Monday, 31 May 2021

மெகிதோ அறிந்து கொள்வோம் பகுதி -44

 அறிந்து கொள்வோம்

பகுதி -44


மெகிதோ


சாரோன் சமபூமிக்கும் யெஸ்ரயேல் சம பூமிக்கும் இடையிலுள்ள இந்தக் கோட்டை உள்ளது ,கர்மேல்மலைக்குத் தென்கிழக்கே 20 மைல் தூரத்தில் இருந்தது.


பூர்வ காலத்தில் கானான்தேசத்தில் வாழ்ந்து வந்த கானானியர்கள் இந்த  விசேஷமான கோட்டையை கட்டினார்கள். மனாசே கோத்திரத்திற்கு இந்த பகுதி விடப்பட்டு இருந்தது.பின்பு சிலகாலம் கானானியர் இந்த பகுதியில் வாழ்ந்தார்கள். பாராக் இந்த கோட்டை அருகில் தான் சிசெராவை ஜெயித்தான். 

யோசு.12:21, 17:12, நியா.1:27, 5:19.


சாலொமோன் இதன் அலங்கத்தை பழுது பார்த்து சீர்படுத்தினார். 

1 இரா.9:15.


அகசியா மற்றும் யோசியா ராஜாக்கள் இங்கு தான் மரித்தார்கள். 

2 இரா.9:27, 23:29.


‘அர்மெகெதோன்' என்பதற்கு "மெகிதோவின் மலை' என்று அர்த்தம் தருகிறார்கள். மெகிதோவில்  பல யுத்தங்கள் நடந்ததினால், ஆவிக்குரிய விதமான யுத்தம் இவ்விடத்தில் நடப்பதாக வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வெளி.16:16.


Sunday, 30 May 2021

மீதியான் / மீதியானியர் அறிந்து கொள்வோம் பகுதி -43

அறிந்து கொள்வோம்

பகுதி -43



மீதியான் / மீதியானியர் 


"மீதியான்" என்ற எபிரெய பெயருக்கு "சண்டை"என்று பொருள்.


பழைய ஏற்பாட்டில் "மீதியான்" என்ற பெயரில் ஒரு நபரும் ஓர் இடமும் உள்ளது.


1. ஆபிரகாம், கேத்தூராள் ஆகியோரின் குமாரன். 

(ஆதி 25:1-6). 


மீதியானுக்கு நான்கு குமாரர்கள் இருந்தார்கள் (1நாளா 1:33). வேதாகமத்தில் மீதியான் பற்றி வேறு எந்த விவரமும் இல்லை.

ஆபிரகாமின் இரண்டாம் குடும்பத்தில் மீதியான் முக்கியமானவன். மீதியான் மற்றும்அவருடைய குடும்பத்தாரை பற்றி வேதாகமத்தில் 67 இடங்களில் கூறப்பட்டுள்ளது.


ஏசா மீதியானை வென்றான்.

(ஆதி 36:35), 


மோசே மீதியானுடைய தேசத்திற்குத் தப்பி ஓடிப்போய், அங்கு மீதியானிய ஸ்திரீ ஒருத்தியை திருமணம் செய்து கொண்டான்.(யாத் 2.15-16; யாத் 31; யாத் 4:19; யாத் 18:1)


மீதியானியர் இஸ்ரவேலுக்கு ஒரு

கண்ணியாக இருந்தார்கள்.

(எண் 2:51-15) 


அவர்களுடன் யுத்தம் பண்ணும் படி தேவன்இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டார். (எண் 25.16-18; எண் 31: 1-20), 

பல நூற்றாண்டுகளாக,

இஸ்ரவேலர்கள் மீதியானியரோடு அடிக்கடி யுத்தம் பண்ணினார்கள். (யோசு 13:21;நியா 6:1-2; நியா 7.8-25; நியா நியா 9:17),


கிதியோன் மீதியானியரை

முறியடித்தான். மீதியானியருடைய வீழ்ச்சி, “மீதியானியரின் நாளில்" "the day of Median"

என்று அழைக்கப்படுகிறது. 

