Thursday, 31 August 2023

நாத்தான்வேல் (என்ற) பர்த்தொலொமேயு |அறிந்து கொள்வோம் || பகுதி - 113 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 113


நாத்தான்வேல் (என்ற) பர்த்தொலொமேயு

(St.Bartholomew) 


புனிதர் பர்த்தொலொமேயு முதலாம்

நூற்றாண்டில் வாழ்ந்தவர்.யோவான் எழுதிய நற்செய்தியின் முதலாம் அதிகாரத்திலும்,21ம் அதிகாரத்திலும் நத்தனியேல் (Nathanael) என்று அடையாளம் காணப்படும் இவர்,

பிலிப்புவால் கிறிஸ்து இயேசுவுக்கு

அறிமுகம் செய்யப்பட்டார்  இவர், இயேசுவின் பன்னிரு சீடர்களில்(அப்போஸ்தலர்களுள்) ஒருவர் ஆவார். இவரின் பெயர் "டாலமியின் மகன்" (Ptolemy) எனவும், "உழுசால் மகன்" என்று பொருள்படுகிறது. இது குடும்பப் பெயராய் அறியப்படுகிறது.


யோவான் நற்செய்தியின் முதல்

அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் "உண்மையான இஸ்ரவேலன்" "கபடற்றவர்" என்று இவரைக் குறித்துக் சாட்சி கொடுத்தார்.


மேலும் மத்தேயு,மாற்கு, லூக்கா

நற்செய்திகளில் சீடர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அப்போஸ்தலர் புத்தகத்தில் இயேசுவின் பரம் ஏறுதலை கண்டவர் இவர். பெந்தேகோஸ்தே நாட்களுக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா  போன்ற இடங்களில் சமய பணி செய்தார் புரிந்தார் என்பது மரபுச் செய்தி என்று நம்பப்படுகிறது.


இந்தியாவில் சமயப்பணியாற்றினார் என்பதற்கான இரண்டு பண்டைய

சாட்சிகள் உள்ளன. நான்காம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்த சரித்திர ஆசிரியர் மற்றும் இறையியலாளருமான "யூசேபியஸ்

(Eusebius of Caesarea)  என்பவரும்,நான்காம் நூற்றாண்டின் இறுதியில், துறவியும், திருச்சபையின் மறை வல்லுனருமான புனிதர் "ஜெரோம்(Saint Jerome) இதை உறுதி செய்யகிறார்கள்.


பண்டைய நகரமான கல்யாண் (Kalyan)

என்று அறியப்பட்ட கொங்கன் கடலோர (Konkan coast) பகுதியில் உள்ள பம்பாய் (Bombay) பகுதியே புனிதரின்  சமயப்பணிக்கான முக்கியமான இடம் என்று அருட்தந்தைகள் : (பெருமலில்"

(Fr.C. Perumali) மற்றும் "மோராசெஸ்" (Moraes) கூறுகிறார்கள்.


பாரம்பரியபடி, இவர் ஆர்மேனியாவில்

(Armenia) உள்ள "அல்பநோபிளிஸ்"

(Albanopolis) என்னுமிடத்தில் தோலுரிக்கப்பட்டு,உயிரோடு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு

கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


இவர் ஆர்மேனியா அரசனான 

"போலிமியஸ்"(Polymius) என்பவனை

கிறிஸ்துவை ஏற்றுகொள்ள மனம் மாற்றியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அரசனது சகோதரனான "அஸ்ட்யாஜெஸ் (Astyages) என்பவர் 

பர்தொலொமேயுவிற்க்கு  மரண தண்டனை கொடுத்தாக கூறப்படுகிறது.


13- ம்  நூற்றாண்டில், இவர் மரித்த இடத்தில், பெரிய ஆர்மேனியாவின் ஒரு பகுதியில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது அதை

"புனித பர்த்தலமேயு துறவு மடம்"

 (Saint Bartholomew Monastery) என்று அழைக்கப்படுகிறது.இது தற்போது தென்கிழக்கு துருக்கியில் உள்ளது. 



