Tuesday, 28 February 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -102 || சிலுவையும் காடியும் ||

அறிந்து கொள்வோம்

பகுதி -102


சிலுவையும் காடியும் 


சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்குக் காடி கொடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஆனால், எத்தனை முறை கொடுக்கப்பட்டது? எப்போது கொடுக்கப்பட்டது? எப்படி கொடுக்கப்பட்டது? என்கிற குழப்பம் அநேகருக்கு உண்டு. இயேசுவுக்கு மூன்று முறை காடி கொடுக்கப்பட்டதாக வேதம் விவரிக்கின்றது. அதைத் தெரிந்துக்கொள்வோம்.

1.மாற்கு 15:23  - சிலுவையில் அறைவதற்க்கு முன்: 

முக்கிய குறிப்பு: வெள்ளிப்போளம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்கக் கொடுக்கப்படும் பாணம். ஆனால், கிறிஸ்துவோ முழு வேதனையையும் சகிக்கும்படி அதை ஏற்கவில்லை.

2.லூக்கா 23:36 - சிலுவையில் மத்தியானத்திற்கு முன்:

முக்கிய குறிப்பு:

இது படைவீரர்கள் கிறிஸ்துவை ராஜா என எள்ளி நகையாடி கொடுத்தது. அக்காலத்தில் அரசர்கள் பதவி ஏற்றவுடன் மரியாதை நிமித்தம் இனிய பானம் வழங்குவதைப்போல இயேசுவுக்குக் கொடுத்து, நீ யூதரின் ராஜாவானால் இரட்சித்தக்கொள் என்று கிண்டல் செய்தனர் (லூக் 23:36). சிலுவையின் இரண்டாவது வாரத்திற்கு முன்பு இது நடந்தது (லூக் 23:43).

அதன் பின்பு பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அந்தகாரம் உண்டானது.

 (மாற் 15:33).

3.யோவான் 19:29,30,மாற்கு 15:36 - சிலுவையில் மத்தியானத்திற்குப் பின்:

முக்கிய குறிப்பு:

சங்கீதம் 69:21; 22:15 போன்ற வேத வசனங்களின் நிறைவேறுதலாக இயேசு கூறியபோது, ​​பஞ்சில் தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டிக்கொடுத்தனர். கிறிஸ்து அதை சுவைத்தபின் முடிந்தது என்றார். சிலுவையில் நான்காவது வார்த்தைக்குப் பிறகு (மாற் 15:34).ஐந்தாவது வார்த்தையைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.






Monday, 27 February 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -101 || சிலுவையின் நிலை ||

அறிந்து கொள்வோம்

பகுதி -101


சிலுவையின் நிலை

(கொலோ 2:15 )



✝️சிலுவையானது 7 அல்லது 7.5 அடியாக இருந்துள்ளது. ஏனெனில் யோவா 19:29 ன் படி இயேசுவுக்குத் தாகம் உண்டானபோது 1 அல்லது 2 நீளம் மட்டுமேயுள்ள ஈசோப்புத் தண்டில் புளித்த திராட்சைரசத்தில் ஊறின கடற் பஞ்சை பொருத்தின ஒருவன் அதை இயேசுவின் வாய்க்கு அருகே நீட்டினான் என்பதிலிருந்து, சிலுவை தரையில் நாட்டப்பட்டப் பின்பு, ஒரு ஆள் உயரத்திற்கும் சற்று உயர்வாகத்தான் இருந்திக்கும்.


✝️ஒரு முழுமையான சிலுவை என்பது நான்கு விதங்களில் இணக்கப்படும். 

1.நெடுமரத்தின் நுனியில் குறுக்கு மரத்தை இணைத்தல்.

2.சற்று கீழே இறக்கி இணைத்தல்.

3.சரியாக நடுவில் இணைத்தல்.

4.நடுபாகத்தில் பொருத்தி கூட்டல் (t) குறி போன்று, அல்லது பெருக்கல் (x) குறி போன்று வைப்பார்கள்.

✝️சில சிலுவைகளில் கை மற்றும் கால்களில் அடிக்கப்படும் ஆணிகள் ஊடுறுவுவதற்க்காக ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும்.