(ஏசா 9:4; ஏசா 10:26; சங் 83:9).


ஆபிரகாமின் குமாரன். கெத்தூராளுக்குப் பிறந்தவன்.

 (ஆதி 25:2-4). 


மோசேயின் காலத்தில் மீதியானியர்கள் இஸ்ரவேல் புத்திரருக்குப் பலத்த சத்துருக்களாய் இருந்தார்கள்.

(எண் 22:4-7; எண் 25:15-18; எண் 31:3-12; யோசு 13:21)


மோசே மீதியானிய ஸ்திரீயை

விவாகம் பண்ணியிருந்தார்.

(யாத் 2:15-31; யாத் 4.19; யாத் 181-27). 


இவர்களுக்குஇடையே காணப்பட்ட விரோதத்திற்கு காரணம்கூறப்படவில்லை. 

எண் 31- வது அதிகாரத்தின் படி மீதியானியர் உடைய தேசம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் திரும்பவும் பலுகிப் பெருகினார்கள்

திரளான ஜாதிகளுக்குத் தலைவர்களானார்கள். கிதியோனின் நாட்களில் மீதியானியர் இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக எழும்பி வந்தார்கள்.

(நியா 6:1-8:28; நியா 9.17; ஏசா 9:4;

 ஏசா 10.26)


2. மீதியான் சந்ததியார் சுதந்தரித்த தேசம். 


இது யோர்தான் நதிக்கும்

சவக் கடலுக்கும் கிழக்கே அமைந்துள்ளது.


"மீதியானியர்" என்னும் எபிரெய பெயருக்கு -

"சண்டை " "strife" என்று பொருள்.


பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கு சத்துருவாக இருந்த இவர்கள் மீதியானின் சந்ததியில் வந்தவர்கள். மீதியான் ஆபிரகாமின் குமாரன்

ஆகையினால் இவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடே தூரத்து உறவுக்காரர்கள் எபிரெயஜனங்களோடு இவர்கள் சிநேகமாக இருப்பதற்கு பதிலாக சத்துருவாக இருந்தார்கள்.

ஆபிரகாம் மீதியானின் குமாரர்களை கிழக்கு தேசத்திற்கு அனுப்பினார்.

 (ஆதி 25.6)

அதன் பின்பு பழைய ஏற்பாட்டுக்காலத்தில் அவர்கள் கிழக்கத்திப்பத்திரர் என்று

அழைக்கப்பட்டார்கள்.

 (நியா 6:3,33)


மீதியானியர்கள் இஸ்மவேலரோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள்.

 (ஆதி 37:28; நியா8.24).


மீதியானியர்கள் யோசேப்பை அவனுடைய சகோதரனிடமிருந்து விலைக்கு வாங்கி அவனை எகிப்து தேசத்தில் மறுபடியும் விற்றுவிட்டார்கள்.

 (ஆதி 37:25-36)


 மோசே மீதியானிய ஸ்திரீயை விவாகம் பண்ணினான். (யாத் 2:15), சிப்போராளும், எத்திரோவும் மீதியானியர்கள் (யாத் 2.21; 31). இவர்களுடைய காலத்திற்கு பின்பு இஸ்ரவேலரும் மீதியானியரும் சிநேகமாக இருக்கவே இல்லை.


மோசேயின் காலத்திற்கு பின்பு மீதியானியர்கள் இஸ்ரவேலருக்கு தொடர்ந்து சத்துருவாக இருந்தார்கள். அவர்கள் மோவாபியரோடு சேர்ந்து கொண்டு, இஸ்ரவேலை

சபிப்பதற்கு, பிலேயாமை கூலிக்கு அமர்த்தினார்கள் (எண் 22:47).


இஸ்ரவேல் புத்திரர் கானானை சுதந்தரிப்பதற்கு முன்பு

மோவாப் மீதியானியர்கள்

விக்கிரகாராதனையையும், வேசித்தனத்தையும் செய்து வந்தார்கள். அவர்கள் மூலமாக

இஸ்ரவேல் புத்திரரில் சிலர் அவர்களோடு சேர்ந்து வேசித்தனம் பண்ணினார்கள்.அதனால் தேவனுடைய ஜனங்கள் மீது கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வந்தது எண் 25:1-9)


மீதியானியர் வேறு பிரிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள்.

