Friday, 1 April 2022

சிலுவை வரலாறு || பகுதி -2 ||

 


சிலுவை வரலாறு


பகுதி -2


1. சிலுவையும் காடியும் :


சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்குக் காடி கொடுக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும். ஆனால், எத்தனை முறை கொடுக்கப்பட்டது? எப்போது கொடுக்கப்பட்டது? எப்படி கொடுக்கப்பட்டது என்கிற குழப்பம் அநேகருக்கு உண்டு. இயேசுவுக்கு மூன்று முறை காடி கொடுக்கப்பட்டதாக வேதம் விவரிக்கின்றது. அதைத் தெரிந்துக்கொள்வோம்.


1. மாற் 15:23

 சிலுவையில் அறைவதற்க்கு முன்

முக்கிய குறிப்பு: வெள்ளிப்போளம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்கக் கொடுக்கப்படும் பாணம். ஆனால், கிறிஸ்துவோ முழு வேதனையையும் சகிக்கும்படி அதனை ஏற்க்கவில்லை.


2.லூக் 23:36 :

சிலுவையில் மத்தியானத்திற்கு முன்:

முக்கிய குறிப்பு: இது படைவீரர்கள் கிறிஸ்துவை ராஜா என எள்ளி நகையாடி கொடுத்தது. அக்காலத்தில் அரசர்கள் பதவி ஏற்றவுடன் மரியாதை நிமித்தம் இனிய பானம் வழங்குவதைப்போல இயேசுவுக்குக் கொடுத்து, நீ யூதரின் ராஜாவானால் இரட்சித்தக்கொள் என்று கிண்டல் செய்தனர் (லூக் 23:36). 

சிலுவையின் இரண்டாவது வாரத்தைக்கு முன்பு இது நிகழ்ந்தது (லூக் 23:43). அதன் பின்பு பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அந்தகாரம் உண்டானது (மாற் 15:33).


3.யோவா 19:29,30 -மாற் 15:36.

சிலுவையில் மத்தியானத்திற்குப் பின்:

முக்கிய குறிப்பு: சங் 69:21; 22:15 போன்ற வேத வசனங்களின் நிறைவேறுதலாக இயேசு கூறியபோது, பஞ்சில் தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டிக்கொடுத்தனர். கிறிஸ்து அதை சுவைத்தப்பின் முடிந்தது என்றார். சிலுவையில் நான்காவது வார்த்தைக்குப் பிறகு (மாற் 15:34). ஐந்தாவது வார்த்தையைத் தொடர்ந்தும் இது நிகழ்ந்தது.


2.ஒரே நாளில் நிறைவேறிய சிலுவைக்கான தீர்க்கதரிசனங்கள்:


1.மத் 10:4; 26:49,50

சக 11:12,13

முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார்.


2.மத் 26:15

சக 11:13

அந்தக் காசு தேவாலயத்தில் எறியப்படும் 


3.மத் 27:5

   சக 11:13

அந்தக்காசினால் குயவன் நிலத்தை வாங்குவர்கள்.


4.மத் 27:7

   சக 13:7.

சீடர்களால் கைவிடப்படுவார்


5.மாற் 14:50,

  சங் 35:11,மத் 26:59,60.

பொய்க் குற்றம் சாட்டப்படுவார்


6. ஏசா 53:7,மத் 27:12.

குற்றம் சாட்டப்படும்போது காயப்படுத்தோர் முன்

மௌனமாக இருப்பார். 

    

7.ஏசா 53:5,யோவா 20:25.

 காயப்படுத்தப்படுவார்

  

8.ஏசா 50:6

அடிக்கப்படுவார். துப்பப்படுவார்


9.மத் 26:67

  மீகா 5:1

கன்னத்தில் அடிக்கப்படுவார்


10.மாற் 14:65

     சங் 22:7,8

பரியாசம் பண்ணப்படுவார் 


11.மத் 27:31

      சங் 109:24,25

மிகவும் தள்ளாடுவார்.


12.யோவா 19:17; லூக் 23

      சங் 22:16; சக 12:10

கரங்கள் துளைக்கப்படும்


13.லூக் 23:33

    ஏசா 53:12

அக்கிரமக்காரருடன் தீர்ப்பிடப்படுவார் அக்கிரமக்காரருக்காகவும் வேண்டுதல் செய்வார்


14.மத் 27:38 லூக் 23:34

      ஏசா 53:3

சொந்த மக்களால் கைவிடப்படுவார்


15.யோவா 7:5,48

      சங் 69:4

காரணமின்றி பகைக்கப்படுவார்


16.யோவா 15:25

    ‌‌சங் 38:11

நண்பர் தூரமாவர்


17.லூக் 23:49

     சங் 109:25 

மக்கள் தலைகளைத் துலுக்குவர் 


18.மத் 27:39

     சங் 22:17

அவர்கள் இயேசுவை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பர்


19.லூக் 23:34,யோவா 19:23,2.

     சங் 22:15

உடைக்காக சீட்டிடுவர் 

     

20.சங் 69:21, யோவான் 19:28-29.

தாகமாயிருப்பார்


21.யோவா 19:28,29,

      சங் 69:21,மத் 27:34

காடியைக் குடிக்கக் கொடுப்பர்


22.சங் 22:1

அவரது கதறல் கேட்கப்படவில்லை 


23.மத் 27:46-50

     சங் 31:5

பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்படைப்பார்


24.லூக் 23:46

     சங் 34:20

எலும்புகள் முறிக்கப்படாது


25.யோவா 19:33

      சங் 22:14

இருதயம் உடைந்தவராவார்


26.யோவா 19:34

      சக 12:10

குத்தப்படுவார்


27.லூக்கா 23:44-45

    ஆமோ 8:9

அந்தகாரம் தோன்றும்


28.மத் 27:57-60

      ஏசா 53:9

ஐசுவரியவானாக அடக்கம் பண்ணப்படுவார்…



3.சிலுவையும் சில அடையாளங்களும்:


ரோமன் கத்தோலிக்கச் சபையினர் தாங்கள் கிறிஸ்தவ பக்தியுள்ளவர்கள் என்பதைக் காண்பிப்பதற்க்காக தந்தை, மகன், தூய ஆவியானவர் என்றுச் சொல்லி கண், மார்பு, தோல்பட்டைகளைத் தொட்டு சிலுவையின் அடையாளத்தைப் போட்டுக் கொள்வார்கள்.

