Sunday, 13 August 2023

அல்லேலூயா || அறிந்து கொள்வோம் || பகுதி -108 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -108


"அல்லேலூயா"

*அல்லேலூயா* - (ALLELUIA, HALLELUJAH)“என்றால் என்ன பொருள்?

அல்லேலூயா” என்னும் கிரேக்க வார்த்தைக்கு - 'alleelouia - "கர்த்தரை ஸ்தோத்திரி” praise the Lord" என்று பொருள். இதன் எபிரெய வார்த்தை halal - என்பதாகும். 

சந்தோஷம், ஸ்தோத்திரம், துதித்தல் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கு அல்லேலூயா என்னும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 

சங் 104:35; 16:19; 147:1- ஆகிய வசனங்களில் "கர்த்தரை ஸ்தோத்திரி” என்று பொருள்படும் அல்லேலூயா என்னும் எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வெற்றுக் கூச்சலாக சொல்லப்படும் அல்லேலூயா-வால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் அல்லேலூயா, தேவனுக்கு நன்றியையும், துதியையும் கொண்டு சொல்கிறது…





 Notes taken from Bro sasikumar


கானானியர்(ன்) || அறிந்து கொள்வோம் || பகுதி 107 ||

அறிந்து கொள்வோம்

பகுதி 107

கானானியர்(ன்)

(CANAANITES) என்னும் எபிரெய பெயருக்கு “வைராக்கியம்/பொறாமை” "zealous" என்று பொருள்.பாலஸ்தீன தேசத்தை இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரிப்பதற்கு முன்பாக அங்கு கானானியர்கள் குடியிருந்தார்கள்.கி.மு. 2000-ஆவது வருஷத்திற்கு முன்பாகவே கானானியரும், எமோரியரும் கானான் தேசத்தில் குடியிருந்தார்கள்.இந்த தேசத்தில்நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள் அவர்களுடைய அக்காலத்து நாகரீகத்தை விளக்குகிறது.

பழங்காலத்து கானான் தேசத்தில் ஆத்சோர், மெகித்தோ, பெத்ஷான், எரிகோ, எபூஸ், தெபீர், லாகீஸ், ஆராத் ஆகிய இடங்களில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்துடன் கானான் தேசத்தின் வடக்குப் பகுதியிலுள்ள பிப்லோஸ், உகாரித் ஆகிய இடங்களிலும் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இவை மத்தியதரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. கி.மு. 2100-முதல் கி.மு 1550 வரையிலும் கானானியரின் நாகரிகம் சிறந்து விளங்கிற்று. விவசாயம் பண்ணுவதில் கானானியர்கள் சிறந்தவர்கள். தங்களுடைய மொழியை ஆப்பெழுத்துக்களால் எழுதினார்கள். அவர்களுடைய தேசத்தில் அரணிப்பான

பட்டணங்கள் இருந்தன. சில பட்டணங்கள் மாநிலங்களாகவும் இருந்தன. அந்தப் பட்டணங்களுக்கென்று இராஜாக்களும் சேனைகளும் தனித்தனியாக இருந்தார்கள்.யோசுவா யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்தின் மீது யுத்தம் பண்ணி, கானான் தேசத்தை சுதந்தரித்த பின்பு கானானியரின் வரலாறு முடிவுபெற்றது. 

இஸ்ரவேல் புத்திரர்கள் தேவனுடைய உடன்படிக்கையின் ஜனங்கள். கானானியர்கள் இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்வில் பல நன்மையான காரியங்களையும் பல தீமையான காரியங்களையும்

செய்திருக்கிறார்கள்.பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கானானியரின் மார்க்கம் மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் பல தெய்வங்களை வழிபட்டார்கள். பல பண்டிகைகளையும் ஆசரித்தார்கள்.

அவர்களுடைய மார்க்கத்தில் பல பூஜாசாரிகளும் இருந்தார்கள். பல்வேறு இடங்களில் அவர்களுடைய விக்கிரகாரதனை நடைபெற்று வந்தது. தங்கள் தெய்வங்களுக்கு பெரிய கோவில்களை கட்டினார்கள்.