✝️சிலுவை என்பது இரண்டு மரத்துண்டுகளால் ஆனது. அவை, ஒன்று: நெடுமரம், இரண்டு: குறுக்கு மரம் என்றும் சொல்லப்படும்.

✝️இயேசுவின் சிலுவை ஒருபோதும் பாலீஸ் செய்யப்பட்டது கிடையாது. அது கரடுமுரடாகத்தான் இருந்திருக்கும். காரணம், அக்காலத்தில், இயேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களும், சிலுவையில் அறைய கட்டளையிட்ட ரோமர்களும் முரடர்களாகத்தான் காணப்பட்டனர்.

✝️ஒரே சிலுவையில் அடிக்கடி அநேகரை அறையும் பழக்கமும் இருந்தது. அதை யாரும் சுத்தம் செய்யாததினால் அது எப்பொழுதும் அசுத்தமாகவும், இரத்தக்கரைகளோடும், நாற்றமெடுக்கக் கூடியதாகவும் இருந்துள்ளது.

✝️சிலுவையில் தொங்குபவரின் முழு எடையையும் அவர்களின் கைகளே தாங்கும் நிலை உருவாவதால் மூச்சுத்தினறலும், சோர்வும், நீரிழப்பும் ஏற்படுவதுடன் இரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். நிர்வாண நிலையில், நெஞ்சடைத்து தாகம் ஏற்படும். ஏதோ சில வார்த்தைகளை சொல்ல விரும்பியும் சொல்ல முடியாமல் சாவு என்னும் மரணத்துடன் போராடுவதே சிலுவை தண்டணையின் உச்சக்கட்ட வேதனையாகும்.

✝️சிலுவையின் மரணம் வழங்கப்படும் இடம் எழும்புகளும், எழும்புக் கூடுகளும், மண்டையோடுகளும், இரத்தக்கரைகள் நிறைந்ததும், ஊருக்கு அப்பால் உள்ள இடமுமாயிருக்கும்.

✝️சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் பொதுவாக அதிலேயே தொங்கிக்கொண்டிருக்கும். அவற்றைத் தின்ன பறவைகள், எலிகள், இன்னும் வேதம் சொல்வதுப் போல சில நேரத்தில் பெரிய பெரிய கழுகும் வந்து தின்னும்.(ஆதி 40:19).

✝️பெருபாலும் மரணத்தண்டனை குற்றவாளிகளின் கழுத்தில் ஒரு பலகையைத் தொங்கவிட்டு, ஊர்வமாக அழைத்துச் செல்வார்கள். அதில் இவன் என்னைக் குற்றத்திற்காக மரணத்தண்டணை அடைந்தான் என்றக் காரணம் எழுதப்பட்டிருக்கும்.

ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தப்பின்னர் தான் பிலாத்துவின் உத்தரவு போர்வீர்களுக்குக் கிடைத்தது(மத் 27:37). அதனால், இயேசுவின் கழுத்தில் பலகை தொங்கவிடப்படவில்லை.

✝️கடந்த காலங்களில் மரணத்தண்டணை மூன்று விதங்களில் தனித்தனியாக வழங்கப்பட்டது;

1.கல்லெறிந்து கொள்ளப்பட்டனர்கள்.

(யோசு 7:25,26). 

2.உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டனர்கள்.

 (சங் 106:18; வெளி 17:16).

3.மரத்திலே தொங்கவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். 

(எஸ்த 2:23; ஆதி 40:19.


✝️கொல்கொதா மலையில் இரண்டு மரத்துண்டுகளையும் இணைத்து இயேசுவைக் கிடத்தி, கால்களைக் கயறு கொண்டு கட்டினப் பின்பு, முதலில் ஒரு கையில் ஆணி அடித்தபோது, சிலுவையின் ஓட்டை வழியே அந்த ஆணி மறுபக்கம் வந்திருக்கும். அடுத்தக் கையில் ஆணி அடிக்க ஓட்டை பொருத்தமாயிராமல் இருக்குமானால், இயேசுவின் கையில் கயறு கட்டி உடலின் மீது ஒரு காலை வைத்து மிதித்துக் கொண்டு கயிற்றை பிடித்து இழுத்து ஓட்டைக்கு நேராக வைத்து மற்றொறு கையில் ஆணியைஅடித்திருப்பார்கள்.

