எமில் ரிச்சர்டு மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு

மிஷனரிகளின் 

வாழ்க்கை வரலாறு


எமில் ரிச்சர்டு


தரிசனத்தை செயல்படுத்து!!!


சிறுவிதை ஆலமரமாகி அதிலிருந்து வரும் விழுதுகள் மூலம் அந்த மரம் தொடர்ந்து பலன் தரும். ஆம் பிரியமானவர்களே 

சிறு தரிசனங்களும் அப்படி தான்  அது விரிவடைந்துக் கொண்டே செல்லும். ஆண்டவர் தரும் தரிசனங்கள் நிச்சயமாகவே பலுகி பெருகி, பலருக்குப் பயனைத் தரும் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!!!.


எமில் ரிச்சர்டு  ஒரு தரிசனத்தின் சொந்தக்காரரானார். இந்தியாவில் இருந்த ஆதரவற்ற ஏழைக்குழந்தைகளுக்காக 

அவர் உள்ளம் ஏங்கியது தனது உள்ளத்தில் அவர்களை குறித்த தரிசனம் பெற்றார். உடனே அந்த தரிசனத்திற்க்கு தன்னை அர்ப்பணித்து அதை செயல் படுத்தினார்.

1957 -ல் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு நிறுவனத்தை ஜெர்மனி தேசத்தில் இருந்தே ஆரம்பித்து இந்தியாவில் கால் பதித்து தான் வேலையை சிறப்பாக செய்தாரா்.

இன்று இந்தியாவில் 70க்கும் மேற்பட்டட இடங்களிலும், அயல்நாடுகளிலும் தன் தரிசனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனத்தினால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள்  வாழ்வின் உயர்ந்த நிலைக்கு வந்து உள்ளார்கள்.ஆயிரமாயிரம் மாணவ, மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்றி, சுடர்விட்டு பிரகாசிக்கும் ஒரு கலங்கரை விளக்காய் திகழ்கிறது "கிறிஸ்டியன் மிஷன் சர்வீஸ்"

(CMS) என்ற நிறுவனம்.

உண்ண உணவிற்குக் குறைவில்லை; உடுக்க உடைக்குப் பஞ்சமில்லை; தங்கும் இடத்திற்கோ அளவில்லை; உலகியல் அறிவுக்கு பள்ளிகள் உன்டு, 

உன்னதரைப் பற்றி அறிவதற்கு அனுதினமும் காலை மாலை தியானங்கள் உண்டு. விசுவாசத்தில் நிலைத்து நிற்க்க  ஜெப ஜீவியங்கள் உண்டு ஆக மொத்தத்தில் C.M.S.

ஒரு "குட்டிப் பரலோகம்” என்றே சொல்லலாம்.


அர்ப்பணித்த தேவ உழியர்களால் ஆச்சரியமான தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர், இன்றும் உருவாகிக்கொண்டும் இருக்கின்றனர். 

எமில் ரிச்சர்டு இந்திய ஏழைகளின் கனவை நனவாக்கினார். பாதை அறியாத மக்களுக்குப் பாதையைக் காட்டி, அவைகளில் எப்படி நடக்க வேண்டும் என்ற பக்குவத்தையும் சொல்லி கொடுத்தார்.இவரால் இவரின் தரிசனத்தினால் இளம் இதயங்கள் இன்பமுடன் தங்கள் வாழ்வைத் தொடர்கின்றன………


எமில் ரிச்சர்டு என்ற விதை

 (தரிசனம்) ஆலமரமானது.


அன்பானவார்களே!!?

பிறர் வாழ்வை உயர்த்த நம்முடைய சிறு முயற்சி தான்  என்ன? என்ற கோள்விக்கு நாம் பதில் என்ன?








Post a Comment

2 Comments

  1. Nan padithadhum oru CMS school lil than. Adharku church missionary society endru solvargal. Darisanathudan seyalpadum missionary ooliam than miga sirappana ooliyam.

    ReplyDelete