Tuesday, 24 October 2023

வாற்கோதுமை || அறிந்து கொள்வோம் || பகுதி -135 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -135


வாற்கோதுமை


வாற்கோதுமை புல் வகையை சார்ந்த ஒரு தாவரம் இது மனிதனின் உணவாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது.

உலகத்திலேயே அதிகமாக பயிரிடப்படும் தாவரங்களில் ஐந்தாவது இடத்தில் இது உள்ளது. இந்த வாற்கோதுமை தானியத்தில் இருந்து தான் பார்லி (Barly) என்ற  அரிசியை எடுக்கிறார்கள்.கோதுமையை விட வாற்கோதுமை அதிக சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.


கானான் தேசத்தில் கோதுமை மற்றும் வாற்கோதுமை என்று இரண்டு வகை கோதுமைகள் உண்டு.வேதாகமத்தில் கோதுமை என்ற வார்த்தை 40 இடத்திலும், வாற்கோதுமை என்ற வார்த்தை 34 இடத்திலும் வருகிறது.

இதற்கு வாற்கோதுமை என்ற பெயர் வர காரணம் இதனுடைய கதிரில் குறைவான தானியமும் நீளமான வால் இருப்ப



தால் இது வாற்கோதுமை என்றும் அழைக்கப்படுகிறது.கோதுமையில் கதிரில் தானியம் அதிகமாக இருக்கும் வால் குட்டையாக இருக்கும்.



உபாகமம் 8:8 -அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்;


இது எபிரேயர்களின் மிக முக்கியமான ஒரு உணவு  ஆகும்.பொதுவாக பட்டணங்களில் கோதுமையையும், கிராமங்களில் வாற்கோதுமை மக்கள் உணவுக்காக பயன்படுத்தினார்கள் குறிப்பாக மேய்ப்பர்கள் இந்த வாற்கோதுமையை அதிகமாக உபயோகப்படுத்தினார்கள்.


1 இராஜ 4:28 -ஆரம்பக் காலங்களில் இந்த வாற்கோதுமை ஒட்டகத்திற்கும் குதிரைகளுக்கும் உணவாக பயன்படுத்தப்பட்டது, பின் நாட்களில் மனிதர்களும் அதை உணவாக உட்கொள்ள ஆரம்பித்தார்கள்.


2 இராஜாக்கள் 7:16


ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.

இதன் விலை மிகவும் மலிவாக இருந்தது.துக்கம் மற்றும் உபவாச நாட்களில் வாற்கோதுமை மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவார்கள். உடம்பின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒரு உணவு இந்த வாற்கோதுமை, இது ஐந்து மாதங்களில் பயிர் ஆகும் தானியம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இதன் அறுவடை இருக்கும் குறிப்பாக பஸ்கா பண்டிகையின் போது இருக்கும். பொதுவாக யூதர்களுக்கு மூன்று அறுவடை காலம் உண்டு ஒன்று வாற்கோதுமை, இரண்டாவது கோதுமை அறுவடை மூன்றாவது திராட்சை பழ அறுவடை.


இந்த வாற்கோதுமை மற்றும் கோதுமை அறுவடை காலங்களில் தான் ரூத் பெத்லேகமுக்கு வந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது ( ரூத் 1:22)


இயேசு கிறிஸ்து 5 அப்பம் 2 மீன்களைக் கொண்டு 5000 பேரை போசித்தது இந்த வாற்கோதுமையால்  செய்யப்பட்ட அப்பம்.(யோவான் 6:9)


பழைய ஏற்பாட்டிலும் எலிசா 20 வாற்கோதுமை

அப்பங்களை வைத்து தான் 100 பேருக்கு உணவு அளித்தார்.( 2 இராஜாக்கள் 4:42-44)


இது ஏழைகளின் உணவு என்று அழைக்கப்படுகிறது.







Friday, 20 October 2023

வேதாகமத்தில் பழமொழிகள் || அறிந்து கொள்வோம் || பகுதி -134 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -134


வேதாகமத்தில் பழமொழிகள்!


𝟙.சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது *பழமொழியாயிற்று*

𝟙 சாமு 𝟙𝟘:𝟙𝟚


𝟚.*தாயைப் போல மகள்* என்று உன்னைக்குறித்துப் *பழமொழி* சொல்லுவார்கள்.

எசே 𝟙𝟞:𝟜𝟜


𝟛.*பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின* என்னும் *பழமொழியை* நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?

எசே 𝟙𝟠:𝟚


𝟜.மனுபுத்திரனே, *நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும்* என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் *பழமொழி* என்ன?