இப்படி கயறு கட்டி இழுப்பதால் தோல்பட்டையின் உள்பகுதிகள் கிழிந்து போகும். அதனால் இன்னும் வேதனை கடுமையாயிருக்கும். அதனால் ஆணிகள் அறைந்த பின்பு,சிலுவையை புறட்டிப்போட்டு, ஆணிகளை வலைத்து விடுவார்கள். அந்நேரத்தில் இயேசுவின் முதுகின் மீது பாரமான மரச்சிலுவை அழுத்திக்கொண்டிருந்திருக்கும்.


✝️எழும்புத்துண்டுகளையும், இரும்பு குண்டுகளையும், இரும்பினாலான கொக்கிகளையும் இடை இடையே இணைத்துப் பிண்ணப்பட்டிருந்த சவுக்கினால் இயேசுவை அடித்திருந்தனர். அப்படி கொடூரமான முறையில் அடித்திருந்ததால் அவரின் தோல் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. இப்படி மகாகொடிய காயத்தோடுதான் இயேசு சிலுவையை சுமந்துக் கொண்டு போனார்.


✝️பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கொல்கொதா மலை வரைக்கும் சிலுவையை தூக்கிக் கொண்டுப் போகும்போது வழியில் மூன்று விசை இயேசு தடுமாறித் தள்ளாடினதாக வரலாறு சொல்லுகிறது.


✝️இந்த இயேசுவைக் கண்டு நாம் பரிதாபப்பட்டு அழ வேண்டும் என்பதற்க்காக அவர் பாடுபடவில்லை. மனிதகுலம் அணைத்தும் பரலோகம் வந்து சேர வேண்டும் என்பதற்க்காகவே அவர் பாடுபட்டார்.


✝️சிலுவை என்பது இயேசுவின் மரணக் கருவியாகவும், கிறிஸ்த்தவர்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.


✝️சிலுவையில் அறையப்பட்ட இயேசு என்று சொல்லி, படத்தை வரைகிறவர்கள் அதையும் அழகாகவே வரைந்து வைத்திருக்கிறார்களே ஏன்? என்று கேள்வி கேட்டபோது, இயேசுவின் மேலுள்ள அன்பினால் என்று சொன்னால் அது பொய் என்று புறிந்துக் கொள்ள வேண்டும்…




 


Friday, 24 February 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -100 || டெஃபிலின் (Tefillin)

 

அறிந்து கொள்வோம்

பகுதி -100


டெஃபிலின்

(Tefillin)

யூதர்கள் ஜெப வேளையில் பயன்படுத்தும் எபிரேய காகித தோல் சூருள்களைக் கொண்ட ஒரு ஜோடி கருப்பு தோல் பெட்டிகள் தான் இவை. இந்த சின்ன பெட்டிக்குள் தோராவின் வார்த்தைகள் அல்லது தேவனுடைய நியாயப்பிரமாண வார்த்தைகள் காகித துண்டில் எழுதி வைக்கப்பட்டு இருக்கும்.

✝️பெட்டிக்குள் இருக்கும் தேவனுடைய வார்த்தைகள் இவை:-

🔯யாத்திராகமம் 13:1-10,

🔯யாத்திராகமம் 13:11-16,

🔯உபாகமம் 6:4-9,

🔯உபாகமம் 11:13-21,

கையில் கட்டப்படும் பெட்டிக்கு (Shel yad)என்றும் தலையில் கட்டப்படும் பெட்டிக்கு (Shel rosh) என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். கை மற்றும் தலையைச் சுற்றி இதை அணிந்து ஜெபிக்கும் போது தங்களுடைய சிந்தனைகள் மற்றும் இருதயத்தை ஒன்றாக இணைப்பதாக கருதுகிறார்கள்.


