Monday, 27 February 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -101 || சிலுவையின் நிலை ||

அறிந்து கொள்வோம்

பகுதி -101


சிலுவையின் நிலை

(கொலோ 2:15 )



✝️சிலுவையானது 7 அல்லது 7.5 அடியாக இருந்துள்ளது. ஏனெனில் யோவா 19:29 ன் படி இயேசுவுக்குத் தாகம் உண்டானபோது 1 அல்லது 2 நீளம் மட்டுமேயுள்ள ஈசோப்புத் தண்டில் புளித்த திராட்சைரசத்தில் ஊறின கடற் பஞ்சை பொருத்தின ஒருவன் அதை இயேசுவின் வாய்க்கு அருகே நீட்டினான் என்பதிலிருந்து, சிலுவை தரையில் நாட்டப்பட்டப் பின்பு, ஒரு ஆள் உயரத்திற்கும் சற்று உயர்வாகத்தான் இருந்திக்கும்.


✝️ஒரு முழுமையான சிலுவை என்பது நான்கு விதங்களில் இணக்கப்படும். 

1.நெடுமரத்தின் நுனியில் குறுக்கு மரத்தை இணைத்தல்.

2.சற்று கீழே இறக்கி இணைத்தல்.

3.சரியாக நடுவில் இணைத்தல்.

4.நடுபாகத்தில் பொருத்தி கூட்டல் (t) குறி போன்று, அல்லது பெருக்கல் (x) குறி போன்று வைப்பார்கள்.

✝️சில சிலுவைகளில் கை மற்றும் கால்களில் அடிக்கப்படும் ஆணிகள் ஊடுறுவுவதற்க்காக ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும்.

✝️சிலுவை என்பது இரண்டு மரத்துண்டுகளால் ஆனது. அவை, ஒன்று: நெடுமரம், இரண்டு: குறுக்கு மரம் என்றும் சொல்லப்படும்.

✝️இயேசுவின் சிலுவை ஒருபோதும் பாலீஸ் செய்யப்பட்டது கிடையாது. அது கரடுமுரடாகத்தான் இருந்திருக்கும். காரணம், அக்காலத்தில், இயேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களும், சிலுவையில் அறைய கட்டளையிட்ட ரோமர்களும் முரடர்களாகத்தான் காணப்பட்டனர்.

✝️ஒரே சிலுவையில் அடிக்கடி அநேகரை அறையும் பழக்கமும் இருந்தது. அதை யாரும் சுத்தம் செய்யாததினால் அது எப்பொழுதும் அசுத்தமாகவும், இரத்தக்கரைகளோடும், நாற்றமெடுக்கக் கூடியதாகவும் இருந்துள்ளது.

✝️சிலுவையில் தொங்குபவரின் முழு எடையையும் அவர்களின் கைகளே தாங்கும் நிலை உருவாவதால் மூச்சுத்தினறலும், சோர்வும், நீரிழப்பும் ஏற்படுவதுடன் இரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். நிர்வாண நிலையில், நெஞ்சடைத்து தாகம் ஏற்படும். ஏதோ சில வார்த்தைகளை சொல்ல விரும்பியும் சொல்ல முடியாமல் சாவு என்னும் மரணத்துடன் போராடுவதே சிலுவை தண்டணையின் உச்சக்கட்ட வேதனையாகும்.

✝️சிலுவையின் மரணம் வழங்கப்படும் இடம் எழும்புகளும், எழும்புக் கூடுகளும், மண்டையோடுகளும், இரத்தக்கரைகள் நிறைந்ததும், ஊருக்கு அப்பால் உள்ள இடமுமாயிருக்கும்.

✝️சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் பொதுவாக அதிலேயே தொங்கிக்கொண்டிருக்கும். அவற்றைத் தின்ன பறவைகள், எலிகள், இன்னும் வேதம் சொல்வதுப் போல சில நேரத்தில் பெரிய பெரிய கழுகும் வந்து தின்னும்.(ஆதி 40:19).

✝️பெருபாலும் மரணத்தண்டனை குற்றவாளிகளின் கழுத்தில் ஒரு பலகையைத் தொங்கவிட்டு, ஊர்வமாக அழைத்துச் செல்வார்கள். அதில் இவன் என்னைக் குற்றத்திற்காக மரணத்தண்டணை அடைந்தான் என்றக் காரணம் எழுதப்பட்டிருக்கும்.

ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தப்பின்னர் தான் பிலாத்துவின் உத்தரவு போர்வீர்களுக்குக் கிடைத்தது(மத் 27:37). அதனால், இயேசுவின் கழுத்தில் பலகை தொங்கவிடப்படவில்லை.

✝️கடந்த காலங்களில் மரணத்தண்டணை மூன்று விதங்களில் தனித்தனியாக வழங்கப்பட்டது;

1.கல்லெறிந்து கொள்ளப்பட்டனர்கள்.

(யோசு 7:25,26). 

2.உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டனர்கள்.

 (சங் 106:18; வெளி 17:16).

3.மரத்திலே தொங்கவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். 

(எஸ்த 2:23; ஆதி 40:19.


✝️கொல்கொதா மலையில் இரண்டு மரத்துண்டுகளையும் இணைத்து இயேசுவைக் கிடத்தி, கால்களைக் கயறு கொண்டு கட்டினப் பின்பு, முதலில் ஒரு கையில் ஆணி அடித்தபோது, சிலுவையின் ஓட்டை வழியே அந்த ஆணி மறுபக்கம் வந்திருக்கும். அடுத்தக் கையில் ஆணி அடிக்க ஓட்டை பொருத்தமாயிராமல் இருக்குமானால், இயேசுவின் கையில் கயறு கட்டி உடலின் மீது ஒரு காலை வைத்து மிதித்துக் கொண்டு கயிற்றை பிடித்து இழுத்து ஓட்டைக்கு நேராக வைத்து மற்றொறு கையில் ஆணியைஅடித்திருப்பார்கள்.

இப்படி கயறு கட்டி இழுப்பதால் தோல்பட்டையின் உள்பகுதிகள் கிழிந்து போகும். அதனால் இன்னும் வேதனை கடுமையாயிருக்கும். அதனால் ஆணிகள் அறைந்த பின்பு,சிலுவையை புறட்டிப்போட்டு, ஆணிகளை வலைத்து விடுவார்கள். அந்நேரத்தில் இயேசுவின் முதுகின் மீது பாரமான மரச்சிலுவை அழுத்திக்கொண்டிருந்திருக்கும்.


