பெசலெயேல் அறிந்து கொள்வோம் பகுதி -11

 


    அறிந்து கொள்வோம்

பகுதி -11


பெசலெயேல் - (BEZALEEL)


“பெசலெயேல்” என்னும் எபிரெய பெயருக்கு “தேவனுடைய (எல்) நிழலில்” "in the shadow (that is, protection) of God" என்று பொருள்.


பழைய ஏற்பாட்டில் “பெசலெயேல்” என்பவர், ஆசரிப்புக் கூடாரத்தை வடிவமைத்துக் கட்டியவர்!  

(யாத் 36:1-2), 


தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகோலியாப் என்பவரும்,  பெசலெயேலும் ஆசரிப்புக் கூடார கட்டுமான வேலைகளையும் அதற்குரிய பணிமுட்டுக்கள் செய்யப்படும் வேலைகளையும்

மேற்பார்வையிட்டார்கள்.


குறிப்புக்கள்:


கர்த்தர் பெசலெயேலைப் பேர் சொல்லி அழைத்தார்! (யாத் 31:2)


தேவ கட்டளைகளை நிறைவேற்றும் ஞானமும் புத்தியும் பெற்றிருந்தார்! (யாத் 36)


*மோசே என்ற தேவமனிதன் வழியாகச் சொல்லப்பட்ட கட்ட்ளைகளுக்கு அப்படியே தன் திறமைகளை அர்ப்பணித்தவர் இந்த பெசலெயேல்!*


*நம் திறமைகள், தாலந்துகளை தேவனுக்காகப் பயன்படுத்தினால்தான் அவற்றிற்கு மதிப்பு!*



*Grace India Ministries*


Post a Comment

0 Comments