இதில் தந்தை என்றால் பிதாவையும், மகன் என்றால் இயேசுவையும், தூய ஆவி என்றால் பரிசுத்த ஆவியானவர் என்றும் அர்த்தமாகும். அது போல, கண் என்றால் ஆவியையும், மார்பு என்றால் ஆத்துமாவையும், தோல்பட்டை என்றால் சரீரத்தையும் குறிப்பிடுவதாகச் சொல்லுவார்கள். இது அவர்களுக்கென்று, அவர்களே உருவாக்கிக் கொண்ட அடையாளமாகும்


நாம் படிக்கும் கல்வி பாடத்தில் கூட பலவிதங்களிலும் சிலுவையோ அல்லது சிலுவையின் அடையாளமோ பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


1. ரோமன் இலக்கம் 10 என்பது “ X " ஆகும்.


2. இலத்தின் அகர வரிசையில் " X " என்ற எழுத்தும் "t" என்ற எழுத்தும் சிலுவையைக் குறிக்கும்.


3. ஹன் என்ற எழுத்தில் 10 என்பது “ † ” ஆகும்.


4. கூட்டல் அடையாளத்திற்கு " + " ஆகும். 


5. பெருக்கல் அடையாளத்திற்கு “ X ” ஆகும்.


6. பிழை என்பதை குறிக்கவும் "X" ஆகும்.


இப்படி அனுதின வாழ்கையில் ஏதோ ஒரு வகையில் சிலுவை நம்மோடுகூட கலந்து நிற்கிறது.


சங்கீத புஸ்தகத்தில் வரும் 22 ம் சங்கீதம் இயேசுவின் சிலுவையையும், சிலுவையின் பாடுகளையும் குறிப்பிடும் ஓர் சங்கீதமாக உள்ளது. 6,14,15,18 ஆகிய வசனங்களே இதற்கு ஆதாரம். ஆதலால் 22 ம் சங்கீதம் இயேசுவின் சிலுவையின் அடையாளமாகும்.


ஏசாயாவின் புஸ்தகம் 53ம் அதிகாரமும் இயேசுவின் சிலுவையை படம்பிடித்து காண்பிப்பதைபோல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக 9 மற்றும் 10 ஆகிய வசனங்கள் இயேசு சிலுவையில் சந்தித்த, சகித்த தூன்பங்களை தெளிவாக விவரிக்கின்றது. இதன் மூலம் தீர்க்கதரிசனங்களும், தீர்க்கதரிசிகளும் சிலுவையைத் தவிர்க்க முடியாது என்பதைக் காட்டுகினறது. ஆதலால், ஏசாயா 53ம் அதிகாரமும் ஓர் ஆடையாளம் தான்.


சிரேனே என்ற ஊரைச் சேர்ந்தவனும், அலெக்சந்தர் மற்றும் சூப் என்னும் இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனுமாகிய சீமோன் என்பவன் மீது, போர்வீர்கள் அந்த பாரமான சிலுவையை வைத்தார்கள் (லூக் 23:26]. தேசாதிபதியின் அரண்மணையின் வெளியில் இருந்து, ஏறத்தால கபாலஸ்தலம் என்ற இடம் வரைக்கும் இந்த சீமோன் சிலுவையைச் சுமந்திருக்கலாம் (மாற் 15:16,21). ஆதலால், இயேசுவின் சிலுவையின் அடையாளங்களில், தவிர்க்க முடியாத அடையாளமாக சீமோன் மாறிவிட்டான்.


கிறிஸ்தவக் கொடி :

வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் உள்ள சீர்திருத்த திருச்சபைகளின் மூலம் இந்த கொடி உருவாக்கப்பட்டது. இந்த கொடியின் பின்புறம் வெள்ளை நிறமும், இடப்புறத்தில் நீள நிறமும், அதன் உள்ளே சிகப்பு நிறமும் காணப்படும்வன்னம் வரையப்பட்டுள்ளது. இதில் சிவப்பு நிறம் இயேசுவின் இரத்தத்தையும், நீளநிறம் ஞானஸ்நானத்தையும் மற்றும் விசுவாசத்தையும், வெள்ளை நிறம் இயேசுவின் பரிசுத்தத்தையும் காட்டுவதாக உள்ளது.


Thursday, 31 March 2022

சிலுவை வரலாறு || பகுதி -1 ||

 


சிலுவை வரலாறு 

பகுதி -1


I. சிலுவையின் துவக்கம்:


சிலுவை என்பது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கிறிஸ்தவ காலத்திற்கும் முந்தினக் காலத்திருந்தே ஒரு மத சம்பந்தமான அடையாளச் சின்னமாக ஏறக்குறைய உலகலாவிய விதத்தில் சிலுவை பயன்படுத்தப் -பட்டுள்ளது என்று சரித்திரத்தின் மூலம்  அறியப்படுகின்றது.


சிலுவை என்ற இந்தச் சொல் 'லத்தின்' மொழியின் சொல்லான "க்ரக்ஸ் (crux)" என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ஆதலால் இதை "குருக்ஸ் என்றும், "குரூஸ்" என்றும், அழைப்பார்கள்.