பழைய ஏற்பாட்டில் பாகால் (எண் 22:41) பாகால்கள் (ஓசி 2.13,17) பாகால் பேயோர் (எண் 25:35) ஆகியவற்றைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றுடன் அசேரா

(1இராஜா 18.19) அஸ்தோரேத் (1இராஜா 11:5,33) அஸ்தோரேத்துக்கள் (நியா 2:13)

ஆகியவற்றைப் பற்றியும் பழைய ஏற்பாடு குறிப்பிடுகிறது.

அவர்களது விக்கிரக ஆராதனையும், பலிகளும், அவர்களை வெறுக்க, இஸ்ரவேலர்களுக்கு காரணமாக அமைந்தது.வேதாகம ஆசிரியர்கள் கானானியரின் தெய்வங்களை கடிந்து கூறியிருக்கிறார்கள். வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் (கானானிய தெய்வங்கள் தவிர மேலும் அநேக தெய்வங்களின் பெயர்கள் உகாரீத் எனும் இலக்கியங்களில் காணப்படுகிறது.)

யோசுவா கானான் தேசத்தை சுதந்தரித்தபோது, கானான் தேசத்திலிருந்த கானானியர்கள் அனைவரையும் அவர் அந்த தேசத்திலிருந்து துரத்தி விடவில்லை.

கானானியரில் பலர் அந்த தேசத்திலேயே தொடர்ந்து குடியிருந்தார்கள். அவர்களுடைய

விக்கிரகாரதனை இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு சோதனையாக இருந்தது. ஆகையினால்

யோசுவா இஸ்ரவேல் ஜனத்தாரிடம் இவ்வாறு கூறுகிறார். “அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நியதேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள்” (யோசு 24:23).

புதிய ஏற்பாட்டில் ஒரு கானானிய ஸ்திரீ ஆண்டவராகிய இயேசுவை தேடி வருவதை பார்க்க முடியும். முதலாவது ஆண்டவர் இயேசு கிறிஸ்து அந்த ஸ்திரீயை புறக்கணிப்பது போல தோன்றினாலும், அந்த ஸ்திரீயின், பெரிய விசுவாசத்தை வெளிப்படுத்தும்படி காரியங்கள் நடந்தன. அற்புதம் நடந்தது!

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: *ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். (மத்தேயு 15:28)


"தன்னை நாடி வரும் ஒருவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து புறம்பே தள்ளுவதில்லை!!!


Notes taken from Sasi Kumar 




Wednesday, 24 May 2023

சேஷ்டபுத்திரபாகம் || அறிந்து கொள்வோம் || பகுதி - 106 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 106


சேஷ்டபுத்திரபாகம்


பரிசுத்த வேதாகமத்தில் சேஷ்டபுத்திரபாகத்தின் ஆசீர்வாதங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. 

அதன் விவரம் வருமாறு:

1.குடும்ப சுதந்தரவீதம். (ஆதி 25:5)

2.குடும்ப தலைமை ஸ்தானம்.(ஆதி 24:65; ஆதி 25:5; ஆதி 27:29,37)

3.தகப்பனின் ஆசீர்வாதம் .(ஆதி 27:4, 27-38).

4.குடும்பத்தலைவரும், ஆசாரியரும் (ஆதி 26:25; ஆதி 35:3-7)

5.குடும்ப நிலங்கள் எல்லாவற்றிலும் விசேஷித்த சுதந்தரம் (ஆதி 25:5-6; ஆதி 27:28,37; ஆதி 28:4; ஆதி 35:12)

6.சந்ததி பலுகிப்பெருகுதல். (ஆதி 13:16; ஆதி 15:5; ஆதி 17:2,5; ஆதி 22:17; ஆதி 26:4,24; ஆதி 28:3,14; ஆதி 32:12; ஆதி 35:11)

7.விசேஷித்த பராமரிப்பு (ஆதி 12:2-3; ஆதி 26:3-4,24; ஆதி 27:28;ஆதி 28:15)

8.தனிப்பட்ட ஆசீர்வாதங்கள்.(ஆதி 12:2; ஆதி 22:17; ஆதி 26:3)

9.பெரிய பெயர் (ஆதி 12:2; ஆதி 27:28-29,37)