 (எண் 25:16-18).


நியாயாதிபதிகளின் காலத்தில், 

கி மு 1100-ம் வருடத்தில் மீதியானியர் இஸ்ரவேலருக்கு பிரச்சனையாக இருந்தார்கள் பாலஸ்தீன தேசத்தின் மீது யுத்தம் பண்ணினார்கள். இஸ்ரவேல் புத்திரர் மலைப்பிரதேசத்துக்கு துரத்தப்பட்டார்கள். அவர்களுடைய கால்நடைகளும் தானியங்களும் கொள்ளையிடப்பட்டன.

 (நியா 6.1-6).


மீதியானியருடைய கரங்களிலிருந்து இஸ்ரவேலரை விடுவிப்பதற்காக தேவன்கிதியோனை எழுப்பினார். கிதியோனும் எப்பிராயீமரும் மீதியானியரை முறியடித்தார்கள்

(நியா 7:24-25). 

அவர்களை யோர்தான் நதிக்கு அப்பால் துரத்தினார்கள். (நியா 8.10-12)

கிதியோனுடைய வெற்றி பழைய ஏற்பாட்டுக்காலத்தில்  பிற்பகுதியிலும் விவரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

 (சங் 83:9,11; ஏசா 9:4; 10:26)...




Friday, 28 May 2021

வாசல் ஒரு ஆய்வு

 வாசல்


ஒரு ஆய்வு


ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: "நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்"

யோவ 10:7



வேதாகமத்தில் பலவிதமான வாசல்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது குறிப்பாக இடுக்கமான வாசல், விசாலமான வாசல், மோட்ச வாசல், நரக வாசல், பாதாள வாசல்,மரண வாசல், ஜீவ வாசல், என்று பல உண்டு. இங்கு இயேசு தன்னை வாசல் என்று அடையாளப்படுத்துகிறார்.

ஆக வாசலை குறித்து சற்று ஆராய்ந்து பார்ப்போம்.



வாசலைக் குறிக்க "shaar" என்ற எபிரெயச் சொல் வேதாகமத்தில் 300 முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


சங். 107:15-ன் படி

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசல்கள் இரும்பிலும், மரத்திலும், வெண்கலத்திலும் செய்யப்பட்டிருந்தன.


ஆதி. 22:17- ல்

ஆபிரகாமுக்கு இந்த வாக்குத்தத்தம்

கொடுக்கப்பட்டது.

 "உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்"

சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவது என்பது அவர்களை வெற்றிகொள்வதற்கான அடையாளம்.


மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட வாசல்களை குறித்து ஏசா 54:12

" உன் வாசல்களை மாணிக்கக் கற்களும்"சொல்லப்பட்டிருக்கிறது.


பரலோக நகரத்தின் பன்னிரண்டு வாசல்கள் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன என்று

 வெளி. 21:21 சொல்கிறது..

"பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது"


வேதாகமத்தில் பட்டணத்து வாசல்


"இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்” என்று எபிரெயர் 13:12 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

பழைய ஏற்பாட்டில் பலியிடப்பட்ட மிருகங்களின் உடல்கள் பாளயத்திற்கு புறம்பே சுட்டெரிக்கப்பட்டது. ஆக 

இயேசு நகரத்தின் வாசலுக்கு புறம்பாக்கப்பட்டார்.


உபா. 16:18

பட்டணத்து வாசல்களில் நியாயாதிபதிகள்/ தலைவர்கள் மக்களை நியாயம் விசாரித்தார்கள்.


ஏசா 29:21; எரே. 17:19-20 , 26:10-11

நியாய வாசல் என அழைக்கப்படும் இந்த வாசலிலேயே தீர்க்கதரிசிகள் பெரும்பாலும் மக்களும் ராஜாவுக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.