வெகு காலத்திற்கு முன்பே கிரேக்கர்களின் பாக்கஸ் தீரு தேசத்தாரின் "தம்முஸ்', கல்தேயரின் "பெல்", ஸ்காண்டினேவியரின் 'ஓடின்" போன்ற விக்கிரகங்களின் அடையாளச் சின்னமாகவும் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது.


சிலுவை என்ற வார்த்தையைச் சொல்ல, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் "ஸ்டாரஸ்" என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். "ஸ்டாரஸ்" என்ற வார்த்தையானது "செங்குத்தானக் கம்பம்" அல்லது "கழுமரம்" என்பதைக் குறிக்கிறதாகும்.


தி இம்சீரியஸ் பைபிளின்-அகராதி சிலுவையை கழுமரம் என்று சொல்வதை ஒப்புக்கொள்ளகிறது.


II. சிலுவையும் ரோமர்களும்:


ரோமானியர்கள் இந்த சிலுவையின் தண்டணை முறையை பிற நாட்டுக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்க்காக கி.மு முதல் நூற்றாண்டு முதலே பயன்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றது.


செல்வாக்குள்ள சிலரைத் தவிர, தண்டனைப்பெற்ற குற்றவாளிகள் அணைவரையும், நிர்வாணமாகவே ரோமர்கள் சிலுவையில் அறைந்து கொள்ளுவார்கள்.


ரோம அரசாங்கத்தினர் பல்வேறு அளவுகளில் சிலுவைகளைச் செய்து, பொருள் கிடங்கில் வைத்திருப்பார்கள்.


ரோமர்களில் யார் எவ்வளவு பெரிய துரோகியாக இருந்தாலும், சிலுவையில் கொல்லப்பட மாட்டார்கள். அடிமைகளும், அந்நியர்களும் மட்டுமே சிலுவையில் கொள்ளப்படுவார்கள்.


இந்தியாவில் தூக்குதண்டனையைப் போன்று, பார சீகர்களும், மேதியர்களும், சீரியர்களும், மரணத் தண்டணையை நிறைவேற்ற சிலுவையை தான் பயன்படுத்தினர்கள்.


கி.மு 27ல் ரோம ராயனாக "அகுஸ்து சீஷர்" என்பவரும் யூதேயாவை உள்ளடக்கின சீரிய ஆளுனராக "குரேனியுவும் இருந்த நாட்களில் தான், யூதேயாவிளுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்து வளர்ந்தார் (லூக் 2:1,2) இயேசுவின் புரட்சிகரமான வாரத்தைகளும், வல்லமை மிக்க செயல்களும் ரோம ஆளுனர்களை பயம் கொள்ள வைத்தது. அதனால்தான், இயேசுவை சிலுவையில் அறைந்து, கொள்ள வேண்டுமென்று யூதாஸ்காரியோத் மூலம் பலிதீர்க்கும் காரியத்தை ஆரம்பித்தார்கள்.


III. சிலுவையின் நிலை: 

கொலோ 2:15


சிலுவையானது 7 அல்லது 7.5 அடியாக இருந்துள்ளது. ஏனெனில் யோவான் 19:29 ன் படி இயேசுவுக்குத் தாகம் உண்டானபோது 1 அல்லது 2 நீளம் மட்டுமேயுள்ள ஈசோப்புத் தண்டில் புளித்த திராட்சைரசத்தில் ஊறின கடற் பஞ்சை பொருத்தின ஒருவன் அதை இயேசுவின் வாய்க்கு அருகே நீட்டினான் என்பதிலிருந்து, சிலுவை தரையில் நாட்டப்பட்டப் பின்பு, ஒரு ஆள் உயரத்திற்கும் சற்று உயர்வாகத்தான் இருந்திக்கும்.


ஒரு முழுமையான சிலுவை என்பது நான்கு விதங்களில் இணக்கப்படும். 


1. நெடுமரத்தின் நுனியில் குறுக்கு மரத்தை இணைத்தல்


2. சற்று கீழே இறக்கி இணைத்தல்


3. சரியாக நடுவில் இணைத்தல்


4. நடுபாகத்தில் பொருத்தி கூட்டல் (t) குறி போன்று, அல்லது பெருக்கல் (x) குறி போன்று வைப்பார்கள்


சில சிலுவைகளில் கை மற்றும் காள்களில் அடிக்கப்படும் ஆணிகள் ஊடுறுவுவதற்க்காக ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும்.


சிலுவை என்பது இரண்டு மரத்துண்டுகளால் ஆனது. அவை, ஒன்று: நெடுமரம், இரண்டு: குறுக்கு மரம் என்றும் சொல்லப்படும்.


இயேசுவின் சிலுவை ஒருபோதும் பாலீஸ் செய்யப்பட்டது கிடையாது. அது கரடுமுரடாகத்தான் இருந்திருக்கும். காரணம், அக்காலத்தில், இயேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களும், சிலுவையில் அறைய கட்டளையிட்ட ரோமர்களும் முரடர்களாகத்தான் காணப்பட்டனர்.


ஒரே சிலுவையில் அடிக்கடி அநேகரை அறையும் பழக்கமும் இருந்தது. அதை யாரும் சுத்தம் செய்யாததினால் அது எப்பொழுதும் அசுத்தமாகவும், இரத்தக்கரைகளோடும், நாற்றமெடுக்கக் கூடியதாகவும் இருந்துள்ளது.


சிலுவையில் தொங்குபவரின் முழு எடையையும் அவர்களின் கைகளே தாங்கும் நிலை உருவாவதால் மூச்சுத்தினறலும், சோர்வும், நீரிழப்பும் ஏற்படுவதுடன் இரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். நிர்வாண நிலையில், நெஞ்சடைத்து தாகம் ஏற்படும். ஏதோ சில வார்த்தைகளை சொல்ல விரும்பியும் சொல்ல முடியாமல் சாவு என்னும் மரணத்துடன் போராடுவதே சிலுவை தண்டணையின் உச்சக்கட்ட வேதனையாகும்.


