Wednesday, 6 April 2022

சிலுவை வரலாறு || பகுதி -5 ||

 சிலுவை வரலாறு 


பகுதி -5


இயேசுவின் ஏழுவித இரத்தம் 


இயேசு மரணத்திற்கு முன்பும் இரத்தம் சிந்தினார்,மரிக்கும் போதும் இரத்தம் சிந்தினார். இயேசு இரத்தம் சிந்தினார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், எந்த எந்த இடங்களில், எப்படியெல்லாம் இரத்தம் சிந்தினார், எப்போது சிந்தினார், எத்தனை முறை இரத்தம் சிந்தினார் என்று அநேகர் அறிவதில்லை. அந்த விபரங்களை பொறுமையோடும், ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு கவனிப்போம்.


1.ஜெபிக்கும்போது சிந்தின இரத்தம்:


லூக் 22:44 - இரத்தம் வரும்வரை ஜெபித்தார்.


இடம்: 

மாற் 14:32  - கெத்செமனே தோட்டம் 


உ.ம்: 

லூக் 22:44 ஊக்கமும், தேவபாரமும் வரும் 


பலன்: 

மத் 26:41  - ஜெப ஆவியைத் தரும்


2.சிரசில் சிந்தின இரத்தம்:


யோவா 19:2  - முள்முடியை சிரசில் வைத்து அடித்தனர் 


இடம்: 

மத் 27:27  - தேசாதிபதியின் அரண்மனை


உ.ம்: 

ஏசா 59:17 - சிரசு (எ) இரட்சிப்பு 

ஆதி 49:26  -சிரசு (எ) ஆசீர்வாதம்.


பலன்: 

ஏசா 51:11  -மகிழ்ச்சி தலையின் மேல் இருக்கும்



3.கன்னத்தில் வடிந்த இரத்தம்: 


கேள்வி: 

எத்தனை பேர் அறைந்தனர்?


மத் 26:67-  சிலர் (ஒன்றுக்கும் அதிகமானோர்] அறைந்தனர். 


கேள்வி: 

அறைந்தது யார்?


மாற் 14:65  -வேலைக்காரர்கள்.


உ.ம்: 

உன் 1:10; 5:13 - கன்னம் (எ) பூ போன்றது (அ) அழகானது 


பலன்: 

உன் 2:14 - உங்கள் முகம் அழகாகும்


4.தாடையில் வடிந்த இரத்தம்:


ஏசா 50:6 - தாடை மயிரைப் பிடுங்கினார்கள். 


உ.ம்: 


சங் 3:7  - சத்துருக்களைத்தான் தாடையில் அடிப்பார்கள்.


நியா 15:15,16 - சிம்சோன் தாடை எலும்பினால் ஜெயித்தான். 


சங் 133:2 - தாடையின் இரத்தம் அபிஷேகத்தைத் தரும்.


5.முதுகில் வடிந்த இரத்தம்:


ஏசா 50:6 - முதுகில் அடித்தார்கள்.


யோவா 19:1 - வாரினால் (சாட்டையால்) அடித்தார்கள்.


இடம்: 

யோவா 19:1 - பிலாத்துவின் அரண்மனை. 


உ.ம்: 

ஏசா 38:17 - பாவத்தை முதுகுக்குப் பின் எறிந்தார் 


பலன்: 

மாற் 2:12-  முதுகின் இரத்தம் படுக்கையை மாற்றும்.


6.கை, கால்களில் வடிந்த இரத்தம்:


யோவா 20:20,25 - கை, கால்களில் ஆணியின் காயம் இருந்தது.


இடம்: 

யோவா 19:17- கொல்கொதா மலை (அ) கபால ஸ்தலம்.


உ.ம்: 

கொல்கொதா (எ) அந்த மலை மண்டை ஓடு வடிவத்தில் இருந்தது.


கபாலஸ்தலம் (எ) மண்டை ஒடுகள் நிறைந்து இருந்த இடம். 


உ.ம்: 

கொலோ 2:14,15 - அதிகாரங்களை வெற்றி சிறந்தார். 


பலன்: 

ஏசா 35:3 - உங்கள் கைகளை, முழங்கால்களைப் பலப்படுத்தும்.


7.விலாவில் வடிந்த இரத்தம்:


யோவா 19:34 - விலாவில் இரத்தம் வடிந்தது.


இடம்: 

யோவா 19:17 -  கபால ஸ்தலம் (மண்டை ஓடுகள் நிறைந்த இடம்]


உம்: 

ஆதி 2:21,22 - விலாவைக் கொண்டு மனுஷியை உண்டாக்கினார்.