✝️எழும்புத்துண்டுகளையும், இரும்பு குண்டுகளையும், இரும்பினாலான கொக்கிகளையும் இடை இடையே இணைத்துப் பிண்ணப்பட்டிருந்த சவுக்கினால் இயேசுவை அடித்திருந்தனர். அப்படி கொடூரமான முறையில் அடித்திருந்ததால் அவரின் தோல் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. இப்படி மகாகொடிய காயத்தோடுதான் இயேசு சிலுவையை சுமந்துக் கொண்டு போனார்.


✝️பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கொல்கொதா மலை வரைக்கும் சிலுவையை தூக்கிக் கொண்டுப் போகும்போது வழியில் மூன்று விசை இயேசு தடுமாறித் தள்ளாடினதாக வரலாறு சொல்லுகிறது.


✝️இந்த இயேசுவைக் கண்டு நாம் பரிதாபப்பட்டு அழ வேண்டும் என்பதற்க்காக அவர் பாடுபடவில்லை. மனிதகுலம் அணைத்தும் பரலோகம் வந்து சேர வேண்டும் என்பதற்க்காகவே அவர் பாடுபட்டார்.


✝️சிலுவை என்பது இயேசுவின் மரணக் கருவியாகவும், கிறிஸ்த்தவர்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.


✝️சிலுவையில் அறையப்பட்ட இயேசு என்று சொல்லி, படத்தை வரைகிறவர்கள் அதையும் அழகாகவே வரைந்து வைத்திருக்கிறார்களே ஏன்? என்று கேள்வி கேட்டபோது, இயேசுவின் மேலுள்ள அன்பினால் என்று சொன்னால் அது பொய் என்று புறிந்துக் கொள்ள வேண்டும்…




 


Friday, 24 February 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -100 || டெஃபிலின் (Tefillin)

 

அறிந்து கொள்வோம்

பகுதி -100


டெஃபிலின்

(Tefillin)

யூதர்கள் ஜெப வேளையில் பயன்படுத்தும் எபிரேய காகித தோல் சூருள்களைக் கொண்ட ஒரு ஜோடி கருப்பு தோல் பெட்டிகள் தான் இவை. இந்த சின்ன பெட்டிக்குள் தோராவின் வார்த்தைகள் அல்லது தேவனுடைய நியாயப்பிரமாண வார்த்தைகள் காகித துண்டில் எழுதி வைக்கப்பட்டு இருக்கும்.

✝️பெட்டிக்குள் இருக்கும் தேவனுடைய வார்த்தைகள் இவை:-

🔯யாத்திராகமம் 13:1-10,

🔯யாத்திராகமம் 13:11-16,

🔯உபாகமம் 6:4-9,

🔯உபாகமம் 11:13-21,

கையில் கட்டப்படும் பெட்டிக்கு (Shel yad)என்றும் தலையில் கட்டப்படும் பெட்டிக்கு (Shel rosh) என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். கை மற்றும் தலையைச் சுற்றி இதை அணிந்து ஜெபிக்கும் போது தங்களுடைய சிந்தனைகள் மற்றும் இருதயத்தை ஒன்றாக இணைப்பதாக கருதுகிறார்கள்.


🔯டெஃபிலினை பயன்படுத்தும்

முறைகள்:

ஒவ்வொரு யூதனும் தங்களுடைய காலை ஜெபத்தின் போது இந்த டெஃபினை அணிந்து ஜெபிப்பது அவர்களின் தலையாயக் கடமையாய் இருக்கிறது. இதை வாரத்தின் ஆறு நாட்களும் தங்களின் காலை ஜெப வேலைகளில் அணிந்து ஜெபிக்கிறார்கள். குறிப்பாக ஓய்வு நாள் மற்றும் பண்டிகை நாட்களில் அவர்கள் இதை பயன்படுத்துவதில்லை.

பெட்டியின் மேல் பகுதியில் ஷிப் என்கிறதான எபிரேய எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு பெட்டி மூன்று கிளை நாடாங்களுடன் மற்றொன்று நான்கு கிளை நாடாங்களுடன் இருக்கும்.


முதலில் தங்களின் ஜெப ஆடைகளை அணிந்த பிறகு தங்களின் டெஃபின் பெட்டியை எடுத்து வைத்துக்கொண்டு முதலில் தலையில் கட்டப் போகும் Shel rosh என்கிறதான பெட்டியை எடுத்து முத்தம் செய்த பிறகு கையில் கட்ட வேண்டியதான Shel yad என்ற பெட்டியை தங்களின் இருதயத்திற்கு அருகில் இருக்குமாறு தங்கள் கைகளில் கட்டி பின்பு நாடாவை கைகளில் சுற்றுவதற்கு முன்பு ஒரு ஜெபம் இப்படி செய்வார்கள்.

ஜெபம்:-

 எங்கள் தேவனே! இந்த முழு உலகத்தை ஆளுகிறவரே! உம்முடைய தெய்வீக கட்டளைகளால் எங்களை பரிசுத்தப்படுத்தி இந்த அணியும் படி எங்களுக்கு கட்டளை கொடுத்து, அருள் செய்ததற்காக உம்மை துதிக்கிறோம். ஆமென்.

இந்த ஜெபத்திற்குப் பிறகு தலையில் அணியக்கூடிய பெட்டியை சரியாக கண்ணுக்கு நடுவில் இருக்குமாறு அதை அணிந்து அதில் நாடாவை பின்னாக விட்டு விடுவார்கள். பின்பு கையில் கட்டப்பட்ட டெஃபிலினின் நாடாவை ஷின் என்ற எபிரேய எழுத்தின் உருவம் வரும்படி கட்ட வேண்டும். பின்பு ஏழு முறை முழங்கையில் அதை சுற்ற வேண்டும் இதை பொதுவாக குத்து விளக்கு கிளைகளை குறிக்கிறதாக சொல்லுகிறார்கள். அந்த நாடாவை கட்டுவதற்கு முன்பு ஒரு ஆசீர்வாதம் வார்த்தைகள் உண்டு, அதை சொன்ன பிறகு நடு விரலில் அதை மூன்று முறை கட்டுவார்கள்.மீதி இருக்கிறதை விரல்களில் சுற்றிக் கொள்வார்கள் இந்த நடு விரலில் கட்டுவது தேவனோடு உள்ள உடன்படிக்கையை அல்லது இணைப்பை கட்டுவதாக சொல்லப்படுகிறது. இதை கட்டி முடித்ததற்கு பின்பு தான் அவர்கள் ஜெபிப்பார்கள்.