சிலுவையின் மரணம் வழங்கப்படும் இடம் எழும்புகளும், எழும்புக் கூடுகளும், மண்டையோடுகளும், இரத்தக்கரைகள் நிறைந்ததும், ஊருக்கு அப்பால் உள்ள இடமுமாயிருக்கும்.


சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் பொதுவாக அதிலேயே தொங்கிக்கொண்டிருக்கும். அவற்றைத் தின்ன பறவைகள், எலிகள், இன்னும் வேதம் சொல்வதுப் போல சில நேரத்தில் பெரிய பெரிய கழுகும் வந்து அங்கும் இங்கும் அழையும் (ஆதி 40:19).


பெருபாலும் மரணத்தண்டனை குற்றவாளிகளின் கழுத்தில் ஒரு பலகையைத் தொங்கவிட்டு, ஊர்வமாக அழைத்துச் செல்வார்கள். அந்த பலகையில்  இவன் என்னைக் குற்றத்திற்காக மரணத்தண்டணை அடைந்தான் என்றக் காரணம் எழுதப்பட்டிருக்கும்.


ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தப்பின்பு தான் பிலாத்துவின் உத்தரவு போர்வீர்களுக்குக் கிடைத்தது(மத் 27:37). அதனால், தான் இயேசுவின் கழுத்தில் பலகை தொங்கவிடப்படவில்லை.


கடந்த காலங்களில் மரணத்தண்டணை மூன்று விதங்களில் தனித்தனியாக வழங்கப்பட்டது...


1.கல்லெறிந்து கொள்ளப்பட்டனர். (யோசு 7:25,26). 


2.உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டனர் (சங் 106:18; வெளி 17:16).


3.மரத்திலே தொங்கவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். 

(எஸ்த 2:23; ஆதி 40:19).


கொல்கொதா மலையில் இரண்டு மரத்துண்டுகளையும் இணைத்து இயேசுவைக் கிடத்தி, கால்களைக் கயறு கொண்டு கட்டினப் பின்பு, முதலில் ஒரு கையில் ஆணி அடித்தபோது, சிலுவையின் ஓட்டை வழியே அந்த ஆணி மறுபக்கம் வந்திருக்கும். அடுத்தக் கையில் ஆணி அடிக்க ஓட்டை பொருத்தமாயிராமல் இருக்குமானால், இயேசுவின் கையில் கயறு கட்டி உடலின்  மீது ஒரு காலை வைத்து மிதித்துக் கொண்டு கயிற்றை பிடித்து இழுத்து ஓட்டைக்கு நேராக வைத்து மற்றொறு கையில் ஆணி அடிப்பார்கள்.


இப்படி கயறு கட்டி இழுப்பதால் தோல்பட்டையின் உள்பகுதிகள் கிழிந்து போகும். அதனால் இன்னும் வேதனை கடுமையாயிருக்கும். அதனால் ஆணிகள் அறைந்த பின்பு,சிலுவையை புறட்டிப்போட்டு, ஆணிகளை வழைத்து விடுவார்கள். அந்நேரத்தில் இயேசுவின் முதுகின் மீது பாரமான மரச்சிலுவை அழுத்திக்கொண்டிருந்திருக்கும்.


எழும்புத்துண்டுகளையும், இரும்பு குண்டுகளையும், இரும்பினாலான கொக்கிகளையும் இடை இடையே இணைத்துப் பிண்ணப்பட்டிருந்த 

சவுக்கினால் இயேசுவை அடித்திருந்தனர். அப்படி கொடூரமான முறையில் அடித்திருந்ததால் அவரின் தோல் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. இப்படி மகாகொடிய காயத்தோடுதான் இயேசு சிலுவையை சுமந்துக் கொண்டு போனார்.


பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கொல்கொதா மலை வரைக்கும் சிலுவையை தூக்கிக் கொண்டுப் போகும்போது வழியில் மூன்று விசை இயேசு தடுமாறித் தள்ளாடினதாக வரலாறு சொல்லுகிறது.


இந்த இயேசுவைக் கண்டு நாம் பரிதாபப்பட்டு அழ வேண்டும் என்பதற்க்காக அவர் பாடுபடவில்லை. மனிதகுலம் அணைத்தும் பரலோகம் வந்து சேர வேண்டும் என்பதற்க்காகவே அவர் பாடுபட்டார்.


சிலுவை என்பது இயேசுவின் மரணக் கருவியாகவும், கிறிஸ்த்தவர்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.


சிலுவையில் அறையப்பட்ட இயேசு என்று சொல்லி, படத்தை வரைகிறவர்கள் அதையும் அழகாகவே வரைந்து வைத்திருக்கிறார்களே ஏன்? என்று கேள்வி கேட்டபோது, இயேசுவின் மேலுள்ள அன்பினால் என்று சொன்னால் அது பொய் என்று புறிந்துக் கொள்ள வேண்டும்,


IV. வரலாற்றுக் குறிப்புகள்  


1. சிலுவையின் குன்று

      (Hill of Crosses)


வட லித்துவேனியாவில் அமைந்துள்ள சியாவுலியாய் நகரின் வடக்கில் 12 கி.மீ தூரத்தில் உள்ளது சிலுவையின் குன்று. இது கிறிஸ்தவ யாத்ரீகர்கள் செல்லும் இடமாகும். 1831ம் ஆண்டு, இங்கு முதல் முதல் ஒரு சிலுவை வைக்கப்பட்டது.

பின்பு, அதுவே பாரம்பரிய பழக்கமாக மாறிப்போய் இப்போது ஏறாளமான சிலுவைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. 1990 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 55,000க்கும் அதிகமான சிலுவைகள் காணப்பட்டன. அதுவே கடந்த 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,00,000 அதிகமான சிலுவைகள் அந்த குன்றின் மீது நடப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.


