Friday, 12 November 2021

ஆவிக்குரிய யுத்தம்- பகுதி-1 || சாத்தான் மேல் ஜெயம் பெறுதல் ||

 ஆவிக்குரிய யுத்தம் 


பகுதி -1


சாத்தான் மேல் ஜெயம் பெறுதல்



1.கிறிஸ்துவுக்குள்ளான என்னுடைய பரிசுத்த வாழ்க்கையை சீர்குலைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,

கடிந்துகொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன்.


2.என்னை பலவானின் வலைக்குள் இழுத்து சிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


3.ஆராதனையை அசட்டை பண்ண வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


4.ஜெபத்தில் உற்சாகமற்று இருக்கப்பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன்.


5.வேத தியானத்தை மறக்க பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


6.தேவ பிரசன்னத்தை உணர முடியாதபடி மனசலிப்பை உண்டுபண்ணுகிற ஆவிகளை

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்.

மேற்கொள்ளுகிறேன். 


7.ஆவியில் தொடங்கி மாம்சத்தில் முடிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


8.உலகத்திற்கு ஒத்த வேஷத்தை தரிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


9.இரட்சிப்பின் வஸ்திரத்தை கறைபடுத்துகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்

எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


10.சத்தியத்தை விட்டு வழுவிப்போக பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.

 

11.விசுவாசத்தை மறுதலிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன். 


12.ஆதி மேன்மையை இழந்துபோக பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


13.ஒழுங்கான ஜெபவாழ்க்கையை கெடுக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


14.சத்தியத்திற்கு கீழ்ப்படியாமல் போக பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


15.ஆவியானவரை துக்கப்படுத்த வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


16.பெற்றுக்கொண்ட கிரீடத்தை இழக்கவைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


17.அபிஷேகத்தை இழக்கப்பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன்.


18.பிரதிஷ்டையை தீர்மானங்களை இழக்கப்பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


19.தேவகிருபையை இழக்கப்பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


20.அழைப்பைவிட்டு திசைமாற பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


21.தேவ சித்தத்தில் தடுமாற வைக்கிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


22.உலக மயக்கத்தால் இழுப்புண்டு போக வைக்கிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


23.சாட்சியாய் வாழ முடியாதபடி பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


24.பொய்யானதை தரிசிக்க வைக்கிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


25.சுய மகிமையை தேட வைக்கிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


26.ஆதாயத்திற்காக ஆண்டவரை மறுதலிக்க வைக்கிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


27.சாத்தான் கொண்டு வரும் சகல பெலவீனங்களையும், சகல வியாதிகளையும், சகல

வலி வேதனைகளையும், சகல பிணிகளையும், கட்டுகளையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன்.


28.பெருந்தொற்று வியாதிகளை கொண்டு வந்து பல லட்சங்களை மரணத்திற்குட்படுத்தும் எதிராளியான அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


29. கருச்சிதைவுகளை கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின்

நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


30.மலட்டு கர்ப்பங்களை உண்டு பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன் கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


31.பலவித கட்டிகளை உண்டு பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


32.சிறுநீரகத்தை செயலிழக்கப்பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


33.உடலின் பலப்பகுதிகளை செயலிழக்கப்பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


 34.இருதய வியாதிகளை கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


35.சர்க்கரை வியாதியை கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


36.இரத்த அழுத்த வியாதியை கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


37.பலவித கேன்சர் வியாதிகளை, பலவித தீயகிருமிகளை, மூளைக்கட்டிகளை, இரத்தபுற்றுநோய், எலும்புபுற்றுநோய், கண்நோய்கள், இரைப்பைநோய்கள், தீராதவியாதிகளை கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


38.சொல்லமுடியாத அளவில் பலவித கொடிய வியாதிகளை கொண்டு வருகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,

கடிந்து கொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன். 


39.சாத்தானுக்கு துணைநின்று என்னை எதிர்த்து வருவோர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


40.சாத்தானுக்கு ஆதரவாக செயல்படும் சகல மனிதர்களின் கிரியைகளை நசரேனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


41.சாத்தான் என்மேல் செலுத்தும் சகல அதிகாரங்களையும், அவன் கொண்டு வரும் சகல அழிவிற்குரிய காரியங்களை, அவனுடைய நூதன செயல்பாடுகளை, அவனுடைய சகல தீய திட்டங்களை, அவனுடைய பயமுறுத்தல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


42.வாகனங்களில் செல்லும்போது விபத்து உண்டாக்கி அழிக்க சாத்தான் அனுப்பும் அனைத்து சதியான காரியங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


43.உபத்திரவங்களை கொண்டு வருகிற சாத்தான் அனுப்பும் தீய ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


44.கடித்து அழிவை உண்டாக்க சாத்தான் அனுப்பும் தீய பூச்சிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


45.ஆசீர்வாதங்களை பட்சித்துபோட சாத்தான் அனுப்பும் தீய பறவைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


46.நான் செய்யும் ஒவ்வொன்றிலும் குற்றம் கண்டுபிடிக்க ஜனங்களை ஏவுகிற சாத்தானின்

செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன்.


