Saturday, 12 June 2021

யுஸ்து அறிந்து கொள்வோம் பகுதி-51

 அறிந்து கொள்வோம்

பகுதி-51


யுஸ்து 


வேதாகமத்தில் யுஸ்து என்ற பெயரில் 3 நபர்கள் இருக்கிறார்கள்.


  • யுஸ்து என்ற மறுநாமமுள்ள பர்சபா


அப்1:23 -ல் 

இந்த விசுவாசியைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. யோசேப்பு என்பது இவருடைய மற்றொரு பெயராகும். யூதாஸ்காரியோத்துக்குப் பதிலாக ஒருவரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் தீர்மானித்தபோது, இந்த யுஸ்துவும், மத்தியாவும் இதற்காக நிறுத்தப்பட்டார்கள். சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. மத்தியா சீஷர்களோடு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

யுஸ்து ஆண்டவராகிய இயேசுவின் ஊழியத்தில் அவரோடுகூட இருந்து, அவருடைய உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக இருந்த ஒருவராவார்.


  • கொரிந்து பட்டணத்தில் யுஸ்து


அப். 18:7,11-ல்

பவுல் கொரிந்து பட்டணத்தில் ஊழியம் செய்தபோது, யுஸ்து என்ற இந்த யூதனுடைய வீட்டுக்குச் சென்றார். இவனுடைய வீடு ஜெபஆலயத்துக்கு அடுத்ததாக இருந்தது.பவுல் ஒன்றரை வருடம் அங்கே தங்கி தேவனுடைய வசனத்தை உபதேசித்தார்.


  • ரோமில் இருந்த உடன் ஊழியன்


கொலோ. 4:11-ல்

யுஸ்து என்ற பெயரையுடைய ஒரு விசுவாசி ரோமாபுரியில் பவுலின் உடன் ஊழியனாக இருந்தான்.இவன் இயேசு என்றும் அழைக்கப்பட்டான்.

பவுல் சிறையில் இருந்த போது சிலர் அவரைக் கைவிட்டலும்  யுஸ்து அவருக்கு எப்போதும் உண்மையுள்ளவனாக இருந்தான்.


No comments:

Post a Comment

காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...