2.தமிழ்நாட்டில் ஓர் சிலுவைச்சேரி


தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓர் கிராமம் தான் சிலுவைச்சேரி. இந்த ஊரில் அய்யனார் கோவிலும், மாரியம்மன் கோவிலும் பிரபல்யமானது. அப்படிப்பட்ட பிரபல்யத்திற்கு மத்தியில் அந்த ஊரின் பெயர் சிலுவையை சுமந்து கொண்டு இருப்பதால் இது ஓர் கிறிஸ்தவர்களின் ஊர் என்றே அணைவராலும் கருதப்படுகின்றது..


3.சிலுவைப் போர்கள்


இலத்தின் திருச்சபையின் அனுசரணையுடன் இடம் பெற்ற மதம் சார்ந்த போர்களின் தொடர்தான் சிலுவைப்போர் ஆகும்.


1.இஸ்லாமியரிடமிருந்து எருசலேமை மீட்பது 


2.பாகனிய நெறிகளை ஒடுக்குதல்


3.மத நிந்தனையை இல்லாததாக்குதல்


4.ரோமன் கத்தோலிக்க குழுக்களுக்கான போட்டி நிலைமைக்கு தீர்வுக்காணுதல் 

என்பவைகள்தான் சிலுவைப் போரின் முக்கியக் காரணமாக இருந்தது.


1095 முதல் 1272 வரையும் ஏறத்தால ஒன்பது சிலுவைப் போர்கள் நடைபெற்றுள்ளன.


4.எசுப்பானிய நாட்டின் தலைநகரான மத்ரித் என்ற பட்டணத்தில் உலகின் உயரமான சிலுவை அமைந்துள்ளது.


5.பாகிஸ்தான் சிலுவை


பாகிஸ்தான் நாட்டின், கராச்சி பட்டணத்தில் கோரா கப்ரிஸ்தான் என்ற கல்லறைக்கருகில், ஆசியாவிலேயே பெரிய சிலுவையை பர்வேஸ் ஹென்றி கில் என்ற வியாபாரி கடந்த 2015ம் ஆண்டில் கட்டினார். இந்த சிலுவையானது 140 அடி (42.7 மீட்டர்) அளவு உயரம் கொண்டதாகும்.

என்ன கட்டுகிறோம் என்பதை முதலில் அவர் யாருக்கும் சொல்லவில்லை, ஓரளவு கட்டியப் பின்னர்தான் சிலுவை என்று தெரியவந்தது. அதனால், தொழிளாலர்கள் வேலையை பாதியிலேயே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.

ஆனாலும் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் வாரத்தின் ஏழு நாட்களும், ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேளை செய்து கட்டிமுடித்தார்கள். யாராவது இந்த சிலுவையைத் தாக்கலாம் என்று நிணைத்ததால், குண்டு துழைக்காத வகையில் இந்த சிலுவை கட்டப்பட்டுள்ளது.


V. கருத்துக்களும் கேள்வியும்


கருத்து 1


a) "X" - CRUX DECUSSATA


b) "T" CRUX COMMISSA


c] “+" -- CRUX IMMISSA -CRUX SIMPLEX


இதில் எந்த வகை சிலுவையில் இயேசு அறையப்பட்டார் என்ற கேள்வியோடு கூடிய பெரிய விவாதம் அறிஞர்கள் மத்தில் இன்றும் உண்டு. ஆனாலும் "+ CRUX IMMISSA" வடிவிலான சிலுவையாகத்தான் இருந்திருக்கும் என்றும் பலரும் நம்புகின்றார்கள்.


காரணம்

இயேசுவின் தலையின் மீது ஓர் பலகை மாட்டப்பட்டதாக வேதம் சொல்கின்றது (மத் 27:37). அதற்கு ஏற்ற இடவசதி இதில்தான் இருந்திருக்கும் என்று நம்புகின்றனர்.


கருத்து 2:


குரூஸிஃபிகேஷன் இன் ஆன்ழகியுட்டி புஸ்தகம்:

இயேசுவை ஒற்றை நேர் மரத்துண்டில்தான் சிலுவையில் அறைந்தனர். அதனால் அதனை சிலுவை என்று சொல்ல முடியாது என்று இந்த புஸ்தகம் விவரிக்கிறது.


கருத்து 3


இயேசு இறந்து சுமார் 300 வருஷங்களுக்குப் பிறகு, ரோம பேரரசனான கான்ஸ்டன்டைன், சிலுவையை தன்னுடைய ராணுவப் படைகளின் சின்னமாக பயன்படுத்தினார். காலப்போக்கில் அதுவே சின்னமாக மாறிப்போனது.


கருத்து - 4: 


எழுத்தாளரும், தொல்லியலாளருமான அடால்ப் நப்பாலேயன் டிரான் என்பவரின் கருத்து:


கிறிஸ்துவுக்குச் சமமாய் இல்லையென்றாலும், அவரைப்

போலவே சிலுவையும் வழிபாட்டிற்குறிய ஒன்றாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. சொல்லப்போனால் மரத்தினால் செய்யப்பட்ட இந்த புனிதச் சின்னம் ஏறக்குறைய கடவுளுக்குச் சமமாகவே சில இடங்களில் பூஜிக்கப்படுகின்றது…

Notes taken from

Rev.SSK.Samuel.

….




Monday, 28 February 2022

ஆவிக்குரிய யுத்தம் || சாத்தான் மேல் ஜெயம் பெறுதல் || பகுதி -2

 ஆவிக்குரிய யுத்தம்


சாத்தான் மேல் ஜெயம் பெறுதல்


பகுதி -2



68.தேவ பிள்ளைகளின் பெருக்கத்தை கண்டு பொறாமைப்படும். விரோதமாக கெடுதல் செய்ய நினைக்கும் பார்வோனிய ஆவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


69.தேவ பிள்ளைகளின் சுதந்திரத்தை பறித்து அடிமைப்படுத்தும் பார்வோனிய ஆவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன்.