எசே 𝟙𝟚:𝟚𝟚


𝟝.*வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச்* சொல்லி...

லூக் 𝟜:𝟚𝟛


𝟞.*நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது* என்று சொல்லப்பட்ட மெய்யான *பழமொழியின்படியே* அவர்களுக்குச் சம்பவித்தது.

𝟚 பேதுரு 𝟚:𝟚𝟚


𝟟.மூடன் வாயில் அகப்பட்ட *பழமொழி* வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு. 

நீதி 𝟚𝟞:𝟡

நன்றி: மறைபொருள் Teams







Thursday, 5 October 2023

வேதாகம மலைகளும் அதன் தொடர்புடைய சில நிகழ்ச்சிகளும் ||அறிந்து கொள்வோம் பகுதி- 133 ||

அறிந்து கொள்வோம்

பகுதி- 133


வேதாகம மலைகளும் அதன் தொடர்புடைய சில நிகழ்ச்சிகளும்


1.அரராத்மலை-ஆதி 8 : 4

 பேழை தங்கிய இடம்.


2.மோரியா மலை -ஆதி 22 : 2

ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடக்கொண்டு சென்ற இடம். 


3.ஒரேப்-  யாத் 3 : 1, 2

அதிசயமாக முட்செடி எரிந்த இடம்.


4.சீனாய் மலை - யாத் 19 : 11, 20

நியாயப்பிரமாணம் கொடுத்த இடம்.

 

5.ஏபால்/கெரிசீம் மலை

 உபா 11 : 29; 27 : 11 - 13

ஆசீர்வாதமும் சாபமும் 

அறிக்கையிட்ட இடம். 


6.கர்மேல் மலை - 1இரா 18 : 19 -39

எலியா பலியிட்ட இடம். 


7.எர்மோன் மலை - (?)மாற் 9: 2 

கிறிஸ்து மறுரூபமான இடம் 


8.ஒலிவ மலை - அப் 1 : 12

கிறிஸ்து பரமேறிய இடம். 



Wednesday, 4 October 2023

தீமோத்தேயு || அறிந்து கொள்வோம் || பகுதி -132 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -132



தீமோத்தேயு


தீமோத்தேயு என்ற கிரேக்க பெயருக்கு "Timotheos" என்றும் "தேவனுக்கு முக்கியமானவர்"- "Precious One of God"அல்லது தேவனால் கனம் பண்ணப்பட்டவர் என்றும் அர்த்தப்படும்.


🌿தீமோத்தேயுவின் தாய் - யூதர் (ஐனிக்கேயாள்)

🌿தீமோத்தேயுவின் தந்தை - ஒரு கிரேக்கர் (பெயர் குறிப்பிடப்படவில்லை). 

🌿தீமோத்தேயுவின் பாட்டி - லோவிசாள். 

🌿 பவுல் லீஸ்தீராவுக்கு போனபோது அங்கு தீமோத்தேயுவை சந்தித்தார். பவுலின் ஊழியத்தின் மூலமாக இவர் இரட்சிக்கப்பட்டார்.

பவுலோடு பல இடங்களுக்கு பிரயாணம் பண்ணி ஊழியம் செய்தார்.ரோமாபுரியில் பவுல் சிறைச்சாலையில் இருந்த போது அவரும் அவரோடு கூட இருந்தார்.


வேதாகமத்தில் புதியஏற்பாட்டில் சிறந்த முன்மாதிரியான ஒரு ஊழியக்காரனாக இருப்பவர் தீமோத்தேயு. இவர் வாலிபப் பிராயத்திலிருந்து ஊழியம் செய்பவராயிருந்தார்.(1தீமோ-4:12) 

இவர் பவுலின் ஊழியத்தில் உருவக்கப்பட்டவர்.ஒவ்வொரு ஊழியர்களும் தமக்குப் பின்னர் ஊழியத்தை தொடர்ந்து நடத்துவதற்கு ஆவிக்குரிய தீமோத்தேயுக்களை உருவாக்க வேண்டும். 



"நான்" தீமோத்தேயுவைப் போல உருவாக வேண்டும்' என்று விரும்புபவர்கள் தங்கள் தலைவனுடன் இணைந்து ஊழியத்தில் பங்கேற்று உதவிகள் செய்பவராகவும், பாடுபடுபவராகவும்,ஜெபிப்பவராகவும் காணப்பட வேண்டும்.





தீமோத்தேயுவின் முன்மாதிரி   (நற்பண்புகள்)


1.பவுல் அவர்களின் ஊழியத்தையும் அவரின் பாடுகளையும் பற்றி நன்கு தெரிந்து கொண்டே பவுலடிகளாருடன் இணைந்து ஊழியப்பயணம் செய்வதற்கு தன்னை ஒப்புக் கொடுத்தார்.


