்களை முத்தமிட்டாள். (ரூத் 1:9,14.)


10.மனதுருக்கத்தின் முத்தம்


கெட்டகுமாரனைக் குறித்து இயேசு சொன்ன உவமைக்கதையில் மனந்திரும்பி வந்த தன் மகனைக் கண்டு மனதுருகிய தகப்பன் அவனை அணைத்துக்கொண்டு முத்தமிட்டான் (லூக்கா 15:20).


11.உறவினர்களிடையே முத்தம்


லாபான் யாக்கோபை முத்தமிட்டு அழைத்துச் சென்றான்.

 (ஆதி. 29:13).


யோசேப்பு தன் சகோதரர்களை முத்தமிட்டு அழுதான்.

 (ஆதி. 45:15).


12.சகோதர அன்பைக் காட்டும் பரிசுத்த முத்தம்


ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்" என்று பவுல்  சபையாருக்கு எழுதியிருக்கிறார் (ரோமர் 16:16; 1 கொரி. 16:20; 2 கொரி. 13:12; 1 தெச. 5:26).

வணக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளுதலின்  அடையாளமாகவும், ஆசீர்வாதத்தைப் பகிர்ந்தளிக்கும் விதமாகவும் ஆதிச் சபை விசுவாசிகள் முத்தத்தைப் பாரிமாறிக்கொண்டார்கள்.


பாலுறவுரீதியான முத்தம் மற்றும் ஏமாற்றுதலின் மாய்மாலமான முத்தத்திலிருந்து இதை வேறுபடுத்திக் காட்ட பரிசுத்த முத்தம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.


புதிய விசுவாசிகள் பரிசுத்த முத்தத்தோடுகூடச் சபைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். இது நம் நாட்களில் இப்போது ஒருவரொருவர் கைகுலுக்கி வரவேற்பதற்கு இணையானதாக இருக்கிறது.


13.அன்பின் முத்தம்


ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள்" என்று  பேதுரு எழுதியிருக்கிறார் 

(1 பேதுரு 5:14).


14.விக்கிரகங்களை முத்தமிடுதல்


பாகால் என்ற விக்கிரகத்தை முத்தமிட்டு, வணங்கும் பழக்கம் இருந்தது.

 (1 இரா. 19:18)


வார்ப்பித்த விக்கிரகங்களை

 முத்தமிட்டும் பழக்கம்- (ஒசியா 13:2).


சூரியனையும், சந்திரனையும் வணங்கி கைகளை முத்தமிடுவது உண்டு.

 (யோபு 31:26, 27).




சங்கீதம் 85:10 சொல்லுகிறது:-


"கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்" என்று 

இது தேவனுடைய மீட்கும் கிரியையைக் குறிக்கும் முத்தம்……..

Taken from .Rajkumar



Post a Comment

1 Comments