47.ஏதாவது ஒரு வழியில் கலக்கத்தை கொண்டு வருகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


 48.வெட்கப்படுவதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உண்டாக்குகிற ஆவிகளை இயேசு

கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


49.பலவிதங்களில் அழிவுகளை நஷ்டங்களை ஏற்படுத்துகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


50.என் ஆத்துமாவை கெடுக்குகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


51.சகல நன்மைகளையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கொள்ளையிடுகிற சாத்தானின் ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன்.


52.வஞ்சிக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


53.பலவித பயங்களை கொண்டு வந்து பயமுறுத்துகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


54.என்னை விழுங்கும்படி சுற்றி திருகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


55.பகையை உண்டாக்குகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


56.என்னை குற்றப்படுத்த முகாந்திரம் தேடுகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


 57.பலவித கிரியைகள் மூலம் என்னை எரிச்சலடைய செய்கிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து மேற்கொள்ளுகின்றேன்,

கொள்ளுகிறேன்.


58.பிறர் செய்யும் தவறுகளினால் வந்த விளைவுகளுக்கு என்மேல் பழி சுமத்துகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


59.என் ஒழுக்கத்தை கெடுத்துப்போடுகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


60.ஒற்றுமையை சீர்குலைக்கிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


61.புறங்கூறி திரியப்பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


62.மோசம் போக்குகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


63.அவமானங்களையும் நிந்தைகளையும் கொண்டு வருகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


64.அலங்கோலமான செயல்களில் ஈடுபடப்பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


65.அந்தகாரத்தில் இருக்கப்பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


66.தவறான பழக்கத்தில் சிக்க வைத்து என் நற்பண்புகளை இழக்க வைக்கும், என் ஆவி ஆத்துமா சரீரத்தை கறைபடுத்தும்,என் மனசாட்சியை அசுசிப்படுத்தும், என் மனைவிக்கு துரோகம் பண்ண வைக்கும்,என் கணவனுக்கு துரோகம் பண்ண வைக்கும் அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


67.தவறான உறவை ஏற்படுத்தி மணிக்கணக்கில் போனிலே பேச வைத்து தூங்க விடாமல் தடுக்கும். சாப்பிட விடாமல் தடுக்கும். தேவனை தேடவிடாமல் தடுக்கும். குடும்பத்தாரோடு நேரம் செலவிட விடாமல். குடும்பத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய விடாமல் தடுக்கும் அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


Prepared By

Pr.W. Samuel Selvaraj- Pollachi



Tuesday, 28 September 2021

வாஞ்சை || அறிந்து கொள்வோம் பகுதி-82 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி-82


வாஞ்சை 


"வாஞ்சித்தல்" என்பது "முழு இருதயத்தோடும் விரும்புதல்" என்று அர்த்தப்படும்.


"வாஞ்சை" என்ற வார்த்தையை குறிக்க "taabah"என்ற எபிரெயச் சொல் பயன்படுத்தி உள்ளார்கள்.


நீதி. 13:12 - ல்

நாம் விரும்பியதைப் பெறும்போது, அது ஜீவவிருட்சத்தைப் பெறுவதுபோல இருக்கும் என்று

பவுல் தான் ரோமாபுரியின் விசுவாசிகளைக் காண வாஞ்சிப்பதாகக் கூறியிருக்கிறார் (ரோமர் 1:11). இங்கே வாஞ்சிப்பதைக் குறிக்க "epipothed" என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகமான விருப்பத்தைக் குறிக்கும் வார்த்தை ஆகும்.


இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தனது இருதயத்தின் விருப்பம் என்றும் அவர் சொல்லுகிறார் 

ரோமர் 10:1 -இங்கே விருப்பத்தைக் குறிக்க "eudokia" என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது.


நாம் எதை வாஞ்சிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது.


1.நாம் தேவனுடைய நியாயங்களை வாஞ்சிக்க வேண்டும் -சங். 119:20.


