முத்து அறிந்து கொள்வோம் பகுதி - 50

அறிந்து கொள்வோம்

பகுதி - 50


முத்து 


இந்த "முத்து" வேதத்தின் படி தேவனுடைய சத்தியத்துக்கும், பாடுகளின் மூலமாகப் பலப்படுத்தப்பட்ட பரிசுத்தவான்களுக்கும் அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது.


இந்த முத்து - 

எபிரெய மொழியில் "gabish" என்றும், 

கிரேக்கமொழியில் "margarites" என்றும், 

இலத்தீன் மொழியில் "perla" என்றும் அழைக்கப்படுகிறது. 

இது மட்டும் தான் ஒரு உயிருக்குள்ளாக உருவாகுகிறதது முத்துச் சிப்பிக்குள் உருவாகிறது.


வேதத்தில் முத்து


யோபு 28:18 -ல்

முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது” என்று சொல்லப்பட்டுள்ளது. 


மத். 7:6-ல் 

உங்கள் முத்துகளைப் பன்றிகள்

முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

"தேவனுக்கடுத்த ஆழமான காரியங்களைப் பாவத்தில் கிடப்பவர்களிடம் சொல்ல வேண்டாம், தூஷிப்பவர்களிடம் உங்கள் சாட்சியைச் சொல்லுவதில் பயனில்லை" என்பதே இதன் அர்த்தமாகும்.


மத். 13:45,46

ஆண்டவராகிய இயேசு பரலோக ராஜ்யத்தை நல்ல முத்துக்களைத் தேடுகிற ஒரு வியாபாரிக்கு ஒப்பிட்டிருக்கிறார்.

அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.'' இயேசுவானவரின் நாட்களில் முத்துக்கள் விலையுயர்ந்த பொக்கிஷமாகக் கருதப்பட்டன. ரோமப் பேரரசனாகிய ஜூலியஸ் சீஸர் ஒரு தனிப்பட்ட முத்தைப் பத்து இலட்சம் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் சமார் ஆறு கோடி ரூபாய்க்கு அந்த முத்தை  வாங்கினானாரம்.


வெளி. 21:21

பரலோகப் பட்டணத்தின் ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாக இருந்தது. இப்படியாகப் பன்னிரண்டு வாசல்கள் இருந்தன.


வெளி. 17:4

யோவான் தரிசனமாகக் கண்ட ஸ்திரீ இரத்தினங்களாலும், முத்துக்களாலும் தன்னை அலங்கரித்திருந்தாள்.


வெளி. 18:11

இங்கு குறிப்பிடப்படும் நகரத்தில் மற்ற வியாபாரப் பொருள்களோடு முத்துக்களும் விற்கப்பட்டன.


முத்துச் சிப்பி


முத்துச் சிப்பிகள் (Pearl Oyster) ஈரோடுகள் உடைய, நீர்வாழ் மெல்லுடலிகளாகும். கடலின் அடிப்பாகத்தில், பவளப்புற்றுக்கள், பாறைகள், கடினமான தரையுள்ள இடங்களில் மயிரிழை போன்ற பிடிப்பான்கள் மூலம் பற்றிப் பிடித்து வாழ்பவை. இவை அடர்த்தியாக வாழும் இடங்களை பார் அல்லது முத்து வங்கிகள் என்று அழைப்பர்கள். கரையிலிருந்து 20 மீட்டர் ஆழம் வரை நல்ல உப்பு நீர் உள்ள இடங்கள் இதன் வாழிடங்களாகும். இந்தியா, சீனா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் இவை கூடுதலாக காணப்படுகின்றன. இந்தியாவில் மன்னார் வளைகுடா, கட்ச் வளைகுடா ஆகிய இடங்களிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் சுற்றிலும் இவை கூடுதலாக கிடைக்கின்றன.


இயற்கை முத்து எப்படி உருவாகும்


முத்துச் சிப்பி உணவிற்காக தண்ணீரை உடலுக்குள் உறிஞ்சி சல்லடை செய்யும்போது தற்செயலாக சென்றடையும் மணல் துகள்களையும் பொடிகளையும் வெளியேற்றும் தன்மை அதற்க்கு இல்லை.ஆதானல் இப்பொருட்களால் ஏற்படும் உறுத்தல் மற்றும் வேதனையை போக்க மேலுறை ஒருவகை திரவத்தை சுரந்து அந்த உறுத்தும் பொருளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு உறையை உருவாக்கும்.இதில் கால்சியம் கார்பனேட் என்ற வேதிப் பொருள் அதிகமாக இருப்பதாலும், பல அடுக்குகளாக அமைவதாலும் இது ஒளிரும் தன்மையையும் திடத் தன்மையைப் பெற்ற முத்தாக உருமாறுகிறது. நாட்கள் செல்லச் செல்ல இதன் பருமனும், ஒளிரும் தன்மையும் அதிகரிக்கின்றது.

இப்படி தான் முத்து உருவாக்க படுகிறது.


பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் அதிகமான முத்துச் சிப்பிகள் இருக்கின்றனார்.


முத்துக்கள் பெண்களுக்கு ஒரு அலங்காரப் பொருளாக இருக்கின்றன.1 தீமோ. 2:9.

ஆனால் பெண்கள் இதை அணிவதைவிட, தாழ்மை,உண்மை போன்றவகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது.










Post a Comment

1 Comments