தலையில் கட்டப்பட்ட பெட்டியின் பின்பகுதியில் டாலெத்- ד-dalet) என்கிற எழுத்து வடிவத்தையும் கைகளில் ஷின் -Shin ) வடிவத்தையும் விரல்களிலே சுற்றப்பட்டது Ayin என்கிறதான எபிரேய எழுத்துக்களையும் சொல்லுகிறது என்றும் இது el shaddai என்கிற தேவனின் நாமத்தை சொல்லுகிறதாக அவர்கள் கருதுகிறார்கள்.

🔯என் இதை பயன்படுத்தி ஜெபிக்கிறார்கள்:

🌾தேவனுடைய அன்பை நினைவு கூற வேண்டும் என்பதற்காக

🌾தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய வேண்டும் என்பதற்காக,

🌾தேவனுடைய நியாயப்பிரமாணங்களாகிய 613 வார்த்தைகளை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக,

🌾தலையில் மூளைக்கு அருகில் அதை கட்டுவதால் தேவனுடைய வார்த்தைகளை எப்பொழுதும் சிந்தையில் கொண்டிருக்க வேண்டும் என்ற அடையாளத்திற்காக,

🌾 இந்த டெஃபிலினை அணிந்து ஜெபிக்கிற பொழுது தேவன் அவர்கள் அருகில் இருக்கிறதாக உணர்கிறார்கள்.





Notes Taken from 

Brother yakkov Ben Avraham




அறிந்து கொள்வோம் - பகுதி -99 || சிலுவையின் துவக்கம் ||

 

அறிந்து கொள்வோம்
பகுதி -99

சிலுவையின் துவக்கம்



A.சிலுவை என்பது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கிறிஸ்தவ காலத்திற்கும் முந்தினக் காலத்திருந்தே ஒரு மத சம்பந்தமான அடையாளச் சின்னமாக ஏறக்குறைய உலகலாவிய விதத்தில் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது என்று சரித்திரத்தின் மூலம் கருதப்படுகின்றது.

B.சிலுவை என்ற இந்தச் சொல் ‘லத்தின்’ மொழியின் சொல்லான “க்ரக்ஸ் (crux)” என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ஆதலால் இதை “குருக்ஸ் என்றும், “குரூஸ்” என்றும், அழைப்பார்கள்.

C.வெகு காலத்திற்கு முன்பே கிரேக்கர்களின் "பாக்கஸ்"
 தீரு தேசத்தாரின் “தம்மூஸ்’, கல்தேயரின் “பெல்”, ஸ்காண்டினேவியரின் ‘ஓடின்” போன்ற விக்கிரகங்களின் அடையாளச் சின்னமாகவும் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது.

D.சிலுவை என்ற வார்த்தையைச் சொல்ல, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் “ஸ்டாரஸ்” என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். “ஸ்டாரஸ்” என்ற வார்த்தையானது "செங்குத்தானக் கம்பம்" அல்லது "கழுமரம்' என்பதைக் குறிக்கிறதாகும்.

E.தி இம்சீரியஸ் பைபிளின்-அகராதி சிலுவையை "கழுமரம்" என்று சொல்வதை ஒப்புக்கொள்ளகிறது.









Thursday, 23 February 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -98 || சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள் ||

அறிந்து கொள்வோம்

பகுதி -98

சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள்:


அவரை இருவகை குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தினர். ஒன்று மதசம்பந்தமானது. இன்னொன்று அரசு சட்ட சம்பந்தமானது. 


மதத்தின் தொடர்பில் மூன்று விசாரணைகள்


1.அன்னா, 2.காய்பா, ஆகியோர் முன், 

3.சனகெரிப் சங்கம் முன்,


அரச சட்ட சம்பந்தமான விசாரணைக்கள்.


1. பிலாத்து, 2.ஏரோது, 3.மீண்டும் பிலாத்து முன்பு.


அன்னாவும், காய்பாவும், பிரதான ஆசாரியர்களாகக் கூறப்படுகின்றனர். இஸ்ரவேலில் ஒருதடவை ஒரு பிராதன ஆசாரியர்தான் இருக்க முடியும். ஆனால் கால ஒட்டத்தில் ஆண்டவரைவிட்டு அரசியல் கலந்த மதமாக அது மாறியதால் இத்தகைய நிலை ஏற்பட்டது. (மத் 26:57-68; மாற் 14:53-65; லூக் 22:54,63-65: யோவா 18:13-24)


இருவர் முன்பும் விசாரிக்கப்பட்ட பின்பு யூதர்களின் நீதிமன்றமாக கருதப்பட்ட

 70 பேர் அடங்கிய ஆலோசனைச் சங்கத்திற்குக் கொண்டு செல்ல ப்படுகிறார்.அங்கும் விசாரனை நடக்கிறது.

 (மத் 27:1; மாற் 15:1; லூக் 22:66-71)


அதன்பின்பு சட்ட முறையிலான விசாரணைக்காக பிலாத்துவின் முன்பு கொண்டு செல்லப்படுகிறார். ஆலோசனைச் சங்கத்தில் மரண தண்டனையை தீர்ப்பளித்தாலும் ரோம அரசாங்க ஆளுநரான பிலாத்துவின் அனுமதியிருந்தால் தான் நிறைவேற்றமுடியுமென்பதால் அவரிடம் கொண்டு செல்கின்றனர். அரச துரோக குற்றமும், சமூக சமாதானத்தைக் குலைத்தார் என்ற குற்றமும் சாட்டப்பட்டன. அவர் முன் கிறிஸ்து தமது இராஜ்யத்தின் இருப்பிடத்தை விளக்கினார். ரோம சட்டப்படி இயேசு குற்றவாளியல்ல என்று தீர்ப்பிட்டார் பிலாத்து (மத் 27:2, 11-14; மாற் 15:1-5; லூக் 23:1-5; யோவா 18:28-38).


அதன் பின்பு தேவையின்றி அவர் ஏரோதின் முன்பு அனுப்பப்பட்டார். இந்த ஏரோதுதான் தமது சகோதரனின் மனைவியான ஏரோதியாளை மனைவியாக்கியபோது யோவானால் குற்றஞ்சாட்டப்பட்டவரும் யோவானின் தலையைப் பரிசாக்கியவரும் ஆவார்.


பிலாத்து இயேசுவை கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டதால் ஏரோதிடம் அனுப்பி, தம்மை அந்த பழியிலிருந்து விலக்க நினைத்திருக்கலாம் (லூக் 23:7-12). மேலும் அந்த செய்கையால் முன்பு தாம் செய்த ஒரு குற்றத்துக்கு ஏரோது தம்மிடம் கொண்டிருந்த பகையை நீக்கிக் கொண்டார்.