போவாஸ் பட்டணத்து வாசலிலே தான் ரூத்தை மணந்துகொள்ள விரும்புவதைத் தெரிவித்து, அவளை மீட்டுக்கொள்ள முதல் சுதந்தரவாளியாக இருந்தவனிடமிருந்து அனுமதியைப் பெற்றான் (ரூத் 4:1-11).


யுத்தத்தைக் குறித்த செய்தியை அறிய பட்டணத்து வாசலில் காத்திருப்பதுண்டு. ஏலி இப்படி காத்திருந்தான் என்று

 1 சாமு. 4:18 பார்க்கிறோம்.


1 இரா. 21:13

குற்றவாளிகள் பட்டணத்து வாசலுக்கு வெளியே தண்டிக்கப்பட்டார்கள். பட்டணத்துக்கு வெளியே கல்லெறியப்படுவார்கள் ஸ்தேவான் நகர வாசலுக்கு வெளியே தள்ளப் பட்டு கல்லெறிந்து கொல்லப்பட்டவன்.

 அப். 7:58 - 60.


2 இரா. 7:1

பட்டணத்து வாசல்களில் சந்தையை கூட்டி, பொருட்கள் விற்கப்பட்டது.


யோசு 2:5; நெகே. 13:19.

இரவு வேளையிலும் ஓய்வு நாட்களில் பட்டணத்து வாசல்கள் மூடப்பட்டன. 


எருசலேம் பட்டணத்தின் வாசல்கள்


யூதாவின் மக்கள் பாபிலோனுக்குச் சிறைப் பிடித்துக்கொண்டு போகப்பட்டபோது, எருசலேம் நகரத்தோடு கூட அதன் வாசல்களும் சுட்டெரிக்கப்பட்டன. நெகே. 1:3.


எருசலேம் பட்டணத்தில் பழைய பன்னிரண்டு வாசல்களையும் பிற்காலத்திய வாசல்களையும் சேர்த்து குறைந்தபட்சமாக பதினாறு வாசல்கள் இருந்தன.


1.பென்யமீன் வாசல் - எரே. 37:13.


2.மீன் வாசல் - நெகே. 3:3.


3.ஆட்டுவாசல் - நெகே. 3:1.


4. பழைய வாசல் - நெகே. 3:6, இது ஜெஷானா வாசல் என்று அழைக்கப்பட்டது.


5.இன்னோம் பள்ளத்தாக்கு வாசல்  

  - நெகே 3:13.


6.குப்பைமேட்டு வாசல் - நெகே. 3:14.


7. ஊருணி வாசல் - நெகே. 2:14.

 இது ராஜாவின் தோட்டத்து வாசலாக இருந்தது -2 இரா. 25:4.


8.சீயோன் வாசல். 

-இது தெற்கு அரணில் இருக்கிறது.


9.தண்ணீர் வாசல் -நெகே. 3:26.


10.குதிரை வாசல் - நெகே. 3:28.


11.கிழக்கு வாசல் - நெகே. 3:29.


12.தமஸ்கு வாசல்- இது வடக்கு அரணில் இருக்கிறது.தமஸ்குவுக்கு செல்லும் பாதை அதன் வழியாக செல்கிறது.


13.தங்க வாசல்- இது இப்போது அடைக்க பட்டிருக்கிறது.


14.ஏரோது வாசல் - இதுவும் வடக்கு அரணில் இருக்கிறது.


15.யோப்பா வாசல் - இது மேற்கு அரணில் இருக்கிறது.


16.புதிய வாசல் - இதுவும் மேற்கு அரணில் இருக்கிறது.


பாபிலோன் (ஈராக்) மன்னர் நெபுகத்நேசர் கி.மு. 587- இல் இஸ்ரேலை கைப்பற்றி எருசலேமில் இருந்த தேவாலயம், அரண்மனைகள், பெரிய மாளிகைகள் மற்றும் இதர வாசல்கள் அனைத்தையும் சுட்டெறித்துப்போட்டான். அதன்பிறகு கி.மு. 5- ஆம் நூற்றாண்டில் பெர்சிய மன்னர் அர்தசஷ்டா என்பவரிடம் பணியாற்றிய யூதரான நெகமியா மன்னரின் அனுமதியைப் பெற்று எருசலேமுக்கு வந்து அரண்மனையையும் 12 வாசல்களையும் மீண்டும் கட்டினார். தற்போது உள்ள இந்த வாசல்கள் அனைத்தும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டன. ஒவ்வொரு வாசலும் ஒரு நோக்கத்தோடு கட்டப்பட்டன.