10.எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதம். (ஆதி 12:2-3; ஆதி 18:18; ஆதி 22:18; ஆதி 26:4; ஆதி 28:14)

11. நித்திய சுதந்தரம்(ஆதி 13:15; ஆதி 17:7-8)

12. ஆபிரகாமின் உடன்படிக்கையில் விசேஷித்த நபர். (ஆதி 17:7,19; ஆதி 26:3-4; ஆதி 28:4,13-15) 

13.மேசியாவின் "தகப்பன்" (ஆதி 12:3; ஆதி 21:12; ஆதி 22:17; ஆதி 26:5; ஆதி 28:14; ரோமர் 9:7;)

14.பல தேசங்களுக்குத் தகப்பன். (ஆதி 17:5; ஆதி 18:18; ஆதி 35:11)

15.ராஜாக்களுக்கு தகப்பன். (ஆதி 17:6; ஆதி 35:11)

16.நித்திய இயற்கையான சந்ததி (ஆதி) 17:7-8,19; 2சாமு 7; ஏசா 9:6-7;ஏசா 59:21; லூக்கா 1:31-32)

17.விசேஷித்த தேவனாக யெகோவாவைப் பெற்றிருப்பது. (ஆதி 17:7-8; ஆதி 28:15; ஆதி 32:9,12)

18.விரோதிகள்மீது அதிகாரம். (ஆதி 22:17; ஆதி 27:29)

19.தேசங்களின்மீது தலைமை (ஆதி 27:29)

20.பொருளாதார ஆசீர்வாதங்கள்.(ஆதி 12:7; ஆதி 13:15; ஆதி 15:18; ஆதி 26:3-4; ஆதி 27:28-29,37; ஆதி 28:13; ஆதி 35:12)

21.ஆபிரகாமின் ஆவிக்குரிய ஆசீர்வாதம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல். (ஆதி) 28:4; ரோமர் 4; கலா 3:14)

22.விரோதிகள்மீது சாபம். (ஆதி 12:3; ஆதி 27:29)


🔯மூத்தவனுக்குச் சேஷ்டபுத்திரபாகத்து ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படுவதினால் அவனுடைய மற்ற சகோதரர்கள் அவன்மீது பொறாமைபடுவதற்கு வாய்ப்புள்ளது. 

🔯மூத்தவனுக்கு இரட்டிப்பான சுதந்தரவீதம் கிடைக்கும். (உபா 21:15-17).

 🔯சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போடலாம். (ஆதி 25:29-34; ஆதி 27:36; எபி 12:16; ரோமர் 9:12-13)

 🔯மூத்தவனுடைய பாவத்தின்நிமித்தமாக சேஷ்டபுத்திரபாகம் மாற்றப்படும். (1நாளா 5:1-2) அல்லது தேவன் அதை நிறுத்தி வைப்பார். (ஆதி 25:23; ஆதி 48:15-20; 1இராஜா 2:15; 1நாளா 26:10).

ஆனால் ஏசாவோ, “”இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு"(ஆதி 25:32) என்று சொல்லிவிடுகிறான்.



Sunday, 23 April 2023

அறிந்து கொள்வோம் || பகுதி - 105 || வேதத்தில் இரண்டு (2) ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 105


வேதத்தில் இரண்டு (2)

----------------------------------------------

1)2 பேர் ஜெபம் பண்ண ஆலயம் சென்றார்கள்- லூக்கா 18:10.

2)விதவை 2 காசு காணிக்கை போட்டாள் - மாற் 12:42.

3)2 மீன் 5 அப்பம் - மத்தேயு 6:41.

4) 2 எஜமானுக்கு ஊழியம் செய்ய முடியாது - மத்தேயு 6:24.

5)2 பேர் ஒருமனப்பட்டு ஜெபித்தால் அது கேட்கப்படும் -மத்தேயு 18:19.

6)சேவல் 2 தரம் கூவும் முன்னே நீ 3 தரம் மறுதலிப்பாய்.- மாற்கு 14:72

7)2 கள்ளர்கள் அவரோடு சிலுவையில் அறையப்பட்டார்கள்- மத்தேயு 27:38.

8)2 தாலந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டது-மத்தேயு 25:15.