70.தேவ பிள்ளைகளை முன்னேற விடாதபடி தன் ஜனங்களோடு ஆலோசனை பண்ணி அவர்களுக்கு விரோதமாக பார்வோனிய ஆவி கொண்டுவரும் சகல திட்டங்களையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன்.


71.தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக உபாய தந்திரங்களை செய்யும் பார்வோனிய ஆவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


72.வேலைப்பளுவை கொடுத்து தேவ ஜனத்தை வேதனைப்படுத்தும்,ஒடுக்கும், தேவனை தேடாதபடி தேவ ஜனத்தை தடுக்கும், தனி ஜெபம் மற்றும் வேத தியானம், உபவாசம் இவைகளை தடைசெய்யும், ஆராதனை செய்ய விடாமல் தடை செய்யும் பார்வோனிய ஆவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன்.


73.அடிப்படை வசதிகள் இன்றி என்னை தவிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


74.கொடிய பாவ பழக்க வழக்கத்திற்குள் என் குடும்பத்தாரை அடிமையாக்குகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன்.


75.என் குடும்பத்தை வறுமையினால் தரித்திரத்தினால் நசுக்குகிற, வாழ்வாதாரத்தை பறிக்கும் ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


76.என் குடும்பத்திற்கு கனவீனத்தை கொண்டு வருகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


77.என் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப்போகாதபடி செய்கிற சகிப்பு தன்மையற்ற ஆவிகளை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாதபடி செய்யும் பிரிவினை ஆவிகளை, சண்டையை உண்டுபண்ணி சமாதானத்தை கெடுத்துப்போடுகிற ஆவிகளை, பழைய சச்சரவுகளை பேசி மன்னியாதிருக்கிற சுபாவத்தை கொண்டு வருகிற ஆவிகளை, தேவ திட்டத்திற்கு விரோதமாக காணப்படும் பாரம்பரிய செயல்பாடுகளை கொண்டு வருகிற ஆவிகளை, குடும்பத்தில் காணப்படும் முரட்டாட்ங்கள், வாக்குவாதங்கள், இவைகளை உண்டு பண்ணுகிற ஆவிகளை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


78.என் குடும்பத்தின் ஆசீர்வாதங்களுக்கு விரோதமாக எழும்பும் சாத்தானின் சகல தந்திரங்களை, கிரியைகளை தூண்டுதல்களை, சூழ்ச்சிகளை, முயற்ச்சிகளை, தாக்குதல்களை, வஞ்சகங்களை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து

கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


79.குடும்ப ஜெபத்தை ஜெபிக்காதபடி தடைசெய்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


80.குடும்பத்தில் காணப்படும் கசப்பின் ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


81.எனக்கும் என் குடும்பத்துக்கும் விரோதமாக போராடும் தாறுமாறுகளின் ஆவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மேற்கொள்ளுகிறேன்,எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்.


82.எல்லாவித பொய்யின் ஆவியையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


83.குடும்ப பாரத்தை அதிகப்படுத்தி ஆவிக்குரிய காரியத்தை தள்ளிப்போட வைக்கும் ஆவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


84.வேலை ஸ்தலங்களில் கொடுமையாய் நடத்துகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின்

நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


85.வேலையில் மிக அதிக அழுத்தத்தை கொண்டு வந்து ஜீவனை கசப்பாக்குகிற

ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன்.


86.தேவ ஜனங்களின் வளர்ச்சியை பார்த்து எரிச்சல் அடையும் எரிச்சலின் ஆவிகளையும் வளர்ச்சியை தடுக்கமுயற்ச்சி செய்யும் ஆவிகளையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


87.இருளின் ராஜ்யத்தின் வளர்ச்சிக்காக தேவஜனங்களை வேலைசெய்ய வைக்கும் ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன்.


88.பிசாசின் ராஜ்யத்தின் பண்டசாலைகளை கட்டும் படியாக தேவ ஜனங்களை கட்டாயமாக

வேலைசெய்யவைக்கும் ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


89.தேவ ஜனத்திற்குள் காணப்படும் ஒடுங்கின ஆவிகளை, துயரத்தின் ஆவிகளை. இருதயத்தை நொறுக்குகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


90.அழிந்து போகிற ஆத்துமாக்களை குறித்து கவலையற்றிருக்க பண்ணுகிற, ஜெபிக்காமல் இருக்க பண்ணுகிற தேவ சித்தத்திற்கு எதிராக இருக்க பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


91.துன்மார்க்கனை தன் துன்மார்க்கத்தை விட்டு திரும்பும்படியான எச்சரிப்பை கொடாமல் இருக்கும்படி செய்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


92.துன்மார்க்கனை நான் எச்சரிக்காவிட்டால் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தில் மரித்தால் அந்த இரத்தப்பழியை என்னிடத்தில் கேட்பார் என்ற உணர்வில்லாமல் இருக்க செய்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


93.துன்மார்க்கனை நான் எச்சரித்தும் துன்மார்க்கன் ஆகாத வழியைவிட்டு திரும்பாமல் போனால் அவன் தன் துன்மார்க்கத்திலே சாகும்போது நான் என் ஆத்துமாவை தப்புவிக்கிறேன் என்ற உணர்வில்லாமல் செய்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


94.நீதிமான் நீதிகேடு செய்யும்போது நான் எச்சரிக்காவிட்டால் அவன் தன் பாவத்திலே சாவான் என்பதை அறிந்திருந்தும் அவனுடன் அவன் செய்கிற நீதிகேட்டுக்கு இணங்கி போக செய்கிற ஆவியை இயே கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