 

ஆட்டு வாசல்:


தேவாலயத்தில் பலி செலுத்தப்படுவதற்காக சந்தைகளில் வாங்கப்படும் ஆடுகள் இவ்வழியாகத்தான் சந்தைக்கு கொண்டு வரப்படும். எனவேதான் இது ஆட்டு வாசல் என அழைக்கப்பட்டது. 


மீன் வாசல்:


 வியாபாரிகள் மீன்களை இந்த வாசல் வழியாகத்தான் கொண்டு வருவார்கள். எனவே, இது மீன் வாசல் என்று அழைக்கப்படுகிறது. 


பழைய வாசல் (ஒலிமுக வாசல்) : 


எருசலேம் நகரில் உள்ள முக்கிய நபர்கள் சமுதாயத்தின் முக்கியமான காரியங்கள், நியாயம், நீதி போன்ற காரியங்களை இந்த வாசல் அருகே உட்கார்ந்து பேசுவார்கள் (ரூத்: 4, 1, 2, 11,நீதி 31: 23, எரே 6: 16).


குப்பைமேட்டு வாசல்:


 நகரில் உள்ள குப்பைகள், பலியிடப்பட்ட ஆடு, மாடுகளின் கழிவுகள் இந்த வாசல் வழியாகத்தான் எடுத்துச் செல்லப்படும்.


கிழக்கு வாசல், ஒலிமுக வாசல் அல்லது தங்க வாசல்:


 எருசலேமில் உள்ள அனைத்து வாசல்களிலும் இது புனிதமானது. ஒலிவ மலையை பார்த்த வண்ணம் இந்த வாசல் அமைக்கப்பட்டுள்ளது. 

இது எருசலேமின் கிழக்கு வாசல், தங்க வாசல், புற வாசல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வாசல் வழியாகத்தான் தேவ மகிமை இறங்கி வருவது வழக்கம். இந்த வாசல் வழியாக வரும்போது தேவாலயத்துக்குள் போகலாம். 


கி.மு. 10- ஆம் நூற்றாண்டில் சாலமோன் கட்டிய தேவாலயத்தின் கிழக்கு பகுதியில் இருந்த இந்த வாசல் கிழக்கு வாசல் என அழைக்கப்பட்டது. இப்போது தங்க வாசலுக்கு அருகே அது இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 


கி.மு. 6-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு 5-ஆம் நூற்றாண்டில் பெர்சியர்களின் ஆதரவுடன் மீண்டும் இந்த வாசல் நெகேமியாவின் தலைமையில் கட்டப்பட்டது. அப்போது பெர்சியர்களின் தலைநகராக விளங்கிய சூசானின் பெயரால் இது சூசான் வாசல் என்றும் சில காலம் அழைக்கப்பட்டது.


அதன்பின்னர் கி.மு. 1- ஆம் நூற்றாண்டில் ஏரோது மன்னரால் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டது.இவரால்  இந்த வாசல் மீண்டும் கட்டப்பட்டு ஏரோது வாசல், கிழக்கு வாசல் என அழைக்கப்பட்டது. 


கி.பி. 70- இல் ரோமர்களால் இந்த வாசல் அழிக்கப்பட்டது மீண்டும் அவர்களே கி.பி. 6, 7 -ஆம் நூற்றாண்டுகளில் இந்த வாசலை கட்டினர். அக்காலத்தில் இஸ்ரேலின் அதிபதியாக இருக்கும் நபர் மட்டும் இந்த வழியை பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக ஓய்வு நாட்கள், மாத பிறப்புகளிலும் இந்த வாசல் திறக்கப்படும்.

