Wednesday, 8 September 2021

நியாயாதிபதிகளின் புத்தகத்தின் வரும் பெண்கள் || அறிந்து கொள்வோம் பகுதி- 78 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி- 78


நியாயாதிபதிகளின் புத்தகத்தின் 

வரும் பெண்கள் 



1.அக்சாள் - 


காலேபின் குமாரத்தி  ஒத்னியேலின் மனைவி. தன் தந்தையிடம் அதிக சொத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டவள்.(நியா 1:1-16)


2.தெபொராள்:


வேதாத்தில் உள்ள ஒரே பெண் நியாயாதிபதி. 

(நியா 4:1 - 5:31)


3.யாகேல்:


கேனிய குலத்தை சார்ந்த பெண்மணி சிசேராவை ஆணியடித்துக் கொன்றவள்.( நியா 4:17-22).


4.பெயர் குறிப்பிடப்படாத மறுமனையாட்டி 


கிதியோனுக்கு  மறு மனைவியாக இருந்து அபிமெலேக்கைப் பெற்றாள்.

( நியா :11:1-33).


5.பெயர் குறிப்பிடப்படாத விபச்சாரி:


      யெப்தாவின் தாய். (நியா 11 : 1 - 33).


6.பெயர் குறிப்பிடப்படாத மகள்:


  யெப்தாவின் மகள். ( நியா 11:29-40).


7.மனோவாவின் மனைவி:


மலடியாக இருந்து பின்பு சிம்சோனைப் பெற்றாள் (நியா 13:2-25).


8.பெலிஸ்திய பெண்கள்:


சிம்சோனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணும் தங்கையும்

 (நியா 14:1- 20,15:1-6) 


9.பெயர் குறிப்பிடப்படாத விபச்சாரி:


சிம்சோன் தேடி சென்ற காசா விலைமகள் (நியா 16:1-3)


10.தெலீலாள்:


சிம்சோனை வீழ்த்திய விலைமகள் (நியா 16:4 - 31)


11.பெயர் குறிப்பிடப்படாத தாய்:


      மீகாவின் தாய் விக்கிரகத்தை     ஏற்படுத்தியவள்.( நியா 17:1-13).


12.பெயர் குறிப்பிடப்படாத மறுமனையாட்டி:


          எப்பிராயீம் லேவியனின் மனைவி, கற்பழிக்கப்பட்டு இறந்தாள்.

(நியா 19:1-30)


13.400 - மிஸ்பா கன்னிகைகள்:


         பென்யமீனியருக்கு கொடுக்கப்பட்ட கீலேயாத்தில் உள்ள யாபேசின் பெண்கள்.(நியா 21:1-12)...















Tuesday, 7 September 2021

யோசபாத் || அறிந்து கொள்வோம் பகுதி -77 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -77


யோசபாத் 


யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் குமாரன். ஆசாவுக்கு  பிறகு ஆளுகைக்கு வந்தான் (2 நாளா. 17:1, 2)

கி. மு. 874 - கி. மு. 850 வரையில் 24 ஆண்டுகள் ஆளுகை செய்தான்.

2 நாளாகமம் 17-20 அதிகாரங்களில் யோசபாத்தை பற்றிய குறிப்புகள் உள்ளன.


யோசபாத்தின் சீர்திருத்தங்கள்


இவன் தேசமெங்கும் இருந்த விக்கிரகங்களை அழித்தான், ஆனால் தூபம் காட்டப்படும் மேடைகள் அழிக்கப்படவில்லை. (1 இரா.22:43).

இவன் தனது ஆளுகையின் 3-ம் ஆண்டில் தேசமெங்கும் லேவியர்களை அனுப்பி அவர்கள் மக்களுக்கு நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும்படி செய்தான் (2 நாளா. 17:7-9). 

இவனுடைய ஆளுகை காலத்தில் இஸ்ரவேல் ராஜ்யம் எங்கும் சமாதானம் நிலவியது. தேசம் செழிப்பான நிலையை அடைந்தது.


யோசபாத்தின் தவறான  உறவும் உடன்படிக்கையும்.


இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபுடன் நட்பும் உடன்படிக்கை செய்துகொண்டது இவன் செய்த மிகப் பெரிய தவறாக இருந்தது.சீரியருக்கு எதிரான போரில் இவன் ஆகாபுக்குத் துணையாகச் சென்றான். இந்தப் போரில் ஆகாப் கொல்லப்பட்டான். ஆனால் யோசபாத் உயிர்தப்பி  பிழைத்தது பெரிய காரியமாக இருந்தது (1 இரா. 22:1-33).

இதைக் குறித்துத் தீர்க்கதரிசியாகிய யெகூ யோசபாத்தைக் மிகவும் கடிந்துகொண்டான் (2 நாளா. 19:1-3).


யோசபாத் உடனடியாக தேசமெங்கும் சுற்று பயணமாகச் சென்று மக்களைத் தேவனிடம் திருப்பும் வேலையில்  ஈடுபட்டான். தலைவர்களைக் கூட்டி ஆலோசனைகூறியபோது "உத்தமனுக்குக் கர்த்தர் துணை” என்று அவன் அறிவித்தான் 

(2 நாளா. 19:11).


வடக்கு ராஜ்ஜியத்தோடு தோழமை


இவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய அகசியாவுடன் சேர்ந்து வாணிபம் செய்யும்படி ஏசியோன் கேபேரில் கப்பல்களைச் செய்வித்தான். ஆனால் அவை உடைந்துபோயின.

 (2 நாளா. 20:35-37).

பிறகு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமுடன் சேர்ந்து, மோவாபியருக்கு எதிராகப் போரிட்டு அவர்களை முறியடித்தான். ஆனால் மோவாபிய ராஜாவாகிய மேசா தன்னுடைய முதல் குமாரனைப் பலியிடுவதைக் கண்டு கோபத்துடன் திரும்பி விட்டார்கள்.