மீண்டும் பிலாத்துவின் முன்பு விசாரணை, சூழ்நிலைக்கு முன் குற்றமற்றவரை குற்றவாளியாக்கினார் பிலாத்து. தற்பாதுகாப்பை எண்ணிப்பயந்து நீதிமானை சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பளித்தார். 

(மத் 27:15-26; மாற் 15:6-15: லூக் 23:13-25; யோவா 18:39-19:6)


நியாயமற்ற விசாரணைகள்:


கிறிஸ்துவின் குற்ற விசராணைகள் பலநிலையிலும் நியாயமற்றவையாக இருந்தன.


1.குற்றம் செய்தவரைப் பிடித்து விசாரிப்பதே நியாயம். ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டு குற்றம் தேடுவது அநியாயம்.

 (யோவா 11:50; மாற் 14:1; 14:55)


2.பொய்சாட்சிகளை ஏற்படுத்தினர்.

 (மத் 26:61)


3.குற்றவாளியின் சொற்கள் கவனிக்கப்படவில்லை. (லூக் 22:67-71)


4.ஆலோசனைச் சங்கம் இரவில் கூடியதே அவர்களது சட்டப்படிதவறு.

 (மத் 26:63-66)


5.பிரதான ஆசாரியனை ஆணையிட வைத்து, அந்த ஆணையைக் கொண்டு தீர்பிட்டது அநியாயம் (மத் 26:63-66)


6. ஆலோசனைச் சங்கம் கூடிய இடம் பிராத ஆசாரியனின் வீடு. முறைப்படி தேவாலயத்துடன் இணைந்திருக்கும் நீதிமன்ற அறையில் கூடிதான் தீர்ப்பிட வேண்டும் (லூக் 22:54).



அவர் குற்றமற்றவரே:


1.குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன். (மத் 27: 4 - யூதாசு)


2.நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்.

(மத் 27:19 – பிலாத்துவின் மனைவி)


3.இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை 

(லூக் 23:4 – பிலாத்து)


4. பாவமறியாதவர்.

(2கொரி 5:21– பவுல்)


5.அவர் பாவஞ் செய்யவில்லை.

 (1பேது 2:22-பேதுரு)


6.அவரிடத்தில் பாவமில்லை.

 (1யோவா 3:5 – யோவான் ) 





 


Wednesday, 22 February 2023

அறிந்து கொள்வோம் பகுதி -97 || சிலுவையில் ஒரே நாளில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் ||

அறிந்து கொள்வோம்

பகுதி -97

சிலுவையில் ஒரே நாளில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்:


✝️சங் 41:9 - காட்டிக்கொடுக்கப்படுவார் (மத் 10:4; 26:49,50)


✝️சகரியா 11:12,13 -முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார்

( மத் 26:15)


✝️சகரியா 11:13 -அந்தக் காசு தேவாலயத்தில் எறியப்படும்.

( மத் 27:5)


✝️சகரியா 11:13 -அந்தக்காசினால் குயவன் நிலத்தை வாங்குவர்.

( மத் 27:7)


✝️சகரியா 13:7 - சீடர்களால் கைவிடப்படுவார்.( மாற் 14:50)


✝️சங்கீதம் 35:11 - பொய்க் குற்றம் சாட்டப்படுவார்.( மத் 26:59,60)


✝️ஏசாயா 53:7 -குற்றம் சாட்டப்படும்போது மௌனமாக இருப்பார்.( மத் 27:12)


✝️ஏசாயா 53:5 - காயப்படுத்தப்படுவார் (யோவா 20:25)


✝️ஏசாயா 50:6 - அடிக்கப்படுவார். துப்பப்படுவார்.( மத் 26:67)


✝️மீகா 5:1- கன்னத்தில் அடிக்கப்படுவார். (மாற் 14:65)


✝️சங்கீதம் 22:7,8 -பரியாசம் பண்ணப்படுவார். (மத் 27:31)


✝️ சங்கீதம் 109:24,25 - மிகவும் தள்ளாடுவார்.(யோவா 19:17; லூக் 23)


✝️சங்கீதம் 22:16; சகரியா 12:10

 கரங்கள் துளைக்கப்படும்.(லூக் 23:33)


✝️ ஏசாயா 53:12- அக்கிரமக்காரருடன் தீர்ப்பிடப்படுவார், அக்கிரமக்காரருக்காகவும்

வேண்டுதல் செய்வார்.

( மத் 27:38 லூக் 23:34)


✝️ஏசாயா 53:3 -சொந்த மக்களால் கைவிடப்படுவார்.( யோவான் 7:5,48) 


✝️ சங்கீதம் 69:4 காரணமின்றி பகைக்கப்படுவார். (யோவான் 15:25) 


✝️சங்கீதம் 38:11- நண்பர் தூரமாவர். (லூக் 23:49 )


✝️ சங்கீதம் 109:25 -மக்கள் தலைகளைத் துலுக்குவர்கள்.( மத் 27:39 )


✝️ சங்கீதம் 22:17- அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பர்.(லூக் 23:35) 


✝️சங்கீதம் 22:15- உடைக்காக சீட்டிடுவர்.

(யோவா 19:23,24)


✝️சங்கீதம் 69:21 -தாகமாயிருப்பார் (யோவான் 19:28) 


✝️சங்கீதம் 69:21 -காடியைக் குடிக்கக் கொடுப்பர். (மத்தேயு 27:34)


✝️சங்கீதம் 22:1 -அவரது கதறல் கேட்கப்படவில்லை. (மத்தேயு 27:46)


✝️சங்கீதம் 31:5 - பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்படைப்பார். (லூக்கா 23:46)


✝️சங்கீதம் 34:20 - எலும்புகள் முறிக்கப்படாது.( யோவான் 19:33)


✝️சங்கீதம் 22:14 - இருதயம் உடைந்தவராவார்.( யோவா 19:34)


✝️சகரியா 12:10- குத்தப்படுவார்.

( யோவான் 19:34)


✝️ ஆமோஸ் 8:9 -அந்தகாரம் தோன்றும் (மத் 27:45)


✝️ ஏசாயா 53:9 - ஐசுவரியவானாக அடக்கம் பண்ணப்படுவார்.(மத் 27:57-60)





Wednesday, 4 January 2023

மிஷனெரிகளின் வாழ்விலிருந்தது || I.R.H. ஞானதாசன் ||

மிஷனெரிகளின் வாழ்விலிருந்து……

பகுதி -1


I.R.H. ஞானதாசன்




மிஷனெரி தாகத்தை ஏற்படுத்துவோம்


ஓய்வு நாள் பள்ளி பிள்ளைகள் வசனத்தைக் கேட்பதிலும், செயல்படுத்துவதினும் அதிக வாஞ்சை உள்ளவர்கள்; கற்றுக் கொண்டதை செயல்படுத்த துடிப்பவர்கள்.


