Wednesday, 27 March 2024

வியாழக்கிழமை - பாடுகளின் வாரம்

 வியாழக்கிழமை - பாடுகளின் வாரம்


வியாழனின் சிறப்புகள்


🌿இது புனித வாரத்தின் ஐந்தாவது நாளாகும்.


🌿இந்த நாள் கடைசியாக இயேசு தனது சீடர்களுடன் கழித்த நாளாகும்.


🌿புதிய உடன்படிக்கையின் அடையாளமாக திருவிருந்து நிறுவப்பட்ட நாள்.


சிறப்பு பெயர்கள்


🌿புனித வியாழன் (புனித வியாழன்)


🌿 பெரிய வியாழன் (பெரிய வியாழன்)


🌿வியாகுல வியாழன் (துன்பம் வியாழன்)


🌿கட்டளை வியாழன் (மவுண்டி- கட்டளை)


🌿உடன்படிக்கை வியாழன் (உடன்படிக்கை வியாழன்)


வியாழனன்று நடைபெற்ற சம்பவங்கள்


1.இயேசுவின் இறுதி அருளுரை


2.சீடர்களின் கால்களைச் சுத்தம் செய்தல்


3.இயேசுவின் கடைசி இராவுணவு


4.கெத்சமனே ஜெபம்


5.இயேசுவின் கைது


7.இயேசுவின் விசாரணைத் தொடக்கம்.




நன்றி: மேயேகோ



புதன் || பாடுகளின் வாரம் ||

 பாடுகளின் வாரம் - புதன்



புதன் அன்று நடந்த 2 நிகழ்வுகள்


🌿இயேசு அபிஷேகம் பண்ணப்படுதல்

🌿யூதாஸ் வெளியேறுதல்


புதன்கிழமையை ஏன் ( Spy Wednesday)

உளவு புதன்? என்று அழைக்கிறார்கள்.


மத்தேயு 26. 14-16, லூக்கா 14.10 - 11 இந்த வசனங்களின் படி, இயேசுவின் அபிஷேகத்திற்கு பின்பு புதன் கிழமை அன்றே யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்க வகை தேடிச் சென்றான். ஆகவே தான் உளவாளி புதன் ( Spy Wednesday என்று அறியப்படுகிறது.


யூதாஸ் கற்பிக்கும் பாடல்கள்


யூதாஸ் என்றால் கர்த்தரின் துதி என்று அர்த்தமாகும்.இவர் காரியோத்து என்ற ஊரை சேர்ந்தவர். இயேசுவின் சீடர்கள் பன்னிருவரில் யூதாஸ் மட்டுமே யூதேயாவைச் சேர்ந்தவர்.நன்கு கல்வி கற்றவர்,ரோம பேரரசை எதிர்க்கும் ஒரு புரட்சியாளன்.


1.பண ஆசையுள்ள யூதாஸ்

யோவான் 12:3,6,மாற்கு 14:11.


பண ஆசை ஒருவனை அழிவுக்கு

இட்டுச் செல்லும். யூதாஸ் முப்பது

வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டான்.

அழியாத விண்ணக வாழ்வை

இழந்தான்.பணி செய்பவர்களின் கூட்டத்தில் இருப்பதால் மீட்பு வராது. சீடர்களிலேயே நிர்வாகத் திறமையுடைய யூதாஸ் பொருளாளராய் இருந்தார்.அது அவரைக் காப்பாற்றவில்லை.


2.இருமுகமுள்ள யூதாஸ்

(மத்தேயு 26:25 லூக்கா 22:48)


யூதாஸ் சீடர்களிடையே நல்லமதிப்பு பெற்றிருந்தான்.சீடர்கள் யாரும் அவனை சந்தேகப்படாத அளவுக்கு அவர்களிடம் நற்சான்றிதழ் பெற்றிருந்தான்.

ஆனால் பரலோக வாழ்வை இழந்தான்.



3.மனந்திரும்பாத யூதாஸ் 

(மத்தேயு 27:3,அப்போ 1:18)


மனஸ்தாபப்பட்ட யூதாஸ் மனந்திரும்பாமல் மடிந்து போனான். பேதுரு மறுதலித்தும், மனஸ்தாபப்பட்டு, மனங்கசந்து அழுது மனம் திரும்பினார். இயேசுவின் போதனைகளைக் கேட்பதோ, அற்புதங்களைப் பார்ப்பதோ ஒரு மனிதனை நல்லவனாய் மாற்றாது. நம்பிக்கை வேண்டும்.எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தினால் மீட்பு வராது. உங்களுள் ஒருவன் பிசாசாய் இருக்கிறான்' என்றும் 'அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு' என்றும் இயேசு எச்சரித்திருந்தார்.இருந்த போதும் யூதாசு செவிசாய்க்கவில்லை.?



நன்றி:மேயேகோ….




Tuesday, 26 March 2024

இயேசுவிடம் கேட்கப்பட்ட 4 கேள்விகள் ||பாடுகளின் வாரம் - செவ்வாய்க்கிழமை

 பாடுகளின் வாரம் - செவ்வாய்க்கிழமை



இயேசுவிடம் கேட்கப்பட்ட 4 கேள்விகள் 



செவ்வாய்கிழமை ஏறக்குறைய 18 விதமான காரியங்கள் 4 நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக இயேசுவிடம் 4 கேள்விகள் கேட்கப்பட்டன. யோவான் நற்செய்தியில் எந்த ஒரு கேள்வியும் சொல்லப்படவில்லை.


