புதிய ஏற்பாடு ஆய்வு ( பகுதி-1) - New Testament Survey

 

New Testament Survey

புதிய ஏற்பாடு ஆய்வு 


             ( பகுதி-1)

( மத்தேயு - அப்போஸ்தலருடைய நடபடிகள்)


A. சுவிசேஷ புத்தகங்கள்:


புதிய ஏற்பாடு மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு சுவிசேஷங்களுடன் ஆரம்பிக்கிறது. “சுவிசேஷங்கள்” என்பதை சரியான தமிழ்நடையில் “நற்செய்தி நூல்கள் " என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் இது, நற்செய்தியை அல்லது நல்ல சரித்திரத்தை அறிவிக்கும் நுால்கள் என்னும் கருத்தில் “Gospel” என்ற வார்த்தையில் அறியப்படுகிறது.

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் இதன் எழுத்தாளர்கள், “நற்செய்தியாளர்கள்' அல்லது “சுவிசேஷகர்கள்”என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் தங்கள்சொந்த எழுத்து நடையில் இயேசுவின் சரித்திரத்தை நமக்குத் தருகிறார்கள்.


நான்கு நற்செய்தி நுால்களும்

நான்கு வித்தியாசமான கோணங்களிலிருந்து

இயேசுவின்வாழ்க்கையை நமக்கு எடுத்துக்கூறுகின்றன். இயேசு எப்படிப்பட்டவர் ? அவர் என்ன செய்தார் ? அவருக்கு சம்பவித்தது என்ன ? அவை ஏன் சம்பவித்தன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நற்செய்தி நூல்கள் நான்கும் நமக்குப் பதில் தருகின்றன.

எனினும் அவை இயேசுவின் பிறப்பைக் குறித்த காரியங்களை எடுத்துரைத்தபின் முக்கியமாக அவரது கடைசி மூன்றரை ஆண்டு கால ஊழியங்களையும், அவரின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் போன்ற காரியங்களையும் தெளிவாக நமக்குப் படம் பிடித்துக் காட்டும் சரித்திர புத்தகங்களாக விளங்குகின்றன.


இயேசுவின் ,சீஷர்கள் குறித்தும், அவர்கள் எப்படி இயேசுவை மேசியாவாகக் கண்டுகொண்டனர் என்பது குறித்தும் இந்நுால்களின் பல்வேறு சம்பவங்களின் மூலம் நாம் அறிகிறோம். நமது

ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவம், பாவ மனுக்குலத்தை மீட்க சிலுவைப் பிராயச்சித்தம், தேவனுடைய மாபெரும் மீட்பின் திட்டம்

போன்ற சத்தியங்களை தமது சரித்திரக் குறிப்புகளில் கவனமாய் உள்ளடக்கித் தருகின்றன நற்செய்தி நுால்கள்.


எல்லாவற்றுக்கும்' மேலாக இயேசுவின் மரணத்தின் மூலம் ஏற்பட்ட மாபெரும் வெற்றி, தமது பின்னடியார்களாகிட அப்போஸ்தலருக்கு நற்செய்தியை அறிவிக்கும் மாபெரும் பணியை விட்டுச் செல்லுதல் போன்ற காரியங்களும் சுவிசேஷங்கள் நமக்குத் தரும் விபரங்கள் ஆகும்.


இன்னும் கூறப்போனால், நான்கு

சுவிசேஷங்களிலும் கூறப்பட்டிருக்கும் இயேசுவின் வாழ்க்கையும், அவர்செய்த காரியங்களனைத்தும் அதினதின் காலக்கிரமத்தின்படி எழுதப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். வரிசைக்கிரமமாக இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களை

கூறுவதைக் காட்டிலும், இயேசுவின் வாழ்க்கையின்

உன்னத நிகழ்ச்சிகளைக்

அதன் ஆசிரியர்கள் தங்கள் பிரதான நோக்கமாகக் கொண்டனர்.


B.நற்செய்தி நுால்கள் எழுதப்பட்ட காரணம்:


இயேசு கிறிஸ்துவைக் குறித்த அனைத்து சரித்திரக் குறிப்புகளும், அவர் நாட்களில் அவரைப் பின்பற்றிய உண்மையான விசுவாசிகள் மற்றும் அவரது

சீஷர்கள் மூலம் பாலஸ்தீன யூதருக்கு, நினைவாற்றலிருந்து சொல்லப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்தது. ஆனால் சுவிசேஷம் யூத எல்லையைவிட்டு புறஜாதியாரை அடைந்தபோது நடந்தவற்றை சரித்திரமாக எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


அப்படி எழுதப்பட்ட நூல்கள் ஆரம்பத்தில் ஏராளம் எழுந்தாலும் (லூக். 1:1-4), காலப்போக்கில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு

நான்கு நுால்கள் மட்டுமே திருமறையாக இன்று வரை நிலைத்திருக்கின்றன. பரிசுத்த

ஆவியின் ஏவுதலால்

இவை எழுதப்பட்டமையால் தவறில்லாத உண்மைச் சரித்திரமாக இன்று நம் கையில் வந்துள்ளது.


C.ஒன்றுக்கு மேற்பட்ட நற்செய்தி நுால்களின் தேவையா?


ஒரு காரியத்தை வலுவாய் உறுதிப்படுத்த ஒரு நீதிமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகள் தேவைப்படுவதுபோல, இயேசுவின் வாழ்க்கை சரித்திரமும் நான்கு நற்செய்தியாளர்களால்எழுதப்பட்டு

உண்மை சரித்திரமாய் உறுதிப்பட்டுள்ளது. அல்லது, ஒரு கட்டிடத்தை புகைப்படம் எடுக்கும் ஒருவர் கட்டிடத்தின் முழு அமைப்பும் தெளிவாய் கிடைக்க ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை எடுப்பதுபோல, நம்ஆண்டவரின்

வாழ்க்கை, குணாதிசயங்கள், ஊழியம் இவற்றைத் தெளிவுறக் காட்ட ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் சொந்த மொழிநடையில் எழுதவேண்டியது அவசியமாயிற்று.


