கானானியர்(ன்) || அறிந்து கொள்வோம் || பகுதி 107 ||

அறிந்து கொள்வோம்

பகுதி 107

கானானியர்(ன்)

(CANAANITES) என்னும் எபிரெய பெயருக்கு “வைராக்கியம்/பொறாமை” "zealous" என்று பொருள்.பாலஸ்தீன தேசத்தை இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரிப்பதற்கு முன்பாக அங்கு கானானியர்கள் குடியிருந்தார்கள்.கி.மு. 2000-ஆவது வருஷத்திற்கு முன்பாகவே கானானியரும், எமோரியரும் கானான் தேசத்தில் குடியிருந்தார்கள்.இந்த தேசத்தில்நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள் அவர்களுடைய அக்காலத்து நாகரீகத்தை விளக்குகிறது.

பழங்காலத்து கானான் தேசத்தில் ஆத்சோர், மெகித்தோ, பெத்ஷான், எரிகோ, எபூஸ், தெபீர், லாகீஸ், ஆராத் ஆகிய இடங்களில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்துடன் கானான் தேசத்தின் வடக்குப் பகுதியிலுள்ள பிப்லோஸ், உகாரித் ஆகிய இடங்களிலும் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இவை மத்தியதரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. கி.மு. 2100-முதல் கி.மு 1550 வரையிலும் கானானியரின் நாகரிகம் சிறந்து விளங்கிற்று. விவசாயம் பண்ணுவதில் கானானியர்கள் சிறந்தவர்கள். தங்களுடைய மொழியை ஆப்பெழுத்துக்களால் எழுதினார்கள். அவர்களுடைய தேசத்தில் அரணிப்பான

பட்டணங்கள் இருந்தன. சில பட்டணங்கள் மாநிலங்களாகவும் இருந்தன. அந்தப் பட்டணங்களுக்கென்று இராஜாக்களும் சேனைகளும் தனித்தனியாக இருந்தார்கள்.யோசுவா யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்தின் மீது யுத்தம் பண்ணி, கானான் தேசத்தை சுதந்தரித்த பின்பு கானானியரின் வரலாறு முடிவுபெற்றது. 

இஸ்ரவேல் புத்திரர்கள் தேவனுடைய உடன்படிக்கையின் ஜனங்கள். கானானியர்கள் இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்வில் பல நன்மையான காரியங்களையும் பல தீமையான காரியங்களையும்

செய்திருக்கிறார்கள்.பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கானானியரின் மார்க்கம் மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் பல தெய்வங்களை வழிபட்டார்கள். பல பண்டிகைகளையும் ஆசரித்தார்கள்.

அவர்களுடைய மார்க்கத்தில் பல பூஜாசாரிகளும் இருந்தார்கள். பல்வேறு இடங்களில் அவர்களுடைய விக்கிரகாரதனை நடைபெற்று வந்தது. தங்கள் தெய்வங்களுக்கு பெரிய கோவில்களை கட்டினார்கள்.


பழைய ஏற்பாட்டில் பாகால் (எண் 22:41) பாகால்கள் (ஓசி 2.13,17) பாகால் பேயோர் (எண் 25:35) ஆகியவற்றைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றுடன் அசேரா

(1இராஜா 18.19) அஸ்தோரேத் (1இராஜா 11:5,33) அஸ்தோரேத்துக்கள் (நியா 2:13)

ஆகியவற்றைப் பற்றியும் பழைய ஏற்பாடு குறிப்பிடுகிறது.

அவர்களது விக்கிரக ஆராதனையும், பலிகளும், அவர்களை வெறுக்க, இஸ்ரவேலர்களுக்கு காரணமாக அமைந்தது.வேதாகம ஆசிரியர்கள் கானானியரின் தெய்வங்களை கடிந்து கூறியிருக்கிறார்கள். வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் (கானானிய தெய்வங்கள் தவிர மேலும் அநேக தெய்வங்களின் பெயர்கள் உகாரீத் எனும் இலக்கியங்களில் காணப்படுகிறது.)

யோசுவா கானான் தேசத்தை சுதந்தரித்தபோது, கானான் தேசத்திலிருந்த கானானியர்கள் அனைவரையும் அவர் அந்த தேசத்திலிருந்து துரத்தி விடவில்லை.

கானானியரில் பலர் அந்த தேசத்திலேயே தொடர்ந்து குடியிருந்தார்கள். அவர்களுடைய

விக்கிரகாரதனை இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு சோதனையாக இருந்தது. ஆகையினால்

யோசுவா இஸ்ரவேல் ஜனத்தாரிடம் இவ்வாறு கூறுகிறார். “அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நியதேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள்” (யோசு 24:23).

புதிய ஏற்பாட்டில் ஒரு கானானிய ஸ்திரீ ஆண்டவராகிய இயேசுவை தேடி வருவதை பார்க்க முடியும். முதலாவது ஆண்டவர் இயேசு கிறிஸ்து அந்த ஸ்திரீயை புறக்கணிப்பது போல தோன்றினாலும், அந்த ஸ்திரீயின், பெரிய விசுவாசத்தை வெளிப்படுத்தும்படி காரியங்கள் நடந்தன. அற்புதம் நடந்தது!

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: *ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். (மத்தேயு 15:28)


"தன்னை நாடி வரும் ஒருவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து புறம்பே தள்ளுவதில்லை!!!


Notes taken from Sasi Kumar 




Post a Comment

1 Comments

  1. Very good text. Thank you for good information...

    ReplyDelete