யாப்பேத்து அறிந்து கொள்வோம் பகுதி-45

அறிந்து கொள்வோம்

பகுதி-45


யாப்பேத்து 


நோவாவின் குமாரர்களில் ஒருவன்(ஆதி. 5:32).

சேம், காம், யாப்பேத் இந்த மூவரில் யாப்பேத்தே மூத்தவன் (ஆதி. 10:21).


1 பேதுரு: 3:20

ஜலப்பிரளயத்தின்போது நோவாவின் பேழையினால் காப்பாற்றப்பட்ட 8 மனிதர்களில்  யாப்பேத் மற்றும் அவனுடைய மனைவியும் இதில் அடங்குவார்கள்.


ஆதி. 10:2-5

யாப்பேத்தின் சந்ததியார் ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியிலும் ஆசியாவின் வடக்குப் பகுதியிலும் பல இனத்தாருக்கு முற்பிதாக்களாக இருந்தார்கள்



சேமும், யாப்பேத்தும் தங்கள்  தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

காம் தகப்பனார் சபிக்கப்பட்டான்.


ஆதி. 9:27

"யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார்" என்று நோவா ஆசீர்வதிப்பதை நாம் பார்க்க முடியும்.

 ( கோமர், மாகோகு, மாதாய், யாவான், மேசேக்கு, தீராஸ் ஆகியோர் யாப்பேத்தின் குமாரர்கள் என்று நம்பப்படுகிறது(ஆதி.10:2).

இவர்கள் பல தீவுகளில் பரவி வாழ்ந்தார்கள்.ஒவ்வொருவருக்கும் தனித்தனி மொழி இருந்தது.

ஜலப்பிரளயத்துக்குப் பிறகு அவர்கள் பல இடங்களுக்கும் பரவிச் சென்றார்கள் என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.


வரலாற்றாசிரியர் யூசிபியஸ் சொல்லுகிறார்:-


"இவர்கள் டாரஸ் மலைத்தொடரைக் கடந்து, ஆசியாவில் டான் ஆறு வரையிலும், ஐரோப்பாவில் கேடிஸ் வரையிலும் பரவி வாழ்ந்தார்கள். இவர்கள் தாங்கள் குடியேறிய

இடங்களுக்குத் தங்களின் பெயரையே வைத்தார்கள்” என்றும்

"இவர்கள் ஆர்மீனியர்கள், லீதியர்கள், மேதியர்கள், கிரேக்கர்கள் மற்றும் திபேரியர்களுக்கு" முன்னோடிகளாக இருக்கிறார்கள்.


யாப்பேத்தின் குமாரர்கள் பரவிய இடங்கள்


  • கோமர் -கருங்கடல், ஜெர்மனி பகுதி,வேல்ஸ்.


  • மாகோகு - கருங்கடலுக்கு அருகிலுள்ள ஜார்ஜியா பகுதி, சீத்தியர்களுக்கு இவர்கள் முன்னோடி களாக இருக்கிறார்கள்.


  • மாதாய் - மேதியர், ஆரியர் மற்றும் இந்திய இனத்தவர்.


  • யாவான் - கிரேக்க நாடு மற்றும் சீப்புரு தீவு. தூபால் - ரஷியா,


  • மேசேக்கு - ரஷியா, குறிப்பாக மாஸ்கோ.


  • தீராஸ் - இத்தாலி பகுதி, மற்றும் தீரேசிய இனத்தவர்கள்.


நோவாவின் சந்ததியிலிருந்தே உலகத்தில் வாழுகின்ற எல்லா இனத்தாரும் உருவாகினார்கள் என்பது நாம் அறிந்ததே….

Post a Comment

1 Comments