பொதுமக்கள் இந்த வாசல் நடையில் பிரார்த்தனை மட்டும் செய்வார்கள். வரப்போகும் மேசியா கடவுள் இந்த கிழக்கு வாசல் வழியாகத்தான் நுழைந்து எருசலேமுக்கு போவார் என்றும் ஒலிவ மலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான யூதர்கள் அப்போது கல்லறையில் இருந்து உயிர்த்தெழுவார்கள் என்றும் யூதர்கள் பாரம்பரியமாக நம்புகின்றனர். யூதர்கள் நம்பிக்கைப்படி இந்த வழியாக மேசியா நுழையக் கூடாது என்பதற்கு இஸ்லாமிய மன்னர் சுலைமான் இந்த வாசலை மூடிவிட்டார். இப்போதும் இந்த வாசல் மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. 

ஆனால், யூதர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மேசியாவாகிய இயேசு இஸ்ரேலில் இருந்தபோது இந்த வாசல் வழியாகத்தான் பலமுறை எருசலேமுக்கு நுழைந்தார். மீண்டும் இயேசு 2வது முறையாக வரும்போது இந்த வாசல் வழியாக எருசலேமுக்குள் நுழைந்து ஆயிரம் ஆண்டுகள் உலகை ஆளுவார். இங்கே மீண்டும் தேவாலயம் கட்டப்படும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கி.பி. 70- இல் அழிக்கப்பட்ட தேவாலயம், இன்று வரை கட்டப்படவில்லை…..


பல விதமான வாசல்


பட்டணத்தின் வாசல்

  • ஆதி. 19:1

லோத்து சோதோம் பட்டணத்தின் வாசலில்அமர்ந்திருந்தபோது, இரண்டு தூதர்கள் மனிதர் வடிவில் அவனைத் தேடி வந்தார்கள்.

  • நியா. 16:3

சிம்சோன் காசா பட்டணத்தின் வாசல் கதவுகளை தாழ்ப்பாள்களோடு சேர்த்துப் பெயர்த்து, எபிரோனுக்கு எதிரே இருக்கும் மலைக்கு அவைகளைத் தூக்கிச் சென்றான்.


இரண்டு வாசல்கள்

  • எசே. 41:23, 24.- 1 இரா.6:31-35

எசேக்கியேல் தரிசனமாகக் கண்ட ஆலயத்தில் ஆலயத்துக்கும், பரிசுத்த ஸ்தலத்துக்கும் இரண்டு வாசல்கள் இருந்தன. அவை இரட்டைக் கதவுகளால் மூடப்பட்டிருந்தன.


அலங்கார வாசல்:

  • அப். 3:2

தேவாலய வாசல் அலங்கார வாசல் என்று அழைக்கப்பட்டது.


கல்லறை வாசல்

  • மத். 27:60-

வெட்டப்பட்ட கல்லறைக்கும்

வாசல் இருந்தது. இயேசுவானவர் வைக்கப்பட்ட கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல் புரட்டி வைக்கப்பட்டது.


சிறைச்சாலை வாசல்

  • அப். 16:27

பவுலும் சீலாவும் பிலிப்பி

பட்டணத்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறைச் சாலையின் வாசல்கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன.


குகையின் வாசல்

  • 1 இரா.12:13

எலியா தீர்க்கதரிசி தேவனுடைய சத்தத்தை கேட்கும்படி தான் ஒளிந்திருந்த கெபியின் வாசலுக்கு வந்தார். தேவன் அவருக்கு முக்கிய கட்டளைகளை கொடுத்தார்.


பாளையத்தின் வாசல்

  • யாத். 32:26

மோசே பாளையத்தின் வாசலில் நின்று கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார் என்று கேட்டபோது, லேவியர்கள் அவர் பக்கம் வந்து விட்டார்கள். கர்த்தருடைய கட்டளையை மீறி பொற்கன்றுகுட்டியை வணங்கிய

அநேகரை அவர்கள் கொன்று போட்டார்கள்.


இயேசுவால் கட்டப்படும் சபையைப் பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை - மத். 16:18.