9)2 பேர் வயலில் இருப்பார்கள். ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், ஒருவன் கைவிடப்படுவான்-     மத்தேயு 24:40


10)2 ஸ்திரிகள் எந்திரம் அறைப்பார்கள். ஒருத்தி ஏற்றுக் கொள்ளபடுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்- மத்தேயு 24:41

11) ஒரே படுக்கையில் படுத்திருக்கிற 2 பேரில் ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், மற்றவன் கைவிடப்படுவான் - லூக்கா 17:34

12) 2 பேர் இயேசுவின் நாமத்தில் கூடியிருக்கும் இடத்தில் கர்த்தர் இருப்பார்- மத்தேயு 18:20.

13) ஒரு காசுக்கு 2 அடைக்கலான் குருவிகள் - மத்தேயு 10:29

14) 2 அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்கு கொடுக்ககடவன்- லூக்கா 3:11

15) 2 காசுக்கு 5 அடைக்கலான் குருவிகள்- லூக்கா 12:6

16)ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால் அவனோடு 2 மைல் தூரம் போ - மத்தேயு 5:41

17)வாரத்தில் 2 தரம் உபவாசிக்கிறேன் என்று பெருமையோடு பரிசேயன் ஜெபித்தான்- லூக்கா 18:12

18) இயேசுவின் சரீரம் வைக்கபட்டிருந்த இடத்தில் 2 தூதர்கள் தலைமாட்டில் ஒருவனும், கால்மாட்டில் ஒருவனும் உட்காரந்திருப்பதை மரியாள் கண்டாள்.யோவான் 20:12.




Friday, 3 March 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -104 || யூதாஸ் காரியோத் ||

அறிந்து கொள்வோம்

பகுதி -104


 யூதாஸ் காரியோத் 


ஏ.யூதாஸின் அறிமுகம்

1.முழு பெயர் : யோவான் 6:71 

சீமோனின் குமாரணகிய யூதாஸ் காரியோத்து.

2.யூதாஸ் – (எல்) 

கொண்டாடபடுகின்ற (அ) துதி.

3.அப்பா பெயர்: யோவான் 6:71

 சீமோன்.

4.ஊர் பெயர் : எரேமியா 48:41 

கீரியோத் இது யூதேயாவின் தெற்கில் உள்ளது.

5.வித்தியாசம்:- மற்ற 11 சீசர்களும் கலேயாவைச் சேர்ந்தவர்கள்

இவன் மட்டும் யூதேயாவைச் சேர்ந்தவன்.


பி.யூதாஸின் மற்ற பெயர்கள்:

1. யோவான் 12:4 சீசனாகிய யூதாஸ்.

2.மத்தேயு 26:14 பன்னிரண்டு பேரில் ஒருவன்.

3. மத்தேயு 10.4 காட்டிக் கொடுத்த டபூதாஸ்.

4.அப் 1:16 எதிரிகளுக்கு வழிகாட்டி.

5.யோவான் 17:12 கேட்டின் மகன்.

6. யோவான் 12:6 திருடன்.

7. லூக்கா 6:16 துரோகி.


சி.யூதாஸின் நற்குணங்கள்:

1.யோவான் 18:2 இயேசு ஜெபித்த இடத்துக்கு அடிக்கடிப்போனவன். 

2.சங்கீதம் 41:9 பிராண சிநேகிதன்.

3.சங்கீதம் 43:9 நம்பிக்கைக்குறியவன்.

4.மத்தேயு 27:3 நல்ல மனஸ்தாபமுள்ளவன்,

5.மத்தேயு 27:4 அவன் தன் தவறை உணர்ந்தான்.ஆனால் பாவ அறிக்கை செய்யவில்லை.


டி.யூதாஸின் பொறுப்புகள்:

1.யோவான் 12:6 பணப்பையை சுமப்பவன்.

2.யோவான் 13:29 பண்டிகைகளுக்கு பொருட்களை வாங்குபவன். 

3.யோவான் 13:29 ஏழைகளுக்கு உதவிசெய்யும் பொறுப்பு இருந்தது

4.யோவான் 12:5 தைலம் போன்ற பொருட்களின் விலைப்பட்டியலை அறிந்திருந்தான்.


