Saturday, 9 September 2023

அன்னை தெரசா || மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு


அன்னை தெரசா


முகவுரை:-

"அன்பால் அரவணைத்த அன்னை"

என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் புனிதர்

அன்னை தெரசா என்றால் மிகையாகாது.கருணையின் உருவமாக, சேவையின் உறைவிடமாக இன்றளவும் புகழப்படுபவர்.அன்னை தெரசா அவர்கள் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியக் குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க ருட்சகோதரி ஆவார்.


அன்னையின் இளமைப் பருவம்

அன்னை தெரசாவின் இயற்பெயர்

ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவர் கடந்த 1910-ம் ஆண்டு அகஸ்டு மாதம் 26- ம் தேதி பிறந்தார். ஆனால், இவர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி திருமுழுக்குப் பெற்ற நாளையே தனது பிறந்த நாளாகக் கருதினார். இவரது தந்தை அல்பேனியா அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவரது தந்தை தெரேசாவின் எட்டாவது வயதில் இறந்தார். பிறகு தன் தாயாரால் நற்குணங்கள் கூறி, கண்டிப்புடன் வளர்க்கப்பட்டார். தனது பள்ளிப் படிப்பில் திறமை உடையவராகவும் இருந்தார்.மிகவும் நகைச்சுவை உணர்வால் அனைவரையும் கவர்ந்து வசீகரிக்கும் திறமை உடையவர்.


சிறுவயதிலிருந்தே மறை பணியாளர்களாலும் அவர்களது கிறிஸ்தவ சேவைகளாலும் கவரப்பட்ட அன்னை தெரேசா தனது 12 வயதில் முதன்முதலாக ஆன்மிக அழைப்பை உணர்ந்து, தனது 18 வயதில் கன்னிகா ஸ்திரீயாக மாறுவது முடிவு செய்தார். இதற்காக தன்  வாழ்வை துறந்து, 'சகோதரி தெரசா' என தன் பெயரை மாற்றிக்கொண்டார். 1923-ல் 'சோடாலிட்டி ஆஃப் சில்ரன் ஆஃப் மேரி என்ற சேவை அமைப்பில் சமூக இணைந்தார்.


இந்தியாவில் அன்னையின் பணி

1929-ல் கொல்கத்தா வந்த வந்த அன்னை தெரசா சுமார் 17ஆண்டுகள்  ஒரு பள்ளியில் பணிபுரிந்தார்.

ஏழைகளுக்கு உதவுவதற்காக கற்பித்தல் பணியிலிருந்து விலகிய அன்னை தெரசா சேவை செய்வதற்காக மருத்துவப் செவிலியர் பணிக்கான பயிற்சி பெற்றார்.


1950-ம் ஆண்டு,இந்தியாவின்

கொல்கத்தாவில் பிறர் அன்பின்

பணியாளர்  என்ற கத்தோலிக்க

துறவற சபையினை நிறுவினார்.

45 வருடங்களுக்கு

மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும்,

அனாதைகளுக்கும், இறக்கும்

தறுவாயிலிருப்போருக்கும்

தொண்டாற்றினார்.


1952-ல் 'நிர்மல் ஹ்ருதய் என்ற

இல்லத்தைத்தொடங்கினார்.

கொல்கத்தா தெருக்களில் ஆதரவற்றுக் கிடந்த ஏராளமான தொழுநோயாளிகளை இங்கு கொண்டு வந்து பராமரித்தார்.அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டார்.


அன்னை தெரசா சிறப்புகள் மற்றும் 

விருதுகள்


சமூகசேவை, சகிப்புத்தன்மை மூலம்

அன்னையின் புகழ் உலகம் முழுவதும்

பரவியது. அரை நூற்றாண்டுக்கும்

மேலாக மானுட சேவையில் ஈடுபட்டு வந்த அன்னை தெரசா.1997-ல்

ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தனது 87-வது வயதில் மறைந்தார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர்

சபை அவரது இறப்பின் போது 123

நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.


இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால்

முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின்

அருளாளர் தெரேசா என்று

பட்டம் சூட்டப்பட்டார். இந்திய அரசு 2010-ல் இவரது நூற்றாண்டிற்காக அவரின் உருவம் பதித்த 5 ருபாய் நாணயம் வெளியிட்டு கெளரவித்துள்ளது.

 'புனிதர் பட்டம், போப் போப் பிரான்சிஸ்

காலத்தில் வழங்கப்பட்டது.


1962 - பத்மஸ்ரீ விருது


1972 - பன்னாட்டு புரிந்துணர்வுக்கான

விருது


1979 - அமைதிக்கான நோபல் பரிசு 


1680- இந்தியாவின் உயரிய விருதான

"பாரத ரத்னா" விருது.

 

1996- அமெரிக்காவின் கெளரவ பிரஜை


2002 -அருளாளர் பட்டம்.


முதலில் இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட அன்பின் பணியாளர் சபை, பின்னர் வெளிநாடுகளுக்கும் பரவியது. அன்னை தெரேசா இவ்வுலகை விட்டு சென்றாலும், பிறர் அன்பின் பணியாளர் சபை எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான

நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு

வழங்குமிடங்கள்,குழந்தைகள்

மற்றும் குடும்பத்திற்கான

ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற

சேவைகளில் இன்றும் பங்காற்றி வருகிறது.


Thanks: Meyego.....

No comments:

Post a Comment

காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...