இயேசுவின் பதில்கள் கற்பிக்கும் பாடங்கள்


1.எந்த அதிகாரத்தினால் இவைகளை செய்தீர்?


மத்தேயு 21:23 to 27,மாற்கு 11:27 to 33

லூக்கா 21;1 முதல் 8 வரை


🔥தேவையில்லாமல் பதில்கூற வேண்டாம்.


(கேள்வியின் நோக்கம் / நோக்கம் பொறுத்து பதில் சொல்ல வேண்டும்)


2.இராயனுக்கு வரி கொடுக்கலாமா?


மத்தேயு 22:15 to 22, மாற்கு 12:13 to 17

லூக்கா 20:20 முதல் 26 வரை


🔥பட்சபாதம் இல்லாத பதிலாக இருக்க வேண்டும்.


3.உயிர்த்தெழுதல் எப்படி இருக்கும்?


மத்தேயு 22:23 to 33,மாற்கு 12:18 to 27

லூக்கா 20:27 முதல் 40 வரை.


🔥உண்மையை தெரிந்தால் சொல்ல வேண்டும்.


4.பிரதான கற்பனை எது?


மத்தேயு 22:34 to 40,மாற்கு 12:28 to 34

🔥பிறருக்கு பிரயோஜனமுண்டாக பதில் இருக்க வேண்டும்.



நன்றி:- மேயேகோ….



அத்தி மரம் || பாடுகளின் வாரம் - திங்கட்கிழமை ||

 பாடுகளின் வாரம் - திங்கட்கிழமை 

அத்தி மரம் 


திங்கள் அன்று நடந்த 3 நிகழ்வுகள்


🌿அத்தி மரம் சபிப்பு 

🌿ஆலய சுத்திகரிப்பு 

🌿ஆலயத்தில் சுகமளித்தல்


அத்திமரம் இயல்புகள் & பண்புகள்


34 முறை அத்திமரம் என்ற வார்த்தை வேதத்தில் வருகிறது. அத்தி என்ற வார்த்தை 64 முறை வருகிறது.


In English fig என்றும் In Hebrew Tena பெயர் உண்டு.


முதல் முறையாக வேதத்தில் வரும் மரம் ஆதி 3.7, இது 35 அடி உயரம் வரை வளரும். அத்தி மரம் பூக்காமல் காய்க்கும்

மரம். (உன்னத.2.13).

ஏழைகளின் பழம் என்று அழைக்கப்படுகிறது. அத்தி பழம். 1 kg - 20 to 40 Rs. மதுரமான பழம்.


அத்திமரம் கற்பிக்கும் பாடங்கள்


 1.அத்தி மரம் சுக வாழ்வின் அடையாளம் (1 இராஜா 4.25 மீகா 4.4 சகரியா 3.10)


2.அத்தி மரம் தேவ கோபத்திற்கு அடையாளம் (சங்கீதம் 105.33 ஓசியா 2.12 ஆமோஸ் 4.9)


3.அத்தி மரம் விசுவாசத்தின் அடையாளம் ( மத்தேயு 21.19,மாற்கு 11.13 - 20) விசுவாசத்தை சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கவே இயேசு சபித்தார்.


4.அத்தி மரம் கனி கொடுத்தலின் அடையாளம் (நியாயதி 9.10, 11

லூக்கா 13.6)


5.அத்தி மரம் வருகையின் அடையாளம்

(மத்தேயு 24.32, வெளி 6.13)


வசந்த காலம் என்பது மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரும்.




Tuesday, 6 February 2024

பார்வோன் || அறிந்து கொள்வோம் || பகுதி - 137 ||

 அறிந்து கொள்வோம்


பகுதி - 137


பார்வோன்


*பார்வோன்* என்னும் எபிரெய பெயருக்கு “பெரிய வீடு” "great house" என்று பொருள். இது எகிப்து தேசத்தின் ராஜாக்களுக்கு கொடுக்கப்படும் பொதுவான பெயர். 


கி.மு. 323 ஆவது வருஷம் வரையிலும் எகிப்து தேசத்தின் ராஜாக்கள், பார்வோன்கள் என்று தான் அழைக்கப்பட்டார்கள்.


ஆரம்பத்தில் பார்வோன் என்னும் வார்த்தை ராஜாவின் அரண்மனையைக் குறித்தது. பிற்காலத்தில் இந்த வார்த்தை ராஜாவைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.


எகிப்தியர்கள் தங்களுடைய ராஜாக்களை தெய்வங்களாக மதித்தார்கள்.அவர்கள் மரித்த பின்பும் இந்த ராஜாக்கள் தங்களை ஆளுகை செய்வதாக நம்பினார்கள்.


வேதாகமக் காலத்தில் இஸ்ரவேல் தேசத்தாருக்கும் எகிப்தின் பார்வோனுக்கும் பல சந்தர்ப்பங்களில் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன.