🔯டெஃபிலினை பயன்படுத்தும்

முறைகள்:

ஒவ்வொரு யூதனும் தங்களுடைய காலை ஜெபத்தின் போது இந்த டெஃபினை அணிந்து ஜெபிப்பது அவர்களின் தலையாயக் கடமையாய் இருக்கிறது. இதை வாரத்தின் ஆறு நாட்களும் தங்களின் காலை ஜெப வேலைகளில் அணிந்து ஜெபிக்கிறார்கள். குறிப்பாக ஓய்வு நாள் மற்றும் பண்டிகை நாட்களில் அவர்கள் இதை பயன்படுத்துவதில்லை.

பெட்டியின் மேல் பகுதியில் ஷிப் என்கிறதான எபிரேய எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு பெட்டி மூன்று கிளை நாடாங்களுடன் மற்றொன்று நான்கு கிளை நாடாங்களுடன் இருக்கும்.


முதலில் தங்களின் ஜெப ஆடைகளை அணிந்த பிறகு தங்களின் டெஃபின் பெட்டியை எடுத்து வைத்துக்கொண்டு முதலில் தலையில் கட்டப் போகும் Shel rosh என்கிறதான பெட்டியை எடுத்து முத்தம் செய்த பிறகு கையில் கட்ட வேண்டியதான Shel yad என்ற பெட்டியை தங்களின் இருதயத்திற்கு அருகில் இருக்குமாறு தங்கள் கைகளில் கட்டி பின்பு நாடாவை கைகளில் சுற்றுவதற்கு முன்பு ஒரு ஜெபம் இப்படி செய்வார்கள்.

ஜெபம்:-

 எங்கள் தேவனே! இந்த முழு உலகத்தை ஆளுகிறவரே! உம்முடைய தெய்வீக கட்டளைகளால் எங்களை பரிசுத்தப்படுத்தி இந்த அணியும் படி எங்களுக்கு கட்டளை கொடுத்து, அருள் செய்ததற்காக உம்மை துதிக்கிறோம். ஆமென்.

இந்த ஜெபத்திற்குப் பிறகு தலையில் அணியக்கூடிய பெட்டியை சரியாக கண்ணுக்கு நடுவில் இருக்குமாறு அதை அணிந்து அதில் நாடாவை பின்னாக விட்டு விடுவார்கள். பின்பு கையில் கட்டப்பட்ட டெஃபிலினின் நாடாவை ஷின் என்ற எபிரேய எழுத்தின் உருவம் வரும்படி கட்ட வேண்டும். பின்பு ஏழு முறை முழங்கையில் அதை சுற்ற வேண்டும் இதை பொதுவாக குத்து விளக்கு கிளைகளை குறிக்கிறதாக சொல்லுகிறார்கள். அந்த நாடாவை கட்டுவதற்கு முன்பு ஒரு ஆசீர்வாதம் வார்த்தைகள் உண்டு, அதை சொன்ன பிறகு நடு விரலில் அதை மூன்று முறை கட்டுவார்கள்.மீதி இருக்கிறதை விரல்களில் சுற்றிக் கொள்வார்கள் இந்த நடு விரலில் கட்டுவது தேவனோடு உள்ள உடன்படிக்கையை அல்லது இணைப்பை கட்டுவதாக சொல்லப்படுகிறது. இதை கட்டி முடித்ததற்கு பின்பு தான் அவர்கள் ஜெபிப்பார்கள்.

தலையில் கட்டப்பட்ட பெட்டியின் பின்பகுதியில் டாலெத்- ד-dalet) என்கிற எழுத்து வடிவத்தையும் கைகளில் ஷின் -Shin ) வடிவத்தையும் விரல்களிலே சுற்றப்பட்டது Ayin என்கிறதான எபிரேய எழுத்துக்களையும் சொல்லுகிறது என்றும் இது el shaddai என்கிற தேவனின் நாமத்தை சொல்லுகிறதாக அவர்கள் கருதுகிறார்கள்.