மத்தேயு இயேசுவை இராஜாவாகவும், மாற்கு அவரை ஊழியக்காரராகவும் அல்லது பாடுபடும் வேலைக்காரராகவும், லுாக்கா அவரை மனித குமாரனாகவும், யோவான் அவரை தேவ குமாரனாகவும் சித்தரிக்கிறார்கள். இவை நான்கும் இயேசுவின் ஊழியம், போதனைகள், மற்றும் அற்புதங்களையே சித்தரித்துக்காட்டினாலும், ஒரு நூலிலிருந்து மற்றது வேறுபட்டிருக்கிறது. மாற்கு எழுதாமல் விட்டதை மத்தேயு எடுத்து எழுதுகிறார்.


நான்கு சுவிசேஷங்களுமே இயேசுவின் 18 ஆண்டு கால வாழ்க்கையை (12 வயது முதல்

30 வயது வரை) எழுதாமல் விட்டுவிடுகின்றன. ஒவ்வொரு நுாலும் தன்னில்தானே முழுமையற்றதாய் இருப்பினும், ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் எழுதுகின்றனர். தாங்கள் எழுதும்படி தெரிந்தெடுத்த கருப்பொருளில் மையக்கருத்தில் கவனம் செலுத்தி எழுதியபடியினாலேயே இவ்வித்தியாசங்கள் காணப்படுகின்றன

என்று எடுத்துக்கொள்ளலாம். இதில் மத்தேயு, மாற்கு, லூக்கா - ஆகிய மூன்று சுவிசேஷங்களும் ஒன்றை ஒன்று அதிகம் ஒத்திருப்பதால் அவை "ஒருநோக்கு நற்செய்தி நூல்கள்" அல்லது “திரி அநுபந்த சுவிசேஷங்கள்” (Synoptic Gospels) என்று அழைக்கப்படுகின்றன.


ஒருநோக்கு நற்செய்தி நூல்கள் இயேசுவின் கலிலேயா ஊழியத்தை எடுத்து எழுதும் போது, யோவான் நற்செய்தி

நூல் நம் ஆண்டவரின் யூதேயா

 ஊழியத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. முதல் மூன்று நூல்களும் இயேசுவின் அற்புதங்கள், உவமைகள் மற்றும் திரள் கூட்டத்திற்கு அவர் பிரசங்கித்த பிரசங்கங்களையும், போதித்த போதனைகளையும் விவரித்துக் காட்டுகின்றன. ஆனால் நான்காவது சுவிசேஷம் இயேசுவின் ஆழமான

போதனைகளையும், சம்பாஷணைகளையும், ஜெபங்களையும் சித்தரித்துக் காட்டுகிறது.இன்னும் கூறினால், "திரி அநுபந்த நூல்கள்" இயேசுவின் இவ்வுலக செயல்களைச் சித்தரிக்கும் போது யோவான் சுவிசேஷம் இயேசுவின் பரலோக உறவையும்,

மனுமக்களோடு அவர் கொண்ட தனிப்பட்ட உறவையும் தெளிவாய்த் தருகிறது.





மத்தேயு சுவிசேஷம்


மத்தேயு எழுதின சுவிசேஷம் புதிய ஏற்பாட்டின் ஆரம்ப புத்தகமாகும். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் இப்புத்தகம் கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுத லினிமித்தம் முதல் நுாற்றாண்டு ஆரம்ப சபையானது இப்புத்தகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பயன்படுத்தியது.


1.ஆசிரியர்: -


மத்தேயு (லேவி). இவரது கிரேக்க பெயரான மத்தியாஸ் (Mattheios) என் பதின் பொருள் “தேவனுடைய ஈவு” (Gift of God) என்பதாகும். இவர் வரி வசூலிப்பவராக இருந்தார். பின்னர் இயேசுவின் சீஷராக மாறினார்.


2. காலம்: -

 கி. பி 60-65. அதாவது எருசலேம் தேவாலயம் இடிக்கப்படுவதற்கு

முன்னால் - எழுதப்பட்டிருக்க வேண்டும். (மத். 24:1, 2) 


3. பெறுநர்: -


மத்தேயு சுவிசேஷமானது யூதர்களுக்காக எழுதப்பட்டது


4.நோக்கம்: -


இயேசு கிறிஸ்து மேசியா என்றும், பூலோக்தில் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கப்போகும் நித்திய ராஜா இவரே என்பதையும் யூதர்களுக்கு நிருபிக்க எழுதப்பட்டது. யூதர்கள் எதிர்பார்த்த மேசியா இயேசு கிறிஸ்து என்பதையும் இவரே பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் கூறிய தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் என்பதை நிருபிக்கும்படி எழுதப்பட்டது.


5.பின்னணியம்:


ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் மற்றும் புதிய ஏற்பாட்டுக்கும் அறிமுகமாக இந்த சுவிசேஷம் முதலாவது இடத்தில் சரியாக வைக்கப்பட்டுள்ளது (16:16). இதன் ஆசிரியர் தன் பெயரை இதில் குறிப்பிடாவிட்டாலும் சபைப்பிதாக்களின் ஒருமித்த சாட்சிகளின்படி (கி. பி. 130ன் ஆரம்பத்தில்) இதை மத்தேயுதான் எழுதினார் என்றும், இவர் இயேகவின் சீஷர்களில் ஒருவர் என்றும் நம்பப்படுகிறது.


மாற்கு சுவிசேஷம் ரோமா்களுக்கு எழுதப்பட்டதுபோல, லுாக்கா சுவிசேஷம் தியோப்பிலுவுக்கும்' மற்றும் புறஜாதி விசுவாசிகளுக்கும் எழுதப்பட்டதுபோல, மத்தேயு சுவிசேஷம் யூதருக்காக எழுதப்பட்டது. இந்த சுவிசேஷத்தில் யூதப் பின்னணியம் தெளிவாகக் காணப்படுகிறது.


 1 ) பழைய ஏற்பாட்டு வெளிப்பாடு, வாக்குத்தத்தம்,

தீர்க்கதரிசனங்களை சார்ந்து,

நீண்ட எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்று குறிப்பிடுகிறது.


 ii) இயேசுவின் வம்ச வரலாற்றை ஆபிரகாமிலிருந்து ஆரம்பித்துக்

கூறுகிறது (1:1-7),

 ஆபிரகாம், யூதர்களின் தகப்பனாகையால்புரிந்துகொள்ள எளிதாயிருந்தது. இயேசு தாவீதின் குமாரன் என பலமுறை விவரிக்கிறது (1:1;9:27; 12:23; 15:22; 20:30, 31; 21:9, 15). 