ஆபிரகாம் பாலஸ்தீன தேசத்தில் பஞ்சம் உண்டானபோது கி.மு. 1900 ஆவது வருஷத்தில் எகிப்து தேசத்திற்குப் போனார் (ஆதி 12:10-20). 


200 வருஷங்களுக்குப் பின்பு யோசேப்பு எகிப்து யோசேப்பு எகிப்து தேசத்தின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் (ஆதி 39).


இதன் பின்பு யோசேப்பு பார்வோனின் சொப்பனத்திற்கு வியாக்கியானம் கூறி, எகிப்து தேசத்தில் உயர்ந்த அதிகாரியாக பதவி வகித்தார்.இக்காலத்தில் யோசேப்பின் குடும்பத்தார் எகிப்து தேசத்திற்கு வந்து கோசேன் என்னும் இடத்தில் தங்கினார்கள் (ஆதி 47:1-6)


சில வருஷங்களுக்குப் பின்பு எகிப்து தேசத்தில் யோசேப்பை அறியாத புதிய பார்வோன் ஆட்சிக்கு வந்தான் (யாத் 1:8). இவன் எபிரெய ஜனங்களை அடிமைப்படுத்தினான்.எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேல் புத்திரரை மோசே விடுவித்து கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றார்.


பிற்காலத்தில் சாலொமோன் எகிப்து தேசத்தின் பார்வோனுடைய குமாரத்தியை திருமணம் செய்து எகிப்தியரோடு உறவு வைத்துக்கொண்டார்.(1 இராஜா 3.1; 7:8; 9:24). ஆனால்,இதன் பின்பும் எகிப்து தேசத்தின் பார்வோன்கள் இஸ்ரவேல்

தேசத்தோடு சிநேகமாக இருக்கவில்லை.


கி.மு. 609 ஆவது வருஷத்தில் எகிப்து தேசத்தின் ராஜாவாகிய பார்வோன் நேகோ, இஸ்ரவேல் ராஜாவாகிய யோசியாவை கொன்றுபோட்டான் (2இராஜா 23:29).


பாபிலோனிய நேபுகாத்நேச்சார் பார்வோன் நேகோவை முறியடித்து பாலஸ்தீன தேசத்தை தன் ஆளுகைக்கு உட்படுத்தினார் (எரே 46:2).


ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், ஓசியா ஆகிய தீர்க்கதரிசிகள் எகிப்து தேசத்தின் பார்வோன்களையும், அவர்கள் மீது தங்கள் நம்பிக்கையை வைத்திருக்கும் இஸ்ரவேல் புத்திரரையும் கடிந்து கூறியிருக்கிறார்கள்

(ஏசா 30:1-5; 31.1; எரே 42:18; எசே 29-32; ஓசி 7.11).


பார்வோன்களின் ஆட்சி கி.மு. 323 ஆவது வருஷத்தில் முடிவுபெற்றது.

இதன் பின்பு எகிப்து தேசத்தை தாலமிக்கள் என்று அழைக்கப்பட்ட கிரேக்க  ராஜாக்கள்

ஆளுகை செய்தார்கள். இவர்களைத்தான்,தென்திசையின் ராஜா* என தானியேல் அழைக்கிறார் (தானி 11:59,11,14,25,40).


நன்றி: மறைபொருள் || சசிக்குமார்||



Sunday, 21 January 2024

கிரகாம் ஸ்டெயின்ஸ் || மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு ||

 மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு 


கிரகாம் ஸ்டெயின்ஸ் 

(1941-1999)


இளமை வாழ்க்கை:

கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் 1941 ம் ஆண்டு வில்லியம்ஸ் மற்றும் எலிசபெத் தம்பதியினருக்கு மகனாக ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிறுவயதிலிருந்தே ஒழுக்கத்திலும் தெய்வ பக்தியிலும் வளர்த்தார்கள். 

ஊழிய அழைப்பு 

இவர் 15 வயது இருக்கும்போது அங்குள்ள திருச்பையில் இந்தியாவில் தொழுநோயாளிகள் மத்தில் நற்செய்திபணி செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய மிஷனெரி ஒருவர் இந்தியாவில் உள்ள தொழுநோயாளிகளின் அவலநிலையை புகைப்படங்கள் மூலம் கிரகாம் ஸ்டெயின்ஸ் திருச்சபையில் அறிவித்து இந்தியாவில் தொழுநோயாளிகளின் காயத்தை கட்டவும் அவர்களுக்கு நற்செய்திபணி அறிவிக்கவும் அறைகூவல் விடுத்தார். இதைக்கேட்ட கிரகாம் ஸ்டெயின்ஸ் மனபாரம் அடைந்து தன்னை அந்த அழைப்பிற்க்கு ஒப்புக் கொடுத்தார்.

இந்திய வருகை 

கிரகாம் ஸ்டெயின் தன்னுடைய கல்லூரி படிப்பில் புள்ளியில் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று நிறைவு செய்தார். தன்னுடைய 24 ம் வயதில் இந்தியாவில் தொழுநோயாளிகளின் மத்தியில் Evangelical Mission Society மூலம் சேவைசெய்ய தன்னை அற்பணித்தார்.