🙏 Thanks : Golden Rathis .Y (Meyego)

Wednesday, 30 August 2023

லீபனோனின் கேதுரு மரம் ||அறிந்து கொள்வோம் || பகுதி -112 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -112


லீபனோனின் கேதுரு மரம் :


" லீபனோன் " என்றால் " வெண்மலை " எனபது பொருள். பாலஸ்தீனத்தின் வடமேற்கிலுள்ள ஒரு மலை நாடாகும். எர்மோன் எனும் மலை இங்குதான் உள்ளது. இதன் சிகரங்கள் பனியால் மூடப்பட்டிருப்பதினால் 'வெள்ளை மலை' என்ற பெயர் ஏற்பட்டது. ஆதி காலத்தில் இம்மலை சரிவுகளில் கேதுரு மரங்கள் நிறைய இருந்தன. இங்கிருந்துதான் சாலமோன் தேவாலயத்திற்கு தேவையான கேதுரு மரங்களைக் கொண்டுவந்தான்.நன்கு வளர்ச்சி பெற்ற ஒருகேதுருமரத்தின் அடியில் ஐயாயிரம் பேர் தங்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆகவே தான் நீதிமானின் செழிப்பை லீபனோனின் கேதுருக்கு இணையாக வேதம் சொல்கிறது,“நீதிமான் செழித்து லீபனோனில் உள்ள கேதுருவைப்போல் வளருவான்” (சங் 92:12).


கேதுரு மரங்களின் வேர் வெகுதூரம் படர்ந்து வளரும். இவைகள் பாறைகளை இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்வதால் கடும் புயல் வந்தாலும் இம்மரங்கள் அசைக்கப்படுவதில்லை. கற்பாறையாம் இயேசுவைப்பற்றிக் கொள்வோமானால் எந்தச் சோதனைகளும் நம்மை அசைக்கமுடியாது.இம்மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து பிசின் போன்ற கசிவு ஏற்படுகிறது.கேதுருவின் பிசின் நறுமணம் மிக்கது. பூச்சிகள் இம்மரத்தை அழிக்காதபடி, நறுமணம் நிறைந்த பிசின் மரத்தைப் பாதுகாக்கிறது. லீபனோனின் கடற்கரைக்கு 25 மயில்களுக்கு அப்பால் ஒரு கப்பல் வரும்போது கேதுருக்களின் நறுமணம் இன்ப நுகர்வாயிருக்கும்.


காடுகளில் உள்ள ஊற்றுத் தண்ணீரானது கேதுரு மரங்களின் வேர்களினால் சுத்திகரிக்கப்பட்டு பருகுவதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். இம்மலைச்சரிவுகளில் மக்கள் வசிக்க விரும்புவர்.கேதுரு மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் நீண்ட காலம் உழைக்கும்.பிசின் தைல வாசனையால் பூச்சிகள் சேதப்படுத்துவதில்லை. சாலமோனின் ரதம் கேதுரு மரத்தால் செய்யப்பட்டது. (உன் 3:9)


சாலமோன் ஞானி இம்மரத்தைக் குறித்து இப்படிச் சொல்கிறார்:


“என் மணவாளியே, உன் வஸ்திரங்களின் வாசனை லிபனோனின் வாசனைக்கு ஒப்பாயிருக்கிறது”

(உன் 4:11).


பிரிட்டனிலுள்ள பொருட்காட்சி நிலையத்தில் ஒரு கேதுரு மரத்துண்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தட்பவெட்ப மாற்றங்களால் லிபனோனில் கேதுரு மரங்கள் அழிந்து வருகின்றன.





விரோதி || அறிந்து கொள்வோம் || பகுதி 111 ||

அறிந்து கொள்வோம்


பகுதி 111


விரோதி

(எதிரி)



"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" என்ற அன்பின் கட்டளையை ஆண்டவராகிய இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார் (மத்.5:44).


இதன்படியே அவர் செய்தும் காட்டியிருக்கிறார். தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக அவர் "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்று ஜெபித்தார் (லூக்கா 23:34).


சத்துருக்கள் குறிக்க " echthros " என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


' உன் சத்துருவின் மாடவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடுவாயாக" என்ற கட்டளை இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது (யாத்.23:4) .


ஸ்தேவான் தன்னைக் கல்லால் எறிந்து கொல்லுபவர்களுக்காக ஜெபித்தான் (அப். 7:60).


விரோதிகளைக் குறித்த கட்டளைகள்


மேலே குறிப்பிடப்பட்ட கட்டளைகளைத் தவிர வேறு பல கட்டளைகளும் விரோதிகளைக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.


"உன் சத்துரு பசியிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகறங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதனால நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; உனக்குப் பலனளிப்பார் என்ற நீதிமொழிகள் 25:21, 22 வசனங்கள் சொல்லப்படுகின்றன. பவுல் அப்போஸ்தலன் இந்த வசனங்களை எடுத்துக் காட்டுகிறது.


சத்துரு விழும்போதும், இடறும்போதும் அதைக் கண்டு சந்தோஷப்படக் கூடாது (நீதி. 24:17).


