ஸ்டெல்லா ஃப்ரான்க்ளின் ||மிஷனரிகள் வாழ்க்கை வரலாறு ||


மிஷனரிகள் வாழ்க்கை வரலாறு


ஸ்டெல்லா ஃப்ரான்க்ளின்

 Stella Franklin



இந்தியா எதிர்கொண்ட பயங்கரமான காலங்களில், 1896-1897 ஆம் ஆண்டின் பஞ்சம் ஒன்றாகும். பட்டினியினாலும் அதனுடன் வரும் தொற்று நோய்களினாலும் ஏற்பட்ட இறப்புகள் மிக அதிகமாக இருந்தது: ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது. இந்தியர்கள் தங்கள் துன்பங்களில் மூழ்கிக்கிடந்த போது, கர்த்தர் அவர்களின் ஆத்தும மற்றும் சரீர பிரகாரமான தேவைகளை சந்திக்க அநேக தேவபக்தியுள்ள ஆண்களையும் பெண்மணிகளையும் எழுப்பினார். அவர்களில் ஒருவர் தான் ஸ்டெல்லா ஃப்ரான்க்ளின்.


ஸ்டெல்லா ஃப்ரான்க்ளின் தனது சகோதரி ஜோசஃபாவைப் போலவே ஆசிரியையாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து 1895ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்தார். ஆனால், பஞ்சத்தின் தீவிரம் அவருடைய ஊழியப் போக்கை மாற்றியது. அங்கு அவருடைய சகோதரி ஏற்கனவே பணியாற்றிய நிவாரணப் பணியில் இணையும்படி கேட்டுக்கொல்லப்பட்டார்.அவர் அரசு நடத்திய அனாதை இல்லத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, நூற்றுக்கணக்கான சிறுவர்களைப் பராமரித்தார்.அந்தக் சிறுவர்களில் அநேகருக்குப் பஞ்சம் முடிந்த பிறகு திரும்ப வீடு இல்லை. ஸ்டெல்லா அவர்களைத் தன் செட்டைகளின் கீழே எடுத்து, அவர்களுக்கு உணவளித்து, கற்பித்து, ஆத்தும ரீதியாகவும் போஷித்தார்.


ஸ்டெல்லா தாமோ (Damoh) என்னும் ஊரில் பெண்கள் நற்செய்திப் ஊழியத்தைத் தொடங்கினார். துவக்கத்தில், அவர் தனது அனாதை இல்லத்தில் உள்ள சிறுவர்களின் தாய்மார்களை அணுகினார். அவர்கள் சுவிசேஷ பயணங்களுக்கு சென்றபோது, தன் பாதுகாப்பையும் வசதிகளையும் பொருட்படுத்தாமல், அவர் கூடாரங்கள் அமைத்து அதில் வசித்தார். ஸ்டெல்லா ஒரேப்த் தொடர்பயணத்தில் கிட்டத்தட்ட எழுபது கிராமங்களுக்குச் சென்றார். அவற்றில் பெரும்பாலானவை எந்த சுவிசேஷகரும் சென்றிராத இடங்களாகும். சகல ஜனங்களுக்கும் அவருடைய வேதாகமப் போதனை நடைமுறைக்குரியதாகவும், தெளிவாகவும் விளங்கியது.


1905 ஆம் ஆண்டு, கல்வி அமைச்சகம் மற்றும் பள்ளி நிர்வாகத்தை நிர்வகிக்க ஹர்தா (Harda) என்னும் ஊருக்கு சென்றார். பிறகு அவர் ஜபல்பூருக்கு (Jabalpur) வேதாகமக் கல்லூரியில் கற்பிக்க ஆசிரியையாகச் சென்றார். 1912 ஆம் ஆண்டு, பெண்கள் விடுதி வசதியுள்ள பள்ளியில் பணியாற்ற அவர் முங்கேலி (Mungeli) சென்றார். இந்த பணியில், அவர் தனது ஊழியத்தின் எஞ்சியுள்ள ஆண்டுகளை செலவிட்டார். அவருடைய சிறந்த ஞானமும் அனுதாப புரிதலும் எப்போதும் விளங்கினதால், அவர் எங்கு சென்றாலும், திருச்சபையின் ஆலோசனைக் குழுக்களிலும் மற்றும் வீட்டு விவகாரங்களிலும் அவருடைய ஆலோசனை விரும்பப்பட்டது. தொலைந்த ஆத்மாக்களின் ஆத்தும மற்றும் சரீர பிரகாரமான தேவைகளை சந்திக்க நீங்கள் ஆயத்தமாய் உள்ளீர்களா?....



நன்றி: V. வீர சுவாமிதாஸ்


Post a Comment

1 Comments