இ.யூதாஸின் சுபாவங்கள்:

1.யோவான் 12:3,4 இயேசுவுக்கு தைலம் பூசியதில் குற்றம் கண்டான்.

2.யோவான் 13:30 இராக்கால நேரத்தில் வெளியே போகிறவனயிருந்தான்.

3.மாற்கு 14:45 முத்தம் செய்யும் குணம் இருந்தது.

4.யோவான் 13:18 எதிரியைப்போல தன் குதிங்காலைத் தூக்குபவன்.

5.மத்தேயு 27:4 குற்றமில்லாதவர்களையும் காட்டி கொடுப்பவன்.

6.மத்தேயு 27:4 பாவத்தை பாவம் என்று தெரிந்தும் செய்பவன்.

7.மாற்கு 14:11 பணத்துக்காக எதிரிகளை சந்தோஷப்படுத்துபவன்.

8.மத்தேயு 27:5 சம்பாதித்த பணத்தை தூக்கியெறியும் குணமுள்ளவன்.

F.யூதாஸின் பின் விளைவுகள்:

1.மாற்கு 3:19 சீசர்களின் பெயர் வரிசையில் கடைசிக்குத் தள்ளப்பட்டான்.

2.மத்தேயு 27:4 அவன் நம்பின அதிகாரிகளால் கை விடப்பட்டான்.

3.யோவான் 13:2 பிசாசினால் தூண்டப்பட்டான். 

4.லூக்கா 22:3 சாத்தான் யூதாசுக்குள் புகுந்தான்.

5.யோவான் 6:70 பிசாசின் சொருபமாகவே வாழ்ந்தான். 

6.அப் 1:24 ஊழியத்தை இழந்துபோனான்.


G.யூதாசின் முடிவு:

1.சங்கீதம் 109:8 அவனுடைய நாட்கள் கொஞ்சமாகக் கடவது.

 (மற்ற 11 சீசர்களை விட சீக்கிரமாகவே செத்துப்போனன்)

2.மத்தேயு 27:5 நான்று(தூக்கிட்டுக்) கொண்டான்.

3.அப் 1:18 தலைகீழாக விழுந்தான்.

4.அப் 1:18 யூதாசின் வயிறு வெடித்தது. 

5.அப் 1:18 குடல்களெல்லாம் சரிந்துப் போனது.

6.அப் 1:20 அவனுடைய வாசஸ்தலம் பாழாய்ப்போனது.






Wednesday, 1 March 2023

அறிந்து கொள்வோம் || பகுதி -103 || சிலுவையும் கள்ளர்களும்

அறிந்து கொள்வோம்

பகுதி -103


சிலுவையும் கள்ளர்கள்

இயேசுவின் சிலுவைக்கும் யூதாசுக்கும் எப்படி நெருங்கிய தொடர்புண்டோ. அதேப் போல கொல்கொதா மலைக்கும் இரண்டு கள்ளர்களுக்கும் நிறைய தொடர்புண்டு. அந்த இரண்டு காளர்களைக் குறித்து துணுக்குகளோடும். வசனங்களோடும், சிந்தித்து தியானப்போம்.

வலதுபுறத்துக் கள்ளன்:

(பெயர் – திஸ்மாஸ்)

1.லூக்கா 23:40 ஆக்கினையை அறிந்தவன். 

*செப் 3:15 -ஆக்கினையை அகற்றுவார்.

2.லூக்கா 23:40 -தேவனுக்குப் பயப்படுகிறவன். 

*அப் 10:22 கொர்நேலிலியு தேவனுக்குப் பயந்தவன்.

3.லூக்கா 23:41 -தக்கப் பலனைக் குறித்து அறிந்தவன். 

*வெளி 22:12 பலன் என்னோடே கூட வருகிறது.

4.லூக்கா 23:41 இயேசு தகாததை நடப்பிக்கவில்லை (இயேசுவை குறித்துச் சாட்சி சொன்னான்) 

*மத் 3:11- என்னிலும் வல்லமையுள்ளவர்.

5.லூக்கா 23:41 கடிந்துக்கொண்டான். (எச்சரித்தான்) 

*யோவான் 8:11 நீ போ இனிப்பாவம் செய்யாதே.