 (2 இரா. 3:4-27).


யோசபாத்திற்க்கு  விரோதமான போர்


"மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்" (2 நாளா. 20:1).


யோசபாத் நாட்டு மக்கள் எல்லோரும் உபவாசித்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டான். யோசபாத் கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்தில் நின்று ஜெபித்தான்.

(2 நாளா. 20:6-12).

அப்போது அந்த யுத்தம் அவர்களுடையது அல்ல, கர்த்தருடையது என்ற வாக்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.போருக்குச் சென்றபோது தேவனைத் துதிக்கும் பாடகர்கள் முதலில் அனுப்பப்பட்டார்கள். அப்போது யூதாவை எதிர்த்துவந்த எதிரிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு அழிந்துபோகும்படி தேவன் கிரியை செய்தார். ஒருவரும் தப்பவில்லை.அவர்களுடைய ஆடைகளையும், ஆயுதங்களையும் மூன்று நாட்கள் கொள்ளையிட்டார்கள். மக்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அந்த இடத்துக்கு "பெராக்கா"என்று பெயரிட்டார்கள்.

இதற்குப் பிறகு அதுவரை 25 ஆண்டுகள் ஆளுகைசெய்திருந்த யோசபாத் மரித்துப் போனான்.அவனுடைய இடத்தில் அவனுடைய குமாரன் யோராம் ஆளுகைக்கு வந்தான். (1 இரா.22:50)


யோசபாத் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடினான் என்ற நற்சாட்சி இவனைக் குறித்துக் உள்ளது.

(2 நாளா. 22:9).


Monday, 6 September 2021

ரூத்தின் சரித்திரம் || பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம் ||

 OT Book Summary


பழைய ஏற்பாட்டின்

 புத்தக சுருக்கம்


ரூத்தின் சரித்திரம்


"மீட்பின் கதை"


பெயர் காரணம்


  • இந்தப் புத்தகம் இதில் வரும் பிரதான நபரான, மோவாபிய இளம் பெண்ணான ரூத்தின் பெயரையே புத்தகத்தின் பெயராக கொண்டுள்ளது.


  • "ரூத்" என்பதற்கு "நண்பன்"என்று பொருள்.


  • அவள் தாவீதின் கொள்ளுப்பாட்டியாகி இயேசுவின் வம்சவரலாறில் இடம்பெறுகிறாள்.(ரூத் 4:21-22, மத் 1:1,5)


  • பெண்ணின் பெயரை கொண்டுள்ள இன்னுமொரு வேதாகம புத்தகம் எஸ்தர்.


ஆசிரியர் சில  தகவல்கள்:


  • எழுதியவர் யாரென்று அறியப்படவில்லை.

  • தீர்க்கதரிசியாகிய சாமுவேல் எழுதினார் என்பது யூதப்பாாரம்பரியத்தின் நம்பிக்கை.


  • தாவீதைப் பற்றிய குறிப்பு (4:17,22) வருவதால் சாமுவேல் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதற்கு பிந்திய காலத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.


  • மேலும் இதற்கு பயன்படுத்தபட்டுள்ள இலக்கிய வடிவம் இது மன்னராட்சி ஏற்படுத்தபட்ட பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை காண்பிக்கிறது.


எழுதப்பட்ட காலம் : கிமு 1000 - 950 க்கும் இடைப்பட்ட காலம்


அதிகாரங்கள் : 4 


வசனங்கள் : 85


வரலாற்றில் ரூத் புத்தகம்


1.இந்த புத்தகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் நியாயாதிபதிகளின் காலத்தில் இடம்பெற்றது.


2.நியாயாதிபதிகளின் புத்தகத்தில் காண்கிறபடி வழிபாட்டுச் சீர்கேடும், ஒழுக்கக் குறைவும், தேசத்தின் ஒற்றுமையின்மையும், அன்னிய ஆக்கிரமிப்புகளும் நடந்த காலம் இது.


3.யோசுவாவின் புத்தகத்திலும், நியாயாதிபதிகளின் புத்தகத்திலும் சொல்லப்பட்ட நிகழ்வுகளான வன்முறைகளோடும், எதிரிகளின் படையெடுப்புகளோடும் ஒப்பிடுகையில் புயலின் மத்தியில் நிலவும் அமைதியை போன்றதொரு அருமையான புத்தகம்.


4.இஸ்ரவேலருக்கும், மோவாபியருக்கும் இடையே சமாதானம் நிலவிய காலத்தில் இந்த சம்பவம் நடந்தது 

(நியா 3:12-30 காலத்திற்கு முற்றிலும் நேரெதிரானது) 

1 சாமு 1-2ல் விபரிக்கப்பட்டள்ளதைபோல ஒரு இஸ்ரவேலின் குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையின் விபரங்களை வெளிப்படுத்துகிறது. 


5.நியாயாதிபதிகளின் காலத்தில் காணப்பட்ட இருண்ட நிலைக்கு சற்று மாற்றாக ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும் வண்ணம் மீதியுள்ளவர்களின் விசுவாசமும் தாழ்மையும் சொல்லப்படுகிறது.


ரூத்தின் சரித்திரத்தின் சுருக்கம்


1.யூதேயா தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டதால் பெத்லெகேம் ஊரானாகிய எலிமெலேக்கு தன் மனைவியோடும் இரு மகன்களோடும் மோவாப் தேசத்திற்கு போனான். இரு மகன்களும் மோவாபிய பெண்களான ரூத்தையும்,ஓர்பாளையும் மணந்து கொண்டார்கள். 


