அந்நிய தெய்வங்கள் ||அறிந்து கொள்வோம் || பகுதி -118 ||

 


அறிந்து கொள்வோம்

பகுதி -118


அந்நிய தெய்வங்கள் 


💡மோளேகு -அம்மோனியரின்       தெய்வம்.


💡பாகால் - கானானியரின் தெய்வம்


💡அசேரா - பாகாலின் மனைவி


💡அஸ்தரோத் -கானானியரின் பெண் தெய்வம்


💡பேல் - பாபிலோனியரின் தெய்வம்


💡காமோஸ் -மோவாபியரின் தெய்வம்


💡பொன் கன்றுக்குட்டி - கானான் பயணத்தில் பொன் கன்றுக்குட்டி (தாண், பெத்தேல்)


💡மெரொதாக் -பாபிலோனியரின் தெய்வம்.


💡நேபோ -பாபிலோனியரின் தெய்வம்.


💡நிகுஸ்தான் - (வெண்கல சர்ப்பம்)

வானராக்கினி

வலை - பறி - (ஆப 1:15-17)

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், குதிரை உருவம், நாய் உருவம்,


💡சுக்கோத்-பெனோத் -பேலின் மனைவி.


💡நேர்கால் - அசீரிய தெய்வம்

ஆஷிமா - (ஆட்டின் ரூபம் கொண்ட ஆமாத்தின் தெய்வம்)


💡நிஸ்ரோக் - அசீரியா

நிபேகாஸ், தர்காக் - ஏவியர் தெய்வம்

ரிம்மோன் - சீரியா

அன்னமேலேக் - (2ராஜா 17:31)


💡வார்ப்புக்கள் -

எகிப்தியரின் தெய்வங்கள் - மிருகங்கள் ரெம்பான், நட்சத்திர ராசிகள் தியானாள், யூப்பித்தர், மெர்க்கூரி


💡தாகோன் - பெலிஸ்தரின் தெய்வம்


பெயரில்லாத அந்நிய தெய்வங்கள் இன்னும் நிறைய இருக்க தான் செய்கிறது.


ஜீவனுள்ள தேவனை விட்டுவிட்டு உயிரில்லாத  அந்நிய தெய்வங்களை  இஸ்ரவேலர் ஆராதித்து தேவனின் கோபத்துக்கு ஆளானார்கள்.

 

(எரேமியா 2:28)

நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; *யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.என்று எரேமியா சொல்வதை கவனிக்க வேண்டும்.


என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

(யாத்திராகமம் 20:3-5)




Thanks to Bro A.SASIKUMAR 

GRACE INDIA MINISTRIES

Post a Comment

0 Comments