சாத்தானின் வல்லமையை இந்த வாசல்கள் குறிக்கிறது, அவனுடைய வல்லமையால்  சபையை அழிக்க முடியாது.கிறிஸ்துவின் சபையை யாராலும் அழிக்க முடியாது.


"திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்" என்று பவுல் கேட்டுக்கொண்டதை நம்

 கொலோ. 4:4-ல் பார்க்கலாம்.


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை வாசல் என்றார்.


"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்” என்று இயேசு திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

யோவ 10:9.


நாம் இரட்சிப்புக்குள் பிரவேசிப்பதற்கு அவர் மட்டுமே ஒரே வழியாகவும் வாசலாகவும் இருக்கிறார்.




Thursday, 27 May 2021

நம் இருதயத்தில் இருக்க கூடாதது , அறிந்து கொள்வோம் பகுதி-42

 அறிந்து கொள்வோம்

பகுதி-42


நம் இருதயத்தில் இருக்க கூடாதது 


1) கசப்பு - யாக் 3:14

 2) வைராக்கியம் - யாக் 3:14

 3) விரோதம் - யாக் 3:14

 4) பெருந்திண்டி - லூக் 21:34

 5) வெறி - லூக் 21:34 

6) உலக கவலை - லூக் 21:34 

7) இச்சை - நீதி 6:25

 8) அக்கிரம சிந்தை - சங் 66:18

 9) பயம் - யோ 14:27 

10) கர்வம் - 2 நாளா 25:19

 11) அகந்தை - லூக் 1:51 

12) கபடு - கொ 3:22

 13) பிறரை அவமதித்தல் - 2 சாமு 6:16 

14) சோர்வு - சங் 40:13 

15) பொருள் ஆசை - சங் 119:36 

16) மேட்டிமை - ஏரே 48:29 

17) அவிசுவாசம் - எபி 3:13 

18) பொல்லாத சிந்தனை - சங் 140:2

 19) துணிகரம் - பிரச 8:11

 20) தேவனை தூஷித்தல் - யோபு 1:5

 21) இருள் - ரோமர் 1:21 

22) பிசாசின் தூண்டுதல் யோ 13:2 

23) சகோதரனை பகைக்க கூடாது-

 லேவி 19:17 

24) சஞ்சலம் - பிரச 11:10

 25) சந்தேகம் - லூக் 24:38 

26) அக்கிரமம் - சங் 41:6

 27) மந்தம் - லூக் 24:25




Wednesday, 26 May 2021

தவிடு அறிந்து கொள்வோம் பகுதி -41

அறிந்து கொள்வோம்

பகுதி -41


தவிடு 

Husk


Ceratonia Siliqua


இலத்தீன் பாஷையில் Ceratonia Siliqua என்று பெயர் கொண்ட 10 அங்குல நீளமான காய்கள் உடைய ஒரு ஜாதி மரம் பலஸ்தீனா தேசத்தில் உண்டு. இந்த மரம் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரைக்கும் காய் காய்க்கும். இந்தக் காய்களில் சாப்பிடகிறதற்கேற்ற சதையும் அந்தச் சதைக்குள் அநேக நல்ல விதைகளும் இருக்கும், நமது தேசத்தில் வேலிக்கருவேல  நெற்றுக்களை ஆடுகளுக்கு இரையாக உபயோகிப்பது போல, பலஸ்தீனா தேசத்தில் இந்த மரத்தின் பழங்களையும் மிருகங்களுக்கு இரையாக பயன்படுத்துவார்கள்.

பஞ்ச காலங்களில் ஏழைகள் இவைகளைத் தின்பார்கள். 

இந்த மரத்தின் பழங்களை தான்  லூக்கா சுவிசேஷத்தில் தவிடு என்று சொல்லியிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.(லூக்.15:16)

ஆகையால் கெட்ட குமாரன் நமக்குத் தெரிந்த தவிட்டை அல்ல இந்த மரத்தின் பழங்களை தான் சாப்பிட்டிருக்க வேண்டும், அது மட்டும் அல்ல மத்.3:4 - ல் 

யோவான் ஸ்நானகன் சாப்பிட்டது 

வெட்டுக் கிளிகளை' அல்ல இந்தப் பழங்களை தான் என்று அநேகர் சொல்கிறார்கள். 