இஸ்ரவேலரின் எதிரிகள்


வேதாகமத்தில் இஸ்ரவேலரின் எதிரிகளின் பட்டியல் கால வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது.


1.எகிப்தியர்கள் - (யாத். 1:8-11; யாத். 14:9; 1 இரா.14:25)


2.அமலேக்கியர் - யாத். 17:8; நியா. 3:13.


3.ஏதோமியர் - எண். 20:18; 1 இரா. 11:14.


4.எமோரியரின் ராஜாவாகிய சீகோன்             எண்.21:23. 


5.பாசானின் ராஜாவாகிய ஓக் :

 எண். 21:33.


6.கானானியரும், சுற்றிலும் இருந்த ஜாதியினரும்:

யோசுவா 11:1-5.


7.சீரியர்கள் -(நியா. 3:8; 1 இரா. 11:25; 

1 இரா. 20:1; 2இரா.6:8,24; 2 இரா. 24:2; 2 நாளா. 28:5)


8.மோவாபியர் ( நியா.3:12;2 இரா. 1:1; 

2 இரா. - 24:2)

9.அம்மோன் புத்திரர்

 (நியா. 3:13; நியா. 10:9;

2சாமு.10:6 1 நாளா. 19:6; 2 இரா. 24:2.)


10.மீதியானியர் - நியா. 6:1.


11.பெலிஸ்தர் - (நியா. 10:7-8;

 1 சாமு.4:1-2; 1 சாமு.17:1-2; 1 சாமு.31:1; 

2 சாமு. 5:17; 2 சாமு.8:1; 2 சாமு.21:15,18 1நாளா.20:4)


12.அசீரியர் -( 2 இரா. 15:19, 29;

 2 இரா. 17:3-6; 2இரா.18:13.)


13.பாபிலோனியர் ( 2 இரா. 24:1;

 2 இரா. 25:1; 2 நாளா. 36:5-7, 15-20)


14.பெர்சியனாகிய ஆமான் - எஸ்.3:5-6.


15.கிரேக்கர் - சக. 9:13.


16.ரோமர் -யோவான் 11:48


இஸ்ரவேலரின் எதிரிகள் கொடூரமானவர் களாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும் இருந்தனர் (எரே. 6:23; 50:42).


பலவேளைகளில் இவர்கள் ஒன்றுசேர்ந்து வந்தார்கள் (சங். 83:5-8).


தேவன் தமது ஜனத்தைச் சுற்றிலும் இருந்து,அவர்களைப் பாதுகாத்தார்.

 (சங். 125:2).


தேவனுடைய சிட்சையின் காரணமாக அவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டபோது மட்டுமே எதிரிகளால் அவர்களை மேற்கொள்ள முடிந்தது (உபா.28:47,48).


விரோதியான சாத்தான்


சாத்தான் " விரோதியானவன் " என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

 (1 தீமோ. 5:14)..


"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசனவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" என்று சாத்தானைக் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. (1 பேதுரு 5:8).


"மாம்ச சிந்தையும் தேவனுக்கு விரோதமான பகையாக இருக்கிறது" (ரோமர் 8:7).


மரணம் கடைசிச் சத்துருவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (1 கொரி. 15:26). ஆனால் ஆண்டவராகிய இயேசு சாத்தானையும், மரணத்தையும் சிலுவையில் ஜெயித்திருக்கிறார்.....




Tuesday, 29 August 2023

வண்ணான் || அறிந்து கொள்வோம் || பகுதி - 110 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 110


வண்ணான்



இவர்கள் அழுக்கான ஆடைகளைத் துவைத்துச் சுத்தமாக்கும் பணியைச் செய்துவந்தார்கள். வேதாமக நாட்களில் துணியை ஒரு கட்டையினால் அடித்துத் துவைப்பதுண்டு. இப்படிப்பட்ட ஒரு உருளைக் கட்டையைக் கொண்டுதான் இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.


சவுக்காரம்


துணிகளிலுள்ள அழுக்கைப் போக்குவதற்கு வண்ணாருடைய சவுக்காரம் பயன்படுத்தப்பட்டது.

(மல். 3:2). இது எபிரெய மொழியில் "borith" என்று அழைக்கப்படுகிறது.


வனாந்தரத்தில் காணப்பட்ட சில தாவரங்களை எரித்த சாம்பல்கூடத் துணிகளைத் துவைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 


வண்ணார் துறை


இது எருசலேமுக்கு வெளியேயிருந்த ஒரு இடமாகும். அசீரிய ராஜாவினால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் இந்த இடத்தினருகே நின்று, யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு எதிராகச் சவால் விட்டார்கள் (2இரா.18:17).