2.முதற்க்கட்டமாக விருத்தசேதனம் செய்யப்பட சம்மதித்தார்.


3.பவுலடிகளின் உடன்வேலையாளாயிருந்தார்.


 4.பவுலைப் போலவே ஊழியம் செய்பவராயிருந்தார்.


5.பவுலடிகளார் தன்னை அனுப்பிய இடங்களுக்கெல்லாம் கீழ்ப்படிதலுடன் சென்றார்.


6.பல சபைகளை சந்தித்து அவர்களுக்கு போதித்தார்.


7.பவுலடிகளாருடன் சேர்ந்து நிரூபங்களை எழுதினார்.


 8.சபைகளுக்காக ஊக்கமாய் ஜெபிப்பவராக இருந்தார்.


 9.எபேசு சபையின் போதகராக செயல்பட்டு நற்செய்திப்பணி செய்தார்.


10.மிகவும் உத்தமராக நடந்து கொண்டார்.


ஆதார வசனங்கள்

அப்-16:1,அப்-16:3,1தீமோ-4:12,2தீமோ-1:5,

1கொரி-4:17,1கொரி-16:10-11,2கொரி-1:11,

2கொரி-1:19,பிலி-1:1,பிலி-2:19-23,

கொலோ-1:1-2 ,1தெச-1:1 ,1தெச-3:1-7 

2தெச-1:1, பிலே-1:1-2, எபி-13:23 

ரோம-16:21





Monday, 2 October 2023

வேதாகமத்தின் ஆண் / பெண் தீர்க்கதரிகள் ||ஆய்வு கட்டுரைகள் ||

ஆய்வு கட்டுரைகள் 


வேதாகமத்தின் 

ஆண் / பெண் தீர்க்கதரிகள்


வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் என குறிப்பாக பலர் குறிக்கப்பட்டுள்ளனர். சிலர் குறிக்கப்படவில்லை,ஆனால் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள்.

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர்கள், கர்த்தரின் உள்ளத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.

கர்த்தர் உரைத்ததை நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.

பெண் தீர்க்கதரிசிகள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ளனர்.எல்லா தீக்கதரிசிகளும் நிறைவாய் இதில் அடங்கி உள்ளார்களா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.


பழைய ஏற்பாட்டில் 1239 தீர்க்கதரிசனங்களும்,


புதிய ஏற்பாட்டில் 578 தீர்க்கதரிசனங்களும்,


மொத்தமாக 1817 உள்ளன.


இது சம்பந்தமான வசனங்கள் 8352 ஆகும்.


இவையெல்லாம் வேத அறிஞர்களால் ஆராய்ந்து சொல்லப்பட்டவை.மொத்த தீர்க்கதரிசிகள் 80க்கும் மேற்பட்டவர்கள். இதில் பெரும்பான்மை தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன. 


தீர்க்கதரிசனம் பற்றி அறிய வேண்டியது…….


2 பேதுரு 1:21

“தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை.தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.”


இன்றும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்க்கு ஆதாரமாக ஆவியானவர் அப்போஸ்தலர். யோவானிடம் சொல்லுவதை கேளுங்கள்.


வெளி: 10:11

”அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்ல

வேண்டும் என்றான்.”


பவுலின் எச்சரிப்பை பாருங்கள்.


1 தெசலோனிக்கேயர் 5:20

“தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.


ஆண் தீர்க்கதரிசிகள் பட்டியல் :


• ஆரோன் (யாத் 7: 1)


• ஆபேல் (லூக்கா 11: 50-51)


• ஆபிரகாம் (ஆதி 20: 7)


• அகபு (அப்போ 21: 10; 11: 27-28)


• ஆகூர் (நீதி 30: 1)


• அகியா (1 இராஜா 11: 29;14:2,8)  (2நாளாக 9: 29)


• ஆமோஸ் ( ஆமோஸ் 1: 1, 7: 12- 15)


• ஆசாப் ( 2 நாளா 29:30); (மத் 13:35); (சங்கீ 78: 2)


• அசாரியா ( 2 நாளா 15: 1- 8)


• பாலாம் (எண் 23, 24)


• காய்பா (யோவான் 11: 49-52)


• தாவீது (சங் 16: 8-11)(அப் 2: 25-30)


• தானியேல் (தானி 12:21)(மத் 24: 15, மாற்கு 13: 14)


• எபேசு சீடர்கள் (அப் 19:6)


• எல்தாத் (எண் 11:26)


• எலியா (1 இராஜா 18: 22, 36)

