முட்டை அறிந்து கொள்வோம் பகுதி -33

 அறிந்து கொள்வோம்

பகுதி -33



முட்டை 


முட்டை எபிரேய மொழியில் "beytsah"என்று அழைக்கப்படுகிறது. இதற்க்கு "வெண்மை" என்று அர்த்தம்.


"முட்டை" என்பது பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும். கருக்கட்டிய சூல் முட்டையாக இடப்பட்டு தாயின் உடலுக்கு வெளியே மீதி வளர்ச்சி நடைபெற்று முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவருகின்றன. முட்டை பொரித்து குஞ்சவதற்கு சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து 

இவ் வெப்பநிலையை 

முட்டைக்கு கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும்.


உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்கள்

(ஏ, பி, சி, டி, இ) முட்டையில்  உண்டு. 

தைதாக்சின் சுரக்க தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் பாஸ்பரஸ் முட்டையில் இருக்கிறது.

காயங்களை குணமாக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவைப்படும் துத்தநாகம் என்னும் தாதும் முட்டையில் உள்ளது.


கோழி முட்டையின் உள்ளமைப்பு:

1. முட்டை ஓடு

2. புறமென்றோல்

3. உள்மென்றோல்

4. Chalaza

5. வெண்ணி (வெளி)

6. வெண்ணி (இடை)

7. மஞ்சட்கருவாக்கிக்குரிய மென்றோல்

8. Nucleus of pander

9. சத்துமத்து/கெழுமைத் தட்டு(Germinal disk)

10. மஞ்சள் கரு

11. வெண்கரு

12. உள்வெண்ணி

13. Chalaza

14. வளி அறை

15. புறத்தோல், தோல் மேல் படலம்.


ஐந்தாம் நாளில் தேவன் பூமியில் பறவைகளை சிருஷ்டித்தார்.

ஆதி 1:20-21


ஆதி. 1:22 -ல் 

தேவன் அவை௧ள் பூமியில் பெருகக்கடவது என்றார்.

அவைகள் எப்படி பெருகி பூமியை நிரப்புகிறது என்றால் பறவைகள் பாதுகாப்பான கூட்டைக் கட்டி, முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொறித்து, அவைகளுக்கு உணவளித்துப் பாதுகாப்பை கொடுக்கின்றன. ஏசா 34:15.


ஆனால் வேதாகமத்தில் தீக்கோழி மட்டும் தரையில் முட்டையிட்டு, அது வெப்பத்தால் பொறிக்கும் படி செய்யும். எதிரிகள் யாராவது விரட்டும் போது தன்னுடைய முட்டைகளை அப்படியே விட்டு விட்டு ஓடிவிடும்.அந்த முட்டைகள் “காலில் மிதிபட்டு உடைந்து விடும் என்பதையும், காட்டு மிருகங்கள் அவைகளை மிதித்து விடும் என்பதையும்  அது சிறிதும் நினைக்கிறதில்லை”

யோபு 39:15

அவைகள் குஞ்சுகளைக் காக்காத கடின குணமுள்ளது என்கிறாா்கள்.


வேதாகமத்தில் முட்டை


உபா. 22:6 - ல்

தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டை களின்மேலாவது அடைகாத்துக் கொண்டிருந்தால்,

 நீ குஞ்சுகளோடு தாயையும் பிடிக்கலாகாது” என்று தேவன்  இஸ்ரவேலருக்கு கட்டளை கொடுத்திருந்தாா். 


லூக்கா 11:12 - ன் படி

வேதாகம நாட்களில் முட்டை ஒரு முக்கிய உணவாக கருதப்பட்டது. 


உருவகத்தில் முட்டைகள்


"விட்டு விடப் பட்ட முட்டைகள்"குறித்து 

ஏசா 10:14- ல் சொல்லப்பட்டுள்ளது. சிறுமைப்பட்டவர்களை ஒடுக்கும் ஒருவன் அவர்களுக்கு சென்று இருக்கிறதை  சுருட்டி கொள்ளுவதற்கு உருவகமாக 

இது சொல்லப்பட்டிருக்கிறது. 

இப்படிப்பட்டவர்களை தேவன் நியாயந்தீர்க்க போவதாகத்  அறிவித்திருக்கிறார்.


அக்கிரமக்காரர்கள் கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாக்கிறார்கள், அவைகளை நெருக்கினால் விரியன் புறப்படும் என்று ஏசாயா 59:5ல் சொல்லப்பட்டுள்ளது.


ஒரு தகப்பனிடம் அவனுடைய மகன் "முட்டையைக் கேட்டால்,

அவனுக்குத் தேளைக்

கொடுப்பானா?” என்று

லூக்கா 11:12 ல் இயேசு

ஒப்பிட்டுக் கேட்டிருக்கிறார்.

 

தனிப்பட்ட வெள்ளைக்கருவில் சுவை இருக்காது என்று யோபு 6:6 

யோபு சொல்லுகிறாா்.

ஏன் இப்படி சொல்ல 

வேண்டும் என்றால் யோபு தன்னுடைய நண்பர்களில் ஒருவனாகிய

எலிப்பாசின் வார்த்தைகள் அர்த்தமில்லாதாய்  இருப்பதை சுட்டிக்காட்ட இப்படிச் சொன்னார்.


அநியாயமாய் ஐசுவரியத்தை சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும்,குஞ்சு பொரிக்காமல் போகிற கவுதாரிக்குச் சமானமாய் இருக்கிறான்; அவன் தன் பாதி வயதில் அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாக இருப்பான்” என்று எரேமியா 17:11 சொல்கிறது. 



Post a Comment

1 Comments

  1. Muttaiyai patriya seithiyai vida muttai sappiduvadhudhan udalukku nalladhu. just joking Bro

    ReplyDelete