தாவீது யூதர்களின் இராஜா என்பதால் எளிதாக விளங்க உதவும். யூதர்களின் வழக்கத்தின்படியே பரலோக இராஜ்யம் என்ற பதம்

பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் யூதர்கள் அடிக்கடி

தேவனுடைய பரிசுத்த நாமத்தை உச்சரிப்பார்கள். எனினும் மத்தேயு சுவிசேஷம் யூதர்களுக்கு மட்டும் என்று அல்ல. இயேசுகிறிஸ்துவின் செய்தி முழு திருச்சபைக்கும், முழு உலகத்திற்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் இச்சுவிசேஷம் அமைந்துள்ளது (2:2-18;' 8: 11, 12; 13:38; 21:43; 28:18-20).


6.திறவுகோல் வசனம்: நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களை யானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத். 5:17).


7. செய்தி: -


இப்புத்தகம் பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் புத்தகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக பழைய ஏற்பாட்டுத்

தீர்க்கதரிசனங்கள்மற்றும்

நியாயப்பிரமாணம் இவைகளின் நிறைவேறுதல் இயேசு கிறிஸ்து என்பதை வலியுறுத்துகிறது. நிறைவேறிற்று என்பது இப்புத்தகத்தின் முக்கிய வார்த்தையாகும். மத்தேயு இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றை தாவீது ராஜாவின் வழியில் வந்தவர் என்பதை முக்கியப்படுத்தி அவருடைய கன்னிப்பிறப்பைக் கூறுகிறார். . இதைத்தொடர்ந்து அவரது ஞானஸ்நானம், வனாந்திரத்தில் சோதிக்கப்படுதல்' மற்றும் ஆரம்பக்கால ஊழியங்களைக் கூறுகிறார். இறுதியாக அவருடைய பாடு, மரணம், உயிர்த்தெழுதலைக் கூறியபின்னர் பிரதான கட்டளையாகிய சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்பதைக் கூறி முடிக்கிறார்.


8.பொருளடக்கம்


 A. இயேசுவின் ஆரம்ப கால வாழ்க்கையும், ஊழியமும்(1:1-4:25)


 B. இயேசுவின் மலைப்பிரசங்கம்    (5:1-7:29)


 C.இயேசுவின் போதனைகள், உவமைகள் மற்றும் பிரசங்கங்கள்

(8:1-18:35) 


D. எருசலேம் பிரயாணமும், இறுதி எச்சரிப்புக்களும் (19:1-23:39)


 E. இனி சம்பவிக்கப்பபோகிறவைகளைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் (24:1-25:39).

 

F.இயேசுவின் மரணமும், உயிர்த்தெழுதலும் (26:1-20:17)


 G. இயேசுவின் பிரதான கட்டளை (28:18-20).



9. சிறப்பம்சம்:


 i) மத்தேயு சுவிசேஷமானது மேசியாவைக் குறித்த வார்த்தைகள்

(Messianic Language) அடங்கிய சுவிசேஷமாகும். (உ.ம். இவர் தாவீதின் குமாரன்). மேசியாவைக் குறித்து பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள வசனங்கள்

அதிகமாக மேற்கோளிட்டுக் கூறப்பட்டுள்ளன: (மேசியாவைக் குறித்த 53 நேரடியான வசன

மேற்கோள்களும், 76 மற்ற மேற்கோள்களும் கூறப்பட்டுள்ளன).


 ii) மத்தேயு சுவிசேஷத்தில் மாத்திரம் தான் சபை என்கிற வார்த்தைகூறப்பட்டுள்ளது. (மத். 16:18; 18:19.) 


iii) கடைசிக் கால சம்பவங்களைக் குறித்து மத்தேயு மிகத் தெளிவாகக்

குறிப்பிட்டுள்ளார். (மத். 24:25)


 iv) மத்தேயு இயேசு கிறிஸ்துவினுடைய போதனைகளை அதிகமாகக்

கூறியுள்ளார். குறிப்பாக தேவனுடைய இராஜ்யத்தைக் (Kingdom of God) குறித்த உபதேசங்கள் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. (மத். 5-7; மத். 10, 13, 18, 23-24).


 v) மத்தேயு இயேசு கிறிஸ்துவை ராஜாவாகவும், முழு மனுக்குலத்தின்இரட்சகராகவும், நியாயாதிபதியாகவும் சித்தரித்துள்ளார். (மத். 1:1-17; 2:2; 21:7-11; 27:11, 37; 28:18).





மாற்கு  சுவிசேஷம்


 புதிய ஏற்பாட்டின் இரண்டாவது புத்தகம் மாற்கு ஆகும். சுவிசேஷ புத்தகங்களில் மிகவும் சிறிய புத்தகம், அதே வேளையில் சுவிசேஷ புத்தகங்களில் ஆரம்பத்தில் எழுதப்பட்ட புத்தகமாகும். இயேசு கிறிஸ்து என்ன கூறினார் (what He said?) என்பதை விளக்குவதைக் காட்டிலும் இயேசு கிறிஸ்து என்ன செய்தார் (what He did?) என்பதை அதிகமாக விவரிக்கும் புத்தகம் ஆகும்.


1.ஆசிரியர்:


யோவான் மாற்கு. இவர் 12 சீடரில் ஒருவராக இல்லாவிடினும், அப்போஸ்தலனாகிய பவுலோடு மிஷினரிப் பிரயாணங்களில் உடன்வேலையாளாக 

இருந்தவன். (அப். 13:13).


2.காலம்:


கி. பி. 55-65


3. பெறுநர்:


மாற்கு இந்த சுவிசே புத்தகத்தை புறஜாதிய கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். குறிப்பாக ரோமர்களுக்கு எழுதப்பட்டது.


 4. நோக்கம்:


இயேசு கிறிஸ்து எல்லோருக்கும் பணிவிடை செய்யும்படி வந்த ஊழியன் எனவும், தேவன் எனவும் (Servant-God) அறிவிக்கும்படி இந்த சுவிசேஷம் எழுதப்பட்டது.

 

5. செய்தி: 


மாற்குபுத்தகம் ஒரு வித்தியாசமானசுவிசேஷ புத்தகமாகும். 

மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷத்தைப் போன்று இயேசுவின் ஜநன விவரங்களைக் குறிப்பிடாமல் இயேசு கிறிஸ்துவி னுடைய செய்கைகைகளையும், சாதனைகளையும் விவரிக்கின்றார். மேலும் இயேசுவின் நீண்ட போதனைகளை இவர் குறிப்பிடவில்லை, மாற்கு  இயேசு கிறிஸ்து எவைகளை சாதித்தார் என்பதை விளக்குகிறார்.


மாற்கு யோவான் ஸ்நானகனை அறிமுகப்படுத்துவதோடு இப்புத்தகத்தைத் தொடங்குகிறார். (1:2-8). இதைத்தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தைக் குறிப்பிட்டுள்ளார். (1:9-22) இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் சோதிக்கப்பட்டதை சுருக்கமாகக் கூறியபின்னர் (1:12, 13).


இயேசுகிறிஸ்துவின் செயல்களை அதிகமாக விவரித்துள்ளார். வியாதியஸதர்களை சுகப்படுத்துதல், பிசாசுகளைத் துரத்துதல், திரளான. ஜனங்களை போஷித்தல், தம்மிடத்தில் உதவி வேண்டி வந்தவர்களுக்கெல்லாம் செய்த உதவிகள் ஆகியவைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (1:14-13:37) இதைத்தொடர்ந்து இயேசுவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதலோடு இப்புத்தகம் நிறைவுறுகிறது. (14:1--16:20).


6.திறவுகோல் வசனம்


அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். -(மாற். 10:45).


7.பொருளடக்கம்: -


       A. ஊழியனாகிய இயேசுவின் ஆயத்தங்கள் (1:1-13)


       B. ஊழியனாகிய இயேசுவின் செயல்பாடுகள் (1:14-13:37)


       C. ஊழியனாகிய இயேசுவின் மரணமும், உயிர்த்தெழுதலும் (14:116:20)


8. சிறப்பம்சம்:

*நான்கு சுவிசேஷ புத்தகங்களில் மிகவும் சிறிய புத்தகம் 

* நான்கு சுவிசேஷ புத்தகங்களில் முதலாவது எழுதப்பட்ட புத்தகம் *மாற்கு சுவிசேஷம் எளிமையான நடையில் எழுதப்பட்டது.

* மற்ற சுவிசேஷ புத்தகங்களைக் காட்டிலும் அநேக அற்புதங்களை

இப்புத்தகம் காட்டுகிறது. இதனை அற்புதங்களின் சுவிசேஷம்எனலாம். 

*இயேசு கிறிஸ்துவின் முக்கிய போதனையாகிய மலைப்பிரங் கங்கள்இடம் பெறவில்லை. (மத். 5, 6, 7; லூக். 6). 

*இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு போன்றவை இடம் பெறவில்லை. அநேக அரமேயு வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. (3:17; 5:41;

7:11, 34; 14:36; 15:22, 34) *இயேசுவைக் குறிப்பிட தெய்வீகப் பெயர்கள் (Diving Titles)

குறிப்பிடப்படவில்லை. (உ.ம்) கர்த்தர், ராஜா.




             லுாக்காசுவிசேஷம்


லூக்கா எழுதின சுவிசேஷம். மற்ற சுவிசேஷ புத்தகங்களைக் காட்டிலும், மிகவும் தெளிவாகவும், விவரமாகவும், இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை, உபதேசங்கள், அற்புதங்கள் மற்றும் ஊழிய விபரங்களை விவரிக்கின்றன. இச்சுவிசேஷ புத்தகமானது அநேகரால்

விரும்பி வாசிக்கப்படுகிற புத்தகமாகக் காணப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் பூரண மனிதத் தன்மையை லூக்கா மிகவும் தெளிவாக விவரிக்கிறார்.


1. ஆசிரியர்: -


லூக்கா. இவர் ஒரு புறஜாதியார். (கிரேக்கர்) இவர் ஒரு வைத்தியர். அப், பவுலுடன் இணைந்து ஊழியம் செய்தவர். (கொலோ. 4:4; அப். 16:10-24; 2 தீமோ. 4:11.)


 2. காலம்: -


கி. மு. 65-70

 3.பெறுநர்: - 

பொதுவாக புறஜாதியாராகிய கிரேக்கர்களை மையமாக 

வைத்து எழுதப்பட்டது.

 குறிப்பாக கிரேக்கரான தியோப்பிலுவுக்கு 

இப்புத்தகத்தை எழுதினார்.

 தேயோப்பிலு 

என்றால்

" தேவனை நேசிக்கிறவர் பொருள்" 


4. நோக்கம்: -


இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, ஊழியம் குறித்த மிகத் தெளிவான வரலாற்றை, கலாச்சாரத்திலே பெயர்பெற்ற கிரேக்கர்களுக்கு அறிவிக்கும்படி எழுதப்பட்டது. 

முழு மனித சமுதாயத்திற்கும் மாதிரி இயேசு கிறிஸ்து. 

அவரே பூரண மனிதன், 

இரட்சகர் (Perfect Human & Savipr-Son of Man) 

என்பதை அறிவிக்கும்படியாக எழுதப்பட்டது. 


5. பின்னணியம்:


இப்புத்தகம் தியோப்பிலு என்ற மனிதனுக்கு எழுதப்பட்டது.

 (1:3; அப். 1:1) லூக்கா எழுதிய இரண்டு புத்தகங்களில் (லூக்கா, அப்போஸ்தல நடபடிகளில்) முதல் புத்தகம் ஆகும். புறஜாதியாரான இவர், வேதத்தை எழுதின யூதரல்லாத முதல் ஆசிரியர்.


கிறிஸ்தவம் ஆரம்பிக்கப்பட்ட முழு வரலாற்றை புறஜாதி சபைகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவையை பூர்த்தி செய்வதற்காக பரிசுத்த ஆவியானவர் இப்புத்தகத்தை தியோப்பிலுவிற்கு எழுதும்படி ஏவினார்.


 இவ்வரலாறு இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.


#  இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, ஊழியம், மரணம், உயிர்த்தெழுதல்

மற்றும் பரமேறுதல் (லூக்கா சுவிசேஷம்). 