2.பத்து வருடங்களின் முடிவில் மூன்று பெண்களும் விதவைகளானார்கள், நகோமி பெத்லெகேமுக்கு திரும்பி போக தீர்மானிக்கிறாள். நகோமி சம்மதிக்காதபோதும் ரூத் அவளுடன் பெத்லெகேமுக்கு போவதில் உறுதியாயிருந்தாள். ரூத் தன்னை நகோமிக்கும் இஸ்ரவேலின் தேவனுக்கும் முழுமையாக அர்ப்பணித்திருந்ததை 16-17 வசனங்களில் காணலாம் 

"நான் உமமைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறிந்து, என்னோடே போசவேண்டாம்: நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன் உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன், நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து அங்கே அடக்கம்பண்ணப்படுவேன் மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை வீட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்”.


3.வாற்கோதுமை அறுப்பு காலத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள், ரூத் போவாஸ் என்பவனின் வயலில் கதிர்களை பொறுக்கச் சென்றாள். போவாசின் நற்குணங்களை அவன் தனது வேலைக்காரர்களை நடத்திய விதத்திலிருந்து அறியக்கூடியதாயுள்ளது. (ரூத் 2:4) யூத சட்டத்தின்படி தனது இறந்துபோன கணவனின் நெருங்கிய உறவினன் நள்ளையாளை மனைவியாக ஏற்றுக்கொள்ள ரூத்தினால் வலியுறுத்த முடியும் போவாஸ் ரூத்தின் இறந்துபோன கணவனுக்கு உறவினன் என்றபோதும், அவளை மனைவியாக்கிக்கொள்ள விரும்பியபோதும், அவளை விடவும் நெருங்கிய உறவு முறையான் ஒருவன் இருந்ததால் சில முறைமைகளும், சட்டங்களும் நிறைவேறிய பின்னரே அவளை சட்டபூர்வமான மனைவியாக்கிக்கொள்ள முடியும்.


4.அவ்வாறு அவன் அவளை அயலகத்தரின் ஆசிகளோடு தனக்கு மனைவியாக்கி ஒபேத்திற்கு பெற்றோராளர்கள், ஓபேத்து தாவீதிற்கு பாட்டன் ஆனான்.


ரூத்தின் அறிக்கை


அதி 1:16-17 அதற்கு ரூத் "நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.

ரூத்தின் இந்த வார்த்தைகள் தேவனிடத்திலும், மனிதனிடத்திலும் உள்ள அன்பையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன. தேவன் அவளது அர்ப்பணிப்பை பார்த்து அவளை மீட்கிறவனான போவாஸை அனுப்பினார்.


போவாசின் சாட்சி


ரூத் 2:12 "உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன்கிடைப்பதாக" என்றான். 

ரூத்தின் புத்தகம் தாவீதின் வம்சந்தில் வெளிப்பட்ட மேசியாவின் வம்சவரலாற்றில் இடம்பெற்ற மோவாபிய பெண்னான ரூத் எவ்வாறு இடம்பெற்றாள் என்பதை காட்டுகிறது.

உணமைக்கும். உத்தமதற்கும் தேவன் பலனளிக்கிறவர் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு.


ரூத் புத்தகம் ஒரு பார்வை


1.முன்னுரை நகோமியின் இழப்பு (1:1-5) 

2.நகோமி மோவாபிலிருந்து திரும்புதல் (1:6-22)

3.ரூத் நகோமியை பற்றிக்கொள்ளல் (15-18) 

4.ரூந்தம் நகோமியும் பெத்லெகேமுக்கு திரும்புதல் (1:19:22)

5.ரூத்தும் போவாசும் அறுப்பின் வயலில் சந்தித்தல் (அதி 2)

6.ரூத் வேலையை தொடங்குதல் (2:1-7) 

7.போவாஸ் ரூத்திற்கு இரக்கம் காண்பித்தல் (2:8-16)

8.ரூத் நகோமியிடம் திரும்புதல் (2:17-23)

9.நகோமி ரூத்தை போவாசின் தூற்றும் களத்திற்கு அனுப்புதல் (அதி 3)

10.நகோமி ரூத்திற்கு அறிவுரை கூறுதல் (3:1-5) 

11.போவாஸ் அவளை மீட்டுக்கொள்வதை உறுதிகூறுதல் (3:6-15)

12.ரூத் நகோமியிடம் திரும்புதல் (3:16-18)

13.போவாஸ் தனது உறுதிகூறுதலை நிறைவேற்ற முயலுதல் (4:4-12) 

14.பெயர் குறிப்பிடப்படாத உறவினனை எதிர்கொள்ளல் (4:1-8)

15.போவாஸ் நகோமியின் சுதந்திரத்தை மீட்டுக்கொண்டு ரூத்தை  மனைவியாக்கிக் கொள்வதை அறிவித்தல் (4:9 -12)

16.ரூத்தை மனைவியாக்கி கொள்ளுதல் (4:13-47)

17.முடிவுரை: தாவீதின் வம்சவரலாறு (4:18-22)..



Taken from Pr.ThomasRaj Notes


Sunday, 5 September 2021

நியாயாதிபதிகள் || பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம் ||

 OT Book Summary


பழைய ஏற்பாட்டின்

 புத்தக சுருக்கம்


நியாயாதிபதிகள்



கானானில் இஸ்ரவேலர்கள்


  எபிரேய பெயரான Shophtim என்னும் சொல்லுக்கு "நீதிபதிகள்"அல்லது "விடுவிக்கிறவர்கள்” என்று பொருள்.