2.நாம் தேவனை வாஞ்சிக்க வேண்டும் - ஏசா26:9. 

அவரைத் தவிர நமக்கு வேறு விருப்பம் இருக்கக்கூடாது.

சங். 73:25.


3.நாம் அதிகாலையில் தேவனைத் தேட வேண்டும். நம் ஆத்துமா அவரை வாஞ்சிக்க வேண்டும்.

சங். 63:1,


4.தேவனுக்குப் பயந்து,அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும் -பிர. 12:13.


5.கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மீது வாஞ்சையோடு இருக்க வேண்டும் - சங் 84:2 -இங்கே வாஞ்சையைக் குறிக்க "kāsaph" என்ற எபிரெயச் சொல் பயன்படுத்தி உள்ளார்கள்.


6.தேவனுடைய வல்லமையையும், அவருடைய மகிமையையும் காண வாஞ்சிக்க வேண்டும் - சங். 63:2.


7.நம்முடைய பரமவாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - 2 கொரி. 5:2.


8.சக விசுவாசிகளின் நலனைக்குறித்து வாஞ்சை யுள்ளவர்களாக இருக்க வேண்டும். பிலி. 2:26.


9.மற்றவர்கள் மீது வாஞ்சையாயிருந்து தேவனுடைய சுவிசேஷத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் - 1 தெச. 2:8.


10.தேவனுடைய இரட்சிப்புக்காக நாம் தவித்து, அவருடைய வசனத்துக்காகக் காத்திருக்க வேண்டும் - சங். 119:81.


'வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது' 

(நீதி:13:19)



Monday, 27 September 2021

வேலைகள் || அறிந்து கொள்வோம் பகுதி- 81 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி- 81


வேலைகள்


வேதாகமத்தில் ஆதாமுக்கு தான் முதல் வேலை கொடுக்கப்பட்டது அது ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தும் வேலை மற்றும் தோட்டத்தைக் காக்கும் பணியும் கொடுக்கப்பட்டிருந்தது.ஆதி. 2:15).


வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு வேலை அல்லது தொழில்செய்துவந்தவர்களாக இருந்தார்கள்.


வேலைசெய்வது  என்பது வேதாகம காலங்களில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. தேவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனை இஸ்ரவேலருக்கு ராஜாவாக அபிஷேகம்செய்தார். ஆண்டவராகிய இயேசு தமது இளவயதில் யோசேப்பின் தச்சுத்தொழிலில் உதவிசெய்தரர்.


பவுல் பல வேளைகளில் கூடாரம் செய்யும் தனது தொழிலைச் செய்து தன் தேவைகளைக் சந்தித்துக்கொண்டார் (அப். 8:3). பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு  மீன்பிடிப்பர்களாக இருந்தார்கள்.

மத்தேயு வரிவசூலில்லவராக வேலைசெய்தார் (மத். 9:9).


வேதத்தில் ஆண்களின் வேலைகள்


1.ஆடுமேய்த்தல்


ஆபிரகாமும், அவன் சந்ததியினரும் அதிகமான ஆடுமாடுகளைக் கொண்டிருந்தார்கள். எனவே ஆடு மேய்ப்பது அவர்களுடைய முக்கிய தொழிலாக இருந்தது. இவர்களுக்குக் கீழாக இவர்களோடு சேர்ந்து வாழும்படி எண்ணற்ற வேலைக்காரர்கள் இருந்தார்கள்.ஆபிரகாமின் நாட்களில் லோத்து பிடிக்கப்பட்டுச் சென்றபோது ஆபிரகாமின் வேலைக்காரர்களில் பலர் ஆயுதம் ஏந்திப் போரிட்டு, லோத்தை மீட்டுவந்தார்கள் (ஆதி. 14:14-16).


2.வேட்டையாடுதல்


ஈசாக்கின் மூத்த குமாரனாகிய ஏசா போன்ற சிலர் வேட்டையாடும் தொழிலையும் செய்து வந்தார்கள்.


3.விவசாயம்


நோவா திராட்சத்தோட்டத்தை நட்டு அதில் பயிரிடுவதைப் பார்க்கிறோம் (ஆதி. 9:20).


"தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்” என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது (நீதி. 12:11).


4.செங்கல் தயாரித்தல்


துவக்கத்தில் இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைப் பட்டுக்கிடந்தபோது பார்வோனுக்காக நகரங்களைக் கட்டும்படி செங்கல் தயாரிக்கும் வேலையில் ஈடுபட வேண்டியிருந்தது (யாத். 1:24).


