மேவிபோசேத்து அறிந்து கொள்வோம் பகுதி - 34

அறிந்து கொள்வோம்

பகுதி - 34



மேவிபோசேத்து 


"மேவிபோசேத்" என்றால்

"அருவருப்புக்களை அழித்துப்போடுபவன்”  என்று அர்த்தமாம்.


2 சாமு. 4:4

இவன் சவுல் ராஜாவின் குமாரனாகிய யோனத்தானின் குமாரன்.

கில்போவா மலையில் சவுல் ராஜாவும் அவரது குமரன் யோனத்தானும் கொல்லப்பட்டபோது, இந்த மேவிபோசேத்திற்க்கு ஐந்து வயது இருக்கும். இந்த துர் செய்தி குறித்து கேள்விப்பட்ட தாதி  மேவிபோசேத்தை தப்புவிக்க அவனை எடுத்துக்கொண்டு கிபியாவிலிருந்த அரண்மனையை விட்டு ஓடிப் போனாள்.அப்படி 

அவசரத்தில் அவள் ஒடும் போது  தடுக்கி விழுந்தால் அவள் கையில் இருந்த 5 வயது சிறுவன் கீழே விழுந்தான். அவனுடைய இரண்டு கால்களும் முடமாகிவிட்டது அவன் வளர்ந்த பிறகும் அவனால் நடக்க முடியவில்லை.

 (2 சாமு. 19:26),

அவன் கீலேயாத்தின் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் வைத்து வளர்க்கப்பட்டான் 

(2 சாமு. 9:4).


தாவீது காட்டிய இரக்கம்


அரியானை ஏறிய சில ஆண்டுகளில் தாவீது ராஜா இஸ்ரவேல் தேச எதிரிகளை ஒடுக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு யுத்தத்தில் கவனமாக இருந்தார். பின்னர் தாவீது தன் நண்பன் யோனத்தானின் குடும்பத்தைக் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.

அவன் மாகீரின் வீட்டில் இருப்பதை அறிந்து அங்கே தாவீது தனது சேவகர்களை அனுப்பி, மேவிபோசேத்தையும், அவனுடைய மகனையும் எருசலேமில் தன்னோடு தங்கும் படி அரண்மனைக்கு அழைத்து வரும்படி செய்தார்.

சவுலின் நிலங்கள் அவனுக்குத் திரும்பக் கிடைக்கும் படி செய்தான். நாள்தோறும் அவன் தன்னுடன் பந்தியிருக்கும்படி தயவு காட்டினான் (2 சாமு. 9:13).



தாவீது தன் குமாரனாகிய அப்சலோம்

தனக்கு விரோதமாக 

எதிர்த்துக் கலகம் செய்ததின் காரணமாக எருசலேமை விட்டு வெளியேறிய வனாந்திரத்திற்கு போன போது, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா தாவீதை சந்திக்க வந்து தாவீதுவிடம் மேவிபோசேத் குறித்து தவறாக சொன்னான்.

"இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்ப பண்ணுவார்கள்" என்று  மேவிபோசேத்  சொன்னதாக

தாவீதிடம் சொன்னான்.

 (2 சாமு. 16:3).

இதை அறிந்த தாவீது கடும்

கோபம் கொண்டு மேவிபோசேத்துக்கு இருப்பது எல்லாம் சீபாவுக்கு உரியதாயிற்று என்று சொன்னார்.


தாவீது  வனாந்தரத்தில் இருந்து எருசலேமுக்குத் திரும்பிய பிறகு மேவிபோசேத் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அறிந்து

இது  சீபாவின்  சதி என்று உறுதி 

செய்த பின்பு  (2 சாமு. 19:24-30) சீபாவுக்குரிய நிலங்களில் ஒரு

பகுதியை மேவிபோசேத்க்கு  திரும்பக் கிடைக்கும் படி செய்தார்.


தாவீதுக்குப் வந்த எல்லா பிரச்சினைகள் மத்தியில் மேவிபோசேத்து தாவீதுக்கு மிகவும் உண்மையுள்ளவனாக இருந்தான். தனது முற்பிதாக்களின்  ராஜ்யம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை.


தப்பி பிழைத்த மேவிபோசேத்


சவுல் கிபியோனியரைக் கொன்ற படியால் அவர்கள் சவுலின் வம்சத்தை முற்றிலும் அழிக்கும்படி வைராக்கியமாக இருந்தார்கள்.இதையறிந்த தாவீது மேவிபோசேத்து பிழைக்கும்படி செய்தான் (2 சாமு. 21:7).

 மேவிபோசேத்து மேரிபால் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான்.

 (1 நாளா. 8:34).


ரிஸ்பாள் என்ற சவுலின் மறுமனையாட்டி அவனுக்குப் பெற்ற இரண்டு குமாரர்களில் ஒருவனுக்கு மேவிபோசேத்து என்று பெயர் இருந்தது. 


(2 சாமு. 21:8-9 ன் படி) இவர்கள் இருவரும் கிபியோனியரால் கொலை செய்யபட்டார்கள்.





Post a Comment

0 Comments