பேராயர் I.R.H.ஞானதாசன் இச்சிறுவர்களை தம் ஊழியத்தில் பயன்படுத்திய விதம் அனைவருக்கும் சிறந்த எடுத்துகாட்டாகும். அவர் ஓய்வு நாள் பள்ளிக்கூடத்தில் உள்ள "பிரைமரி" பிள்ளைகளுக்கு  "மிஷனெரி டேமியன் குடும்பம்" என்று பெயரிட்டார். இந்த பிள்ளைகள் தொழுநோயாளிகளை  தாங்கினர்கள்.குளச்சல் பகுதியில் உள்ள தொழுநோய் இல்லம் இவர்களால் குதூகலமானது.


"ஜூனியர்" மாணவர்களுக்கு "மிஷனெரி சத்தியா குடும்பம்" என்று பெயரிட்டார். இவர்கள் "பாப்புவா தீவில்" நடைபெற்ற ஊழியத்தை தாங்கி உற்சாகப்படுத்தினர்கள்.


"சீனியர்"மாணவர்களை “மிஷனெரி லீச் குடும்பம்" என்று அழைத்தார். இவர்கள் "நெய்யூர் மிஷன்"பணியை வளரச் செய்தனர்கள். 


இப்படி சிறுபருவத்திலேயே குழந்தைகளுக்கு மிஷனெரி தாகத்தை ஏற்படுத்தியவர் இந்த பேராயர் ஞானதாசன். பிள்ளைகளை நடக்க வேண்டிய வழியில் நடத்திக் காட்டினார்.

இவர் 18/04/1915 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் திட்டுவிளை  என்ற இடத்தில் பிறந்தார்.16/07/1973 ஆம் ஆண்டு மாரித்தார்.


1959ம் வருடம், திருவிதாங்கூர் பேராயம் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டபோது, குமரி திருச்சபையின் முதல் பேராயராக தனது 44வது வயதில் அபிஷேகம் செய்யப்பட்டார். இவர் பிரிவினைகளை அழித்து ஐக்கியத்தை உருவாக்கினார். ஒற்றுமையை நிலை நிறுத்தினார்.


1972 ம் ஆண்டு தென்னிந்திய திருச்சபைகளின் பிரதமப் பேராயராகவும் உயர்த்தப்பட்டார்.


வீண் ஆடம்பரம் இல்லாதவர், எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர், சமுதாய அக்கறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். காது கேளாதவர். பார்வையற்றவர் போன்றவர்களுக்கு பள்ளிகளை ஏற்படுத்தினார். இவருடைய காலம் திருச்சபைகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.


மிஷனெரிப் பணியின் தாகம்  நமக்குள் கொழுந்துவிட்டு எரிய வேண்டும்….


"நான் பணி செய்யும் இடமும், என் ஊதியமும் கடவுள் நிர்ணயிப்பவை. அதில் என் சுயசித்தத்திற்கு இடம் இல்லை" என்று சொன்னவர் இவர்.






Monday, 31 October 2022

கத்தோலிக்க சபைக்கு எதிராக மார்ட்டீன் லூத்தர் எழுதிய 95 காரியங்கள் ||அறிந்து கொள்வோம் பகுதி -96 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -96


கத்தோலிக்க சபைக்கு எதிராக

மார்ட்டீன் லூத்தர் எழுதிய 95 காரியங்கள்


October 31 Reformation Day - 1571

Martin Luther 95 Theses


இதோ….….


1️⃣மனிதன் தினமும் செய்யும் பாவத்திற்கு தேவன் அனுதினமும் மனஸ்தாபப்படுகிறார்.


2️⃣பாதிரியார்கள் பாவமன்னிப்பு அளிக்க அனுமதி இல்லை. 


3️⃣பாவமன்னிப்பு உடலை வருத்திக் கொள்வதால் பெறமுடியாது.


4️⃣உள்ளான மனம் வருந்துதல் நம்முடைய வெளிப்படையான மாறுதலுக்கு வழி வகுக்கும். 


5️⃣போப்பானவருக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இல்லை. 


6️⃣தேவன் மன்னித்தால் ஒழிய போப்பானவருக்கு மன்னிக்க அதிகாரம் இல்லை.தேவ மன்னிப்பை பற்றி அறிவிக்கவே அதிகாரம் உண்டு. 


7️⃣தன்னை தாழ்த்தி மனம் திருந்தாதவனுக்கு தேவன் பாவ மன்னிப்பை அருளுவதில்லை.


8️⃣மரித்தவர்களுக்கு தேவ வெளிபடுத்துதல் (வேதம்) எவ்வித பயனும் இருக்காது.


9️⃣போப் மரணம்,ஆபத்து,என்று யாருக்கு தீர்ப்பளித்தாலும் தேவன் நம்மீது அன்புள்ளவராகவே இருக்கிறார். 


1️⃣0️⃣அறியாமையினாலே குருமார்கள் உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று மரிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு கூறுகின்றனர். 


1️⃣1️⃣உத்தரிப்பு ஸ்தலம் என்பது திருச்சபைக்கும் அதன் சட்டத்திற்கும் எதிராக விதைக்கபட்டது.


1️⃣2️⃣மெய் மனம்திரும்புதலை கண்டறியவே தேவன் தண்டனைகளை அனுமதித்தார்.


1️⃣3️⃣சபை மரித்தவர்கள் என்று தீர்ப்பு கூறினாலும் அவர்கள் மரணத்தின் வாயிலாக எல்லா தீர்ப்புகளிலிருந்து விடுதலை ஆவார்கள். 


1️⃣4️⃣தேவபக்தி அற்று வாழ்ந்தால் உடல் நலம் குறையும்போது பயம் மேலோங்குகிறது.


1️⃣5️⃣அந்த பயமே உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று நமக்கு போதிக்கிறது வேறொன்று மில்லை. 


1️⃣6️⃣பாவமன்னிப்பின் நிச்சயம் இல்லாததால் தான் நமக்கு நரகம்,உத்தரிப்பு ஸ்தலம்,மோட்சம் என்பதை குறித்து பயம் உண்டாக்கிறது.


1️⃣7️⃣உத்தரிப்பு ஸ்தலத்தில் ஆன்மாக்களின் துன்பங்கள் குறையும் என்பது பொய்யே.