செங்கல் தயாரிப்புக்குத் தேவைான உபகரணங்கள் கூடக் கொடுக்கப்படாமல் அவர்கள் அதிகமாக நெருக்கப்பட்டார்கள்.பிரமிடு போன்றைகளைக் கட்டுவதற்காக

இவர்கள் பெரியபெரிய கற்களை இழுத்துச் சென்று கட்டிடங்களை அமைத்தார்கள்.


கானான் தேசத்தில் குடியேறியபிறகு இஸ்ரவேல் மக்கள் ஆடுமாடுகளை வளர்ப்பதிலும், பயிரிடுவதிலும்

ஈடுபட்டார்கள்.


லேவியர்கள் தேவனுடைய ஆராதனைக்கடுத்த வேலைகளில் ஈடுபட்டார்கள். ஆலய ஆராதனையில் மட்டுமின்றி, ஆலயத்தைச் சுத்திகரித்தல், பணிமுட்டுகளைப் பராமரித்தல் போன்ற வேலைகளையும் இவர்கள் செய்தார்கள்.

வேதபாரகர்கள் நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.


நியாயாதிபதிகளின் காலம்


நியாயாதிபதிகளின் நாட்களிலும் மக்கள் இதுபோன்ற வேலைகளைத் தொடர்ந்து செய்தார்கள்.

சில வேளையில் அவர்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ளவும், புதிய பகுதிகளைப் பிடிக்கவும் போரிடும் வேலையிலும் ஈடுபட வேண்டியிருந்தது (நியா.4:14).


இராஜாக்களின் காலம்


சவுல் ராஜாவைத் தொடர்ந்து ராஜாக்களின் நாட்களில் அரண்மனைப் பணியாளர்கள் அதிகமானவர்கள் வேலையில் நியமிக்கப்பட்டார்கள்.


போரிடுவதற்காகவும் ஒழுங்கான ஊதியம் பெற்ற போர்வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் காலாட்படை, இரதப்படை, குதிரைப் படை என்று பிரிக்கப்பட்டிருந்தார்கள்.


அரண்மனைகளில் பானபாத்திரக்காரன், சுயம்பாகிகள் போன்றோர் வேலை செய்தார்கள். சிலர் இசைக்கருவிகளை இசைப்பவர்களாவும் பணி செய்திருக்கிறார்கள்.


மக்களிடமிருந்து வரிப்பணம் வசூலிக்கப்படத் துவங்கியபோது அதற்காக ஆயக்காரர்களும் நியமிக்கப்பட்டார்கள்.


ஆலயம், அரண்மனை இவைகளைக் கட்டிய போது கட்டிடக்கலைஞர்களும், கட்டிடத் தொழிலாளிகளும் தேவைப்பட்டார்கள்.


மரவேலை, தோல்வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.


இந்தக் காலகட்டத்தில் வணிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது, பலர் அவர்களிடம் வேலைக்காரர்களாக இருந்தார்கள்.


மக்களின் தேவைகள் அதிகரித்தபோது. மற்றவர்களுக்கு விற்கும்படி அப்பம் சுடுகிறவர்களும், தச்சுத் தொழில் செய்பவர்களும் உருவானார்கள்.


ஆபரணங்களைத் தயாரித்தல்,

சாயம் முக்குதல், சுமைதூக்கிச் செல்லுதல் போன்ற வேலை செய்பவர்களும் உருவாகினார்கள். 

சிலர் மருத்துவர்களாகவும் வேலைசெய்தார்கள்.


புதிய ஏற்பாட்டு காலத்தில் வேலைகள்.


புதிய ஏற்பாட்டிலும் இதுபோன்ற வேலைகள் தொடர்ந்தன.

மகா ஏரோதுவின் காலத்தில் எருசலேமில் இரண்டாவதாகக் கட்டப்பட்ட ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. அவன் தனக்காகவும், ரோமர்களுக்காகவும் பல அரண்மனைகளைக் கட்டினான்.இந்த வேலையில் பலர் ஈடுபட்டார்கள்.


கலிலேயாக் கடல் பகுதியில் மீன்பிடிப்பது,முக்கிய தொழிலாக இருந்தது.


வேதாகம நாட்களில் ஆண்கள் 350க்கும்

மேற்பட்ட வெவ்வேறான வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று கணக்கிடப்படுகிறது.


பெண்களின் வேலைகள்


துவக்கத்தில் பெண்கள் சமைத்தல், பரிமாறுதல், வீட்டைச் சுத்திகரித்தல் போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபட்டார்கள். ஆபிரகாம் போன்ற வசதிபடைத்தவர்களுக்கு இப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய பெண் பணியாளர்களும் இருந்தார்கள்.