95.நீதிமான் நீதிகேடு செய்யும்போது நான் எச்சரிக்காவிட்டால் அவன் சாவதை அலட்சியம் செய்து என்னை கவனயீனமாயிருக்கப்பண்ணுகிற ஆவியை இயேசு கிறிஸ்துவின்

நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


95. நீதிமான் நீதிகேடு செய்யும்போது நான் எச்சரிப்பதினால் அவன் மனந்திரும்பி பிழைப்பான் என்றும் ஒரு ஆத்துமாவை தப்புவிக்கமுடியும் என்று எண்ணாமல் எச்சரிக்காமல் இருக்க பண்ணுகிற ஆவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


97.மனந்திரும்புகின்ற ஒரு பாவியினிமித்தமாய் பரலோகத்தில் சந்தோஷம் தூதர்கள் மத்தியில் சந்தோஷம் உண்டாகும்போது பாவிகள் மனந்திரும்புதலை குறித்து அக்கரையில்லாமல் இருக்க செய்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


Prepared By.

Pr. W. Samuel Selvaraj.

IPC Church, Pollachi. Ph: 9443504594...

Sunday, 30 January 2022

ஊரீம், தும்மீம் || அறிந்து கொள்வோம் பகுதி -83 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -83


ஊரீம், தும்மீம்

(Urim, Thummim)


இந்த வார்த்தைகளின் சரியான பொருள் ஏது என்று தெரியாது. “ஜோதிகள்” , ”பரிபூரணங்கள்” என்று பொருள்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது எந்த பெருளால் செய்யப்பட்டவை என்பதும் தெரியாது. எந்த வடிவில் செய்யப்பட்டது என்பதும் தெரியாது. ஆனால், இவை ஆசாரியனுடைய ஏபோத்துடன் இணைக்கப்பட்டிருந்த மார்பதக்கத்தினுள் வைக்கப்பட்டது. (யாத் 28.16,28-30).



ஆசாரியனுடைய  மார்பதக்கம் (ஏபோத்)


இச்சன்னதக் கட்டைகள் இக்கட்டான வேளைகளில் தேவனுடைய சித்தத்தை அறிவதற்காகப் பயன்படுத்தப்பட்டன.


1. ஆகான் விஷயத்தில் - (யோசு 7)


2. சவுல் - யோனத்தான் விஷயத்தில் - (1சாமு 14 . 41,42)


3. தாவீதின் காலத்தில் - (1சாமு 23. 9-12.30. 7,8)


ஆகியோர் காலத்தில் இவை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இவை பயன்படுத்தப்பட்ட விதம் பற்றி தெரியாது. 


வேதாகமம் தரும் தகவல்களை வைத்து ஆராய்கையில், இவற்றின் மூலமாக ”ஆம்” ”இல்லை”  என்ற விடை மட்டும் தான் கிடைத்தது என்று நாம் அறியலாம். இப்படியாக, ஆகான் விஷயத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரை நான்கு முறை இக்கட்டைகள் குலுக்கப்பட்டன என அறியலாம். அப்படியே சவுல், யோனத்தான் விஷயத்திலும் இரண்டுமுறை பயன்படுத்தப்பட்டன.


1இராஜாக்கள் 23. 9-12., 30. 7,8 ஆகிய இடங்களில் சவுல் அபியத்தாரிடம் ஏபோத்தைக் கொண்டு வா  என்று கூறுகிறாகப் பார்க்கிறோம்.இங்கு தவறுதலாக ஊரீம், தும்மீம் என்பவைகளுக்குப் பதில் ”ஏபோத்து” என குறிப்பிடப்படுகிறது என்கிறார் மென்டல்சோன் (Mendelsohn) என்ற வேத பண்டிதர். ஏபோத்தினுள் இக்கட்டைகள் காணப்படடிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.







Friday, 12 November 2021

ஆவிக்குரிய யுத்தம்- பகுதி-1 || சாத்தான் மேல் ஜெயம் பெறுதல் ||

 ஆவிக்குரிய யுத்தம் 


பகுதி -1


சாத்தான் மேல் ஜெயம் பெறுதல்



1.கிறிஸ்துவுக்குள்ளான என்னுடைய பரிசுத்த வாழ்க்கையை சீர்குலைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,

கடிந்துகொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன்.


2.என்னை பலவானின் வலைக்குள் இழுத்து சிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


3.ஆராதனையை அசட்டை பண்ண வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


4.ஜெபத்தில் உற்சாகமற்று இருக்கப்பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன்.


5.வேத தியானத்தை மறக்க பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


6.தேவ பிரசன்னத்தை உணர முடியாதபடி மனசலிப்பை உண்டுபண்ணுகிற ஆவிகளை

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்.

மேற்கொள்ளுகிறேன். 


7.ஆவியில் தொடங்கி மாம்சத்தில் முடிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


8.உலகத்திற்கு ஒத்த வேஷத்தை தரிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


9.இரட்சிப்பின் வஸ்திரத்தை கறைபடுத்துகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்

எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


10.சத்தியத்தை விட்டு வழுவிப்போக பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.

 

11.விசுவாசத்தை மறுதலிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன். 


12.ஆதி மேன்மையை இழந்துபோக பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


13.ஒழுங்கான ஜெபவாழ்க்கையை கெடுக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


14.சத்தியத்திற்கு கீழ்ப்படியாமல் போக பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


15.ஆவியானவரை துக்கப்படுத்த வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


16.பெற்றுக்கொண்ட கிரீடத்தை இழக்கவைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


17.அபிஷேகத்தை இழக்கப்பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன்.


