வேதத்தில் உள்ள சொத்துக்கள் விற்பனைச் சட்டம் , அறிந்து கொள்வோம்-9

 அறிந்து கொள்வோம்-9


வேதத்தில் உள்ள சொத்துக்கள் விற்பனைச் சட்டம்



 நியாயாதிபதிகளின் காலத்தில் வாழ்ந்த எபிரேயர்களுக்கு நடுவில் தங்கள் சொத்துக்களை 

விற்பதற்கு தனிச் சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 

ஒரு எபிரேயன் தன் சொத்துக்களை தான் விரும்பிய யாரிடத்திலும் விட்டுவிட முடியாது. தன் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தன் சொத்துக்களை அவன் விற்க வேண்டிவந்தாலும் முதலாவது அவன் தன் நெருங்கிய உறவினரில் சொத்துக்களுக்குப் பாத்திரமுள்ளவன் எவனோ அவனிடத்தில்தான் விற்க வேண்டும். அவன் அதை வாங்கிக்கொள்ளத் தயாரா இல்லை என்றால் அவன் தன் காரியத்தை ஊரார் முன்பு வெளிப்படுத்த வேண்டும்.



நெருங்கிய உறவினர் மறுத்துவிட்டால் அடுத்தாற்போல அவன் கோத்திரத்தைச் சேர்ந்த ஆட்கள் யாராவது அதை வாங்க விரும்புகிறார்களா என்று விசாரிக்க வேண்டும். அப்படியும் அவனுடைய கோத்திரத்தான் அதை வாங்க முன்வரவில்லை என்றால் மாத்திரம் அதை மற்றைய கோத்திரத்தாரிடம் விற்க வேண்டும். ஆனால் எது எப்படியானாலும் எபிரேயர்களின் சொத்துக்கள் எபிரேய கோத்திரத்தாருக்கு தவிர வேறு யாருக்கும் விற்கப்படக் கூடாது. அந்நியர்கள் தங்கள் நடுவில் குடி வந்துவிடாமலும், சுதந்திரம் பெற்றுவிடாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக

 இந்த முறையை நடைமுறைப்படுத்திய இருந்தார்கள். 


சொத்து விற்பவனிடத்தில் சொத்தை வாங்கப் பாத்தியப்பட்ட நெருங்கிய உறவினன் அதை வாங்க மறுத்தால் தன் மறுப்பை ஊரார் முன்பாக வெளிப்படுத்த வேண்டும். ஊரின் பெரியவர்கள் நகர வாசலில் கூடியிருக்க, அவர்கள் முன்னிலையில் தன்னுடைய காலணிகளை களைந்து வைத்து விட்டுப் போக வேண்டும். அப்படி வைத்துவிட்டுப் போன காலணியை விற்பவனின் கோத்திரத்தைச் சேர்ந்த யார் தன் கைகளில் எடுக்கிறார்களோ அவர்களே அந்தச் சொத்தை வாங்கிக் கொள்ள விரும்புகிறவர் என்று அர்த்தம். இதைப் போன்ற ஒரு சம்பவம்தான் ரூத்தின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது…..




Post a Comment

0 Comments