தண்ணீர் எடுத்தல்


பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் தங்கள் வீட்டுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான தண்ணீரைத் தாங்களே எடுத்துவந்தார்கள் (ஆதி. 24:15).


துவைக்கும் பணி


பெண்கள் சிறிய ஓடை மற்றும் ஆறுகளில்  தங்கள் ஆடைகளையும், வீட்டிலுள்ளவர்களின் ஆடைகளையும் துவைத்து, உலர வைத்து, வீட்டுக்கு எடுத்து வந்தார்கள்.


வீட்டுவேலை


வீட்டில் அடுப்புக்குத் தேவையான விறகைச் சேகரித்தல், உணவைச் சமைத்தல், சாப்பிட்ட பிறகு பாத்திரங்களைச் சுத்திகரித்தல் இவை யாவும் பெண்களின் அத்தியாவசியமான வேலைகளாக இருந்தன.


ஆடுமேய்த்தல்


ராகேல் (ஆதி. 29:6), 

மோசே மணந்துகொண்ட சிப்போராள் (யாத். 2:16) போன்றோர் ஆடுகளை

மேய்க்கும் வேலையிலும் ஈடுபட்டிருந்தார்கள்.


தானியம் பொறுக்குதல்


அறுவடை செய்யும்போது கீழே விழும் தானியத்தை ஏழைகளும், பரதேசிகளும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. ரூத் இப்படி கோதுமை மணிகளைப் பொறுக்குவதை நாம் பார்க்க முடியும்(ரூத் 2:17).


ஆடை தயாரித்தல்


நூல் திரித்தல், ஆடைகளை நெய்தல், சித்திர வேலைப்பாடுகளைச் செய்தல் இவைகளும் பெண்களின் வேலைகளாக இருந்தன. சாமுவேலின் தாயாகிய அன்னாள் அவனுக்காகச் சிறிய சட்டையைத் தயாரித்துவந்தாள் என்று நாம் பார்க்கின்றோம்.


நீதிமொழி 31:10-31 வசனங்களில் குணசாலியான ஒரு பெண்ணின் வேலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவள் தனது கணவனின் தொழிலில் அவனுக்கு உதவுவது மட்டுமின்றி தானாகவே பல வேலைகளைச் செய்துவந்தாள்.

திராட்சத் தோட்டத்தை நடுதல்,

வாணிபம் செய்தல், நூல் நூற்றல், மெல்லிய புடைவைகளை உண்டுபண்னி விற்பனை செய்தல்.


தொற்காள் ஆடைகளைத் தைத்து, மற்றவர்களுக்கும் கொடுத்துவந்தாள் (அப் 9:36).


தியத்தீரா பட்டணத்தைச் சேர்ந்த லீதியாள் என்பவள் சாயம் தோய்த்த ஆடைகளை பிலிப்பி பட்டணத்தில் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தாள் (அப்.16:14).


தனது கணவன் ஆக்கில்லாவோடு சேர்ந்து பிரிஸ்கில்லாள் கூடாரம் இடம் பணியைச் செய்து வந்தாள் (அப்.18:2, 3). பவுல் அப்போஸ்தலனும் இவர்களுடைய வீட்டில் தங்கி இதே வேலையைச் செய்து உள்ளார்.


வேசிகள்


எரிகோ பட்டணத்து ராகாப் போன்றவர்கள் பிழைப்புக்காக வேசித்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.

இது அவர்களுக்கு ஆதாயம் தரும் ஒரு வேலையாக இருந்தது.

 (நீதி, 2:16-22 5:3-8).

சில விக்கிரகக்கோவில்கள் தாசிகள் என்னப்பட்ட கோவில்தொடர்புடைய வேசிகளும் இருந்தார்கள்.

தேவ கட்டளைப்படி ஓசியா தீர்க்கதரிசி மணந்துகொண்ட கோமேர் என்ற பெண் இப்படிப்பட்டவளாக இருந்திருக்க வேண்டும் (ஓசியா 1:3).


சபை ஊழியர்கள்


ஆதிச் சபையின் காலத்தில் பெபேயாள் போன்ற பெண் ஊழியக்காரர்கள் சபை ஊழியத்தைக் கவனித்து வந்தார்கள். இவள் கெங்கிரேயா பட்டணத்துச் சபையில் ஊழியக்காரியாக இருந்தாள் (ரோமர் 16:1).


