Daily Devotion - ஏன் தூரமாயிருக்கிறீர்

 Daily Devotion


ஏன் தூரமாயிருக்கிறீர்


    (சங்கீதம் 22:1-31)


"என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்ட எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீா்!"

சங்கீதம் 22:1


சங்கீதம் 22 முழுவதும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களே. அவருடைய பாடுகளையும் மரணத்தையும் பக்தனாகிய தாவிது முன்னறிவித்தான். இவ்வாறு முன்னறிவிக்கும்போது, சிலுவையில் அறையப்படப்போகும் இயேசுவின் பாடுகளை அவன் வர்ணித்து எழுதுகிறான். பிதாவாகிய தேவன், இயேசுவைவிட்டுத் தூரமாயிருக்கப்போவதையும் எழுதுகிறான்.


இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது "என் தேவனே, என் தேவனே ஏன் | என்னைக் கைவிட்டீர்" என்று கதறினார். 

அவர் பட்டபாடுகளில் பிதாவினுடைய முகம் மறைக்கப்பட்டபோது, இயேசு இவ்வாறு கதறினார். இதற்குக்காரணம் என்ன உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கும்படியாக வெளிப்பட்ட தேவகுமாரனாகிய  இயேசு, மனுக்குலத்தின் பாவங்களுக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்து, சிலுவையில் அறையப்பட்டபோது, மனுக்குலத்தின் பாவங்கள் அனைத்தும் அவர் மேல் சுமத்தப்பட்டது. மனிதர்களின் பாவங்களை அவர் தன் மேல் ஏற்றுக்கொண்ட போது, பிதாவின் முகம் அவருக்கு மறைக்கப்பட்டது. எனவே இயேசு இவ்வாறு கதறுகிறார்


அதுவரைக்கும் நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறினவர். தற்பொழுது 

"ஏன் எனக்குத் தூரமாயிருக்கிறீர்" என்று கூறுகிறார்.

 தேவனுடைய பிள்ளையே! இதன் மூலமாக நாம் கற்றுக்கொள்ளவேண்டிய காரியம் ஒன்றுண்டு, நாம் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கிறோமோ, அப்பொழு தெல்லாம் அந்தப் பாவம் தேவனை நம்மைவிட்டுத் தூரமாக்குகிறது; தேவனுடைய உதவியைத் தடுக்கிறது


தேவன் நமக்கு உதவி செய்ய வேண்டுமானால் நாம்

 பரிசுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. எனவே தேவப்பிள்ளைகளாகிய நாம் பரிசுத்தத்தைக் குறித்து மிகவும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். பரிசுத்தமாய் இருந்தால்தான் தேவன் நமக்கு உதவி செய்வார் என்கிற உபதேசம், காற்றில் பறக்கவிட்டதுபோல் இன்றைய நாட்களில் மாறிவிட்டது. நாமோ இவைகளில் ஜாக்கிரதையாயிருந்து, பரிசுத்தத்தைக்காத்து, தேவனுடைய உதவியைப் பெற்றுக் கொள்வோம்.


"கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்" - ஏரா 50:9




Post a Comment

2 Comments

  1. மிகவும் அருமையான பதிவு. அவர்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் முதலாவது. பின்னர் அவர் நம்மை பரிசுத்தபடுத்துகிறார். மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி

      Delete