2 ம் சங்கீதம் சங்கீத விளக்கம்

 சங்கீத விளக்கம்



2 ம் சங்கீதம் 


தலைப்பு

அபிஷேகம் பண்னப்பட்ட இராஜா



அறிமுகம்:-


  • மேசியாவை குறித்த சங்கீதத்தில் இது முதலாவதாகும்.

  • மேசியாவை குறித்த சங்கீதங்கள் 2, 8, 16, 21, 22, 23, 24, 40, 41, 45, 55, 68, 69, 72, 96, 98, 102, 110, 118, 129. 

  • இந்த 2ஆம் சங்கீதத்தை தாவீது எழுதினார் என்று அப் 4:25-26 கூறுகிறது.


உட்பிரிவு


  • வச.1-3 கர்த்தருக்கும் மேசியாவுக்கும் எதிர்ப்பு.

  • வச.4-6 ஆண்டவரின் பதில்.

  • வச.7-9 குமாரனை நோக்கி பிதா கூறியது.

  • வச.10-12 உலக மக்களுக்கு ஆலோசனையும், எச்சரிப்பும், வாக்குறுதியும்.


சிறப்பு:


இந்த சங்கீதம் குமாரன் கூறியது

 போல அமைந்துள்ளது. 

இதன் பகுதிகள் அப் 4:25-26; 13:32; எபி 1:5;5:5; வெளி 19:15 ஆகிய இடங்களில் மேற்கோல் காட்டப்பட்டுள்ளன. 

தேவன் தம்முடைய குமாரனை உயர்த்தி, எல்லாவற்றையும் ஆளச்செய்யும் நோக்கத்திற்கு எதிரான இவ்வுலக மக்களின் கலகத்தை இந்த சங்கீதம் கூறுகிறது.


வசன விளக்கம்


1. ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

2.கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

3. அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்து

போடுவோம் என்கிறார்கள்.


இந்த இங்கீதத்தின் முதல் இரண்டு வசனங்களும் ஒரு தடவை நிறைவேறியதாக அப் 4:25-26 குறிப்பிடுகிறது. இந்த வசனங்கள் மீண்டும் மீண்டும் நிறைவேற கூடியதாக உள்ளது. பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய இயேசுவுக்கும் எதிராக அநேகர் எழும்பினார்கள். இன்னும் எழும்புவார்கள்.

வசனம்.2-3 - இந்த வசனங்கள் தேவனுடைய திரித்துவத்தில் பிதாவும் குமாரனும் தனித்தனி நபர்கள் என்பதை தெளிவாக விளக்கி காட்டுகிறது.

வச.3 எந்த ஒரு மனிதனும் இரட்சிகப்படும் முன் இருளின் அந்தகாரத்தில் இருக்கிறான். பாவத்திலும் இச்சைகளிலும் கட்டப்பட்டு இருக்கிற அவன், கர்த்தருக்குள் வாழ்வதை கட்டப்பட்டிருபதாக கருதுகிறான். உண்மையில் கர்த்தருடைய பிள்ளைகள்தான் விடுதலை பெற்றவர்கள் (யோவா 8:32,36; ரோம 6:22; கொலோ 1:13). கர்த்தருக்கு பயந்து நல்வழியில் நடப்பது அடிமை வாழ்க்கை அல்ல, அது மிகவும் சமாதானம் மகிழ்ச்சி தரும் விடுதலை வாழ்க்கை ஆகும்.


4. பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

5. அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக்கலங்கப்பண்ணுவார்.

6. நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.


கிறிஸ்துவை எதிர்பவர்களுக்கு பிதாவாகிய தேவன் தரும் பதில் இது. இயேசுவுக்கு எதிராக எழும்பினவர்களும் அவர்களின் இராஜ்ஜியங்களும் அழிந்து போயின. இயேசுவுக்கு எதிராக வருகிறவர்கள்மனந்திரும்பாவிடில் அவர்கள்தேவ கோபாக்கினைகுள்ளாகுவது நிச்சயம். இயேசுவையும் அவரின் ஊழியரையும் அவருடைய மக்களையும் எதிர்த்து எதையும் செய்யாதபடி கவனமாய் இருப்பீராக.

எந்தவொரு அதிகாரமும் தேவனிடமிருந்து வருகின்றன. 

இதை உணராமல் பெருமை கொண்டு ஆளும் தலைவர்களும் அதிகாரிகளும் இந்நாள்வரைஇருந்திருக்கின்றனர். இவர்களின் ஆற்றலும் அதிகாரமும் குறுகிய காலத்திற்குள் அழிவதை நாம் அறிவோம். கர்தருடைய பிள்ளைகளுக்கு எதிராக எழும்பும் எவருக்கும் அஞ்சாதீர்.


7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்;கர்த்தர்என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.


இந்த வசனங்கள் மேசியா கூறுவதாக அமைந்துள்ளது. வச.7 மற்றும் 12 கிறிஸ்துவை குமாரன் என்பதை விளக்கும் ஆதார வசனங்கள் ஆகும் இவற்றுடன் வச.2ஐ ஒப்பிட்டு 

படித்தால் புரியும். 

வச.8ன் படி உலக மக்கள் யாவரும் கிறிஸ்துவன்டைக்கு வர ஊக்கமாக ஜெபிப்பது நமது கடமை. வச.9ன் நிறைவேறுதல் வெளி 19:15இல் கூறப்பட்டுள்ளபடி இனி நடக்கபோகிறது. வெளி 2:27; 12:5 ஐயும் படியுங்கள்.


10.இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.

11.பயத்துடனேகர்த்தரைச்சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

12.குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.


உலக மக்களுக்கு குமாரனின் எச்சரிக்கைகள் இந்த பகுதியில் அடங்கியுள்ளன. அவரை முத்தஞ்செய்யுங்கள் என்பது அவரிடம் சரணடைந்து அடங்கியிருங்கள் என்று பொருள். இயேசு சீக்கிரம் வரபோகிறார் அவரை சார்ந்து கொள்வோர் பாக்கியவான்கள். மற்றவர்கள் அவர் கோபத்தை சந்திக்க நேரிடும். அவர் இன்று இரட்ச்கர் நாளை நியாயாதிபதி. அழிவை விரும்பாத எரும் அவரை ஏற்றுகொண்டு அவரை சார்ந்து வாழுங்கள் முத்தஞ்செய்யுங்கள்…



Post a Comment

1 Comments