சாமுவேலின் காலத்திற்கு முன்பாக இஸ்ரவேலுக்கு எதிராக எழும்பிய பல்வேறு வகையான எதிரிகளிடமிருந்து காக்க தேவன் 13 நியாயாதிபதிகளை எழுப்பினார்.நியாயாதிபதிகளின் புத்தகத்தில் அவர்களின் பதவிப்பெயர் "நியாயாதிபதி" என்று குறிப்பிடப்படுகிறது (நியா 2:11-19)

ஆனால் அவர்கள் நியாயதிபதிகள் என்று அழைக்கப்படாமல் "விடுதலையாக்குகிறவர்கள்" என்ற அர்த்தத்தில் "இரட்சகர்கள்" என்று அழைக்கப்பட்டார்கள் நாம் நினைக்கிறபடி நியாயாதிபதிகள் சட்டம் சம்பந்தப்பட்ட காரியங்களை மாத்திரம் கவனிக்காமல் இராணுவம் மற்றும் நிர்வாகம் சம்பந்தபட்ட காரியங்களையும் கவனிக்க வேண்டியிருந்தது.

 

ஆசிரியர் மற்றும் சில தகவல்கள்


தீர்க்கதரிசியாகிய சாமுவேல் இதை எழுதினார் என்பது யூதப்பாாரம்பரியத்தின் நம்பிக்கை.

இந்த புத்தகத்தை எழுதியவர் இஸ்ரவேலில் மன்னராட்சி ஏற்பட்ட ஆரம்ப காலங்கள் வரையில் நிச்சயமாக வாழ்ந்திருக்கிறார்.அடிக்கடி பயன்படுத்தப்படும் "அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை” என்னும் வாக்கியம் 

(நியா 17:6, 18:1, 19:1, 21:25) இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் எழுதப்பட்ட காலத்தின் சம்பவங்களோடு ஒப்பிடுகையில் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்ட பயன்படுத்தபட்டுள்ளது.


எழுதப்பட்ட காலம் : கிமு 1045-1000 ?

அதிகாரங்கள் : 21

வசனங்கள் : 618



வரலாற்றில் இந்த புத்தகம்


நியாயாதிபதிகளின் காலம் கிமு 14ம் நூற்றாண்டின் முற்பகுதியில் யோசுவாவின் மரணத்திற்கு பின் ஆரம்பித்து.யோசு 24:29.

கிபி 1051ல் சவுல் இஸ்ரவேலின் அரசனாக தீர்க்கதரிசியாகிய சாமுவேல் முலம் முடிசூட்டப்பட்ட(1 சாமு: 10:24) காலம் வரையுள்ள 300 ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ளது. .

நியாயாதிபதிகளின் புத்தகத்தின் நிகழ்வுகள் தேசத்தின் நிலப்பரப்பில் இருந்த பல்வேறு நகரங்களிலும், பட்டணங்களிலும், யுத்தக்களங்களிலும் நடந்தவை. சில நியாயாதிபதிகள் ஒரே சமயத்தில் வேவ்வேறு பிரதேசங்களை ஆளுகை செய்தார்கள் என்று வேதாகம அறிஞர்கள் கருதுகிறார்கள்.


 புத்தகம் - ஒரு பார்வை


முதல் இரண்டு அதிகாரங்களும் யோசுவாவின் மரணத்தையும் அவனது மரணத்திற்கு பின்னான சந்ததியாரைக் குறித்தும் சொல்லுகிறது. 

"கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று" (நியா 2:10) 


நியாயாதிபதிகளின் புத்தகம் முழுவதும் தேவனாகிய கர்த்தரே இஸ்ரவேலின் அதிபதி என்பதே அடிப்படை பிரச்சினையாக இருந்தது. அதிலும் குறிப்பாக அவரது ஆளுகையை ஏற்றுக்கொண்டு அவருக்கு உண்மையாயிருத்தல் என்பதே பிரச்சினையாயிருந்தது.


இஸ்ரவேலின் மீதான தேவனின் இராஜரீக ஆளுகை என்பது சிறப்பான முறையில் சீனாய் உடன்படிக்கையிலும் (யாத் -19-24) பின்பு மோசேயினால் மோவாபின் சமவெளிகளில்

புதுப்பிக்கப்பட்டதினாலும் (உபா 20) அதன் பின்பு யோசுவாவினால் சீகேமில் நினைவூட்டப்பட்டதினாலும் (யோசுவா 24) உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 


இஸ்ரவேலர் தேவனின் இராஜரீக ஆளுகையை திரும்பத் திரும்ப தள்ளிவிட்டதை குறித்து இந்த புத்தகத்தை ஆக்கியோன் குற்றஞ் சாட்டுகிறார்.


கர்த்தருடைய யுத்தங்களை செய்வதை நிறுத்திவிட்டு தங்கள் குடும்பங்களின், கால்நடைகளின், நிலங்களின் நன்மைக்காக கானானிய தெய்வங்களை நோக்கி திரும்பி ஒவ்வொரு நாள் வாழ்க்கையில் கைக்கொள்ளவேண்டிய கர்த்தரின் கட்டளைகளை கைவிட்டார்கள்.


இந்தப் புத்தகத்தின் சம்பவங்கள் ஒரு வட்டச் சுழற்சியின் ஒழுங்கில் அமைந்திருக்கிறதை நம் அறிந்து கொள்ள முடிகிறது.


  • இஸ்ரவேலர் பாவம் செய்தல்


  • அவர்களை ஒடுக்க தேவன் எதிரிகளை எழுப்புதல். அந்த எதிர்களை ஒரு குறிக்கப்பட்ட காலம் வரையில் சேவித்தல்.


  • தேவனை நோக்கி கதறி மன்னிக்கும்படி விண்ணப்பித்தல். 


  • அவர்களை விடுவிக்க தேவன் இரட்சகர்களை (நியாயாதிபதிகளை) எழுப்புதல்.