🔯என் இதை பயன்படுத்தி ஜெபிக்கிறார்கள்:

🌾தேவனுடைய அன்பை நினைவு கூற வேண்டும் என்பதற்காக

🌾தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய வேண்டும் என்பதற்காக,

🌾தேவனுடைய நியாயப்பிரமாணங்களாகிய 613 வார்த்தைகளை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக,

🌾தலையில் மூளைக்கு அருகில் அதை கட்டுவதால் தேவனுடைய வார்த்தைகளை எப்பொழுதும் சிந்தையில் கொண்டிருக்க வேண்டும் என்ற அடையாளத்திற்காக,

🌾 இந்த டெஃபிலினை அணிந்து ஜெபிக்கிற பொழுது தேவன் அவர்கள் அருகில் இருக்கிறதாக உணர்கிறார்கள்.





Notes Taken from 

Brother yakkov Ben Avraham




அறிந்து கொள்வோம் - பகுதி -99 || சிலுவையின் துவக்கம் ||

 

அறிந்து கொள்வோம்
பகுதி -99

சிலுவையின் துவக்கம்



A.சிலுவை என்பது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கிறிஸ்தவ காலத்திற்கும் முந்தினக் காலத்திருந்தே ஒரு மத சம்பந்தமான அடையாளச் சின்னமாக ஏறக்குறைய உலகலாவிய விதத்தில் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது என்று சரித்திரத்தின் மூலம் கருதப்படுகின்றது.

B.சிலுவை என்ற இந்தச் சொல் ‘லத்தின்’ மொழியின் சொல்லான “க்ரக்ஸ் (crux)” என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ஆதலால் இதை “குருக்ஸ் என்றும், “குரூஸ்” என்றும், அழைப்பார்கள்.

C.வெகு காலத்திற்கு முன்பே கிரேக்கர்களின் "பாக்கஸ்"
 தீரு தேசத்தாரின் “தம்மூஸ்’, கல்தேயரின் “பெல்”, ஸ்காண்டினேவியரின் ‘ஓடின்” போன்ற விக்கிரகங்களின் அடையாளச் சின்னமாகவும் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது.

D.சிலுவை என்ற வார்த்தையைச் சொல்ல, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் “ஸ்டாரஸ்” என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். “ஸ்டாரஸ்” என்ற வார்த்தையானது "செங்குத்தானக் கம்பம்" அல்லது "கழுமரம்' என்பதைக் குறிக்கிறதாகும்.

E.தி இம்சீரியஸ் பைபிளின்-அகராதி சிலுவையை "கழுமரம்" என்று சொல்வதை ஒப்புக்கொள்ளகிறது.









Thursday, 23 February 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -98 || சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள் ||

அறிந்து கொள்வோம்

பகுதி -98

சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள்:


அவரை இருவகை குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தினர். ஒன்று மதசம்பந்தமானது. இன்னொன்று அரசு சட்ட சம்பந்தமானது. 


மதத்தின் தொடர்பில் மூன்று விசாரணைகள்


1.அன்னா, 2.காய்பா, ஆகியோர் முன், 

3.சனகெரிப் சங்கம் முன்,


அரச சட்ட சம்பந்தமான விசாரணைக்கள்.


1. பிலாத்து, 2.ஏரோது, 3.மீண்டும் பிலாத்து முன்பு.


அன்னாவும், காய்பாவும், பிரதான ஆசாரியர்களாகக் கூறப்படுகின்றனர். இஸ்ரவேலில் ஒருதடவை ஒரு பிராதன ஆசாரியர்தான் இருக்க முடியும். ஆனால் கால ஒட்டத்தில் ஆண்டவரைவிட்டு அரசியல் கலந்த மதமாக அது மாறியதால் இத்தகைய நிலை ஏற்பட்டது. (மத் 26:57-68; மாற் 14:53-65; லூக் 22:54,63-65: யோவா 18:13-24)


இருவர் முன்பும் விசாரிக்கப்பட்ட பின்பு யூதர்களின் நீதிமன்றமாக கருதப்பட்ட

 70 பேர் அடங்கிய ஆலோசனைச் சங்கத்திற்குக் கொண்டு செல்ல ப்படுகிறார்.அங்கும் விசாரனை நடக்கிறது.