1️⃣8️⃣உத்தரிப்பு ஸ்தலம் என்பது வேதவசனத்தால் நிரூபிக்கபடவில்லை.


1️⃣9️⃣உத்தரிப்பு ஸ்தலத்தில் ஒரு ஆன்மா வாழும்பட்சத்தில் நம்மை (இரட்சிக்கபட்டவர்கள்) போல் முழு இரட்சிப்பின் நிச்சயம் அவர்கள் அடைந்ததாக நிரூபிக்கபடவில்லை.


2️⃣0️⃣பரிபூரண மன்னிப்பு என்னும் போப்பின் வார்த்தை செல்லுபடி ஆகாது.


2️⃣1️⃣பாவமன்னிப்பு சீட்டு என்பது 

ஒரு மனிதனையும் இரட்சிக்காது,மன்னிக்காது.


2️⃣2️⃣உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள மரித்த ஆத்துமாக்கள் போப்பாண்டவராலோ அவரது பூசையாலோ பாதர்களின் பூசையாலோ மன்னிக்கபட்டு நித்திய வாழ்வை அடை வதில்லை.அவர்கள் இந்த பூமியில் வாழும்போது பாவ மன்னிப்பு பெறவேண்டும். 


2️⃣3️⃣பூரணமாக்கபட்ட(மனம்திறும்பிய)

பரிசுத்தவான்களுக்கு பாவமன்னிப்பு அளிக்க நமக்கு அதிகாரம் உண்டு என்று கூறுவது. 


2️⃣4️⃣இப்படிபட்ட பொய் பாவமன்னிப்பால் அனேகர் ஏமாற்றபடுகிறார்கள்.


2️⃣5️⃣போப்பாண்டவருக்கு உத்தரிப்பு ஸ்தலம் மீது எந்த அதிகாரமும் இல்லை. 


2️⃣6️⃣நல்லெண்ணத்தின் அடிபடையில் போப்பாண்டவர் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்களுக்காக வேண்டுதல் ஏறெடுக்கிறார்.ஆனால் அந்த வேண்டுதலை கடவுள் கேட்பதில்லை. 


2️⃣7️⃣காணிக்கை பெட்டியில் பணம் விழுகிற சத்தத்தின் அடிப்படையில் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்கள் விண்ணகம் செல்வதில்லை  


2️⃣8️⃣காணிக்கை பொருளாசையை பெருக வைக்கும்,பாவமன்னிப்பு தேவனால் அருளப்பட வேண்டும்.


2️⃣9️⃣புனித செவரினு,புனித பாஸ்கல் உத்தரிப்பு ஸ்தலத்தில் நீண்ட காலமாக இருக்க விரும்பினார்களா ? விலை கொடுத்து விண்ணேர.அவர்கள் விரும்பினார்கள் என்பது தவறு.


3️⃣0️⃣மனஸ்தாபம் என்பது உண்மையாது என்று எவராலும் நிச்சயமாக கூற இயலாது முழு பாவமன்னிப்பு மனஸ்தாபம் அளித்ததாக கூறவும் இயலாது. 


3️⃣1️⃣பாவமன்னிப்பு பத்திரத்தை புரிந்து கொண்டு வாங்குகிறவனை அறிவது அறிது,உண்மையான மனஸ்தாப படுகிறவனை காண்பது அறிது.


3️⃣2️⃣இப்படிபட்ட உறுதி அளிப்பவர்கள் (மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம்)ஆக்கினைக்கே உள்ளாவார்கள்.


3️⃣3️⃣இப்போதனைகளை

(மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம் )போதிக்கின்றவர்களை குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். 


3️⃣4️⃣மன்னிப்பு சீட்டு, சாத்திர மெந்துகள், பிரயா சித்தங்கள் இவை அனைத்தும் மனித ஏற்பாடுகளே.


3️⃣5️⃣மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம் என்று போதிக்கிறவர்கள் மாறுபட்ட கிறிஸ்தவர்கள்.


3️⃣6️⃣மெய் மனஸ்தாபம் உடைய எந்த கிறிஸ்தவனும் இவை (பாவமன்னிப்பு சீட்டு) இல்லாமல் பூரண மன்னிப்பை கிறிஸ்துவினால் பெற்றிட உரிமை உண்டு. 


3️⃣7️⃣இயேசுவின் மீட்பால் மட்டுமே இறந்தவர்களும் உயிரோடு உள்ளவர்களும் பாவமன்னிப்பு சீட்டு இல்லாமலே எல்லா இறையருள் பாக்கியங்கள் பெற முடியும்.


3️⃣8️⃣இந்த உண்மையை கூறுவதால் போப்பானவர் கூறும் பாவ மன்னிப்பை கேவலப்படுத்த அல்ல. அதை விட தேவவார்த்தை முக்கியம் அல்லவா.


3️⃣9️⃣மன்னிப்பு பத்திரங்களின் மகத்துவத்தை மெய் மனஸ்தாபத்தின் அவசியத்தையும் எந்த பண்டிதர்களாலும் (ஒரே நேரத்தில்) விளக்க முடியாது.


4️⃣0️⃣மெய் மனஸ்தாபம் பாவத்தின் தண்டனையில் இருந்த நம்மை காப்பாற்றவும் அப்பாவத்தை வெறுக்கவும் வழிவகை செய்கிறது.


4️⃣1️⃣மன்னிப்பு சீட்டை எதிர்க்க நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காரணம்.ஏனெனில் நற்செயல்கள் மூலம் விண் பாக்கியம் பெற முடியும் என்கிற தவறை அவர்கள் செய்திட நேரிடும்.


4️⃣2️⃣மன்னிப்பு சீட்டு ஒருபோதும் அறசெயலுக்கு நிகராகாது நாம் மக்களுக்கு போதிக்க வேண்டும். 


4️⃣3️⃣பக்குவமாக ஏழைகளுக்கு இறங்குவதும் தேவைப்பட்டவர்களுக்கு கடன் தந்து உதவுவதும் ஏற்று செயல்கள் எனவும் பணம் கொடுத்து பாவ மன்னிப்பு சீட்டு வாங்குவது தவறு என்று புரிய வைக்கக்வேண்டும். 


4️⃣4️⃣பாவ மன்னிப்பு சீட்டு அடிப்படையில் எவரும் சிறப்படைவதில்லை.மாறாக அன்பின் அடிப்படையிலேயே சிறப்படைகின்றனர்.


4️⃣5️⃣இக்கட்டில் உள்ளவர்களுக்கு உதவி செய்யாமல் பாவமன்னிப்பு சீட்டுக்கு பணம் செலுத்துகிறவர்கள் மேல் தேவ கோபம் வரும் என நம் விசுவாசிகளுக்கு போதிக்க வேண்டும்.


