பிரசங்கி 12 -ன் விளக்கம்அறிந்து கொள்வோம் பகுதி -53

 


அறிந்து கொள்வோம்

பகுதி -53


பிரசங்கி 12 -ன் விளக்கம்


இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. (பிரசங்கி 12:7)


வாலிப பருவத்திலேயே சிருஷ்டிகரைத் தேட வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது.


பிரசங்கி 12:3-6 வரை உள்ள வசனங்களின் விளக்கம் பற்றி ஒரு பார்வை..,


1.மழைக்குப்பின் மேகங்கள் திரும்ப திரும்ப வராததற்கு முன்னும்


அதாவது வயோதிபத்தில் ஒரு வியாதி போனால் மற்றொன்று வரும். அப்படிப்பட்ட நாட்கள் வருவதற்கு முன்னும்.


2.வீட்டுக்காவலாளிகள் தள்ளாடி 


அதாவது கால்கள் இரண்டும் தள்ளாடி

போவதற்கு முன்னும்,


3.பெலசாலிகள் கூனிப்போய் 


அதாவது உடலை நிமிர்ந்து நிற்கச்செய்யும் முதுகெலும்பு வளைந்து கூன் விழும் முன்னும்,


3.எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து 


அதாவது நாம் உண்ணும் உணவு பற்களால் நன்றாக அரைக்கப்பட்டு வயிற்றுக்குள் செல்கிறது. முதுமையில் அநேக பற்கள் விழுந்து விடும். இப்படிப்பட்ட நாள் வரும்முன்னும்,


4.பலகணி வழியாய் பார்க்கிறவர்கள் இருண்டு போகிறதற்கு முன்னும் 


அதாவது கண்கள் இருளடைந்து பார்வையற்று போகிற வயோதிக காலம் வருவதற்கு முன்னும்,


5.எந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெரு வாசலின் கதவுகள் அடைப்பட்டு 


அதாவது காது கேட்பது குறைய தொடங்கு முன்னும்,


6.குருவியின் சத்தத்திற்கும் எழுந்திரிக்கவேண்டியதாகி- 


அதாவது வயதானவர்கள் ஒரு சிறு சத்தத்திற்கும் தூக்கம் கலைந்து விடுவர். இப்படிப்பட்ட நிலை வருவதற்கு முன்னும்,


7.கீத வாத்திய கன்னிகைகளெல்லாம் அடங்கி போகாததற்கு முன்னும் - 


அதாவது தொண்டை வறண்டு, சப்தம் ஒடுங்கி ஒலி எழுப்பும் தொண்டையின் உள் உறுப்புகள் அடங்கி போவதற்கு முன்னும்,


8.மேட்டிற்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி - 


அதாவது வயதானவர்கள் உயரமான சாலையை பார்த்தாலே ஏறிச்செல்ல பயப்படுவார்கள். விழுந்து விடுவோமோ, விபத்து வந்து விடுமோ என்று பயங்கள் தோன்றும். இப்படிப்பட்ட நாட்களுக்கு முன்னும்,


9.வாதுமை மரம் பூ பூத்து -


அதாவது வாதுமை மரம் வெள்ளை வெளேறென பூ பூப்பதைப்போல முடியெல்லாம் நரைப்பதற்கு முன்னும்,


10.வெட்டுக்கிளியும் பாரமாகி, பசி தீபனமும் அற்று போகாததற்கு முன்னும்-

 

அதாவது வயது முதிரும்போது, ஒரு சிறு காரியமும் பாரமாகி விடும். அதோடு பசியும் மிகவும் குறைந்து விடும். அப்படி ஆவதற்கு முன்னும்,


11.வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு – 


அதாவது நரம்புகளெல்லாம் தளர்ந்து போய், 


12.பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி 


அதாவது பொற்கிண்ணியாகிய இருதயம் நசுங்கி சாவு வருவதற்கு முன்னும்..


இப்படி மண்ணாண நம் சரீரம் பூமிக்குள் புதைக்கப்பட்டு ஆவி மறுபடியும் தேவனிடம் போகும் முன்பே நம் வாலிப பிராயத்திலே தேவனை நாம் நினைத்து அவரை ஏற்று கொள்வோமாக.


வாலிபர்களே இதுவே சாரியான பருவம் எனவே வாலிப பிராயத்தில் தேவனைத் தேடுங்கள்……


Post a Comment

1 Comments