# எருசலேமில் பரிசுத்த ஆவியானவர் பொழியப்படுதலும், அதைத்

தொடர்ந்து ஆதி சபையின் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் நடபடிகள்).


6 . லுக்கா சுவிசேஷம் "பாடல்

சுவிசேஷம்" (அ) "செய்யுள் சுவிசேஷம"'என அழைக்கப்பட்டது.

(1:46-56, 67-79; 2:8-14).


 7. லூக்கா சுவிசேஷத்தில்

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.

 (உ.ம்) தீர்க்கதரிசியாரிய அன்னாள்,மகதலேனா மரியாள், இயேசுவின் தாயாகிய மரியாள். 


8. லுாக்கா இயேசு கிறிஸ்துவின் மிகத் தெளிவான வரலாற்றைக் கூறுகிறார். 

(உ.ம்)

  • மத்தேயு ஆபிரகாம் இலிருந்துகுறிப்பிட்டுள்ளார். 

  • லூக்கா - ஆதாமிலிருந்து குறிப்பிட்டுள்ளார்.


 9.லுாக். 9:51 முதல் 18:35 வரை கூறப்பட்டுள்ள பெரும்பாலான

சம்பவங்கள் மற்ற சுவிசேஷங்களில் கூறப்படவில்லை.


10. லுாக்கா வைத்தியன் என்பதால் தன்னுடைய சுவிசேஷ புத்தகத்தில் வியாதியஸ்தர்களை குறித்தும், அதற்குரிய பரிகாரங்களை குறித்தும் கூறியுள்ளார்.





யோவான் சுவிசேஷம்


யோவான் சுவிசேஷம் என்பது இறையியல் சுவிசேஷம் ஆகும். மற்ற மூன்று சுவிசேஷங்களும், இயேசு கிறிஸ்து என்ன செய்தார் என்பதையும், என்ன போதித்தார் என்பதையும் அதிகமாக விவரிக்கின்றன. 

ஆனால் யோவான் சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இச்சுவிசேஷத்தை "ஆவிக்குரிய சுவிசேஷ புத்தகம்" 

என அழைக்கலாம். காரணம் ஆவிக்குரிய காரியங்களை ஆவிக்குரிய வார்த்தைகளில் கூறுவதாக அமைந்துள்ளது.


1.ஆசிரியர்: -


அப். யோவான். இவர் செபதேயுவின் குமாரனும், யாக்கோபின் சகோதரரும் ஆவார். "இடிமுழக்கத்தின் மகன்" என

அழைக்கப்பட்டவர் ஆவார்


 2. காலம்:

         கி. பி. 85-90

3. பெறுநர்: -


கிறிஸ்தவ சமுதாயத்தவர்களுக்கு எழுதப்பட்டது. குறிப்பாக புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது. 


4. நோக்கம்:


இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக எழுதப்பட்டது. இயேசு கிறிஸ்து சாதாரண மனிதன் அல்ல. அவர் தேவன். அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு

 நித்திய ஜீவன் உண்டு என்பதைப் போதிப்பதற்காக எழுதப்பட்டது.


 5. பின்னணியம்: -


இப்புத்தகம் மற்ற மூன்று' சுவிசேஷங்களைவிட தனித்தன்மை வாய்ந்தது. மற்ற கவிசேஷங்கள் சொல்லாத இயேசு கிறிஸ்துவின் யூதேயா, எருசலேம் ஊழியங்களைப்பற்றி இப்புத்தகம் விவரிக்கிறது. 

அப்போஸ்தலனாகிய யோவான் எபேசு பட்டணத்தில் இருக்கும் போது அங்குள்ள சபை மூப்பர்களின் வேண்டுகோளின்படி இந்த ஆவிக்குரிய சுவிசேஷத்தை எழுதினார். காரணம் என்னவென்றால் இயேசுகிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை குறித்து சொல்லப்பட்ட துர்உபதேசங்களை மறுப்பதற்காகவும், அதை குறித்த ஒரு தெளிவு உண்டாகவும் எழுதினார். 


6.திறவுகோல் வசனம்:


இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று

நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும்,

இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோ. 20:31).


7. செய்தி:


அப். யோவான் இப்புத்தகத்தின் செய்தியை யோ. 20:30, 31 ஆகிய வசனங்களில் சுருக்கமாக எழுதியுள்ளார். 

இவ்வசனப் பகுதியில் மூன்று வார்த்தைகள் முக்கியமானவை.


அற்புதங்கள் (Signs)

விசுவாசம் (Believe)

ஜீவன் (Life)


i) அற்புதங்கள்: -


யோவான் குறிப்பாக 7 அற்புதங்களை மாத்திரம் தன்னுடைய சுவிசேஷ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஏழு அற்புதங்களும் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையும் வல்லமையையும் வெளிப்படுத் துபவைகளாக அமைந்துள்ளன.


 A. தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுதல் (யோ. 2:1-11) அற்புத சுவையுள்ள திராட்சை ரசம இயேசு தரத்தின் தேவன் (Quality) என்பதை வெளிப்படுத்துகிறது. 


B. ராஜாவின் மனுஷரை சுகப்படுத்துதல் (யோ. 4:46-54). இவர் துாரத்திற்கும் தேவனானவர் (Space).


 C. பெதஸ்தாவிலிருந்த சப்பாணியை குணமாக்குதல் (யோ. 5:1-9). இவர் காலத்திற்கும் மேலானவர். (Time)


 D. 5000 பேரை போஷித்தல் 

   (யோ.6:1-14). (Quantity).


 E. தண்ணீரில் நடத்தல் (யோ.6:16-21). இவர்

 இயற்கை விதிகளுக்கு 

மேலானவர். (Natural Law). 


F. பிறவிக்குருடனை பார்வடையச் செய்தல் (யோ. 9:1-22). உலக நியமனங்களுக்கு, கருத்துக்களுக்கு 

மேலான தேவன். (Misfortune). 

G. லாசருவை உயிரோடு எழுப்புதல் (யோ.11:1-46). இவர் மரணத்தின் மேல் அதிகாரமுள்ளவர். (Dead).


 ii) விசுவாசம்: - (Believe)


இந்த வார்த்தை யோவான் சுவிசேஷத்தில் 98 முறை வருகிறது. யோவான் விசுவாசம் என்பதை இயேசுவை 

விசுவாசித்து கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்வதற்கு அடையாளமாகக் கூறுகிறார்.