1965 ம் ஆண்டு கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் ஒரிஸ்சாவில் உள்ள மயூர்பஞ்ச் என்ற பகுதிக்கு வந்து அங்கிருந்த ஆதிவாசி மக்கள் மத்தியில் தங்கி இருந்து தொழுநோயாளிகளுக்கு சேவைசெய்யவும் நற்செய்திபணி அறிவிக்கவும் வந்து சேர்ந்தார்.

ஒரிஸ்சாவில் கிரகாம்:

கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் ஒரிஸ்சாவில், மயூர்பஞ்ச் பகுதியில் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலநிலையை கண்டு மனம் உறுகிப்போனார். பெற்றோராலும், உற்றார் உறவினர்களாலும் கிராமத்து மக்களாலும் விரட்டப்பட்ட இம்மக்களை சந்தித்து, அவர்களை ஆறுதல்படுத்தி, அவர்கள் காயங்களை சுத்தம் செய்து, அவர்களுக்கு இயேசுவின் தெய்வீக அன்பை எடுத்துரைத்து, அவர்களோடு தன்னை இணைத்து வாழ்ந்தார்.

இந்நிலையில் 1966-ம் ஆண்டு 15 பேர் தங்கி சிகிச்சை எடுக்கக்கூடிய சிறிய தொழுநோய் மருத்துவமனையை கட்டி அதை அரசாங்கத்தில் பதிவு செய்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். அப்படியே மயூர்பஞ்ச் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு தொழுநோய் பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

அதிக உழைப்பால் 1980-ம் கிரகாம் ஸ்டெயின் 100 தொழுநோயாளிகள் தங்கி சிகிச்சை எடுக்கூடிய அளவில் அந்த சிறிய கட்டிடத்தை பெரிய தொழுநோய் மருத்துவமனையாய் விரிவுபடுத்தினார்.

கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் குறுகிய காலத்திலேயே ஒரியா, சந்தாலி மற்றும் ஹோ மொழிகளை கற்று அங்குள்ள ஆதிவாசி மக்கள் மத்தியில் நற்செய்திபணி செய்து அநேகரை ஆத்தும ஆதாயம் செய்தார். எனவே ஆங்காங்கே திருச்சபைகள் ஏற்படுத்தப்பட்டது.

திருமணம் வாழ்க்கை

1980-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து Operation Mobilization என்ற கிறிஸ்துவின் நற்செய்தி இயக்கத்தின் மூலம் கிளாடிஸ் (Gladis) என்ற பெண்மணி இந்தியா வந்து வாலிபர்கள் மத்தில் நற்செய்திபணி செய்யும்படியாக வந்தார். இவர்கள் செவிலியர் துறையில் பட்டபடிப்பு படித்திருந்தார். ஆண்டவர் நற்செய்திபணிக்கு அழைக்கவே இவர்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்து குறிப்பாக கிறிஸ்தவ வாலிபர்களின் மத்தியில் நற்செய்திபணி செய்து அநேக வாலிபர்களுக்கு முன்மாதிரியாக இருந்து அவர்களை விசுவாசத்தில் வளர்த்தார்கள்.

இந்நிலையில் 1981-ம் ஆண்டு ஒருமுறை ஒரிஸ்சா வந்து பின்னர் கிரகாம் ஸ்டெயின் மூலம் தொழுநோயாளிகள் மத்தியில் நடைபெற்ற சேவைபணியும், நற்செய்திபணியும் பார்த்த கிளாடிஸ்க்கு, தன்னுடைய சேவை இந்த மக்களுக்குத்தேவை என்று ஆழமாக உணர்ந்தார். எனவே தொழுநோய் பாதித்த மக்களுக்கும் ஆதிவாசி மக்கள் மத்தில் நற்செய்திபணி செய்யவும் தன்னை அற்பணித்தார். 

கடவுளின் வழிநடத்துதலின்படிம் தேவ ஊழியர்களின் ஆலோசனைப்படியும் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களை 1983-ம் ஆண்டு ஜீன் மாதம் 16-ம் தேதியில் கிளாடிஸ் திருமணம் செய்துகொண்டார். கணவனும் மனைவியுமாக சேர்ந்து தொழுநோயாளிகள் காயங்களை கட்டவும், சேவை செய்யவும் மற்ற ஆதிவாசி இன மக்களுக்கும் நற்செய்திபணியும் செய்து வந்தார்கள். 

கிளாடிஸ் அம்மையாரும் செவிலியர் படிப்பு படித்திருந்ததால் இந்த தொழுநோய் மருத்துவமனை இன்னும் சிறப்பாக செயல்பட்டது. கர்த்தர் இவர்கள் குடும்ப வாழ்க்கையை ஆசீர்வதித்து எஸ்தர், பிலிப் மற்றும் தீமோத்தேயு என்ற மூன்று பிள்ளைகளை கொடுத்தார்.

ஊழிய வளர்ச்சிகள்

கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களுக்கு ஆண்டவர் பல தாலந்துகளையும் திறமைகளையும் கொடுத்திருந்தார். இவர் ஆதிவாசி இன மக்களின் மொழியறிவை மேம்படுத்த மொழியாக்கப் பணிகளையும், கிறிஸ்தவ சீஷத்துவம், திருச்சபை நாட்டுதல், கல்வி அறிவு, சுகாதாரம், தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் பல சமுதாய சேவைகளை செய்ததினால் அநேக ஆதிவாசி மக்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். 