அப் 12:7 - பேதுருவை தட்டி எழுப்பினார்.


பலன்: 

சங் 107:14  -கட்டுகளை அறுப்பது.


பஸ்கா என்றால் என்ன? 


இஸ்ரவேலர் ஆசாரித்து வந்த மூன்று விசேஷித்த பண்டிகைகளில் பஸ்காவும் ஒன்று. இது நிசான் (பங்குனி-சித்திரை)மாதம் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதிவரை கொண்டாடப்பட்டு வந்தது.


பஸ்கா என்பது அடிக்கப்படும் ஆட்டுகுட்டியையே குறிக்கிறது. நிசான் மாதம் 10-ம் தேதி ஒவ்வொரு வீட்டுத் தலைவனும் ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து எடுப்பான். 13-ம் தேதி மாலையில் வீடுகளிலிருந்து புளித்தமா அகற்றப்படவேண்டும். 14-ம் மேதி சாயங்காலத்திற்குமுன், எல்லா வேலைகளும் நிறுத்தப்படும்.

 பகற்சாப்பாட்டின் பின் சாப்பிடவும் மாட்டார்கள். இந்த பண்டிகை நினைவு கூருதலாக மாத்திரமல்ல, முன்னடையாளமாகவுமிருந்தது, நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.

(1கொரி 5:7).


இன்னும் வேறு அடையாளங்களையும் கவனிக்கலாம். 


1)பஸ்கா பாவத்தின் அழமைத்தனத்திலிருந்து விடுதலையாகுதல்.


 2)இயேசுவின் இரத்தத்தில் வைக்கிற விசுவாசத்தினித்தம் பாவத்தின் சம்பளமாகிய மரணத்திலிருந்து தப்பிக்கொள்ளுகிறோம். 


3)இரத்தம் கதவு நிலையில் தெளித்தல், நம்முடைய விசுவாசத்தின் அறிக்கையைக்காட்டுகிறது. 


4)பஸ்காவைச் சாப்பிடுவது போல, நாமும் அவரோடு ஐக்கியப்பட்டிருந்தால்தான் ஜீவனைப் பெறலாம். 


5)கசப்பான கீரைகளோடு சாப்பிடவேண்டும். இது நாம் அடையவேண்டிய மனஸ்தாபத்தையும், செய்யவேண்டிய அறிக்கையும் குறிக்கிறது. 


6)இஸ்ரவேலர் பிரயாணத்துக்கு ஆயத்தமாகிச் சாப்பிட்டது போல, நாமும் தேவ ஊழியத்துக்கும், மோட்ச பிரயாணத்துக்கும் ஆயத்தமாக வேண்டும்.


சீசர்கள் பஸ்காவை ஆயத்தம் செய்தனர்;


1.துணுக்குகள்: 


a.யோவா 18:39 பஸ்கா என்றால் என்ன?


பஸ்கா (எல்) பலி (அ) விடுதலை (அ) உடன்படிக்கை 


b.நெகே 2:1 பஸ்காவின் மாதம் எது?


நிசான் மாதம் [எல்) பங்குனி - சித்திரை (எல்) ஏப்ரல்-மே. 


c.யாத் 12:26,27 - பஸ்கா எதற்கு அடையாளம்?


எகிப்திலிருந்து பறப்பட்டதற்கு அடையாளம்.


d."ஆட்குட்டி" என்ற வார்த்தை வெளிப்படுதலில் மட்டும் 28 முறை வருகிறது.


II. பஸ்காவின் உணவுகள் எவை? 


a.பழைய ஏற்பாட்டில்:

      யாத் 12:8 


1.மாம்சம், 


2.புளிப்பில்லா அப்பம், 


3.கசப்பான கீரை


b.புதிய ஏற்பாட்டில்: 

     மத் 26:26-28 


1.அப்பம், 


2.ஸ்தோத்திரபாட்டு, 


3.இரத்தம்


III.பஸ்காவை சாப்பிட நிபந்தணைகள்:  - யாத் 12:11


a.காலை வரை மீதம் வைக்கக் கூடாது.


b.இடுப்பில் கட்சை கட்டிகொள்ள வேண்டும். 


c.காலில் செருப்பு போட வேண்டும்.


d.கையில் தடியை பிடித்துக்கொள்ள வேண்டும்.


e.தீவிரமாய் (சீக்கிரமாய்) சாப்பிட வேண்டும்.


