கிறிஸ்தவத்தால் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள்

 


கிறிஸ்தவத்தால் இந்தியாவில்

ஏற்பட்ட மாற்றங்கள்



ஆதி நாட்கள் முதல் கிறிஸ்தவம் இந்தியாவில் பரவியது. தோமா அப்போஸ்தலன் A. D. 52-ல் இந்தியாவுக்கு வந்து தென் இந்தியாவிலும் வட இந்தியாவிலும் அநேக இடங்களில் நற்செய்தியை பரப்பினார். தமிழ்நாட்டில் பல இடங்களில் தோமா ஊழியம் செய்து பல இன மக்களை கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்தார் என்பதற்கு பல சான்றுகள் இருக்கிறது. தமிழ்நாட்டில் முக்கிய பட்டணமாய்  இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் தோமாவால் கட்டப்பட்ட ஓர் பழங்கால கிறிஸ்தவ கற்கோயில் இன்றும் இருக்கிறது. காலத்தால் பழுதடைந்த நிலையில் இருந்த இக்கோவிலுக்கு சமீபத்தில் பிற மதத்தினர் சிலர் இது தாங்களுக்கு சொந்தமான இடம் என்று வாதிட்டார்கள் அதை அரசு முறைப்படி ஆலயத்தின் கற்கள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்ட போது கற்களில் ஒன்றில் ஓர் சிலுவை அடையாளமும் மற்றொன்றில் திருவிருந்து  பாத்திரத்தின் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தை கண்டுபிடித்தார்கள்.அதை கண்டவர்கள் கலைந்து சென்றார்கள். அந்த ஆலயம் தோமாவின்  தென்னிந்திய வருகையை நிருபிக்கும் சான்றாய் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. 

வட இந்தியாவிலும் தட்சசீலத்தின்

ராஜாவாயிருந்த கொண்டோ பரஸ் என்பவனுக்கும் அவன் சகோதரனுக்கும் தோமா ஞானஸ்நானம் கொடுத்தார்.பின்பு சென்னையில் மயிலாப்பூர் என்னும் இடத்தில் நல்ல முறையில் ஊழியம் செய்து ரத்த சாட்சியாய் மரித்து நம் தேசத்தில் அடக்கம் பண்ணப்பட்டார்.

இதைத்தவிர அந்நாட்களில்

உபத்திரவத்தின் மூலம் சிதறடிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்தியாவில் பல பகுதிகளில் நற்செய்தியை அறிவித்து மக்களை கிறிஸ்துவின் சபையில் சேர்ந்தார்கள். அந்நிய நாட்டு வணிகம் மற்றும் போக்குவரத்து இந்தியாவில் அதிகம் இருந்ததால் கிறிஸ்தவம் இந்தியாவில் தீவிரமாக பரவியது.

 அது மட்டுமல்ல கிறிஸ்தவம் இந்தியாவில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இன்று வரை அதை அழிக்க முடியாத அடையாளமாய் நிமிர்ந்து

நிற்க்கிறது.அநேக மாற்றங்கள் உண்டு அவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.,,


1.புத்த மதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்.


அந்நாட்களில் இந்தியாவில் புத்தம், சமணம் ஆகிய சமயங்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தன. ஆனால் அது நாத்திகக் கொள்கையுடையதாய் இருந்தது. கிறிஸ்தவம் பரவியபோது புத்தமதத்தில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் கடவுள் உண்டென்றும் அவர் பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்னும் திரித்துவத்தை உடையவர் என்றும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் திருத்துவத்தை தர்மகாயா, சம்போககாயா, நிர்மாண காயா என்று விளங்கிகொண்டார்கள். 

இவர்கள் மகாயான புத்தர்கள் என்றும் இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஹீனயான புத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 

ஆதிக் கொள்கைகளைக் கொண்ட ஹீனயான புத்தமதம் பாலி மொழியில் எழுதப்பட்டது. ஆனால் கிறிஸ்தவக் கொள்கைகளால் மாற்றமடைந்த மகாயான புத்த மதம் கிறிஸ்துவுக்குப் பின் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.



