மெரொதாக் அறிந்து கொள்வோம் பகுதி-35

 அறிந்து கொள்வோம்

பகுதி-35



மெரொதாக்

 (Merodach)


"மெரொதாக்" என்றால் "மரணம்" அல்லது "அடித்து கொல்லப்படுதல்" என்று அர்த்தம்.


இது ஒரு பாபிலோனிய தெய்வத்தின் பெயர் "மார்துக்" என்ற மறு பெயரும் இந்தத் தெய்வத்திற்கு உண்டு.

பாபிலோனில் இந்தத் தெய்வத்துக்குப் பெரியதொரு கோவில் கட்டப்பட்டிருந்தது.


பாபிலோனியர்கள் பல தேவர்களை வணங்கி வந்தார்கள். அத்தேவர்களில் முக்கியமானவர்கள் வான தேவன், ஆகாய தேவன், சூரிய தேவன், சந்திர தேவி, காம தேவி முதன்மையான தெய்வங்கள்.இதற்கு பெரிய பொற் சிலைகளும் பொக்கிஷங்களும் நிறைந்த ஆலயங்களில் அவர்கள் ஏராளமான காணிக்கை, பலிகள் முதலானவைகளை செலுத்தி, அதிக ஆரவாரத்துடன் ஊர்வலம் வந்து திருவிழாவை நடத்தி அந்த தெய்வங்களை வணங்குவார்கள்.


பாபிலோன் நகரத்தில் 

முக்கிய தெய்வம். 

பாபிலோனின் ராஜாவும் சட்டத்தொகுப்பை உருவாக்கியவருமான ஹமுராபி,பாபிலோன் நகரத்தை பாபிலோனியாவின் தலைநகரமாக்கிய பின்பு இந்த மெரொதாக்குக்கு (அதாவது மார்புக்கு) அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்கள். 

கடைசியில், முன்பு இருந்த மற்ற பாபிலோனிய தெய்வங்களுக்குப் பதிலாக, இது அதிக 

முக்கியத்துவம் பெற்றது.

பிற்காலத்தில், மெரொதாக் (அதாவது, "மார்துக்") என்ற பெயருக்குப் பதிலாக "பேலு" ("எஜமான்") என்ற பட்டப்பெயர்

இதற்கு பயன்படுத்தப்பட்டது. மெரொதாக் பொதுவாக, பேல் என்று அழைக்கப்பட்டது. (எரே 50:2)


எரேமியா 50:2 வசனத்தில் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனம்

பாபிலோனிய தெய்வங்களுக்கு 

எதிராக சொல்லப்பட்டுது…..


"பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப் போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம் பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம் பண்ணுங்கள்"

என்ற வசனம் அப்படியே 

கோரேசுவினால் பாபிலோன் பிடிக்கப்பட்டு அதன் பெரும்பகுதி அழிக்கப்பட்டபோது, இந்தத் தீர்க்கதரிசனம்  அப்படியே நிறைவேறியது.



மெரொதாக் பற்றிய சில தகவல்கள்


பாபிலோன் பிரதான கோயில் அருகே இருந்த மார்துக் சிலையானது முழுக்க முழுக்க தங்கமாகவே இருந்திருக்கிறது. அதன் மொத்த 40,000 பவுண்டு என்கிறார்கள். 


இந்த "மார்துக்" என்ற பாபிலோனிய தெய்வத்தை தான் தமிழ் வேதாகமம், "மெரொதாக்" எனக் குறிப்பிடுகிறது. பாபிலோன் பிடிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட காலத்தில், இந்த மெரொதாக் எனும் 40 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள சிலையானது, அதன் தங்கத்துக்காக நொறுக்கப்படும் என்பதை நம் தேவன் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் முன்னறிவித்திருந்தார்.

தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட காலம் கி.மு.710. அது நிறைவேறிய காலம் கி.மு.539. இடையில் 171 வருடங்கள். அதாவது, மெரொதாக் சிலை நொறுக்கப்படும் என்பதை தேவன் 171 வருடங்கள் முன்பு தன்னுடைய தீர்க்கதரிசி மூலம் அறிவித்திருந்தார். அதாவது, பாபிலோனை உலக அரங்கில் உயர்த்திய நேபுகாத்நேச்சார் வரலாற்றில் வெளிப்படுவதற்கு முன்பாகவே இந்த தீர்க்கதரிசனம் உடைக்கப்பட்டுள்ளது.


எரேமியா 50:2 பாபிலோன் பிடிபட்டது, பேல் வெட்கப்பட்டது, மெரொதாக் நொறுங்குண்டது, அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது, அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள், இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம் பண்ணுங்கள்.


மேற்கண்ட வசனத்தில் மெரொதாக் என்ற மார்துக் பற்றி மட்டுமே சொல்லப்படவில்லை. சிலைகள் -விக்கிரகங்கள்….| என்று மேலும் வார்த்தைகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. மெரொதாக் அதன் முழு எடையும் தங்கமாக இருந்ததால் நொறுக்கப்பட்டது. மற்ற விக்கிரகங்களும் அதே காரணத்திற்காக நொறுக்கப்பட்டன என்பது வரலாறு.



பாபிலோன் ராஜாக்கள் தங்கள் பெயரோடு கூட மெரொதாக் என்ற தங்கள் தெய்வத்தின் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்ளுவார்கள்.


நேபுகாத்நேச்சார்க்கு பிறகு அவன் குமாரன்"ஏவில் மெரொதாக்" என்பவன் ஆட்சிக்கு வந்தான்.  

இவன் 2 ஆண்டுகள் ஆளுகை செய்தான்.(கி. மு. 562-560)

இவன்  தன்னுடைய ஆட்சியில்  யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுக்குக் கருணை காட்டினான். என்பதை நாம் அறிவோம்

(2 இரா. 25:27-30).

இவனை தான் வரலாற்றில் ஏமெல் மார்டுக் என்று குறிப்பிடுகிறார்கள்.

இது அவருடைய பாபிலோனியப் பெயர்.


மெரோதாக்பலாதான்

இது ஒரு பாபிலோனிய ராஜாவின் பெயர் (ஏசாயா 39:1; 2 இரா. 20:12).


யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து அற்புத சுகம் பெற்றதை கேள்விப்பட்டபோது, இவன் அவனுக்குக் கி. மு. 721 இல் கடிதத்தையும், வெகுமானங்களையும் அனுப்பினான்.


எசேக்கியா அவனுக்கு எருசலேம் ஆலயத்தில் பொக்கிஷ சாலையில் இருந்த எல்லாவற்றையும் காண்பித்தான். இதற்காக தேவன் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் எசேக்கியாவை கடிந்து கொண்டார். பின்னாட்களில் அவை எல்லாமே பாபிலோனுக்கு கொள்கையாகக் கொண்டு போகப் படும் என்பதையும் முன்னறிவித்தார்…..






Post a Comment

1 Comments