IV.பஸ்கா பொருட்களின் விளக்கம்:


a.யாத் 12:7 -  இரத்தம் (எல்) 

எபி 12:22 - பாவமன்னிப்புகாக தெளிக்கனும்.


b.யாத் 12:8  - புளிப்பில்லா அப்பம் (எல்) 1கொரி 5:8  - தூய்மை - உண்மை


C.யாத் 12:8 -  கசப்பான கீரை (எல்)

எபே 4:31 - பாவத்துக்காக மனஸ்தாபம் 


d.யாத் 12:11 -  அரைக்கட்சை (எல்) 

அப் 12:15  - உறுதி (சாதனை)


e.யாத் 12:11  - காலில் செறுப்பு (எல்)

 மாற் 6:9  -ஆயத்தம்.


f.யாத் 12:11  - கையில் தடி (எல்) 

சங் 23:4 - பாதுகாப்பு (அ) தேவ வார்த்தை.


V.பஸ்காவை ஆசரித்தவர்கள் யார் யார்?


a.யோசு 5:10,11 - இஸ்ரவேலர்கள் ஆசரித்தனர்.


b.2இரா 23:23,22 - யோசியா இராஜா ஆசரித்தான்.


C.2 நாள 30:1,17 + எசேக்கியா இராஜா ஆசரித்தான்.


d.எஸ்றா 6:19  -சிறையிலிருந்து திரும்பி வந்தவர்கள் ஆசரித்தனர்.


e.லூக் 2:41-43 - இயேசுவும் - பெற்றோரும் ஆசரித்தனர். 


 f.மத் 26:17-19 - இயேசுவும் சீசர்களும் ஆசரித்தனர்.


VI.செய்தி:


a.யாத் 12:5 - ஆட்டுக்குட்டி (எல்) 

1கொரி 5:7-  கிறிஸ்துவே பாவம் சுமக்கும் ஆட்டுகுட்டி [பஸ்கா) 


b.யாத் 12:8-  புளிப்பில்லா அப்பம் (எல்) 1கொரி 5:8,9 - துர்குணம், பொல்லாப்பு, விபச்சாரம்.


C.யாத் 12:8 - கசப்பான கீரை (எல்) 


எபே 4:31,32...

1. கசப்பு, 

2. கோபம், 

3, மூர்க்கம்,

4. கூக்குரல், 

5. தூஷணம்.



சிலுவை வரலாறு || பகுதி -4 ||

சிலுவை வரலாறு 

பகுதி -4

சிலுவையும் - இயேசுவின் ஆவி, ஆத்துமா, சரீரமும் :


கிறிஸ்துவே ஜீவாதிபதி ஜீவனைக் கொடுக்கவும் எடுக்கவும் ஆற்றலுள்ளவர். அவரைக் கொலை செய்தனர் என்பது மிகவும் எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய காரியம் அல்ல. கிறிஸ்து மனிதனாக அவதரித்த போது ஆவி, ஆத்தும, சரீரம் உடையவராக இருந்தார்.என வேதவசனங்களில் காணலாம்.


ஆவி


மாற் 2:8


மாற் 8:12


லூக் 10:21


லூக் 23:46



ஆத்துமா


மாற் 14:34


யோவா 12:27


ஏசா 53:10


சங் 16:10


சங் 69:1


சங் 22:20



சரீரம்


எபி 10:5


மத் 1:20


லூக் 2:7,51,51


லூக் 4:2


யோவா 4:6,8


1பேதுரு 2:24



நமக்காக அவர் பலியானபோது:



1)மாம்சத்தில் பாடுபட்டார், கொலையுண்டார் - (1பேது 4:1: 3:18)


2)ஆத்துமா மரணத்துக்கு ஏதுவான துக்கம் கொண்டிருந்தது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் - (மாற் 14:34: 9


3) ஆவியில் கலங்கினார். பிதாவின் கரங்களில் ஆவியை ஒப்புக்கொடுத்தார் - (யோவா 13:21, லூக் 23:46)


எனவே கிறிஸ்து நமக்காக மரித்தார், பின்பு உயிர்த்தார்.


இயேசுவை சிலுவைக்கு அனுப்பின யூதாஸின் 7 வித வாழ்க்கை:


1.யூதாஸின் அறிமுகம்


முழு பெயர் : யோவா 6:71 சீமோனின் குமாரணகிய யூதாஸ் காரியோத்து.


யூதாஸ் (எல்) கொண்டாடபடுகின்ற

 (அல்லது) துதி.


அப்பா பெயர்: யோவா 6:71 சீமோன் 


ஊர் பெயர் : எரே 48:41 கீரியோத்


எல்லை: யூதேயாவின் தெற்கில் உள்ள  கீரியோத். 