 (யோ. 1:12).


 iii) ஜீவன்: - (Life)


இச்சுவிசேஷத்தில் காணப்படும் மூன்றாவது முக்கிய வார்த்தை ஜீவன். யோவான் சுவிசேஷத்தில் வாழ்க்கை (அ) ஜீவன் என்ற வார்த்தை இப்பூமியில் வாழும்

கால - அளவைக் குறிப்பிடவில்லை. இயேசுவை ஏற்றுக்கொள்வதன் மூலம் உண்டாகும் நித்திய ஜீவனைக் குறிப்பிடுகிறது. (யோ. 17:3).


I AM Statements: -


இச்சுவிசேஷ புத்தகத்தில் நானே

 (I AM) என்று தொடங்கி கூறப்பட்ட இயேசுவின் ஏழு வாக்கியங்களை யோவான் குறிப்பிட்டுள்ளார். இவைகள் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையையும், நித்தியத் தன்மையையும் விவரிப்பதாக உள்ளன.


  • நானே ஜீவ அப்பம் (6:35) 

  • நானே உலகத்தின் ஒளி (8:12; 5:5)

  •  நானே வாசல் (10:7)

  •  நானே நல்ல மேய்ப்பன் (யோ. 10:11, 14) 

  • நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோ. 11:25) 

  • நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோ. 14:6)

  • நானே மெய்யான திராட்சைச் செடி

  •  (யோ. 15:1).


 Divine Titles: - 


யோவான்புத்தகத்தில் இயேசுவின் தெயவீகத் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் 

அப். யோவான் இயேசுவை பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார்.


  • வார்த்தை  

  • ஒரே பேறான குமாரன் 

  • தேவ ஆட்டுக்குட்டி

  •  ஜீவ அப்பம் 

  • 'வழி

  •  சத்தியம்

  •  உயிர்த்தெழுதல் 

  • திராட்சைச் செடி

  • நல்ல மேய்ப்பன்

  • வாசல்


8.பொருளடக்கம் 


A. முன்னுரை (1:1-16)

 

B. இயேசுவின் ஆரம்ப கால ஊழியங்கள் (1:15-4:54)


 C. இயேசுவின் கலிலேய ஊழியங்கள் (5:1-10:42).


D. இயேசு லாசருவை உயிரோடு எழுப்புதல் (II:1--57)


 E. இயேசுவின் எருசலேம் வெற்றி பவனியும், போதனைகளும்

 (12:1-17:26) 


F. இயேசுவின் மரணமும், உயிர்த்தெழுதலும் (18:1-20:10)


 G. உயிர்த்தெழுந்த பின் இயேசு காட்சியளித்தல் (20:11-21:25) 


சிறப்பம்சம்:


 இயேசு கிறிஸ்துவின் ஏழு அற்புதங்கள் மட்டும்

 குறிப்பிடப்பட்டுள்ளது.

 (20:30) 

இயேசு கிறிஸ்துவின்

 வம்சவரலாறு,பிறப்பு, வார்ப்பு, சோதிக்கப்படுதல் போன்றவை கூறப்படவில்லை.

 இயேசு கிறிஸ்துவின் உவமைகள் சொல்லப்படவில்லை.

 இயேசு கிறிஸ்துவின் பிரதான கட்டளை கூறப்படவில்லை. யோவான் சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் பெயர்களுக்கும் (Divine Titles), நானே வாக்கியங்களுக்கும்

 (I AM Statencnts) பெயர்பெற்றதாகும்.




 அப்போஸ்தலருடைய நடபடிகள்: 


அப்போஸ்தலருடைய நடபடிகள் ஆதித்திருச்சபையின்

ஆரம்ப வரலாற்றை விளக்கும் புத்தகமாகும்.

இப்புத்தகம் சபையின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் - குறித்த சரித்திரத்தைக் கூறுகிறது. எருசலேமில் ஆரம்பிக்கப்பட்ட சபை சீரியா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க தேசங்களில் எவ்வாறு பரவி வளர்ந்தது என்று குறிப்பிடுகிறது.


இப்புத்தகம் சுவிசேஷ புத்தகங்களையும், நிரூபங்களையும் இணைக்கும் புத்தகமாக காணப்படுகிறது. இது சாதாரண வரலாற்று புத்தகம் அல்ல. ஆதி சபையின் மூல உபதேசங்களையும், விசுவாச போதனை களையும் உள்ளடக்கிய இறையியல் புத்தகமாக காணப்படுகிறது.


1.ஆசிரியர்: -


லூக்கா (அப். 1:1). லூக்கா ஒரு வைத்தியர். பவுலின் மிஷனரி குழுவில் இவரும்

ஒருவராய் காணப்பட்டார்.

இவர்சிறந்த எழுத்தாளரும், வரலாற்று ஆசிரியரும் ஆவார். புதிய ஏற்பாட்டுபுத்தகங்களை எழுதிய ஆசிரியர்களில் இவர் ஒருவரே புறஜாதியார் ஆவார். 


2.காலம்:


(கி. பி. 65-70 3)


3.பெறுநர்: -


இப்புத்தம் குறிப்பாக தியோப்பிலுவிற்கு எழுதப்பட்டது. தியோப்பிலு என்றால்' தேவனுக்குப் பிரியமானவன்' என்று அர்த்தம். இப்புத்தகம்

தேவனை நேசிக்கிற அனைவருக்காகவும் எழுதப்பட்டது எனலாம்.


 4. நோக்கம்: -


ஆதி சபையின் தோற்றம் மற்றும் அதன் வளர்ச்சியைக் குறித்த மிகத் தெளிவான சரித்திரத்தை கூறும்படி இது எழுதப்பட்டது. 


5. செய்தி:


இப்புத்தகம் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் பூமியில் சீஷர்களோடு

இருந்த நாட்களைக் குறித்தும், அதன்பின்பு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவங்களைக்கூறி தொடங்குகிறது. 

