6-ம் சங்கீதம் சங்கீத விளக்கம்

சங்கீத விளக்கம்


6-ம் சங்கீதம்


தலைப்பு:-

“சுகவீனத்தின் போது விசுவாச விண்ணப்பம்”


பிரிவுகள்:

  • வசனம் - 1-5 குணமாக்கும்படி விண்ணப்பம்.

  • வசனம் - 6-7 மன துயரத்தின் விளைவுகள்.

  • வசனம் - 8-10 விடுதலை.


விளக்கங்கள்:-


வசனம் 1-4

 தாவீதுக்கு நோய் வந்து, பெலன் குன்றி போன சமயத்தில் தனக்கு இரங்கும்படி வேண்டினார். தன்னுடைய நற்செயல்களை கூறி விண்ணப்பிக்காமல் உமது கிருபையின்படி என்னை இரட்சியும் என்று ஜெபிக்கிறார். அவரின் கிருபையால் தான் நாம் ஆசீர் பெறுகிறோம்.


வசனம் -2 

நான் பெலனற்று போனே என்று தாவீது கூறுவது போன்று நமது பெலவீனம், குறைகள், தகுதியின்மை ஆகியவற்ற கூறி ஜெபிப்பது நல்லது. ஆனால் கிறிஸ்துவுக்குள் நமக்கு பெலன் உண்டு என்பதையும் விசுவசித்து ஜெபித்து பெற்றுக்கொள்ள வேண்டும் (பிலி 4:13).


வசனம் -5

 தான் மரணமடைந்தால் கர்த்தரை நினைவு கூர்ந்து அவரை துதிக்க முடியாது என்பதால் தன்னை குணமாக்கி நீண்ட ஆயுள் தரும்படி கேட்கிறார்.


வசனம் 8-10

கர்த்தர் மேல் தாவீதின் நம்பிக்கையை இந்த பகுதி விளக்குகிறது. நமது விண்ணப்பங்களை கர்த்தர் 

கேட்டு பதில் தருவார் என நம்பிக்கையோடு விண்ணப்பிக்க வேண்டும்….

Post a Comment

0 Comments