இந்நிலையில் ஹோ இன ஆதிவாசி மக்களுக்கு என்று புதிய ஏற்பாட்டை அவர்கள் மொழியில் மொழிபெயர்த்து கொடுக்க முடிவு செய்தார். ஆகவே பகல் முழுவதும் சமுதாய மேம்பாட்டு பணிகள் செய்துவிட்டு, இரவில் வேதாகமத்தை ஹொ மொழியில் மொழியாக்கம் செய்து கொண்டு இருந்தார். அப்படியே நற்செய்திபணியில் ஈடுபட்டு அநேக ஆதிவாசி இன மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்ததினால் அநேகர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். எனவே அவர்களுக்கு என்று ஆங்காங்கே ஆலயங்கள் கட்டப்பட்டது. இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இந்துமத பூசாரிகள் கிரகாம் ஸ்டேயின்ஸ் மதமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டியது. ஆனால் அரசாங்கம் மூலம் விசாரணை நடத்தப்பட்டு, கிரகாம் ஸ்டெயின்ஸ் மதமாற்றம் செய்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று அறிக்கையை சமர்பித்தது.

கிளாடிஸ் அம்மையாரும் இந்த ஆதிவாசி மக்களின் வாழ்க்கை மேம்படும்படி துணி நெய்தல், பாய் முனைதல், தையல் கலையை கற்று கொடுத்தும், கயிறு திரித்தல், கூடை பின்னுதல் என்று பல தொழில்களை கற்றுக்கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார். இதனால் அநேக பெண்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.

கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் ஒரிஸா முழுவதும் சென்று போலியோ நோய் பற்றியும் தொழுநோய் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சாதாரண மிதிவண்டியில், தொப்பி அணிந்து கொண்டு, கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு போலியோ நோய் தடுப்பு முறைகளையும், சுகாதாரத்தையும் கற்றுக்கொடுத்தார். 

அப்படியே ஆதிவாசி மக்களுக்கு வேதாகமத்தை கற்றுக்கொடுத்து அவர்களை ஒழுக்கத்திலும், சுகாதாரத்திலும் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையை மேம்படுத்தினார். இதனால் இம்மக்கள் கிரகாம் ஸ்டெயிஸ் அவர்களை "படா பாய்" அதாவது பெரிய அண்ணன் என்று பாசமாக அழைத்தார்கள்.

இறுதி நேரங்கள்:-

தனது 59-ம் வயதில் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் நாள் ஒரிஸாவின் தலைநகர் புவனேஸ்வர் பகுதியிலிருந்து 250 கி.மீ தொலைவிலுள்ள மனோகர்பூர் என்ற இடத்தில் "கிறிஸ்தவ ஆதிவாசி குடும்பங்களின் கூடுகை"-ல் பங்கு பெற செல்வதாற்க்கு ஆயத்தப்பட்டார். 

இந்நிலையில் தமிழ்நிட்டில் ஊட்டியில் ஆங்கில வழி கல்வி படித்துக்கொண்டு, விடுமுறைக்காக வீட்டிற்குவந்த தன்னுடைய 10 வயதான பிலிப் மற்றும் 6 வயதான தீமோத்தேயுவை தன்னுடன் அழைத்துக்கொண்டு போனார். நெடுந்தொலைவு பயணமும், கடுமையான குளிரின் நிமித்தமாகவும் இரவு நேரத்தில் அங்கிருந்த ஆலயத்தின் முன்பகுதியில் அவர்களுடைய வாகனத்தை நிறுத்தி அதில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

இவர்கள் குடும்பத்தை கொலை செய்யும்படி இந்து மத பூசாரிகளின் தூண்டுதலின் பேரில் 50 பேர் கொண்ட வன்முறை கும்பல், கோடாரிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களோடு, அவர்கள் தங்கி இருந்த வாகனத்தை அடித்து நொறுக்கி வாகனத்தை தீ வைத்தார்கள். 

கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகளும் விளித்துக்கொண்டு தப்பித்துக்கொள்ள வெளியே ஓடிவர முயற்சி செய்தபோது, அந்த வன்முறை கும்பல் அவர்களை வாகனத்தைவிட்டு வெளியேவர விடாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகளும் வாகனத்திற்குள்ளேயே தீயினால் கரிக்கட்டையாகி போனார்கள். இந்த வண்முறை கும்பல் அடங்கா வெறியுடன் அங்கிருந்த ஆலயத்தையும் சேதப்படுத்தி தங்கள் வக்கிரபுத்தியை காட்டி, கடந்து சென்றார்கள். 