வேலைசெய்வதைக் குறித்த வேத  கட்டளைகள்


நம் எல்லோருமே சோம்பேறியாய் இல்லாமல் ஏதே ஒரு வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டளை வேதாகமத்தில் உள்ளது.


வேலைசெய்யாதவனுக்குச் சாப்பாடு கொடுக்கக் கூடாது என்று பவுல் கட்டளையிட்டிருகிறார் (2 தெச. 3:10). கர்த்தருடைய வருகை சமீபமாயிற்று என்று சொல்லி, வேலைசெய்யாமல் சபையில் பகிந்துகொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு, வீண்வம்பு பேசித் திரிந்தவர்கள் அந்த நாட்களில் இருந்தார்கள். இவர்கள் வேலைசெய்து, சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும் என்ற அவர் கட்டளை இட்டார்.


"உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலை செய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறோம்" என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

 (1 தெச. 4:12). அவர் தனது சொந்தக் கைகளினால் வேலைசெய்து பாடுபட்டிருக்கிறார் (1 கொரி.4:12).


வேலை செய்யாமலிருத்தல் திருடுவதற்கு வழிநடத்துகிறது. "திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்” என்று பவுல் ஆலோசனை கூறுகிறார் (எபே. 4:28).


ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யக் கூடாது. என்ற கட்டளை ஆதிகாலத்திலேயே கொடுக்கப் பட்டிருந்தது (யாத். 20:8-10).


"வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்;" (பிர. 5:12)


Monday, 20 September 2021

சாமுவேல் முதலாம் புத்தகம் ||பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம் ||

 பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம்


சாமுவேல் முதலாம் புத்தகம்



"மாற்றங்களின் புத்தகம்"


"சாமுவேல்" என்ற பெயருக்கு "தேவனின் நாமம்" அல்லது "தேவன் கேட்டருளினார்" என்று பொருள்.


எபிரேய வேதாகமத்தில் 1,2 சாமுவேலின் புத்தகங்கள் ஒரே புத்தகமாகும் அது "சாமுவேலின் புத்தகம்" என்று அழைக்கப்படும்.


Septuagint என்று அழைக்கப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பில்தான் முதல் முறையாக இந்தப் புத்தகம் இரண்டு பத்தகங்களாக பிரிக்கப்பட்டது.


ஆசிரியர் மற்றும் சில தகவல்கள்


இந்த புத்தகத்தின்ல் உள்ள முக்கிய நபர்களில் சாமுவேலும் ஒருவர். இளவயதுள்ள தீர்க்கதரிசியாகவும், இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியாகவும், சவுல், தாவீது என்னும் இராஜாக்களை அபிஷேகம் செய்த ஆசாரியராக இருந்தார்.


சாமுவேலின் பெயரினால் இந்த புத்தகம் அழைக்கப்பட்டாலும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் இன்னார் என்பது குறிப்பிடப்படவில்லை.


சாமுவேல் இதை எழுதியிருக்கலாம் அல்லது 1சாமு1:4-24:22 பகுதிகள் அவரது மரணம்வரையுள்ள பகுதியை கூறுவதால் அதற்கான தகவல்களை அவர் கொடுத்திருக்கலாம். தாவீது ராஜாவின் பற்றிய குறிப்புகளை சாமுவேலும், நாத்தானும், காத்தும் எழுதிவைத்தாக 1நாளா 29:29-30ல் வாசிக்கிறோம். இவற்றில் எழுதப்பட்ட காரியங்களின் சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கும்போது 1,2 சாமுவேலின் புத்தகங்கள் சாமுவேலும், நாத்தானும், காத்தும் எழுதியதை  தீர்க்கதரிசிகளின் குழுவை சேர்ந்த ஒருவரால் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


அதிகாரங்கள் : 31

வசனங்கள்: 810..


1 சாமுவேல் புத்தகம் 110 ஆண்டு கால வரலாற்றை சொல்லுகிறது. 

சாமுவேல் பிறந்த (கிமு. 1120) நியாயாதிபதிகளின் காலம் முடியும் நாட்களில் இருந்து, சவுலின் மரணம் சம்பவித்த காலம் (கிமு 1011) வரையுள்ள காலத்தின் சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளது.


புத்தகம்  ஒரு பார்வை


1வது மாற்றம்:


இரண்டு நியாயாதிபதிகளுக்கிடையே தலைமைத்துவத்தில் மாற்றம், ஆசாரியனான ஏலியிடம் இருந்து நியாயாதிபதியான சாமுவேலிடம் தலைமைத்துவம் மாறுகிறது.