  • நியாயாதிபதிகள் எழும்பி எதிரிகளுடன் யுத்தம் செய்து விடுவித்தல். மீண்டும் பாவம் செய்து அதே வட்டச் சுழற்சி ஆரம்பிக்கும் வரை கொஞ்சக்காலம் சமாதானம் நிலவுதல்.


ஆனால் ஒவ்வொரு வட்டச் சுழற்சியின்போதும் இஸ்ரவேலரின் நிலை தாழந்துபோனது மட்டும் அல்லாமல், அவர்களின் நியாயதிபதிகளின் நிலையும் ஆன்மீக ஒழுக்கங்கள் தொடர்ந்து சீர்கெட்டுப்போனது. இந்த புத்தகத்தின் முடிவு இந்த சீர்கேட்டை பதிவுசெய்கிறது.

இந்த புத்தகத்தின் இறுதி வசனமே இதற்கான சான்று. “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்" 

(நியா 21:25).


நியாயாதிபதிகளின் பட்டியல்கள்


1.ஒத்னியேல் :3:7-11) 40 yr.

யோசுவாவின் மரணத்திற்கு பின் 1வது நிபாயாதிபதி


2.ஏகூத் :3:12-30) 80yr

மோவாப் அரசன் எக்லோனை வென்றார்.


3.சம்கார்: 3-31) 

பெலிஸ்தருக்கெதிரான யுத்தத்தில் இஸ்ரவேலை நடத்தியவன். 600 பெலிஸ்தியரை கொன்றான்.


4.தெபொராள்: (4-5) 40 yr.

தீர்ததரிசியானவளும், கானணியர்க்கு எதிரான யுத்தத்தில் பாராக்கை வழிநடத்திய ஒரே பெண் நியாயாதிபதி.


5.கிதியோன்:(6-8)40Yr.

 300 பேரைக் கொண்டு 135000  மீதியானியரை முறியடித்தான்.

 


6.அபிமெலேக்கு: (9) 

தந்நிரத்தினால் தலைமைக்கு வந்த

 ஒரே நியாயாதிபதி.


7.தோலா :10:7-5)

 இஸ்ரவேலை 23 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.


8.யாவீர் : (10:1-5) 

இஸ்ரவேலை 22 வருடஙகள் நியாயம் விசாரித்தான். இவனுக்கு 30 குமாரர்கள்.


9.பெய்தா: (10:6 -12:7) 6 yr.

அம்மோனியரை முறியடித்தான்.

 

10.இப்சான் :(12;6- 15) 

இஸ்ரவேலை 7 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.30 குமாரர்கள் மற்றும் 30 குமாரத்திகள் இருந்தார்கள்.


11.ஏலோன் (12:8-15) 

இஸ்ரவேலை 10 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.


12.அப்தான் (12: 13 -15)

 இஸ்ரவேலை 8 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.இவனுக்கு 40 குமாரர்கள் மற்றும் 40 பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்.


13.சிம்சோன் :13-16) 20 yr 

பெலிஸ்தியரை  தனியாக முறியடித்தான்.


14.ஏலி : (1 சாமு1:9) 

சிலோம் ஆசரிப்பு கூடாரத்தில் இருந்து நியாயம் விசாரித்த ஆசாரியன்.


15.சாமுவேல் 

சவுல் அரசானை ஏற்படுத்தபடும் வரை நியாயம் விசாரித்த கடைசி நியாயாதிபதி



மூன்று அன்னிய தெய்வங்கள்


முக்கிய சமூக பிரச்சினை என்னவென்றால் இஸ்ரவேலர் தேவனுடைய கட்டளையை மீறி கானானியர்களை துரத்திவிட தவறியதால் உருவானது.

இஸ்ரவேலர் காானியர்கள் உடன் கலப்புத்திருமணம்செய்து அவர்களது முறைமைகளின்படி நடந்தார்கள் கானானிய கலாச்சாரம் இஸ்ரவேலர்களுக்குள் வந்தபோது அதனால் உருவான விக்கிரக வழிபாடு ஒரு மிகப்பெரிய வழிபாட்டுச் சிக்கலை உண்டாக்கியது.



கானானியரின் மூன்று முக்கிய தெய்வங்கள்


1. பாகால்:


செழிப்பின் தெய்வம் என்று கருதப்பட்ட பாகால் ஒரு கல்தூணினால் ஆக்கப்பட்டு பெரும்பாலும் தோப்புகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

பல தருணங்களில் பாகால் வழிபாட்டில் விபச்சாரமும் (எரே 7:9), 

தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்வதும் (1இரா 18:28), 

மனித உயிர்கள் பலி கொடுக்கப்படுவதும் (ஏரே 19:5)

இடம்பெறுவதுண்டு.பல தடவைகள் பழைய ஏற்பாட்டில் தேவனுடைய ஜனங்களுக்கான கண்ணியாக பாகால் சொல்லப்பட்டிருக்கிறது.


2.அஸ்தரோத்


எப்போதும் பாகாலுடன் இணைத்தே சொல்லப்படும் கானானியர்களின் காதலுக்கான பிரதான பெண் தெய்வம் உயரமான இடங்களில் வைக்கப்படும் மரத்தினாலான கம்பமே இதன் அடையாளம்.


3.தாகோன்


சிம்சோன் இறுதியாக தாகோனின் கோயிலை தான்  தனது பலத்தினால் இடித்துப்போட்டான்.

மனித முகமும், மனிதக் கைகளும், மீன்வடிவ உடலும் கொண்டது பெலிஸ்திய தெய்வமான தாகோன்.


ஆறு அன்னிய ஆக்கிரமிப்புக்கள்


நியாயாதிபதிகளின் புத்தகத்தில் அன்னிய அதிகாரங்களால் இஸ்ரவேலர் ஆக்கிரமிக்கப்படுவது அடிக்கடி நிகழ்வதை படிக்கலாம். 