இந்த சம்பவம் நடந்தபோது கிளாடிஸ் அம்மையாரும் அவருடைய மகள் எஸ்தரும் மயூர்பஞ்ச் பகுதியில் அமைந்திருந்த தொழுநோய் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவை செய்துகொண்டு இருந்தார்கள். கிரகாம் ஸ்டெயின் மற்றும் 2 மகன்களும் மரித்துப்போன செய்தியை கேள்விப்பட்டு, கிளாடிஸ் அம்மையாரும், எஸ்தரும் அங்குவந்து, கரிக்கட்டையாகிபோன கிரகாம் ஸ்டெயின்ஸ், பிலிப் மற்றும் தீமோத்தேயுவின் கரிக்கட்டையான சரீரத்தை கண்டு தாங்கொண்ணா துயரம் அடைந்தார்கள். பின்னர் நடைபெற்ற அடக்க ஆராதனையில் ஆயிரக்கணக்கான ஆதிவாசி குடும்பங்கள் கலந்துகொண்டு தங்கள் பாசமான பெரிய அண்ணன் குடும்பம் அழிக்கப்பட்டதை பார்த்து மார்பில் அடித்துக்கொண்டு, கண்ணீர்விட்டு புலம்பினார்கள். 

இந்த கொடுரமான சம்பவத்தை உலகநாடுகளின் மனித உரிமை கண்காணிப்பு குழு மற்றும் பல உலக நாடுகள் இந்திய அரசாங்கத்தை கண்டனம் செய்து, இந்திய அரசாங்கம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டியது. இந்த சம்பவத்திற்காக உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்தது. ஆனால் இந்த செயலை செய்த வன்முறை கும்பலை, இந்துமத பூசாரிகள் நியாயப்படுத்தி பேசினார்கள். இது இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த மிருகத்தனமான செயலை ஆரம்பத்தில் எந்த ஒரு பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 

ஆனால் கிளாடிஸ் அம்மையார் ஒரு முறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கும்போது,

"இந்த மாபாதக செயலை செய்த நபர்களை நான் மன்னிக்கின்றேன் என்றும் அவர்களை நான் இன்னும் நேசிக்கின்றேன்" என்று அறிவித்ததன் மூலம், இயேசு கிறிஸ்துவின் மூலம் பெற்றுக்கொண்ட அன்பை, இந்தியா மட்டுமல்லாமல் அகில உலகமே கிளாடிஸ் அம்மையாரை பாராட்டியது மேலும் இதை பத்திரிக்கை செய்திகளில் தலையங்கமாக எழுதினார்கள். 

அதன் பின்னர் தான் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் தொழுநோயாளிகள் மத்தியில் செய்துவந்த சேவைப்பணி இந்தியாவிற்கே பெருமை தேடி தந்தது. கிளாடிஸ் அம்மையார் ஒரிஸாவில் தொழுநோயாளிகள் மருத்துவமனையில் 2004 ம் ஆண்டுவரை தொடர்ந்து சேவை செய்து வந்தார்கள்.

பின்பு கிளாடிஸ் அம்மையார் தன் மகள் எஸ்தரோடு ஆஸ்திரேலியா சென்று விட்டார்கள்.

கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் மூலமாக இந்திய மக்களுக்கு செய்யப்பட்ட சேவையை கனப்படுத்தும்படியாக 

2005 -ம் ஆண்டு இந்திய ஜனாதிபதிK. R. நாராயணன் அவர்கள் "பத்மஷிரி" என்ற பதக்கத்தை கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.  

2016 -ம் ஆண்டு அன்னை தெரசா ஞாபகார்த்த பதக்கமும் கொடுத்து கௌரவிக்பட்டார்கள்.

இந்தியாவில் அன்னை தெசாவிற்கு பின்பு அதிகமாக புகழப்பட்டது கிளாடிஸ் அம்மையார் மட்டுமே.

கிரகாம் ஸ்டெயிஸ் அவர்கள் ஒரிஸா மக்களுக்காக 34 ஆண்டுகள் சேவை செய்து தன்னையே அற்பணித்தார்கள். இவர் ஒரிஸாவின் அப்போஸ்தலன் என்று இந்திய திருச்சபைகள் புகழாரம் சூட்டுகின்றது.

கிரகாம் ஸ்டெயின்ஸ் ஒரு கோதுமை மணியாக விதைக்கப்பட்டார். அதன் பிரதிபலனாக இன்று தமிழ்நாட்டிற்கு பிறகு ஒரிஸாவில் இருந்துதான், ஏராளமான மிஷனெரிகள் இந்தியா முழுவதும் நற்செய்திபணி அறிவிக்க வந்துகொண்டு இருக்கின்றார்கள். ஆண்டவர் இந்தியாவுக்கு கொடுத்த பரிசு கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவோம்.

இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்போம். தேவ ராஜ்யம் நம் மூலமாய் இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.





Monday, 6 November 2023

ஊர் பட்டணம் || அறிந்து கொள்வோம் || பகுதி -136 ||

 

அறிந்து கொள்வோம்

பகுதி -136

ஊர் பட்டணம் (அகழ்வாராய்ச்சி )

வேதத்தில் காணப்படும் ஊர் என்ற பட்டணத்தை யாரும் நமக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. காரணம், இஸ்ரவேலரின் வரலாறு இங்கிருந்து தான் துவங்குகிறது.