Tuesday, 25 May 2021

யாப்பேக்கு அறிந்து கொள்வோம் பகுதி -40

அறிந்து கொள்வோம்

பகுதி -40


யாப்பேக்கு


"யாப்பேக்கு" என்றால் "ஊற்றப்படுதல்" அல்லது "மல்யுத்தம் செய்தல்” என்று அர்த்தமாகும்.


யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில்  சேரும் ஒரு சிறிய ஆறு தான் இது.

இது கலிலேயாக் கடலுக்குத் தெற்கே 45 மைல் தொலைவில் இருக்கிறது.


கீலேயாத் மலைகளின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகும் இந்தச் சிற்றாறு ஒரு அகலமான  ஆழமானதுமான மலையிடுக்கின் வழியாகப் பாய்ந்து, 70 கி. மீ. தூரம் ஓடி யோர்தான் நதியில் கலக்கிறது.


இது இயற்கை அழகு நிறைந்த பகுதியில் பாய்கிறது. சில இடங்களில் தரைக்கு அடியில் கூட செல்கிறது. 

அரளி மலர்ச் செடிகள் அதன் கரையில் அதிகமாக காணப்படுகின்றன.


இப்போது இது நீல நிற ஆறு என்று அர்த்தப்படும் ஜெர்க்கா ஆறு என்று அழைக்கப்படுகிறது. அதன் கரைகளில் பல புராதன பட்டணங்களின் இடிபாடுகள் காணப்படுகின்றன.இந்தப் பகுதி மக்கள் அதிகமாக வசித்த பகுதியாக இருந்திருக்க வேண்டும் 


குளிர்காலத்தில் இந்த ஆற்றில் வெள்ளம் வரும்போது மட்டுமே இதைக் கடப்பது சிரமமாக இருக்கும்

இப்போது இந்த ஆறு ஜோர்டான் நாட்டின்  எல்லை இருக்கிறது.


இந்த ஆறு அம்மோன் புத்திரரின் வடக்கு எல்லையாக இருந்தது (யோசு 12:1-5).


கானான் தேசம் பங்கிடப்பட்ட போது, 

இது ரூபன் கோத்திரத்தாருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் எல்லையாக இருந்தது


யாக்கோபின் வாழ்வில் இந்த ஆறு


யாக்கோபு தன் மாமனாகிய லாபானை விட்டுப் பிரிந்து கானான் தேசத்திற்கு திரும்பி வரும் வழியில் தன்மீது முன்பு கோபம் கொண்டிருந்த அண்ணன் ஏசா எதிர்கொண்டு வருவதை குறித்து கேள்விப்பட்டான்.

யாக்கோபு ஏசாவை சந்தித்து அவனுக்கு அநேக வெகுமதிகளை கொடுக்கும்படி தனது வேலையாட்களை அனுப்பினான்.

பிறகு தனது பதினொரு குமாரர்களையும், மனைவிமார்களையும், பரிவாரங்களையும் இந்த யாப்பேக்கு நதியைக் கடந்து அக்கரைக்குச் செல்லும் படி செய்தான் (ஆதி. 32:22, 23).


யாக்கோபு பிந்தித் தனித்திருந்த போது, அவனுக்கும் தேவனுடைய புருஷனுக்கும் இடையில்

போராட்டம் உண்டாகியது

யாக்கோபு போராடி மேற்கொண்ட படியால், தேவன் அவனுடைய பெயரை யாக்கோபு என்பதிலிருந்து

இஸ்ரவேல் என்று மாற்றினார்.

எனவே யாக்கோபு இஸ்ரவேலாக மாறிய இடம் இந்த யாப்பேக்கு….



நளதம் (Spikenard) // வெள்ளைக்கல் பரணி (Alabaster box) // அறிந்து கொள்வோம் பகுதி -155 //

அறிந்து கொள்வோம் பகுதி -155 நளதம் (Spikenard) மற்றும் வெள்ளைக்கல் பரணி (Alabaster box)  விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்...