18.பிரதிஷ்டையை தீர்மானங்களை இழக்கப்பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


19.தேவகிருபையை இழக்கப்பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


20.அழைப்பைவிட்டு திசைமாற பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


21.தேவ சித்தத்தில் தடுமாற வைக்கிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


22.உலக மயக்கத்தால் இழுப்புண்டு போக வைக்கிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


23.சாட்சியாய் வாழ முடியாதபடி பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


24.பொய்யானதை தரிசிக்க வைக்கிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


25.சுய மகிமையை தேட வைக்கிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


26.ஆதாயத்திற்காக ஆண்டவரை மறுதலிக்க வைக்கிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


27.சாத்தான் கொண்டு வரும் சகல பெலவீனங்களையும், சகல வியாதிகளையும், சகல

வலி வேதனைகளையும், சகல பிணிகளையும், கட்டுகளையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன்.


28.பெருந்தொற்று வியாதிகளை கொண்டு வந்து பல லட்சங்களை மரணத்திற்குட்படுத்தும் எதிராளியான அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


29. கருச்சிதைவுகளை கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின்

நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


30.மலட்டு கர்ப்பங்களை உண்டு பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன் கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


31.பலவித கட்டிகளை உண்டு பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


32.சிறுநீரகத்தை செயலிழக்கப்பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


33.உடலின் பலப்பகுதிகளை செயலிழக்கப்பண்ணுகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


 34.இருதய வியாதிகளை கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


35.சர்க்கரை வியாதியை கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


36.இரத்த அழுத்த வியாதியை கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


37.பலவித கேன்சர் வியாதிகளை, பலவித தீயகிருமிகளை, மூளைக்கட்டிகளை, இரத்தபுற்றுநோய், எலும்புபுற்றுநோய், கண்நோய்கள், இரைப்பைநோய்கள், தீராதவியாதிகளை கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


38.சொல்லமுடியாத அளவில் பலவித கொடிய வியாதிகளை கொண்டு வருகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,

கடிந்து கொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன். 


39.சாத்தானுக்கு துணைநின்று என்னை எதிர்த்து வருவோர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


40.சாத்தானுக்கு ஆதரவாக செயல்படும் சகல மனிதர்களின் கிரியைகளை நசரேனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


41.சாத்தான் என்மேல் செலுத்தும் சகல அதிகாரங்களையும், அவன் கொண்டு வரும் சகல அழிவிற்குரிய காரியங்களை, அவனுடைய நூதன செயல்பாடுகளை, அவனுடைய சகல தீய திட்டங்களை, அவனுடைய பயமுறுத்தல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


42.வாகனங்களில் செல்லும்போது விபத்து உண்டாக்கி அழிக்க சாத்தான் அனுப்பும் அனைத்து சதியான காரியங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


43.உபத்திரவங்களை கொண்டு வருகிற சாத்தான் அனுப்பும் தீய ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


44.கடித்து அழிவை உண்டாக்க சாத்தான் அனுப்பும் தீய பூச்சிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


45.ஆசீர்வாதங்களை பட்சித்துபோட சாத்தான் அனுப்பும் தீய பறவைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


46.நான் செய்யும் ஒவ்வொன்றிலும் குற்றம் கண்டுபிடிக்க ஜனங்களை ஏவுகிற சாத்தானின்

செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,

மேற்கொள்ளுகிறேன்.


47.ஏதாவது ஒரு வழியில் கலக்கத்தை கொண்டு வருகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


 48.வெட்கப்படுவதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உண்டாக்குகிற ஆவிகளை இயேசு

கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


49.பலவிதங்களில் அழிவுகளை நஷ்டங்களை ஏற்படுத்துகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


50.என் ஆத்துமாவை கெடுக்குகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


51.சகல நன்மைகளையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கொள்ளையிடுகிற சாத்தானின் ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன்.


52.வஞ்சிக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


53.பலவித பயங்களை கொண்டு வந்து பயமுறுத்துகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


54.என்னை விழுங்கும்படி சுற்றி திருகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


55.பகையை உண்டாக்குகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


56.என்னை குற்றப்படுத்த முகாந்திரம் தேடுகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


 57.பலவித கிரியைகள் மூலம் என்னை எரிச்சலடைய செய்கிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து மேற்கொள்ளுகின்றேன்,

கொள்ளுகிறேன்.


58.பிறர் செய்யும் தவறுகளினால் வந்த விளைவுகளுக்கு என்மேல் பழி சுமத்துகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


59.என் ஒழுக்கத்தை கெடுத்துப்போடுகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 


60.ஒற்றுமையை சீர்குலைக்கிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


61.புறங்கூறி திரியப்பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


62.மோசம் போக்குகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


63.அவமானங்களையும் நிந்தைகளையும் கொண்டு வருகிற சாத்தானின் செயல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


64.அலங்கோலமான செயல்களில் ஈடுபடப்பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


65.அந்தகாரத்தில் இருக்கப்பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


66.தவறான பழக்கத்தில் சிக்க வைத்து என் நற்பண்புகளை இழக்க வைக்கும், என் ஆவி ஆத்துமா சரீரத்தை கறைபடுத்தும்,என் மனசாட்சியை அசுசிப்படுத்தும், என் மனைவிக்கு துரோகம் பண்ண வைக்கும்,என் கணவனுக்கு துரோகம் பண்ண வைக்கும் அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


67.தவறான உறவை ஏற்படுத்தி மணிக்கணக்கில் போனிலே பேச வைத்து தூங்க விடாமல் தடுக்கும். சாப்பிட விடாமல் தடுக்கும். தேவனை தேடவிடாமல் தடுக்கும். குடும்பத்தாரோடு நேரம் செலவிட விடாமல். குடும்பத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய விடாமல் தடுக்கும் அசுத்த ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன்.


Prepared By

Pr.W. Samuel Selvaraj- Pollachi



காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...