இதற்கருகேயிருந்த குளம் "மேல்குளம்" என்று அழைக்கப்பட்டது (ஏசாயா 36:2). இது எருசலேமுக்குச் செல்லும் சாலையின் அருகே இருந்தது.

 இது "இன்னோம்" பள்ளத்தாக்கின் தலைப்பகுதியாகும்.


வண்ணார்கள் துவைத்த துணிகளை உலர வைக்க இடம் தேவைப்பட்டபடியால் இந்தத் துறை எருசலேம் பட்டணத்துக்கு வெளியேயிருந்தது. வண்ணார்கள் துணிகளின் அழுக்கைப் போக்கப் பயன்படுத்தும் சில பொருட்களின் நெடியும் அதிகமாக இருக்கும் என்பதால் அதை பட்டணத்தின் வெளியே வைத்திருந்தார்கள்.


உருவகத்தில் வெளுத்தலும் வெண்மையும்:-


ஆண்டவராகிய இயேசு மறுரூபமாகியபோது அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது. அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது" என்று மாற்கு 9:3 -ல் சொல்லப்பட்டுள்ளது.


மேசியா புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் சுத்திகரிப்பார் என்று மல்கியா 3:2 -ல் ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.






Saturday, 26 August 2023

அந்தியோகியா பட்டணம் || அறிந்து கொள்வோம் பகுதி -109 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -109


அந்தியோகியா பட்டணம் 

பரிசுத்த வேதாகமத்தில் அந்தியோகியா

பட்டணம் பற்றிய வசனங்கள்

(அப்போஸ்தலர் 6:5,அப்போஸ்தலர் 11:19

அப்போஸ்தலர் 11:20, அப்போஸ்தலர் 11:22

அப்போஸ்தலர் 11:25, அப்போஸ்தலர் 11:26

அப்போஸ்தலர் 11:27, அப்போஸ்தலர் 13:1

அப்போஸ்தலர் 13:14, அப்போஸ்தலர் 14:19

அப்போஸ்தலர் 14:21, அப்போஸ்தலர் 14:26

அப்போஸ்தலர் 15:22, அப்போஸ்தலர் 15:23

அப்போஸ்தலர் 15:30, அப்போஸ்தலர் 15:35,

அப்போஸ்தலர் 18:22, கலாத்தியர் 2:11

II தீமோத்தேயு 3:11)

தற்போதைய அந்தியோகியா

அந்தியோகியா (Antioch) என்னும் பழங்கால நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென் கிழக்குப் பகுதியில், சிரியாவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 12 மைல் தொலையில் அமைந்த நகரம் ஆகும். இந்நகருக்கு மேற்குப்பக்கத்தில் ஒரோண்டெஸ் (Orontes) என்னும் பேராறு ஓடுவதால் அதற்கு "ஒரோண்டெஸ் கரையில் அமைந்த அந்தியோக்கியா" (Antioch on the Orontes) என்னும் பெயரும் உண்டு.பழைய நகரான அந்தியோக்கியா புது நகரான "அந்தாக்கியா" (Antakya) அருகே இன்றைய துருக்கி நாட்டில் அமைந்துள்ளது.

அந்தியோகியா உருவான வரலாறு

 கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகா அலெக்சாண்டரின் தளபதிகளுள் ஒருவராகிய முதலாம் செலூக்கஸ் நிக்கட்டோர் என்பவர் அந்தியோகியாவை நிறுவினார். இந்நகரத்தில்தான் கிறித்தவ சமயம் முதலில் யூதர் நடுவிலும் பின்னர் யூதரல்லாத பிற இனத்தவரிடையேயும் கி.பி. முதல் நூற்றாண்டில் முனைப்பாகப் பரவத்தொடங்கியது. அந்தியோகியா பண்டைய சிரிய நாட்டை ஒருங்கிணைத்த நான்கு பெருநகரங்களுள் ஒன்றாகும் (பிற நகரங்கள்: செலூக்கியா, அப்பமேயா, இலவோதிக்கேயா). இந்நகர மக்கள் "அந்தியோக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். அதன் உச்ச வளர்ச்சியின்போது அங்கே ஐந்து இலட்சம் மக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டதாலும், மம்லுக் இராணுவம் 1268இல் பேரளவிலான மக்களைக் கொன்றுகுவித்ததாலும் அந்தியோகியா நடுக்காலத்தில் சீரழியத் தொடங்கியது. மங்கோலியர் படையெடுப்பால் வர்த்தக வழிகள் அந்தியோகியாவின் ஊடே செல்ல தடை எழுந்ததும் சீரழிவிற்கு ஒரு காரணமாகும்.அந்தியோகியாவில் கோம்மொதுஸ் என்னும் மன்னன் ஒலிம்பிக் விளையாட்டுகளை  நடத்தினார். கி.பி. 256இல்பாரசீகப் படைகள் அந்தியோகியாவைத் தாக்கி மக்கள் பலரைக் கொன்றன.