ஜனங்கள் கர்த்தரை நோக்கி கதறுவார்கள், அவர்களது நெருக்கத்திலிருந்து விடுவிக்க

ஒரு இரட்சகளை அனுப்புவார். 

விடுவிக்கப்பட்டு சமாதானம் உண்டான கொஞ்சக்காலத்தில் மறுபடியும் பழையபடி விக்கிரக வழிபாடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.



1.வடகிழக்கில் இருந்து வந்த மெசொப்பொத்தாமியரின் ஆக்கிரமிப்பு (நியா 3:8-11) 


முதலாவது ஆக்கிரமிப்பு வடகிழக்கில் இருந்து வந்த மெசொப்பொத்தாமியரின்

ஆக்கிரமிப்பு இதிலிருந்து ஒத்தினியேல் ஜனங்களை விடுவித்தான்.


2.தென்கிழக்கில் இருந்து வந்த மோவாபியரின் ஆக்கிரமிப்பு 

(நியா 3:12-20)


இரண்டாவது ஆக்கிரமிப்பு தென்கிழக்கில் இருந்து வந்த மோவாபியரின் ஆக்கிரமிப்பு. இதிலிருந்து இடதுகைப் பழக்கமுள்ளவனான ஏகூத், மோவாபிய ராஜாவான எக்லோனை கொன்று ஜனங்களை விடுவித்தான்.


3.கானானிய தலைவர்களான யாபீன் மற்றும் சிசெரா (நியா:4-5)


மூன்றாவது ஆக்கிரமிப்பு கானானிய தலைவர்களான யாபின் மற்றும் சிசெராவால் வந்தது. இவர்களிடம் இருந்து  இஸ்ரவேலை மீட்க லபிதோத்தின் மனைவி தெபொராள் மூலம் மீட்கப்பட்டது.

சிசெராவை  ஏபேரின் மனைவியான யாகேல் என்னும் பெண்ணினால் கொல்லப்பட்டது கூடுதல் சுவாரசியம்.


4.தென்கிழக்கில் இருந்து வந்த மீதியானரின் ஆக்கிரமிப்பு (நியா 6-9) 


தென்கிழக்கில் இருந்து வந்த மோவாபியரின் ஆக்கிரமிப்பு 7 ஆண்டுகள் நீடித்தது. கிதியோனின் பலத்த தலைமையினால் அது முடிவுக்கு வந்தது.


5.கிழக்கில் இருந்து வந்த அம்மோனியரின் ஆக்கிரமிப்பு 

(நியா 10:6-11:40


கிழக்கில் இருந்து வந்த அம்மோனியரின் ஆக்கிரமிப்பை யெப்தா முறியடித்தாலும் அவனது அறிவற்ற பொருத்தனையின் காரணமாக அவனது குமாரத்தி உயிரிழக்க நேரிட்டது.


6.தென்மேற்கில் இருந்து வந்த பெலிஸ்தரின் ஆக்கிரமிப்பு 

(நியா 13)


ஆறாவது தென்மேற்கில் இருந்து வந்த பெலிஸ்தரின் ஆக்கிரமிப்பு இந்த ஆக்கிரமிப்பு ஒரு முறை மாத்திரமல்லாது தொடர்ந்து பலதடவைகள் நடைபெற்ற ஆக்கிரமிப்பு. 

சுமார் 200 ஆண்டுகாலத்தில் இஸ்ரவேலரை பெலிஸ்தியரின் ஆக்கிரமிப்பிலிருந்து சம்கார், சிமசோன், சவுல், தாவீது போன்றவர்கள் மூலம் தேவன் விடுவித்தார்.


கொடூரமான  நிகழ்வுகள்


  • இந்த புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களின் கொடூரம் தேவனுடைய ஜனத்தின் பாவத்தினால் வந்தது அல்ல.

ஏகூத் எக்லோனை கொலைசெய்து அவனை மனிதக்கழிவோடு பிணமாக விட்டுவிட்டான்.


யெப்தா கர்த்தருக்கு செய்த பொருத்தனையின் நிமித்தமாக தனது ஒரே குமாரத்தியை தகனபலியாக செலுத்தினான் ?


  • சிம்சோன் வேசியோடு இரவைக் கழித்தான்.


ஒரு லேவியனின் மறுமனையாட்டி கற்பழிக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டாள் அவன் தன் மறுமனையாட்டியின் உடலை துண்டு துண்டாக்கி இஸ்ரவேலின் பல இடங்களுக்கும் அனுப்பி அதன் மூலம் யுத்தத்தை தூண்டினான்.


ஆனால் பாவத்திலிருந்து விடுவித்த தேவனுடைய இரட்சிப்பின் மகிமையை அவருடைய பொறுமையினாலும், இரக்கத்தினாலும், அன்பினாலும், சத்தியத்தினாலும் உண்டானது.

(யாத் 34:6) 

இந்த பாவத்தினால் விளைந்த கொடுமைகளை காட்டிலும் இந்த நியாயாதிபதிகளின் மூலமாக வெளிப்பட்ட தேவனுடைய இரட்சிப்பின் மகிமை பெரிதாயிருந்தது. இது சில வழிகளில் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறது.



ஜனங்களின் விழுந்துபோன நிலை


மோசேயின் நாட்களில் வானந்தரத்தில் சஞ்சரித்த இஸ்ரவேல் சந்ததியும், யோசுவாவின் நாட்களில் தேசத்தை கைப்பற்றிய இஸ்ரவேல் சந்ததியும், தங்களை விடுதலையாக்க தேவன் காண்பித்த பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் தங்கள் கண்களினால் கண்டிருந்தார்கள். ஆனால் "கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று" (நியா 2:10)


யோசுவாவின் கால சந்தியாருக்கு பின்வந்த சந்ததியாரிலிருந்து இஸ்ரவேலில் மண்னராட்சி ஏற்பட்ட காலம் வரையுள்ள சந்ததி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது (நியா 2:11)



ஜனங்களின் விழுந்துபோன நிலைக்கு காரணங்கள்:


1.தேவனுடைய அற்புதங்களையும், அடையாளங்களையும் கண்டவர்கள் தங்கள் முழு மனதோடு தேவனைப் பின்பற்றவில்லை. 