4️⃣6️⃣பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்ப நலனுக்காக சேமிக்க வேண்டுமே ஒழிய பாவமன்னிப்பு சீட்டுக்காக செலவழிக்க கூடாது என உபதேசிக்க வேண்டும். 


4️⃣7️⃣பாவமன்னிப்பு சீட்டு வாங்குவது அவரவர் விருப்பம் அதை வாங்க யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.


4️⃣8️⃣போப்பானவர் மக்களின் பணத்தை அல்ல அவர்களின் மெய்யான மனந் திரும்புதலையே விரும்பவேண்டும்.


4️⃣9️⃣பாவமன்னிப்பு சீட்டின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதிக நன்மை அடைவார்கள். பாவமன்னிப்பு சீட்டை நிராகரித்து கடவுள் பயம் அற்றவர்கள் அதிக மோசத்திற்கு ஆளாவார்கள் என்று போதிக்கவேண்டும்.


5️⃣0️⃣இப்பத்திர முறை கேடுகளை போப்பரசர் அறிய நேர்ந்தால் பேதுரு ஆலயம் எரிந்து சாம்பலாகட்டும் என்பாரே அன்றி வேறு எந்த வகையிலும் ஆலயத்தை கட்ட முன்வரமாட்டார் என்று போதிக்க வேண்டும். 


5️⃣1️⃣புனித பேதுருவின் ஆலயத்தை விற்றாவது அந்த மக்களுக்கு பணம் தந்து அவர்கள் சுறண்டபடுவதை தடுப்பது போப்பரசரின் கடமை என்று மக்கள் அறிய வேண்டும். 


5️⃣2️⃣போப் அரசரோ அல்லது அவரது பிரதிநிதிகளே உத்தரவாதம் தந்தாலும் பாவமன்னிப்பு சீட்டு இரட்சிப்பு தறாது என்று போதிக்க வேண்டும். 


5️⃣3️⃣பாவச் சீட்டை முன்நிறுத்தி பிரசங்கத்தை தடை செய்பவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரிகள்.


5️⃣4️⃣பிரசங்கம் முக்கியமானது. அந்த நேரத்தை பாவமன்னிப்பு பத்திரத்தை பற்றி போதிக்க கூடாது.அப்படி செய்தால் ஆண்டவருடைய வார்த்தையை அவமதிப்பதுபோல ஆகும்.


5️⃣5️⃣ஒருமுறை மணியடித்தால் ஒரு ஊர்வலம் ஒரு ஆராதனை என பாவமன்னிப்புக்காக செய்யபடும் பிரயாசங்கள் ஒழிந்து நூறுமுறை சுவிஷேசம் ஆராதனை என்னும் மணியோசை முழங்குவதை நாம் பிரபலபடுத்தவேண்டும் இதுவே போப் அரசரின் கருத்தாக இருக்க வேண்டும். 


5️⃣6️⃣போப் அரசர் தானகவே பாவமன்னிப்பு தருகிறார் என்று மக்கள் புரிந்து கொள்ள வில்லை.


5️⃣7️⃣பாவமன்னிப்பு பத்திர விற்பனையாளர்கள் விற்று தங்களுடைய பண வருவாயை பெருக்கிகொண்டுள்ளார்கள்.


5️⃣8️⃣மன்னிப்பு சீட்டு எந்த பலனையும் அளிப்பதில்லை. இயேசுவின் சிலுவை மரணம் உயிர்தெழுதல் மனிதனுக்கு பாவமன்னிப்பை தருகிறது.


5️⃣9️⃣புனித லாரன்ஸ் என்பவர் அக்கால கருத்துக்கு இசைய திருச்சபையின் ஏழைகளே திருச்சபையின் செல்வங்கள் என மொழிந்தார்.


6️⃣0️⃣கிறிஸ்துவால் அருளபட்ட திறவுகோல் திருச்சபையின் செல்வம் என்று அதிகார பூர்வமாக சந்தேகமின்றி துணிந்து கூறுகிறோம்.


6️⃣1️⃣போப் அரசரால் தீர்ப்பிடபட்ட ஆக்கிணைகளை மன்னிதிட அன்னாரின் அதிகாரமே போதுமானது. 


6️⃣2️⃣கடவுளின் மகிமை, கடவுளின் கிருபை ஆகியவற்றிலான அதிபரிசுத்த சுவிஷேசமே மெய் செல்வம் ஆகும்.


6️⃣3️⃣எனினும் இச்செல்வம் மனிதனின் இயல்புபடி வெறுக்கபடுகிறது.


6️⃣4️⃣ஆனால் இச்செல்வங்களுக்கு மாறாக மன்னிப்பு பத்திரங்கள் முதல் நிலைக்கு மாற்றபட்டுள்ளது.


6️⃣5️⃣எனவே சுவிஷேசமாகிய செல்வத்தை வலையாக பயன்படுத்தி முற்காலத்தில் செல்வந்தர்களை பிடித்தனர்.


6️⃣6️⃣தற்போது மன்னிப்பு பத்திரத்தின் வலையால் மக்களின் செல்வத்தை வாரி கொள்கிறார்கள்.


6️⃣7️⃣மன்னிப்பு பத்திரங்களையெல்லாம் மகா உன்னத கிருபை என்று குதர்க்கவாதிகள் உளறுகிறார்கள்.


6️⃣8️⃣ மட்டஆயினும் அவற்றை கடவுளின் கிருபையோடும் சிலுவையின் பக்தியோடு ஒப்பிடுகையில் அவை மிகமிக மலிவான கிருபையே ஆகும்.


6️⃣9️⃣மன்னிப்பு பத்திர பிரச்சாரம் செய்பவர்களை வரவேற்க 

அத்தியட்சர்களும்,குருக்களுக்கும் கடமை உள்ளதுதான்.


7️⃣0️⃣ஆயினும் இப்படி பிரசங்கம் பண்ண வருகிறவர்கள் தங்களுடைய சுயகதைகளை எண்ணங்களை பிரசங்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.


7️⃣1️⃣பாவமன்னிப்பு பத்திரத்தின் எதார்த்தத்தின் உண்மை தன்மைக்கு மாறாக வசனிப்பவர்கள்

புறம்பார்க்கப்படனும் சபிக்கபட்டவனுமாவான்.