 (மத் 27:1; மாற் 15:1; லூக் 22:66-71)


அதன்பின்பு சட்ட முறையிலான விசாரணைக்காக பிலாத்துவின் முன்பு கொண்டு செல்லப்படுகிறார். ஆலோசனைச் சங்கத்தில் மரண தண்டனையை தீர்ப்பளித்தாலும் ரோம அரசாங்க ஆளுநரான பிலாத்துவின் அனுமதியிருந்தால் தான் நிறைவேற்றமுடியுமென்பதால் அவரிடம் கொண்டு செல்கின்றனர். அரச துரோக குற்றமும், சமூக சமாதானத்தைக் குலைத்தார் என்ற குற்றமும் சாட்டப்பட்டன. அவர் முன் கிறிஸ்து தமது இராஜ்யத்தின் இருப்பிடத்தை விளக்கினார். ரோம சட்டப்படி இயேசு குற்றவாளியல்ல என்று தீர்ப்பிட்டார் பிலாத்து (மத் 27:2, 11-14; மாற் 15:1-5; லூக் 23:1-5; யோவா 18:28-38).


அதன் பின்பு தேவையின்றி அவர் ஏரோதின் முன்பு அனுப்பப்பட்டார். இந்த ஏரோதுதான் தமது சகோதரனின் மனைவியான ஏரோதியாளை மனைவியாக்கியபோது யோவானால் குற்றஞ்சாட்டப்பட்டவரும் யோவானின் தலையைப் பரிசாக்கியவரும் ஆவார்.


பிலாத்து இயேசுவை கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டதால் ஏரோதிடம் அனுப்பி, தம்மை அந்த பழியிலிருந்து விலக்க நினைத்திருக்கலாம் (லூக் 23:7-12). மேலும் அந்த செய்கையால் முன்பு தாம் செய்த ஒரு குற்றத்துக்கு ஏரோது தம்மிடம் கொண்டிருந்த பகையை நீக்கிக் கொண்டார்.


மீண்டும் பிலாத்துவின் முன்பு விசாரணை, சூழ்நிலைக்கு முன் குற்றமற்றவரை குற்றவாளியாக்கினார் பிலாத்து. தற்பாதுகாப்பை எண்ணிப்பயந்து நீதிமானை சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பளித்தார். 

(மத் 27:15-26; மாற் 15:6-15: லூக் 23:13-25; யோவா 18:39-19:6)


நியாயமற்ற விசாரணைகள்:


கிறிஸ்துவின் குற்ற விசராணைகள் பலநிலையிலும் நியாயமற்றவையாக இருந்தன.


1.குற்றம் செய்தவரைப் பிடித்து விசாரிப்பதே நியாயம். ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டு குற்றம் தேடுவது அநியாயம்.

 (யோவா 11:50; மாற் 14:1; 14:55)


2.பொய்சாட்சிகளை ஏற்படுத்தினர்.

 (மத் 26:61)


3.குற்றவாளியின் சொற்கள் கவனிக்கப்படவில்லை. (லூக் 22:67-71)


4.ஆலோசனைச் சங்கம் இரவில் கூடியதே அவர்களது சட்டப்படிதவறு.

 (மத் 26:63-66)


5.பிரதான ஆசாரியனை ஆணையிட வைத்து, அந்த ஆணையைக் கொண்டு தீர்பிட்டது அநியாயம் (மத் 26:63-66)


6. ஆலோசனைச் சங்கம் கூடிய இடம் பிராத ஆசாரியனின் வீடு. முறைப்படி தேவாலயத்துடன் இணைந்திருக்கும் நீதிமன்ற அறையில் கூடிதான் தீர்ப்பிட வேண்டும் (லூக் 22:54).



அவர் குற்றமற்றவரே:


1.குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன். (மத் 27: 4 - யூதாசு)


2.நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்.

(மத் 27:19 – பிலாத்துவின் மனைவி)


3.இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை 

(லூக் 23:4 – பிலாத்து)


4. பாவமறியாதவர்.

(2கொரி 5:21– பவுல்)


5.அவர் பாவஞ் செய்யவில்லை.

 (1பேது 2:22-பேதுரு)


6.அவரிடத்தில் பாவமில்லை.