2.தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தபடி அவருடைய அதிசயங்களையும், அவருடைய

வழிகளையும் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவில்லை.


3.தேவன் தம்மை நினைவுகூரும்படி ஏற்படுத்தியிருந்த வாரத்திற்கான ஓய்வுநாள் கட்டளையையும். வருஷாந்திர பண்டிகைகளையும் பின்பற்ற தவறினார்கள்.


தேவனின் உண்மையான அன்பு


பாவத்திற்கு தேவன் தண்டனை வழங்காமல் விடமாட்டார் என்பதே நியாயாதிபதிகள் புத்தகத்தின் அடிப்படையான செய்தி.


யாத்திராகமம் இஸ்ரவேலர் தேவனுடைய ஜனம் என்றும், அவரே அவர்களுடைய இராஜா என்றும்

உறுதிப்படுத்தியது. சீனாய் மலையருகே உண்டாக்கப்பட்ட உடன்படிக்கையை மறந்தார்கள். நியாயாதிபதிகளின் காலத்தில் அன்னிய தெய்வங்களை வழிபட்டதற்காகவும், தேவனுக்கு பலிசெலுத்தும்படியான கட்டளைகளுக்கு கீழ்படியாததற்காகவும், அப்பட்டமான ஒழுக்கக்கேடுகளுக்காவும், பல சமயங்களில் அன்னிய ஜனங்களால்  உண்டான சீர்கேட்டுக்காவும் தேவன் அவர்களை தண்டித்தார்.


இதன் விளைவாக தேவனுடைய யுத்த  வீரர்களாய்  வரப்போகும் அவரது ராஜ்யத்தின் விசுவாசமான குடிமக்களாக, தேவனால் தெரிந்தகொள்ளப்பட்டு அழைக்கப்பட்ட, தேவனுடைய ஜனம் என்ற சிறப்பான அந்தஸ்தைவிட்டு விலகினார்கள். கானானியர்களின் வேளாண்மை முறைமைகளுக்கும், சமுதாய வழக்கங்களுக்கும் உடனடியாக ஒத்துப்போனதைபோல, கானானிய ஜனங்களோடும், அவர்களது முறைமை களோடும்.தெய்வங்களோடும், வழிபாட்டு நம்பிக்கைகளோடும், வழிபாட்டு சடங்குகளோடும் ஒன்றிப்போனார்கள்.


இந்த காரியங்களை தேவன் வேதாகமத்தில் பதிவு செய்தது ஏன்?


மனிதனின் இழிவான விழுந்துபோன நிலையை காண்பிக்கவும். அதிலிருந்து தேவன் ஒருவரே அவனை மீட்டு இரட்சிக்க வல்லவர் என்பதை உணர்த்தவும் மனிதன் மீது இரங்கி அவனை மன்னித்து, அவனை மீண்டும் புதுப்பிக்கும் தனது மனவுருக்கத்தை வெளிப்படுத்தவும் நமக்கான ஒரு எச்சரிக்கையாக இருக்க இதை பதிவு செய்து உள்ளார்.


 புத்தகம் விவரம்


முன்னுரை


முழுமை பெறாக கையப்படுத்தலும் விசுவாச துரோகமும் (1:1-3:6)


அதி :1

யூதா, சிமியோன் கோத்திரத்தார் கானானியரோடு யுத்தம் செய்தல். 

யூதா கோத்திரத்தார் கானானியரை முறியடித்து எருசலேமை கைப்பற்றுதல். யோசேப்பின் புத்திரர் பெத்தேலை கைப்பற்றியபோதும் கானானியரை முற்றிலும் துரத்தாமல் போதல்.


அதி :2 

கர்த்தருடைய தூதனானவரின் எச்சரிப்பு, யோசுவா காலத்திய சந்ததியார் மரித்த பின்னர் இஸ்ரவேலர் தேவனுக்கு கீழ்படியாமல் பாகாலை சேவித்தார்கள். தேவன் அவர்களுக்கு விரோதமாக எதிரிகளை எழுப்பி அவர்களால் இஸ்ரவேலரை தண்டித்தார். ஆனாலும் இஸ்ரவேலரை விடுவிக்க அவரே நியாயாதிபதிகளை எழுப்பினார், விடுதலையும் கொடுத்தார் (3:7-16:31)


அதி :3

இஸ்ரவேலர் கலப்புத்திருமணங்கள் செய்ததோடு தவறான தெய்வ வழிபாட்டிலும்ஈடுபட்டார்கள். நியாயதிபதிகளான ஒத்னியேல், ஏகூத், சம்கார் அவர்களை மற்ற இனக்குழுக்களிடமிருந்து விடுவித்தல்


அதி: 4

இஸ்ரவேலர் பொல்லாப்பானதை செய்தல். 

யாபீன் அவர்களை ஒடுக்கினான். தேவன் தெபோராளை நியாயாதிபதியாக எழுப்பி பாராக்கை கொண்டு விடுவித்தல்,


அதி: 5

தெபோராளும், பாராக்கும் கானானிய சேனைகளை ஜெயித்ததை குறித்து பாடல் பாடிடுதல்.


அதி :6 

இஸ்ரவேலர் பொல்லாப்பானதை செய்து 7 வருடங்கள் மீதியானரை சேவித்தார்கள். 