இஸ்ரவேலின் முற்பிதாவாகிய ஆபிரகாம், கானான் வருவதற்கு முன் வாழ்ந்தது இங்குதான். இதுபற்றி நடைபெற்ற அகழ்வாராய்ச்சிக் குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஊர் என்பது ஆரானிலிருந்த ஒரு பட்டணம்.பட்டணம் என்றவுடன் நட்சத்திர ஹோட்டல், ரயில்வே ஜங்ஷன் வரிசையாய் நிற்கும் டாக்ஸிகள், மீட்டரை உயர்த்திக் கொண்டு ஓடும் ஆட்டோக்கள், கழுகாய் சுற்றும் பிக்பாக்கெட்காரர்கள் என்று நகரத்தனமாய்க் கற்பனை பண்ணிக்கொள்ளக் கூடாது.

அந்தக்கால பட்டணம் என்பது கொஞ்சம் அதிகப்படி மக்கள் குடியிருந்த பகுதி என்றுதான் பொருள்.

ஊர் என்ற இடம் பற்றி பிற்காலத்தில் சிலர் சந்தேகப்பட வேதம் குறிப்பிட்டுள்ள இட அமைப்பை வைத்துக் கொண்டு இந்த ஊரைக் கண்டுபிடிக்க சிலர் போனால்.. அங்கே ஒன்றையும் காணோம். சற்றே அப்பகுதியில் மண்ணைக் கொத்தி ஆபிரகாம் விட்டுப் போன ஏதாவது காசு கிடைக்கிறதா என்று இவர்கள் தேட,

காசு மட்டுமல்ல ஊரே கிடைத்தது மண்ணுக்குள்ளிருந்து.

இந்த பட்டணத்தை அகழ்வாராய்ச்சி செய்தவர் J.E. டெய்லர் இவர் பிரிட்டிஷ் மியூஸியத்திற்காக 1854ல் இங்கு ஆய்வுகளை மேற்கொண்டார்.

இவரைத் தொடர்ந்து R.C. தாம்ஸன் என்பவர் 1918ல் இங்கு ஆராய்ந்தார். பிறகு H.R. ஹால் என்பவர் 1919ல் ஆராய்ந்தார். இவர்களுக்குப் பின் 1922லிருந்து 1934 வரை பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்திற்காகவும், பிரிட்டிஷ் மியூஸியத்திற்காகவும் இப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்டவர் சார்லஸ் உல்லி (Charles Wooley) என்பவர். ஆய்வுக் குறிப்புகளில் நமக்கு அதிகம் தகவல்களைத் தந்தது உல்லியின் குறிப்புகள் தான்.

சார்லஸ் உல்லியின் கண்டு பிடிப்புகளிலிருந்து ஊர் பட்டணத்தில் கி.மு. 4000லிருந்து கி.மு.300 வரை மக்கள் குடியிருந்தனர் என நிரூபிக்கப்பட்டுள்ளது. துவக்க காலத்தில் இங்கு காணப்பட்ட நாகரீகத்தின் காலத்திற்கு உபேத்தின் காலம் என்று பெயர். இதுவே சற்று முன்னேறிய பின் சுமேரிய நாகரிகம் என்று பெயர் பெற்றது.

உல்லி தனது ஆய்வின் ஆரம்பத்தில் நிறைய சங்குகளையும், சிப்பிகளையும் தான் சேகரித்தார்.கடலிலிருந்து வெகு தொலைவில் உள்ளடங்கியுள்ள ஊர் பட்டணத்தில் சங்குகளும், சிப்பிகளும் கிடைத்தது எப்படி? என்று சற்று குழம்பி பின்னர் விடை சொன்னார்.

“நோவா காலத்து வெள்ளமே காரணம். இல்லாவிட்டால் சிப்பிக்கு சம்பந்தமில்லாத ஊரில் சிப்பியும், சங்கும் மண்ணில் புதைந்து கிடப்பானேன்?”

வழக்கம் போல சிலர் இதை ஒத்துக் கொள்ளவில்லை ஆரானுக்கு கொஞ்சம் தள்ளி யூப்ரடீஸ் என்ற மிகப்பெரிய ஆறு ஓடுகிறது. இது உப்பு தவிர மற்றெந்த விதத்திலும் கடலுக்குச் சளைத்ததல்ல. இவ்வாற்றுப் படுகையில் அமைந்துள்ள ஆரானில் சங்கு கிடைப்பதில் வியப்பேதும் இல்லை. சங்கு கிடைத்தது என்பதற்காக நோவாவை வம்புக்கு இழுக்கக் கூடாது என்று வாதிடுகிறார்கள். (C.S.Gadd, The History and Monuments of Ur 1929)

இதற்கு அடுத்த காலத்திற்கு ‘வார்கா காலம்’ என்று பெயர். வார்கா என்ற பட்டணத்து நாகரீகம் இங்கு பரவியதால் இப்பெயர். இக்காலத்தில் தான் சுட்ட கற்கள், சுட்ட மண்பாண்டங்கள் மிகுதியாக பயன்படுத்தப்பட்டன.குயவர் பயன்படுத்தும் சக்கரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்னும் வியப்பு அக்கால மக்கள் நமக்கு சரித்திரம் சொல்ல முற்பட்டுள்ளது தான். க்யூனிபார்ம் (யூனிபார்ம் இல்லை. க்யூனிபார்ம்! சித்திர எழுத்துக்கள்) எழுத்துகளில் பல குறிப்புகளை எழுதி வைத்து நெருப்பில் சுட்டு பதப்படுத்தியுள்ளனர்.