7️⃣2️⃣இப்படி பிரசங்கிப்பவர்கள் கொண்டுள்ள வரம்புக்கு மீறிய அதிகாரம் மற்றும் அவர்களின் பொருளாசை ஆகியவற்றை எதிர்த்து நிற்பவன் ஆசீவதிக்கபட்டவன்.


7️⃣3️⃣பாவமன்னிப்பு பத்திர வியாபாரம் பாதிப்படையும்படி சூழ்ச்சி செய்கிறார்கள் என்று கூறி அத்தகையோருக்கு எதிராக போப் அரசர் முழங்குகிறார்.


7️⃣4️⃣ஆனால் தூய இறையன்பு வாய்மை ஆகியவை பாதிப்பு உள்ளாகும் என்பவற்களுக்கு எதிராகத்தான் போப் அரசர் இடியென முழங்கவேண்டும்.


7️⃣5️⃣ஆண்டவரின் தாயாருக்கு அவபெயர் வரும்வகையில் நிந்தனை செய்வது பெரும் குற்றம் அதை மன்னிக்கும் ஆற்றல் மன்னிப்பு பத்திரத்திற்கு உண்டு என்று என்னுவது பைத்தியகாரதனமானது.


7️⃣6️⃣சுலபமாக நம் பாவங்களை மன்னிப்பு பத்திரம் மன்னித்திடாது என்பது தான் உண்மை. 


7️⃣7️⃣தற்போதைய போப் அரசராக பேதுரு பதவி வகுத்தாலும் பெரிதான கிருபைகளை அவரால் அருள முடியாது என கூறுவது பேதுருக்கும் போப் அரசருக்கு எதிரான நிபந்தனையாகும்.


7️⃣8️⃣1 கொரிந்தியர் 12:28ன்படி பெரிதான ஈவுகளுக்காக சுவிஷேசம் ஆன்மீக ஆற்றல் மற்றும் குணபடுத்தும் வரங்கள் ஆகியவை போப்பின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை தான். 


7️⃣9️⃣போப்பரசரின் இலட்சினையில் பொரிக்கபட்டுள்ள சிலுவை சின்னம் கிறிஸ்துவின் சிலுவை சின்னம் ஒப்புமையுடையதே என்று சொல்வது தெய்வநிந்தனையாகும்.


8️⃣0️⃣இத்தகைய நிந்தனைகள் மக்கள் மத்தியில் பரப்பும் அத்தியட்சர்கள் குருமார்கள் வேத விற்பனர்கள் தேவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும். 


8️⃣1️⃣தான் தோன்றிதனமான மன்னிப்பு பிரச்சார பத்திரத்தின் விளைவாக போப்பின் மீதுள்ள மதிப்பும் மரியாதைம் குறைந்து போகிறது.


8️⃣2️⃣உதாரணமாக ஆலயத்தை கட்டும் பணிக்கென பெறப்பட்டு பணத்தால் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள 

ஆன்மாக்களை போப்பரசரால் வெளியே கொண்டுவர கூடுமானால் எல்லா 

ஆன்மாக்களையும் ஏன் வெளியே கொண்டுவர இயலாது.


8️⃣3️⃣மீட்கபட்டவர்களுக்காக ஜெபம் தேவையில்லை என்றால்,அது தவறு என்றால் இறந்தவருக்காக சடங்குகள் ஆண்டு இறுதி நினைவு கூறல் பூசைகள் ஏன் நிரூபிக்கப்படவில்லை.


8️⃣4️⃣அவபக்தி உள்ள ஒரு ஆத்துமாவை உத்தரிப்பு ஸ்தலத்தில் பணத்தால் வெளிகொணர முடியுமாகில் நல்ல ஒரு ஆத்துமாவை அன்பின் பெயரால் உத்தரிப்பு ஸ்தலத்தில் நின்று வெளிகொணர கூடாதா?


8️⃣5️⃣வேதவசனம் இப்போது செயல்படவில்லை என்றார் எப்படி பாவமன்னிப்பு பத்திரம் உயிர்பெற்றதும் செயலாற்றுவதுமாய் இருக்கும். 


8️⃣6️⃣சீசரைவி பெரும் செல்வந்தரான போப் ஏன் தன் சொந்த பணத்தை செலவிட்டு ஆலயம் கட்டாமல் ஏழை பாமர விசுவாசிகளின் பணத்தை செலவிட்டு ஆலயம் கட்ட முயற்சிக்கிறார். 


8️⃣7️⃣மெய் மனஸ்தாபத்தால் பூரண மன்னிப்பையும் பெரும் வாழ்வையும் பெற்றிடும் உரிமையாளருக்கு வேறு எதனை கொடுக்க விலைகிறார்.


8️⃣8️⃣ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே போப் அரசரால் தரப்படுகிற மன்னிப்பும் ஆசிகளும் ஒரே நாளில் நூருமுறை தரப்படுமானால் திருச்சபைக்கு இதைவிட சிறந்த சிலாக்கியம் இருக்கமுடியாது. 


8️⃣9️⃣பண வருவாயை எதிர்பார்க்காமல் ஆத்துமாக்களின் மீட்பை போப் நாடுகிறார் என்றால் எனில் சரிநிகர் திராணியுள்ளவர்களுக்கு மன்னிப்பு சீட்டைகளை ஏன் நிருத்திவைக்கிறார்.


9️⃣0️⃣தனி அதிகாரத்தை பயன்படுத்தி திருச்சபைக்கு அடக்குவது கிறிஸ்தவர்களை துக்கபடுத்துவதாகும்.


9️⃣1️⃣போப்பின் விருப்பமாகவே மன்னிப்பு பத்திரம் வழங்கப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே அனைத்தும் சுமூக முடிவுக்கு வரும். 


9️⃣2️⃣சமாதானம் சமாதானம் எனக் கூறியும் சமாதானம் கொடுக்க முடியாத போலி தீர்க்கதரிகள் ஒழியட்டும்.


9️⃣3️⃣சிலுவை சிலுவை என்று சொல்லி கிறிஸ்தவர்களின் துன்பம் ஒழிய செய்யும் மெய் தீர்க்கதரிகள் வாழட்டும்.


9️⃣4️⃣தண்டனை மரணம் நரகம் ஆகியவற்றையே அறிந்து கிறிஸ்துவுக்கு பின் செல்ல நாம் வழிகாட்ட வேண்டும். 


9️⃣5️⃣பல உபவத்திரவங்களோடே நாம் மோட்சத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமே தவிர போலி உத்திர வாதத்தினால் பிரவேசிக்க முடியாது என நாம் உறுதி கொள்ள வேண்டும்.


மொழிபெயர்ப்பு 

Rev.D.David (Gamaliel Bible College)





 


காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...