 (1யோவா 3:5 – யோவான் ) 





 


Wednesday, 22 February 2023

அறிந்து கொள்வோம் பகுதி -97 || சிலுவையில் ஒரே நாளில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் ||

அறிந்து கொள்வோம்

பகுதி -97

சிலுவையில் ஒரே நாளில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்:


✝️சங் 41:9 - காட்டிக்கொடுக்கப்படுவார் (மத் 10:4; 26:49,50)


✝️சகரியா 11:12,13 -முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார்

( மத் 26:15)


✝️சகரியா 11:13 -அந்தக் காசு தேவாலயத்தில் எறியப்படும்.

( மத் 27:5)


✝️சகரியா 11:13 -அந்தக்காசினால் குயவன் நிலத்தை வாங்குவர்.

( மத் 27:7)


✝️சகரியா 13:7 - சீடர்களால் கைவிடப்படுவார்.( மாற் 14:50)


✝️சங்கீதம் 35:11 - பொய்க் குற்றம் சாட்டப்படுவார்.( மத் 26:59,60)


✝️ஏசாயா 53:7 -குற்றம் சாட்டப்படும்போது மௌனமாக இருப்பார்.( மத் 27:12)


✝️ஏசாயா 53:5 - காயப்படுத்தப்படுவார் (யோவா 20:25)


✝️ஏசாயா 50:6 - அடிக்கப்படுவார். துப்பப்படுவார்.( மத் 26:67)


✝️மீகா 5:1- கன்னத்தில் அடிக்கப்படுவார். (மாற் 14:65)


✝️சங்கீதம் 22:7,8 -பரியாசம் பண்ணப்படுவார். (மத் 27:31)


✝️ சங்கீதம் 109:24,25 - மிகவும் தள்ளாடுவார்.(யோவா 19:17; லூக் 23)


✝️சங்கீதம் 22:16; சகரியா 12:10

 கரங்கள் துளைக்கப்படும்.(லூக் 23:33)


✝️ ஏசாயா 53:12- அக்கிரமக்காரருடன் தீர்ப்பிடப்படுவார், அக்கிரமக்காரருக்காகவும்

வேண்டுதல் செய்வார்.

( மத் 27:38 லூக் 23:34)


✝️ஏசாயா 53:3 -சொந்த மக்களால் கைவிடப்படுவார்.( யோவான் 7:5,48) 


✝️ சங்கீதம் 69:4 காரணமின்றி பகைக்கப்படுவார். (யோவான் 15:25) 


✝️சங்கீதம் 38:11- நண்பர் தூரமாவர். (லூக் 23:49 )


✝️ சங்கீதம் 109:25 -மக்கள் தலைகளைத் துலுக்குவர்கள்.( மத் 27:39 )


✝️ சங்கீதம் 22:17- அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பர்.(லூக் 23:35) 


✝️சங்கீதம் 22:15- உடைக்காக சீட்டிடுவர்.

(யோவா 19:23,24)


✝️சங்கீதம் 69:21 -தாகமாயிருப்பார் (யோவான் 19:28) 


✝️சங்கீதம் 69:21 -காடியைக் குடிக்கக் கொடுப்பர். (மத்தேயு 27:34)


✝️சங்கீதம் 22:1 -அவரது கதறல் கேட்கப்படவில்லை. (மத்தேயு 27:46)


✝️சங்கீதம் 31:5 - பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்படைப்பார். (லூக்கா 23:46)


✝️சங்கீதம் 34:20 - எலும்புகள் முறிக்கப்படாது.( யோவான் 19:33)


✝️சங்கீதம் 22:14 - இருதயம் உடைந்தவராவார்.( யோவா 19:34)


✝️சகரியா 12:10- குத்தப்படுவார்.

( யோவான் 19:34)


✝️ ஆமோஸ் 8:9 -அந்தகாரம் தோன்றும் (மத் 27:45)


✝️ ஏசாயா 53:9 - ஐசுவரியவானாக அடக்கம் பண்ணப்படுவார்.(மத் 27:57-60)





நளதம் (Spikenard) // வெள்ளைக்கல் பரணி (Alabaster box) // அறிந்து கொள்வோம் பகுதி -155 //

அறிந்து கொள்வோம் பகுதி -155 நளதம் (Spikenard) மற்றும் வெள்ளைக்கல் பரணி (Alabaster box)  விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்...