இவற்றுள் திரளானவை உல்லியால் கண்டுபிடிக்கப்பட, அவை லண்டன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. (லண்டன் போனால் மறக்காமல் பாருங்கள்) இக்கால மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள பெரிதும் உதவுவது ‘நெக்ரோ போலிஸ்’. இது அக்கால போலீஸ் அல்ல. கல்லறை! Necropolis என்றால் மரித்தவர்களின் நகரம் என்று அர்த்தம் சொல்கிறார்கள்.

இதை அகழ்ந்து பார்த்த போது கிடைத்த தலையணி (Helmet) இன்று வரை ஒரு பிரமிப்புடனே பார்க்கப்படுகிறது. காரணம் தங்கம்! இது 15 காரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்! (இப்போது நாம் பயன்படுத்துவது 22 காரட் )

ஊர் பட்டிண அரச பரம்பரையினரின் வரலாறுகளும் அகழ்வாராய்வுகளில் வெளியாகியுள்ளன. அரச பரம்பரை ஆசாமி ஒருவன் மரித்தால் மிகப் பிரம்மாண்டமான கல்லறையில் அடக்கம் பண்ணப்படுவான். எப்படி? அவன் பயன்படுத்திய ஸ்பூன், தட்டு, செருப்பு, சீப்பு, மனைவி(கள்) வேலைக்காரன் யாவருடனும்,வேலைக்காரரும், மனைவியும் விஷம் கொடுக்கப்பட்டு அல்லது உயிருடன் கல்லறையில் புதைக்கப்பட்டார்கள்.கல்லறை ஒன்றை திறந்த போது ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போனார்கள்.காரணம், உள்ளே ஒரு ராஜா பரிவாரங்களுடன் அடக்கம் பண்ணப்பட்டிருந்தார்.

இன்னும் ஊர் பட்டணத்தை அகழ்ந்தபோது அங்கே க்யூனிபார்ம் கல்வெட்டுகள், உருளைகள், தலை அலங்கார பொருட்கள், இன்னும் சுபாத் என்ற ஒரு ராணியின் ஆபரணங்கள், மரத்துக்குக் கீழே நிற்பது மாதிரி ஆடு, மாடு இவற்றின் சிலைகள்- தங்கம் மற்றும் வெள்ளியில். மேலும், தங்கத்தில் பாடும் பறவை, எருதுத் தலை போன்றவை சுமேரியாவின் முன்னேறிய நாகரீ கத்திற்கு சான்றாக எடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர ஊர் பட்டிணத்தில், மக்களின் வழிபாட்டுத் தலமாயிருந்த ‘சிக்குராத்’ என்ற கோபுர உல்லியால் தோண்டி யெடுக்கப்பட்டுள்ளது. இது நிலவு தெய்வத்தின் ஆலயம் என்று அழைக்கப்பட்டது.இந்த ஆராதனை ஸ்தலத்துக்குப் போக வேண்டுமானால் நூற்றுக்கணக்கான படிகளைக் கடந்து மேலே போக வேண்டும். பிளட்பிரஷர் ஆசாமிகளுக்கு நிலவு வணக்கம் ஆகாது.

இங்கு மாதந்தோறும் மக்கள் கூடி ஆராதிப்பார்கள். ஆராதனை ஒழுங்கை விவரித்துச் சொன்னால் இராத்திரி தூக்கத் தில் உளறுவீர்கள். அவ்வளவு சாத்வீகம்!அம்மாதத்தில் பிறந்துள்ள தலைச்சன் ஆண் குழந்தைகளை நிலவு மேடையில் படுக்க வைத்து தாயும், தகப்பனும் பிடித்துக்கொள்ள பூசாரி கழுத்தை அறுப்பதுதான் ஆராதனையில் ஹைலைட்.இது தவிர இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பல பொருட்கள், கோவில்கள், கடை வீதிகள் இருந்த இடங்கள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

ஆழங்கள் சொல்லும் சாட்சி இன்று சிலர் வேதாகம சம்பவங்களை நம்புவதில்லை. அவை வெறும் கதைகள் என்று வேதத்தை புரட்டாமலே சொல்வ துண்டு,ஆனால் வேதம் எந்தவொரு சம்பவத்தையும் “ஒரேயொரு ஊரில்”,என்கிற மாதிரி சொல்லாமல் புள்ளி விவரமாய்சொல்கிறது.வேதம் குறிப்பிடும் இடங்கள், மக்களின் நிலை இவை யாவும் இன்று அகழ்வாராய்ச்சியில் நிரூபணம் ஆகியுள்ளன.

நன்றி:- Charles..





டிடாகே (Didache) - அப்போஸ்தலர்களின் போதனை || அறிந்து கொள்வோம் _ பகுதி - 160 ||

அறிந்து கொள்வோம்  பகுதி - 160 டிடாகே (Didache) - அப்போஸ்தலர்களின் போதனை "அப்போஸ்தலர்களின் படிப்பினை" என்பது பொதுவாக Didache (டிடாக...