கிறிஸ்தவ வரலாற்றில் அந்தியோகியா

       கிறிஸ்தவ சமயம் யூத நாட்டுக்கு வெளியே பரவத் தொடங்கிய காலத்தில் அந்தியோகியா மைய இடமாக அமைந்தது. அந்நகரில் யூத மக்கள் பலர் வாழ்ந்து வந்தனர். யூத மக்களிடையே கிறித்தவ சமயத்தைப் பரப்பும் வண்ணம் பல மறைபரப்பாளர்கள் அந்தியோகியா சென்றனர். இயேசுவின் சீடரான புனித பேதுரு அங்கு சென்று இயேசுவைப் போதித்தவர்களில் மிகவும் முக்கியமானவர். அதன் அடிப்படையில் இன்று அந்தியோகிய சபை தனக்கு மற்ற சபைகளை விட தங்களுக்கு முதன்மையிடம் உண்டு என்னும் கோரிக்கையை எழுப்புகிறது.

அந்தியோகியாவில் கிறித்தவ சமயத்தைப் பரப்பிய இரு பெரும் மறைபரப்பாளர்கள் பர்னபா, பவுல் (பிறப்பு: கி.பி. சுமார் 5; இறப்பு: கி.பி. சுமார் 67) ஆவர். பவுல் இந்நகரத்தில் கி.பி. 47இலிருந்து 55 வரை மறைபரப்பினார். பவுல் கிறித்தவத்தை போதித்த போது மக்கள் கூடி வந்து நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்திய குகைப் பகுதி இன்றும் அந்தியோகியாவில் உள்ளது.

புதிய ஏற்பாட்டில் உள்ள ப்போஸ்தலர் நடபடிகைகள் என்னும் நூல் அந்தியோகியாவில் கிறித்தவம் பரவிய வரலாற்றை தெளிவாய் விவரிக்கிறது. அந்தியோக்கியா பற்றிய 16 குறிப்புகள் அந்நூலில்உள்ளன.(காண்க:அப்போஸ்தலர் 6:5; 11:19,20,22,26,27; 13:1,13; 14:19,21,26; 15:22,23,30,35; 18:12).மேலும் கலாத்தியருக்கு பவுல் எழுதிய நிருபத்திலும் தீமோத்தேயு வுக்கு எழுதிய இரண்டாம் நிருபத்திலும் அந்தியோகியா பற்றிய குறிப்புகள் உண்டு. சிறப்பாக, அந்தியோகியாவில்தான் முதன்முறையாக, இயேசுவைப் பின்பற்றிய மக்கள் "கிறிஸ்தவர்கள்" என்னும் பெயரால் அழைக்கப்படத் தொடங்கினர். 

அது பற்றிய குறிப்பு இதோ……..


"பர்னபா சவுலைத் தேடி தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந் திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோகியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள் (அப்போஸ்தலர் 11:25-26)." 526 இல் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தின்போது அந்தியோகியாவும் அதன் துறைமுக நகரான செலூக்கியாவும் பெரும் அழிவைச் சந்தித்தன. முதலாம் ஜஸ்டீனியன் மன்னன் அந்தியோகியாவுக்குக் "கடவுளின் நகர்" என்று பொருள்படும் "தியோப்பொலிஸ்" (Theopolis) என்னும் பெயரைக் கொடுத்தார். அவர் காலத்தில் பல கட்டடங்கள் சீரமைக்கப்பட்டன. கி.பி. 531இலிருந்து 579 வரை ஆட்சிசெய்த முதலாம் கொஸ்ரோ (Khosrau I) அந்தியோகியாவைத் தாக்கியதோடு அங்கு வாழ்ந்த சுமார் 3 இலட்சம் கிறிஸ்தவர்களைக் கொன்றார். அதன்பிறகு அந்தியோகியாவின் புகழ் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது.


Thanks: Dr.Ganasekar 

தூதாயீம் கனி (Mandrake) || அறிந்து கொள்வோம் || பகுதி -154 ||

அறிந்து கொள்வோம்  பகுதி -154 தூதாயீம் கனி (Mandrake) தாவரவியல் பின்னணி இதன் அறிவியல் பெயர் Mandragora officinarum. எபிரேய மொழியில் ' தூத...