                 ( 1 இராஜா 17: 1)


• எலியேசர் ( 2 நாளா 20: 37)


• எலிசா ( 1 இராஜா 19:6, 2

                   இராஜா 9:1, 6: 12)


• எசக்கியேல் (எசக் 6: 1-2, 11:

                             4-5, 13:2,17)


• ஏனோக் -( யூதா 1: 14)


• காத் -(1 சாமு 22: 5),

          (சாமு 24:11)(1 நாளா 21: 9)


• ஆபாகூக் ( ஆபாகூக் 1: 1, 3: 1)


• ஆகாய் (ஆகாய் 1: 1, 3, 12,

                    2:1,10)  (எஸ்ரா 5: 1)


• அனானி (2 நாளா 16: 7-10; 19: 2)


• ஓசியா (ஓசியா 1: 1)


• இத்தோ (சகரியா 1: 1)

                   (2 நாளா 13:22, 9:29)


• ஏமான் ( 1 நாளா 25: 5)


• ஏசாயா ( 2 இராஜா 19: 2)(மத் 3: 3)


• யாக்கோபு   (ஆதி 49: 1)


• யகாசியேல் ( 2 நாளாக 20:14-17)


• எதுத்தூன் ( 2 நாளாக 35: 15)


•யெகூ (1 இராஜா 16: 17, 12)


• எரேமியா (2 நாளா 36: 12,21),

                      (ஏரே 20: 1-2; 25: 2)


• இயேசு (மத் 13: 57; 21: 11)(லூக் 24: 19)


• யோவேல் (யோவேல் 1: 1) (அப் 2: 16)


• யோவான்ஸ்நானன்

    (லூக் 7: 26-28; 1:76) (மத் 14: 15)


• யோவான் (வெளி 1: 1)


• யோனா (2 இராஜா 14:25)

                   (மத் 12: 39;16:4)


•யோசேப்பு -(ஆதி 37: 5-11)


• யோசுவா (1 இராஜா 16: 34)


• யூதா பர்னபா (அப் 15:32)


• மல்கியா (மல்கி 1: 1)


• மேதாத் (எண் 16: 26)


• மீகா (மீகா 1: 1) (எரேமி 26: 18)

            (மத்தேயு 2: 5-6)


• மிகாயா (1 இராஜா 22: 7-8)


• மோசே (உபா 34: 10; 18: 18; (அப் 3: 22-23)


• நாகூம் (நாகூம் 1: 1)


• நாத்தான் (2 சாமு 7: 2)

                      (1 இராஜா 1: 10)


• ஒபேதியா (ஒபேதி 1: 1)


• ஓபேத் -(2 நாளா 28: 9)


• யூதாவிலிருந்து தீர்க்கதரிசிகள்

(1இராஜா 13: 1- 3)

(2 இராஜா 23:17-18)


• ஆகாபுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்

(1 இராஜா 20: 13-14)


• ஆகாபுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்

– இரண்டாம் முறை

    (1 இராஜா 20: 35-42)


• அமாசியாவிற்க்கு அனுப்பின

தீர்க்கதரிசிகள்

   ( 2 நாளா 25:7-9)


• அமாசியாவிற்க்கு அனுப்பின.

தீர்க்கதரிசிகள் – 2ம் முறை

    (2 நாளா 25:7-9)


• ஏலிக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்

(1 சாமு 2: 27-36)


• இஸ்ரவேலுக்கு அனுப்பின.

தீர்க்கதரிசிகள்

      ( நியாதி 6: 7-10 )


• எலியாவை அனுப்பி ஏகூவை

அபிசேகித்த தீர்க்கதரிசி

 (2 இராஜா 9: 1-10)


• எலிசாவுக்கு தீர்க்கதரிசனம் உரைத்த. தீர்க்கதரிசிகள்  (2 இராஜா 2: 3-5)


• சாமுவேல் (1 சாமு 3: 20; 9:18-19) 

 (அப் 13:20)


• சவுல் & மற்றவர்கள் 

(1 சாமு 10: 5-6, 10-13; 19: 20- 24)


• இஸ்ரவேலின் 70 மூப்பர்கள்

    (எண் 11: 25)


• செமாயா (2 இராஜா 12: 22)

     (2 நாளா 12:5,7,15)


• சீலா (அப் 15: 32)


• சிமியோன் ( லூக்கா 2: 25-35)


• சாலமோன்

      ( சங்கீதம் 72: 7,10-11,17)


• இரண்டு சாட்சிகள்

      (வெளி 11: 3,6,10)


• உரியா (எரேமியா 26: 20)


• சகரியா [யோவான்ஸ்நானன் தந்தை] 