2வது மாற்றம்:


இஸ்ரவேல் தேவனை மையமாய் கொண்டிருந்த முறையில் இருந்து அரசனை மையமாய் கொண்டிருக்கும் முறைக்கு மாறுதல். நியாயதிபதியான சாமுவேலிடத்திலிருந்து அரசனான சவுலிடத்திற்கு தலைத்துவம் மாறுகிறது.


3வது மாற்றம்:


அரசனான சவுலிடத்திலிருந்து அரசனான தாவீதிற்கு தலைமைத்துவம் மாறுகிறது.


அதி 1-8: 

இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியான சாமுவேலின் பிறப்பும் உயர்வும் குறித்து


அதி 9-15: 

சவுலின் அழைப்பு - அபிஷேகம் - ஆட்சி - தள்ளப்படுதல்.


 அதி 16-30: 

தாவீதின் வருகையும் வளர்ச்சியும் 


அதி 31: 

காயப்பட்ட சவுல் தற்கொலை செய்துகொள்ளுதல்.


இந்த புத்தகம் செல்லும் தேவனின் சுபாவங்கள்:


1.கேட்கிற தேவன்

அன்னாளின் ஜெபம் கேட்கப்பட்டது.

தங்களுக்கு இராஜா வேண்டும் என்கிற ஜனங்களின் சத்தம் கேட்கப்பட்டது.


2.நியாயம் தீர்க்கும் தேவன்

ஏலியின் குடும்பத்தாருக்கான நியாயத்தீர்ப்பு.

கூவுலுக்கான நியாயத்தீர்ப்பு.


3.இளைப்பாறாத தேவன்

ஏலியின் குடும்பத்திற்கு பதிலாக சாமுவேலின் நியமனம்.

சவுலுக்கு பதிலாக தாவீதின் நியமனம்.


தவறு செய்த  அரசன்.


1.சவுலின் மேட்டிமை (துணிகரமான கீழ்ப்படியாமை)


 I வது சோதனை:

கில்காலுக்கு போ. பெலிஸ்தியர்களுடன் யுத்தத்திற்கு ஆயத்தம் செய் ஆனால் 7 நாட்கள் காத்திரு என்று தேவன் சொல்லியும் கீழ்ப்படிய மறுத்தார்.

1சாமு 13:8-11 பழியை ஜனங்கள் மீது போடுவதில் கை தேர்ந்தவன்.


2வது சோதனை

அமலேக்கியர்களோடு யுத்தத்திற்கு போ. ஆனால் எதையும் எடுத்துவராதே.

1சாமு 15:19-21 தலைமைப்பண்பில் உள்ள குறைகள் வெளிப்படுதல். 

பழியை வேறோருவர் மீது போடுதல், மனிதனுக்குப் பயப்படுதல், தலைமைக்கும் தலைமையினால் வழிநடத்தப்படுபவர்களுக்கும் இடையே தொடர்பின்மை.

தன்னைக்குறித்த பிம்பத்தை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளித்தல்.


2.சவுலின் பொறாமை


குறைபாடுகளுக்கான முன்னுதாரணம் ஒப்பிடுதல் போட்டிபோடுதல் இச்சித்தல்.


1சாமு 18:9 அந்நாள்முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.


வச 12:16 – சவுல் தேவன் தாவிதோடிருக்கிறதை கண்டான்.


ஜனங்கள் தாவீதை நேசித்தார்கள் சவுலின் குமாரனும், குமாரத்தியும் தாவீதை நேசித்தார்கள்.


3.சவுலின் மறைமுகமான வஞ்சனை 


தனது குடும்பத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்தல்.

மனம்வருந்தவோ, மன்னிப்புக்கேட்கவோ விரும்பாதிருத்தல்.

வசனம் 18:17- தாவீதின் திருமணத்தில் சதி செய்தல்.

வசனம் 22:24 தாவீதை தீங்கின் பாதையில் வைத்தல்.


புத்தகத்தின் முக்கிய பகுதிகள்


  • சாமுவேல் அதி 1-9:-

1.அன்னாள் ஜெபித்தலும், ஜெபம் கேட்கப்படுதலும் (அதி 1)


2 .அன்னாளின் தீர்க்கதரிசன ஜெபம்  ஆலயத்தில் சிறுவனான சாமுவேல்

 (அதி 2)


3.சாமுவேலின் அழைப்பு (அதி 3)


4.கடைசி நியாயாதிபதியின் பணியும், முதல் தீர்க்கதரிசியின் பணியும்

 (அதி 4-8)


5.பெலிஸ்தர்களால் தேவனுடைய பெட்டி பிடிக்கப்படுதல்.