இதைத் தொடர்ந்து எருசலேமில் காத்திருந்த சீஷர்கள் மேல் பெந்தெகொஸ்தே நாளில்

 பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டதையும், ஆவியானவரின் வல்லமையைப் பெற்று சுவிசேஷ செய்தியை அறிவித்ததைக் கூறுகிறது

 (அதி. 1, 2).


 ஆதி சபையில் பேதுரு,

யோவான் மற்றும் விசுவாசிகளின் கூட்டத்தினர் சுவிசேஷத்திற்காக சாட்சிகளாய் நின்று உபத்திரவங்கள் நடுவிலும் சுவிசேஷ

வேலையை செய்த விபரத்தை தொடர்ந்து இப்புத்தகம் விளக்குகிறது.


எருசலேமில்ஆரம்பிக்கப்பட்ட சபை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பெருகியது. (அப். 3-7). இதைத் தொடர்ந்து சபை யூதேயா, மற்றும் சமாரியா நாடுகளுக்குப் பரவியது. (அப். 8).


அப்போஸ்தல நடபடிகளின் இரண்டாம் பகுதியில் பவுல் மற்றும் அவருடைய உடன்

வேலையாட்களின் ஊழிய விபரங்கள் கூறப்பட்டுள்ளது. பவுலின் மனமாற்றம், மிஷனரிப் பிரயாணங்கள் மற்றும், ரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்பட்ட விபரம் ஆகியவற்றை இப்புத்தகம் தெளிவாக விளக்குகிறது. பவுலின் ஊழியத்தின் மூலமாக புறஜாதியார்

தேசங்களில் சுவிசேஷம் பரவி சபைகள் ஸ்தாபிக்கப்பட்ட விவரங்களை இப்பகுதி தெளிவாக கூறுகின்றது. (அப். 9-28).


6.திறவுகோல் வசனம்:-


 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். - (அப். 1:8).


7.பொருளடக்கம்: 


இப்புத்தகத்தை சுருக்கமாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.


 1. பேதுருவின் ஊழியங்கள்          (1:1-12:25)


a. சபையின் ஆரம்பம் (1:1-7:60) 

b. சபையின் வளர்ச்சி (8:1-12:25)


II. பலின் ஊழியங்கள் (13:1-28:31)


A. பவுலின் முத) மிஷனரிப் பிரயாணம் (13:1-14:28)


B. எருசலேம் ஆலோசனை சங்கத்தில் பவுல் (15:1-35) 


C. பவுலின் இரண்டாம் மிஷனரிப் பிரயாணம் (15:36-18:22) 


D. பவுலின் மூன்றாம் மிஷனரிப் பிரயாணம் (18:23-21:16)


 E.பவுல் ரோமாபுரிக்குச் செல்லுதல் (21:17-28:31)


8.சிறப்பம்சங்கள்:


 i) ஆதித்திருச்சபையின் தெளிவான வரலாற்றை இப்புத்தகம் நமக்கு

கூறுகிறது. 


ii) மிகச்சிறந்த கிரேக்க மொழிநடையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.


 ili) இப்புத்தகம் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளைக் குறித்து

அதிகமாக கூறப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை பரிசுத்த

ஆவியானவரின் புத்தகம் எனலாம்.


 iv) இப்புத்தகம் அநேக தனிப்பட்ட மனிதர்களின்

பேச்சுக்களை பிரசங்கங்களை) உள்ளடக்கியுள்ளது. 

(உம்) பேதுரு, பவுல், ஸ்தேவான்.



C. பவுலின் நிரூபங்கள்: 


பொதுவான முன்னுரை


பவுல் , அப்போஸ்தலன்

நல்ல சூழ்நிலையில் கல்வி கற்கக்கூடிய வாய்ப்புப் பெற்று யூத மொழியையும் வேதாகமத்தையும் பயின்ற “யூத ரபியாகிய பவுல், கூடாரம் செய்யும் தொழிலைக் கற்றிருந்தான் (அப்.18:3).

 யூத மார்க்கத்தில் வைராக்கியமுடைய இவன் சபையைத் துன்பப்படுத்தினான் (அப். 20:911). 

ஸ்தேவான் கொலை செய்யப்பட்ட சமயத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட வாலிபனாய் இருந்தான்.


உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவனுக்கு தரிசனமாகி கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் கொடுக்கச் சென்ற அவனை இரட்சித்தார். அவன் செய்ய வேண்டிய மகிமையான

ஊழியத்திற்காக பரிசுத்த

ஆவியினால் நிரப்பப்பட்டான் (9:10-19). 

இரட்சிக்கப்பட்ட பவுல் அரேபியாவில் சில காலம் வாசம் செய்தான் என கலாத்தியரில் வாசிக்கிறோம் (கலா. 1:17). 

ஆரம்ப நாட்களில் சாட்சி பகர்ந்தான் (அப்.9:22-25). பானபாவின் உதவியினால் அவன் அப்போஸ்தலர்களின் ஐக்கியத்தில் இணைந்து கெர்ண்டான்.

 (அப். 9:27).


பவுலின் குடும்ப, மார்க்க பின்னணியம்:


யூத குலத்தில், மார்க்கப் பற்றுடைய பரிசேயர் பிரிவைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த பவுல், தனது ஊழிய நாட்கள் முழுவதும், தனது வைராக்கியமான யூத குலப் பின்னணியத்தையும் யூத

மார்க்கப் பின்னணியத்தையும் சுவிசேஷம் பரவுவதற்கு

உதவியாக பயன்படுத்தினான் (அப். 21:39; 23:1-6; ரோமர் 4:1; 9:3; 11:1; 1 கொரி. 10:1; 2 கொரி, 11:22; கலா. 6:10).


யூதனாக பவுல் தான்பிறந்ததை பெருமைக்குரியதாகவும், சிலாக்கியத்துக்குரியதாகவும் கடைசி வரை மனதில் கொண்டிருந்தான் என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் ஆதாரம். 


அவனுடைய செயல்களிலும்,சிந்தனையிலும்

தான் ஒரு யூதன் என்பதை முழுக்க

முழுக்க நிருபித்தான்.

 தன் எழுத்துக்களில் பழைய ஏற்பாட்டை ,மேற்கோள் காட்டி எழுதினான்


 பழைய ஏற்பாட்டை பயன்படுத்தும்போது ஒருயூதன் பயன்படுத்தும் அதே முறையில் பயன்படுத்தினான்.