  (லூக்கா 1: 67)


• சாதோக் (2 சாமு 15: 27)


• சகரியா (சகரியா 1: 1)

                   (எஸ்ரா 5: 1; 6: 4)


• சகரியா (யோய்தாவின் குமாரன்)  

 (2 நாளா 24: 20)


• செப்பானியா (செப் 1: 1)



பெண் தீர்க்கதரிசிகள் :


•மிரியம் (யாத் 15: 20)


•தெபோராள் (நியாதி 4: 4)


•உல்தா (2 இராஜா 22: 14)


•ஏசாயாவின் மனைவி (ஏசா 8: 3)


•அன்னாள் ( லூக்கா 2: 36-38)


•பிலிப்பின் 4 மகள்கள் (அப் 21: 8-9)


•ராக்கேல் ( ஆதி 30:24)


•அன்னாள் (1 சாமு 2: 1- 10)


•அபிகாயில் (1 சாமு 25: 28-31)


•எலிசபெத் (லூக்கா 1: 41-45)


•இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள்

(லூக்கா 1: 46- 55)


தீர்க்கதரிசி குழுக்கள்:-


•1 இராஜா 18: 4,13


•2 இராஜா 23 :2


•அப் 11 :27


•அப் 13: 1


•யூத மத தல்முத் ( யூத மத குடியுரிமை & சடங்குகள்) சாராளையும் எஸ்தரையும் தீர்க்கரிசினிகளாக இணைத்திருக்கிறார்கள்.


சில பொய் பெண் தீர்க்கதரிசிகள்:


• நொவாதியாள் (நெக 6: 14)


• யேசபேல் (வெ.விசே 2: 20)


பின்வரும் காலங்களில் உங்களது குழந்தைகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்,மூப்பர் கனவு காண்பார்கள், வாலிபர் தரிசனம் காண்பார்கள் என்று யோவேல் தீர்க்கதரிசி  உரைத்திருக்கிறார்.


யோவேல் 2:28-29


அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்;அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.”


ஆகவே தீர்க்கதரிசி என்பவன் கர்த்தரால் தேர்ந்து எடுக்கப்பட்டு, கர்த்தரால் அருளப்பட்ட தேவனுடைய வார்த்தைகளையும், மனிதனின் எதிர்கால செய்தியை பேசுபவன்.


நன்றி தமிழ்மணி



Sunday, 1 October 2023

மக்பேலா குகை || அறிந்து கொள்வோம் || பகுதி -131 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -131


மக்பேலா குகை -Makpelah 



மக்பேலா என்னும் எபிரெய பெயருக்கு Makpelah - “இரட்டை (குகை) " "double" or "portion" என்று பொருள்.


இது ஒரு நிலமும் குகையும் ஆகும். ஆபிரகாம் தன் மனைவி சாராளை அடக்கம் பண்ணுவதற்காக இந்த இடத்தை (ஏத்தின் புத்திரர் கையில் 400 சேக்கல் வெள்ளி) விலைக்கு வாங்கினார்.இந்த இடம் மம்ரே எதிராய் எப்ரோனுக்கு கிழக்கில் அமைந்துள்ளது (ஆதி 23.19).ஆரம்பகாலத்தில் ஆபிரகாம் மம்ரேக்கு அருகில் தன் கூடாரத்தை போட்டார் (ஆதி 13.18), 


சாராளுக்கு குழந்தை பிறக்கும் என்னும் வாக்குத்தத்தத்தை இந்த இடத்தில் ஆபிரகாம் பெற்றுக்கொண்டார்.

(ஆதி 18:1-15).


ஆபிரகாம் மக்பேலாவை ஏத்தியனாகிய எப்ரோனிடமிருந்து கிரயத்திற்கு வாங்கினார்.


ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபெக்காள், யாக்கோபு, லேயாள் ஆகியோர் இங்கு அடக்கம் பண்ணப்பட்டார்கள் (ஆதி 49:31; 50.13).


இன்றும் இந்த குகை எபிரேனில் சுமார் 39அடி உயரமும் 23 அடி நீளமும் கொண்ட அழகான கட்டிடமாக எருசலேமுக்கு தெற்கில் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இது ஏரோது மன்னரால் கட்டப்பட்டது.

_______________________

Thanks to Bro A.SASIKUMAR 



நளதம் (Spikenard) // வெள்ளைக்கல் பரணி (Alabaster box) // அறிந்து கொள்வோம் பகுதி -155 //

அறிந்து கொள்வோம் பகுதி -155 நளதம் (Spikenard) மற்றும் வெள்ளைக்கல் பரணி (Alabaster box)  விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்...