6.லூக்கா 23:42 ராஜ்யத்தில் நினைத்தருளும் (பரலோகத்துக்காக ஜெபித்தான்)

*மத் 10:32,33 இயேசுவை அறிக்கைச் செய்தான் பரலோகம் கிடைத்தது.



இடதுபுறத்துக் கள்ளன்:

 பெயர் – ஹெஸ்பாஸ்

1.லூக்கா 23:39 - இயேசுவை நீ என்றான். [இயேசுவை தன்னுடைய அடிமையைப் போல நினைத்தான்)  

*மத்தேயு 26:62 பிரதான ஆசாரியனும் இயேசுவை நீ என்றான்.

2.லூக்கா 23:39 கிறிஸ்துவானால் (இயேசுவோ என்று சந்தேகப்பட்டான்)

 *மத் 14:31 ஏன் சந்தேகப்பட்டாய்.

3.லூக்கா 23:39 உன்னையும் [இயேசுவை அவமரியாதை செய்தான்) 

*மத்தேயு 26:61 இவன் சொன்னான் என்றார்கள் (இயேசுவை)

4.லூக்கா 23:39 இரட்சித்துக்கொள் (இரட்சிப்பைக்குறித்தும் கிண்டல் செய்தான்) 

 அப் 16:17 குறிசொல்லுகிற பெண் பவுலையும் கிண்டல் பண்ணினாள்.

5.லூக்கா 23:39 இகழ்ந்தான் (இயேசுவைத் திட்டினான்) 

*மத்தேயு 26:74 பேதுருவும் இயேசுவைத் திட்டினான்.






Tuesday, 28 February 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -102 || சிலுவையும் காடியும் ||

அறிந்து கொள்வோம்

பகுதி -102


சிலுவையும் காடியும் 


சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்குக் காடி கொடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஆனால், எத்தனை முறை கொடுக்கப்பட்டது? எப்போது கொடுக்கப்பட்டது? எப்படி கொடுக்கப்பட்டது? என்கிற குழப்பம் அநேகருக்கு உண்டு. இயேசுவுக்கு மூன்று முறை காடி கொடுக்கப்பட்டதாக வேதம் விவரிக்கின்றது. அதைத் தெரிந்துக்கொள்வோம்.

1.மாற்கு 15:23  - சிலுவையில் அறைவதற்க்கு முன்: 

முக்கிய குறிப்பு: வெள்ளிப்போளம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்கக் கொடுக்கப்படும் பாணம். ஆனால், கிறிஸ்துவோ முழு வேதனையையும் சகிக்கும்படி அதை ஏற்கவில்லை.

2.லூக்கா 23:36 - சிலுவையில் மத்தியானத்திற்கு முன்:

முக்கிய குறிப்பு:

இது படைவீரர்கள் கிறிஸ்துவை ராஜா என எள்ளி நகையாடி கொடுத்தது. அக்காலத்தில் அரசர்கள் பதவி ஏற்றவுடன் மரியாதை நிமித்தம் இனிய பானம் வழங்குவதைப்போல இயேசுவுக்குக் கொடுத்து, நீ யூதரின் ராஜாவானால் இரட்சித்தக்கொள் என்று கிண்டல் செய்தனர் (லூக் 23:36). சிலுவையின் இரண்டாவது வாரத்திற்கு முன்பு இது நடந்தது (லூக் 23:43).

அதன் பின்பு பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அந்தகாரம் உண்டானது.

 (மாற் 15:33).

3.யோவான் 19:29,30,மாற்கு 15:36 - சிலுவையில் மத்தியானத்திற்குப் பின்:

முக்கிய குறிப்பு:

சங்கீதம் 69:21; 22:15 போன்ற வேத வசனங்களின் நிறைவேறுதலாக இயேசு கூறியபோது, ​​பஞ்சில் தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டிக்கொடுத்தனர். கிறிஸ்து அதை சுவைத்தபின் முடிந்தது என்றார். சிலுவையில் நான்காவது வார்த்தைக்குப் பிறகு (மாற் 15:34).ஐந்தாவது வார்த்தையைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.






காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...