2. சைவம், வைணவம் - மாற்றங்கள்


திராவிடர்கள் கிறிஸ்தவ கொள்கைகளை ஏற்றுக் கொண்ட போதிலும் அவர்களுக்குள் திரித்துவக் கொள்கை பொறுத்தமட்டில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஒரு சாரார் திருத்துவத்தில் ஒன்றான பரிசுத்த ஆவியை power அல்லது 'சக்தி' என்று அழைத்து அதை பெண்பாலாக கருதினர். அதாவது அன்புக் கடவுளாகிய சிவனை பிதா என்று, குமாரனை

 குமரக் கடவுள் என்று, பரிசுத்த ஆவியை 'சக்தி' (பெண்பால்) என்றும் அழைத்தார்கள். இது சைவம் என்று அழைக்கப்பட்டது.


பரிசுத்தாவியை பெண்பாலாக கூறுவதை மறுசாரார் விரும்பவில்லை. அவர்களின் கருத்துப்படி கன்னி மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பம் தரித்த படியால் அவர்கள் பரிசுத்த ஆவியை ஆண்பாலாய் எடுத்துக்க கொண்டு 'விஷ்ணு' என்று அழைத்தார்கள். எனவே அவர்கள் திரித்துவத்தை சிவன் (பிதா), பிரம்மா (குமரன்). விஷ்ணு (பரிசுத்த ஆவி ஆண்) என்று குறிப்பிட்டார்கள் இது வைணவம் என்று அழைக்கப்பட்டது.


பரிசுத்த ஆவியை பெண்பாலாக காண்பிப்பது சைவமும் ஆண் பாலாக காண்பிப்பது வைணவவுமாக மாற்றப்பட்டது. 


3.கிறிஸ்தவத்தால் சமஸ்கிருதம் தோற்றம்:


மவுரிய வம்சத்தில் மிகச் சிறந்து விளங்கிய திராவிட சக்கரவர்த்தி அசோகன், (கி.மு. 270 - 232) அவன் தன் 99 சகோதரர்களைக் கொன்று. ஆட்சிக்கு வந்தான். கலிங்கப் போருக்குப் பின் புத்தமதத்தை தழுவிக் கொண்டான். புத்த மதத்தை பல வழிகளில் பரவச் செய்தான். 3-வது புத்த மத மகாநாட்டை கூட்டினான். அந்நாட்களில் அறியப்பட்ட பாலி, அர்த்தமா கதி போன்ற ப்ராகிர்த மொழிகளிலும் அராமியம், கிரேக்கம் போன்ற அந்நாட்களில் அறியப்பட்ட எல்லா மொழிகளிலும் கல்வெட்டுகள் பதித்தான்.அப்போது  சமஸ்கிருத மொழி இல்லாத காரணத்தால் அசோகனின் கல்வெட்டுகளில் சமஸ்கிருதம் பொறிக்கப்படவில்லை..


சமஸ்கிருதம் கிறிஸ்துவுக்குப் பின் திராவிடர்களால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட மொழியாகும். பாரசீகர், கிரேக்கர், உரோமர், போன்ற அன்னியர்கள் இந்தியாவில் பரவியிருந்த போது, திராவிடர்களின் புதிய (கிறிஸ்தவ) ஆன்மீக கருத்துக்களை, தமிழ், பாலி, அர்த்தமாகதி, பாரசீகம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளை பேசி வந்த மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இத்தனை மொழிகளையும் கலந்து சீர்ப்படுத்தி ஸமஸ்கிருதம் என்ற ஒரு புதிய மொழியை திராவிட அறிஞர்கள் உருவாக்கினார்கள்.

 ஆதிக் கொள்கைகளைக் கொண்ட ஹீனயான புத்தமதம் கிறிஸ்துவுக்கு முன் பாலி மொழியில் எழுதப்பட்டது. கிறிஸ்தவ கொள்கைகளால் மாற்றமடைந்த மகாயான புத்த மதம் கிறிஸ்துவுக்குப் பின் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. 

சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்களான இராமயணம், மகாபாரதம் ஆகியவற்றை உருவாக்கியவர்கள் வால்மீகியும், வேதவியாசருமாகிய திராவிடர்களே. சமஸ்கிருதத்தில் சிறந்த காப்பியங்களை உருவாக்கிய காளிதாசரும் திராவிடரே.


4.கிறிஸ்தவத்தால் வேதங்கள் தோற்றமடைந்தது.


வேதங்கள், கிறிஸ்துவுக்குப்பின் வேதவியாசரால் உருவாக்கப்பட்டவையாகும். பழந்திராவிட வழி பாட்டில் வழிபாட்டுப் பாடல்களையும் ஆரியர்களின் நாடோடி வழிபாட்டுப் பாடல்களையும் தொகுத்து, சமஸ்கிருத மொழியில் செய்யுள்களை 'ரிக்' என்ற பெயரில், இசையோடு கூடிய பாடல்களை 'சாமம்' என்ற பெயரிலும், பலியிடும் முறைகளிலுள்ள பாடல்களை 'எசூர்' என்ற பெயரிலும், மற்றும் பாடல்களை 'அதர்வணம்' என்ற பெயரிலும் வேதத்தை நான்கு பகுதிகளாக உருவாக்கினார்கள்.

பலியை அடிப்படையாகக் கொண்ட

 இந்தகருத்துக்களை 'வேதாந்தமாக விளக்கினார்கள்'. அதாவது இயேசுக் கிறிஸ்து பலிகளை நிறைவேற்றி தம்மையே பலியாக்கியதால், 

வியாசர் தம் வேதாந்தத்தில், வேதத்தின் அந்தமாக பலி நிறைவேற்றுக் கொள்கையை வெளிப்படுத்துகிறார். அதற்கு அவர், எழுதிய 'பகவத் கீதா' "பிரம்ம சூத்திரா" ஆகியவையும் அவரால் தொகுக்கப்பட உபநிஷத்துக்களும் ஆதாரமாய் காணப்படுகின்றன.


5.கிறிஸ்தவத்தால் பக்தி இயக்கங்கள் தோன்றியது.


கிறிஸ்துவுக்குப் பின்பு கிறிஸ்தவ கொள்கைகளின் அடிப்படையில், தமிழகத்தில் ஒரு புதிய இயக்கம் எழுந்தது. அது "பக்தி இயக்கம்" என்று குறிப்பிடப்படுகிறது. சமண பௌத்த சமயங்களில் இருந்த அநேக திராவிடர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் திருநாவுக்கரசர். இவர் சமண மதத்திலிருந்து பக்தி இயக்கத்தில் வந்தார். இவரின் தலைமையில் பக்தி இயக்கம் அரசர்களின் செல்வாக்கை பெற்றது. ஆனால் ஆரியர்களின் செயல்களால் திராவிடருக்கு பெரிய தீங்குகள் ஏற்பட்டது.


6.கிறிஸ்தவத்தால் சித்தர்கள்


ஆரியர்களின் கொடூர செயல்களுக்கு எதிராக திராவிட அறிஞர்களும் முனிவர்களும் தங்கள் கொள்கைகளை பாதுகாக்க முயன்றார்கள். ஆனால் சித்தர்கள் துன்புறுத்தப் பட்டார்கள். அனேகர் காடுகளில் சென்று குகைகளில் வசித்தார்கள். அங்கு அவர்களது குகைகளும் இடிக்கப்பட்டு அனேக சித்தர்கள் கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவக் கொள்கைகளில் வளர்ச்சியடைந்த திராவிட சமயம் ஆரியர்களால் திசை திருப்பப்பட்டு திராவிடர்கள் ஜாதிக் கொள்கையால் அடிமைப் படுத்தப்பட்டார்கள்…..




Taken from - 

Bible Hand Book & The Learning Bible,






Post a Comment

0 Comments