சாமுவேலுக்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை.

 ஏலி மரணம் மற்றும் அவனது குமாரர் கொல்லப்படுதல் (அதி 4)


6.தேவனுடைய பெட்டியின் நிமித்தமாய் பெலிஸ்தர் தேவனால் தண்டிக்கப்படுதல்.

தேவனுடைய பெட்டி பெத்ஷிமேசிற்கு வருதல் (அதி 5.6)


7.சாமுவேல் முதலாவது மறுமலர்ச்சிக்கு தலமையேற்றல்.

விக்கிரகங்களை விட்டு கர்த்தரிடமாய் திரும்புதல். 

எபினேசரில் வெற்றி. (அதி 7)


8.இஸ்ரவேலர் தேவனை தள்ளிவிட்டு ஒரு இராஜாவை கேட்டார்கள்.

சாமுவேல் எச்சரிக்கை

செய்தாலும் இராஜாவை வாக்குப்பண்ணுதல் (அதி 8)


  • சவுல் (அதி 9-15)


1.இராஜாவாக தெரிவுசெய்யப்படுதல் (அதி 9)


2.இராஜாவாக அபிஷேகம் செய்யப்படுதல்

(அதி 10)


3.சவுலின் ஆட்சி (அதி 11)

சவுல் அம்மோனியர்களை வெற்றிகொள்ளல் (அதி 11).

அதிகாரம் சாமுவேலிடமிருந்து

 சவுலுக்கு மாறுதல் (அதி 12).


4.சவுல் தன் அங்கீகாரத்தை இழத்தல் (அதி 13-15)

சவுல் தேவனுக்கு எதிராக செயற்படுதல் (அதி 13)

யோனத்தானால் பெலிஸ்தியருக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி உண்டாகிறது. ஆனால்

அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளுதல் (அதி 14)

ஆகாகின் காரியத்தில் சவுலின் துணிகரமான எதிர்ப்பும், கீழ்ப்படியாமையும் (அதி 15)


  •  தாவீது: (அதி 16-31)


1.தாவீது பயிற்றுவிக்கப்படுதல்

 (அதி 17-18)


காத்தூரானாகிய இராட்சசனை தாவீது கொல்லுதல் (அதி 17).

யோனத்தானும் தாவீதும் உடன்படிக்கை செய்தல்.

சவுல் தனது குமாரத்தி மீகாளை தாவீதிற்கு கொடுத்தல் (அதி 18)


2.தாவீது தண்டிக்கப்படுதல் (அதி 19-30) 


சவுல் மீண்டும் தாவீதை கொல்ல முயலுதல்

(அதி 19

தாவீது தப்பிக்க யோனத்தான் உதவுதல் (அதி 20)

தாவீது நோபுக்கும், காத்திற்கும் ஓடிப்போதல்

(அதி 21)

தாவீது தனக்கான சேவகர்களை சேர்த்தல்.

சவுல் கர்த்தரின் ஆசாரியர்களை கொன்றுபோடுதல் (அதி 22)


3.தாவீது பெலிஸ்தரோடு யுத்தம் செய்தல்: 

சவுல் தாவீதை பின் தொடர்தல்.

தாவீதும் உடன்படிக்கை செய்தல்

(அதி 23)


4.என்கேதியில் தாவீது சவுலை கொல்லாமல் தப்பவிடுதல் (அதி 24)


5.சாமுவேலின் மரணம்: 

தாவீதும் அபிகாயிலும் (அதி 25) 


6.சீப் வனாந்தரத்தில் மீண்டும் தாவீது சவுலை கொல்லாமல் தப்பவிடுதல்

 (அதி 26)


7.பெலிஸ்தரின் தேசத்தில் உள்ள சிக்லாகிற்கு தாவீது ஒளிந்துகொள்ளும்படி போகுதல் 

(அதி 27)


8.சவுல் எந்தோரில் உள்ள குறிசொல்லுகிறவளிடத்தில் செல்லுதல் (அதி 28)


9.பெலிஸ்தர் யுத்தத்திற்கு தங்களோடு வரும் தாவீதை நம்புவதற்கு மறுத்தல் (அதி 29)


10.அமலேக்கியர் சிக்லாக்கை கொள்ளையிட்டதால்

தாவீது அவர்களோடு யுத்தம்செய்தல் (அதி 30)


11.சவுல் யுத்தத்தில் பலத்த காயம்பட்டு, தற்கொலை செய்துகொண்டு மரித்தல் (அதி 31)....



Taken from Pr.Thomasraj Notes




காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...