ரபிகள் பழைய ஏற்பாட்டை

ஞான அர்த்தம்

கொடுத்து பயன்படுத்துவது போல பயன்படுத்தினான். பயிற்சி பெற்ற யூத ரபீயாக விளங்கினான். எனவே பவுலின் நிருபங்கள் முழுவதிலும் யூத உலகத்தை நன்கு அறிந்த மனமாற்றமடைந்த பவுலை நாம் பார்க்கிறோம். அதிலும், தன்னை எபிரெயரில் பிறந்த எபிரெயன் என்று அழைத்துக் கொள்கிறான். 

ஏனெனில் பல்வேறு காரணங்களினிமித்தம் அக்காலத்தில் அறியப்பட்ட முழ உலகத்திலும் சிதறியிருந்த

யூதர்கள் தங்கள் பிதாக்களின் பூர்வமொழியாகிய எபிரெய மொழியை மறந்துவிட்டிருந்தனர். ஆனால்  பவுலோ எபிரெய மொழியை தெளிவாகப் பேச, எழுத அறிந்திருந்து யூத வழிகளைக் கைக்கொண்டிருந்தான். எனவேதான் தன்னை எபிரெயரில் பிறந்த எபிரெயன் என்கிறான்.


யூதரில் பரிசேயர் மிக கடினமான

மார்க்க ஒழுங்குகளைப் பின்பற்றிய பிரிவினர் ஆவர். பவுல் இந்த பிரிவைச் சார்ந்தவன். 

இந்த பின்னணியங்களிலிருந்து இயேசு அவனை இரட்சித்தபடியால், கிறிஸ்தவ மார்க்கத்தை அதன் யூதப்பின்னணியத்திலிருந்து தெளிவாக விளங்கியிருந்தான். 


தன்னுடைய அறிவிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் யூதருக்கு கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்துப் போதிக்க பவுலைப் போல ஒரு மனிதனையே தேவன் தேடிக் கண்டுபிடித்தார்.


ரோம குடியுரிமையும், மேன்மையும்:


கிரேக்கரால் நிரம்பியிருந்த புறஜாதிய உலகிற்கு மிஷனரியாய் சென்ற பவுலுக்கு இருந்த பிரதான தகுதி அவனுக்கிருந்த ரோமக்குடியுரிமையாகும். 


அத்துடன் அக்கால உலகில் தலை சிறந்த கல்வி கற்ற சிறப்பும் பவுலுக்கு உண்டு. 

அவன் தர்சு பட்டணத்தின் யூதன். இந்த தர்சு பட்டணம் கிரேக்க கலாச்சாரத்துக்கு பேர்பெற்ற வணிக மையம். மிகப்பெரிய பல்கலைக்கழகம் இருந்தது. 


மகாஅலெக்சாண்டர், மார்க்

அந்தோணி, கிளியோபாத்ரா, ஜூலியஸ் சீசர் போன்ற மா மனிதர்கள் சஞ்சரித்த 

பட்டணம் இது. 

தத்துவ ஞானிகள் அநேகர் வாழ்ந்த பட்டணம் இது 

இந்த பட்டணத்தில் பிறந்த பவுல் ரோமக்குடியுரிமை உடையவனாய்ப் பிறந்தான்.

பிரிஸ்கில்லாவும் புதிய தலைமையிடத்தை ஆரம்பித்து தங்கள் ஊழியத்தை தொடர்ந்தார்கள்.

எபேசுவின் ஜெப ஆலயங்களில் பவுல் சில காலம் பிரசங்கித்தார். இதன்பின்பு தனது 2ம் மிஷனரிப் பிரயாணத்தை முடித்துக் கொண்டு செசரியா, எருசலேம் வழியாக அந்தியோகியா வந்து சேர்ந்தார் (அப். 18:20-23).


 பவுலின் மூன்றாவது மிஷனரிப் பிரயாணம்: -


எபேசுவில் சில நாட்களே தங்கி, தனது இரண்டாவது மிஷனரிப் பயணத்தை முடித்து அந்தியோகியா திரும்பிய பவுல், தனது மூன்றாம் மிஷனரிப் பயணத்தை அப். 18:23ல் தொடர்கிறார். 

கலாத்தியா மற்றும் பிரிகியா பகுதிகளில் இதற்கு முன்பு நிறுவிய சபைகளை

சந்தித்து உற்சாகப்படுத்தியபின், பவுல் மீண்டும் எபேசுவுக்கு வந்தார்.


எபேசுவுக்குப் பிறகு துரோவாவிலும், மிலேத்துவிலும் பவுல் பிரசங்கித்தாக வாசிக்கிறோம் (அப். 20ம் - அதி.) மிலேத்துவில் வைத்து எபேசுவின் மூப்பர்களை அழைத்து வழியனுப்புச் செய்யும் நிகழ்ச்சி நம் மனதைத் தொடுகிறது. நண்பர்கள் பலர் தடை செய்தும், பவுல் தன் பயணத்தை எருசலேமுக்கு நேராகத் தொடர்கிறார். 

இத்துடன் பவுலின் மூன்றாம் மிஷனரிப்பயணம் நிறைவு பெறுகிறது: 


இந்த மிஷனரிப் பயணங்களில் பவுல் பிரதானமாய் சாதித்தவை இரண்டு காரியங்களாகும். 


# அக்காலத்தில் அறியப்பட்ட புறஜாதிய உலகம்

முழுவதிலும் பவுல் சுவிசேஷத்தை அறிவித்து சபைகளை நிறுவினார். இவைகள்  ரோம ஆளுகைக்கு

உட்பட்ட கிரேக்க கலாச்சாரம் - நிரம்பியிருந்த பகுதிகளாகும்.


#  இப்பயணங்களில் லூக்கா, தீமோத்தேயு, சீலா, அரிஸ்தர்க்கு, தீத்து போன்ற ஊழியர்களுக்கு பவுல் ஊழியப்பயிற்சி கொடுத்துத் தமக்குப்பின் ஊழியம் தொடர வழி செய்தார்.


இவை முழுக்க முழுக்க நமதாண்டவர் இயேசுவைப் பின்பற்றி செய்த ஊழிய மாதிரியாகும்.


தொடரும்……….




Post a Comment

1 Comments

  1. மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete