Saturday, 15 May 2021

கொர்பான் அறிந்து கொள்வோம் பகுதி -36

 அறிந்து கொள்வோம்

பகுதி -36



கொர்பான் 

 Corban 



Mark: 7:1-13

கொர்பான்” என்னும் சொல் 

அரமேய பாஷை.

 இது Korban, Qorban, Corban என்று குறிப்பிடுகின்றன.


இச்சொல் கர்த்தருடைய சமூகத்தில் படைக்கப்பட்ட அல்லது ஏறெடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் பொதுவாக குறிக்கிறது உதாரணம் லேவி 1:2; நெகே:10:35;13:31 போன்ற வசனங்கள் மூலம் அறியலாம்.

 “கொர்பான்” என்னும் அரமேய சொல் என்பது “அண்மையில் கொண்டு வரப்பட்ட பொருள்” என்று அர்த்தப்படும். அதாவது, “கர்த்தருடைய சமூகத்தில் காணிக்கையாக கொண்டு வரப்பட்டவை” என்ற கருத்து.


பின் நாட்களில் இது இப்படி மாறிப் போயிற்று...


இயேசுவின் நாட்களில் வாழ்ந்து யூதர்களின் வாழ்க்கை முறை மாற்றத்தினால் இவ்வழக்கம் வேறுவிதமாக மாறிப்போனது. அதாவது, வயது முதிர்ந்த பெற்றோர்களை தங்களோடு வைத்து பராமரிக்க மனதில்லாமல், அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல், அதற்குப் பதிலாக கர்த்தருக்கு காணிக்கை கொடுப்பது போன்ற, ஒரு குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து ஒதுக்கி விடும்படி, பரிசேயர்கள் சுயாதீனமாக உருவாக்கிக் கொண்ட

 ஒரு முறைமைக்கு பெயர்தான்

 “கொர்பான்” என்பது.

இப்படி அவர்கள் தங்கள் பெற்றோருக்கு கொர்பான் என்ற முறைமையின் படி காணிக்கை செலுத்திவிட்டு, பெற்றோர்களை ஓரங்கட்டி, கைகழுவி விட்டுவிட்டு தங்களின் பெற்றோர்களின் பிக்கல்பிடுங்கல்கள் இல்லாமல், அவர்கள் மீது எவ்வித உரிமையும் அக்கரையும் எடுத்துக் கொள்ளாமல் அவர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் கொண்டு, சுதந்திரமாய் வாழ்ந்தார்கள்.

இது அவர்களின்  இருதயக் கடினத்தை காட்டுகிறது. இதைத்தான் ஆண்டவர் இயேசு கடிந்து கொண்டார்.


மாற்கு: 7:9-13  “பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்பபடிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதை கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தில் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்களும் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்”.


வயதான பெற்றோருக்கு பணம் 

மட்டுமே அவசியம் இல்லை,பெற்ற பிள்ளைகளின் பாசம் தேவை, அரவணைப்பு தேவை,அதாவது

பிள்ளைகள் தங்கள் அருகில் இருக்க அதிகம் விரும்புவார்கள்.  பெற்றோர்கள் மரணிக்கும் வரைக்கும் அவர்களுக்கு செய்ய வேண்டிய சகல விதமான பராமரிப்புகளை பிள்ளைகள் செய்தே ஆக வேண்டும். 


கடமை தீர்ந்தது என்று பிள்ளைகள் தங்கள் பெற்றோரை ஒதுக்கி விடக்கூடாது. பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்த்து விட்டது போலவே பிள்ளைகளும் தங்கள் பெற்றோரை இறுதிவரை வைத்து பராமரிப்பது தான் தேவநீதி. 


பரிசேயர்கள் சுயமாக ஏற்படுத்தின கொர்பான் என்ற  காணிக்கை எல்லாம் தேவனுக்கு  முன்பாக நீதியாகாது என்பதை நாம் ஒருநாளும் மறுக்க முடியாது…


1 comment:

சிலுவை வாசகம் (Titulus Crucis) -INRI - // சிலுவை தியானம் //

சிலுவை வாசகம் (Titulus Crucis)  Iesus Nazarenus Rex Iudaeorum (INRI) சிலுவை வாசகம் (Titulus Crucis) - முரண்பாடா அல்லது சத்தியத்தின் முத்திரை...