கர்த்தருடைய தூதனானவர் நியாயாதிபதியாகிய கிதியோனுக்கு துணை நிற்பதாக வாக்களித்தார். கிதியோன் பாகாலின் பிடங்களை தகர்த்தல். 


அதி :7 

தேவனுடைய அறிவுறுத்தலின்படி கிதியோன் 300 பேரை மாத்திரம் அனுப்பினான். 

அவர்கள் மீதியானர்களுடைய பாளையத்தை சேதப்படுத்தினார்கள். கிதியோனின் இராணுவம் மீதியானியர்களை தோற்கடித்தல், 


அதி :8

எப்பிராயீம் மனுஷர்கள் முதல் முறை பொறாமை கொண்டு கிதியோனுடன் வாக்குவாதம் பண்ணுதல்.

 கிதியோன் இராஜாவாக மறுத்தல். கிதியோனின் மரணம். 

40 வருடம் சமாதானம், தேவனை விட்டு பின்வாங்குதல். 


அதி:9

அபிமெலேக்கு தனது சகோதரர்களை கொன்று இஸ்ரவேலை ஆளுதல், 

காகால் அவனுக்கு எதிராய் எழும்புதல். அபிமெலேக்கு ஒரு பெண்னால் காயப்படுத்த பட்டு மரித்தான்.


அதி :10

நியாயாதிபதிகளான தோலாவும், யாவிரும்.

இஸ்ரவேலர் பொல்லாப்பானதை செய்தல் தேவன் அவர்களை பெலிஸ்தியர்கள், அம்மோனியர்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தல். இஸ்ரவேலர்கள் தேவனிடம் ஒத்தாசைக்காக கதறுதல்.


அதி :11

 நியாயாதிபதியான யெப்தா அம்மோன் புத்திரரை முறியடித்தான். 

அவன் செய்த அறிவற்ற பொருத்தனையினால் தனது குமாரத்தியை தகனபலியாக்க்னான்.


அதி: 12

எப்பிராயிம் மனுஷர் இரண்டாம் முறை பொறாமை கொள்ளுதல். 

கீலேயாத் மனுஷர் எப்பிராயீம் மனுஷரை முறியடித்தல். 

யெப்தா 6 வருடங்கள் நியாயம் விசாரித்தல். 

நியாயாதிபதிகளான இப்சான். ஏலோன். அப்தான்.


அதி: 13

 பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரை ஆளுதல்.

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவின் மனைவியிடம் ஒரு இரட்சகனை கர்ப்பம் தரிப்பதை அறிவித்தல். 

சிம்சோன் பிறத்தல்


அதி :14 

நியாயாதிபதியான சிம்சோன் பெலிஸ்திய  பெண்னை திருமணம் சிங்கத்தை கொல்லுதல், 

விடுகதை சொல்லுதல். 

சிம்சோனின் மனைவி வேறோருவனுக்கு கொடுக்கப்படுதல்.


அதி :15 

 சிம்சோனின் பழிவாங்கும் பராக்கிரம செயல்கள்

பெலிஸ்தரின் விளைச்சலை கெடுத்து போடுதல். 

இஸ்ரவேலர் அவனை கட்டிப்போடுதல், அவன் 1000 பெவிஸ்தியரை கொன்றுபோடுதல்.


அதி :16 

சிம்சோன் காசாவிலிருந்து தப்புதல், 

சிம்சோன் தெலீலாளை நேசித்தல், அவள் இவனது தலைமுடியை சிரைப்பித்தல். 

பெலிஸ்தியர்களின் கோயிலை தகர்த்து தானும் மடிதல்


அதி :17 

மீகாவின் வழிபாட்டுச் சீர்கேடு. 

தனது தாயின் வெள்ளிகாசினால் விக்கிரகத்தை செய்வித்தல். இஸ்ரவேலிலே ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவருதல். 

மீகா லேவியன் ஒருவனை ஆசாரியனாக நியமித்தல்.


அதி :18

தாண் கோத்திரத்தார் தங்கள் சுதந்திர நிலத்தையும் விக்கிரக வழிபாட்டையும் விட்டு தங்களுக்கான நிலத்திற்காக வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்.

தாண் கோத்திரத்தார் மீகாவின் சுரூபத்தையும் அவன் நியமித்த ஆசாரியனையும் கொண்டுபோதல்.

லாயீஸ்  கைப்பற்றி அதற்கு தாண் என்று பெயரிடுதல்.


அதி :19 

கிபியாவின் ஒழுக்கச் சீர்கேடு. 

லேவியன் ஒருவனும் அவனது மறுமனையாட்டியும் கிபியாவுக்கு வருதல். அந்த பட்டணத்தின் மனுஷர் அவளை கற்பழித்ததால் அவள் இறந்துபோதல். அந்த லேவியன் அவளை துண்டங்களாக்கி ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு துண்டத்தை அனுப்பிவைந்தல்.


அதி: 20 

பென்யமீன் புத்திரர் கிட்டதட்ட அவர்களது சுதந்திர நிலத்தை இழத்தல். கிபியாவை தாக்க இஸ்ரவேலர் ஒன்றுகூடுதல்.

400000 இஸ்ரவேலர் பென்யமீன் கோத்திரத்திற்கு எதிராக யுத்தம் செய்தல். பென்யமீன்கள் தோற்கடிக்கப்பட்டு  அந்த கோத்திரத்தார் கிட்டதட்ட அழிக்கப்பட்டு 600 பர் மாத்திரமே மீந்திருத்தல்,


அதி :21

இஸ்ரவேலர் மிஸ்பாவிலே கூடுதல். பென்யமீன் புத்திரருக்கு இளம்பெண்களை  கொடுத்து கோத்திரம் அழியாமல் காக்கப்படுதல்…

Taken from Pr.Thamas Raj Notes.


காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...