வித்தியாசம்:- மற்ற 11 சீடர்களும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்


இவன் மட்டும் யூதேயாவைச் சேர்ந்தவன்



II.யூதாஸின் மற்ற பெயர்கள்:


1.யோவா 12:4 - சீசனாகிய யூதாஸ்


2.மத் 26:14- பன்னிரண்டு பேரில் ஒருவன்


3.மத் 10.4 -காட்டிக் கொடுத்த யூதாஸ்


4.அப் 1:16- எதிரிகளுக்கு வழிகாட்டி


5.யோவா 17:12 - கேட்டின் மகன்


6.யோவா 12:6 - திருடன்


7.லூக் 6:16- துரோகி



III.யூதாஸின் நற்குணங்கள்:


1.யோவா 18:2 - இயேசு ஜெபித்த இடத்துக்கு அடிக்கடிப்போனவன். 


2.சங் 41:9 -பிராண சிநேகிதன்.


3.சங் 43:9- நம்பிக்கைக்குறியவன்.


4.மத் 27:3 நல்ல மனஸ்தாபமுள்ளவன்,


5.மத் 27:4 அவன் தன் தவறை உணர்ந்தான்.

ஆனால்….

பாவ அறிக்கை செய்யவில்லை.



IV.யூதாஸின் பொறுப்புகள்:


1.யோவா 12:6 -பணப்பையை சுமப்பவன்.


2.யோவா 13:29 -பண்டிகைகளுக்கு பொருட்களை வாங்குபவன் 


3.யோவா 13:29 -ஏழைகளுக்கு உதவிசெய்யும் பொறுப்பும் இருந்தது


4.யோவா 12:5 -தைலம் போன்ற பொருட்களின் விலைப்பட்டியலை அறிந்திருந்தான்.


V.யூதாஸின் சுபாவங்கள்:


1.யோவா 12:3,4 - இயேசுக்கு தைலம் பூசியதில் குற்றம் கண்டான்


2.யோவா 13:30 -இராக்கால நேரத்தில் வெளியே போகிறவனயிருந்தான்.


3.மாற் 14:45 -முத்தம் செய்யும் குணம் இருந்தது.


4.யோவா 13:18 -எதிரியைப்போல தன் குதிங்காலைத் தூக்குபவன்.


5.மத் 27:4 -குற்றமில்லாதவர்களையும் காட்டி கொடுப்பவன்.


6.மத் 27:4 - பாவத்தை பாவம் என்று தெரிந்தும் செய்பவன்.


7.மாற் 14:11 - பணத்துக்காக எதிரிகளை சந்தோஷப்படுத்துபவன்.


8.மத் 27:5 - சம்பாதித்த பணத்தை தூக்கியெரியும் குணமுள்ளவன்.



VI.யூதாஸின் பின் விளைவுகள்:


1.மாற் 3:19- சீசர்களின் பெயர் வரிசையில் கடைசிக்குத் தள்ளப்பட்டான்.


2.மத் 27:4 - அவன் நம்பின அதிகாரிகளால் கை விடப்பட்டான்.


3.யோவா13:2 - பிசாசினால் தூண்டப்பட்டான். 


4.லூக் 22:3- சாத்தான் யூதாஸ்க்குள் புகுந்தான்.


5.யோவா 6:70-  பிசாசின் சொருபமாகவே வாழ்ந்தான். 


6.அப் 1:24 - ஊழியத்தை இழந்துபோனான்.



VII. யூதாசின் முடிவு:


1.சங் 109:8  - அவனுடைய நாட்கள் கொஞ்சமாகக் கடவது. (மற்ற 11 சீசர்களை விட சீக்கிரமாகவே செத்துப்போனன்)


2.மத்27:5 - நான்று(தூக்கிட்டுக்) கொண்டான்


3.அப் 1:18 - தலைகீழாக விழுந்தான்


4. அப் 1:18 - யூதாசின் வயிறு வெடித்தது 


5.அப் 1:18 -  குடல்களெல்லாம் சரிந்துப் போனது


6.அப் 1:20 - அவனுடைய வாசஸ்தலம் பாழாய்ப்போனது...


சிலுவையின் ஏழு வார்த்தைகள்:


முதலாம் வார்த்தை துணுக்குகள்:



1.பெயர் வித்தியாசங்கள்:


ஆங்கிலம் - குட்பிரைடே (Good Friday) - நல்ல வெள்ளி.


தமிழ்  -புனிதவெள்ளி - புனித்தைக் குறிக்கும் வெள்ளி.


மளையாளம் - துக்கவெள்ளி பாடுகளை காண்பிக்கும் வெள்ளி. 



2.இயேசு சிலுவையை சுமந்த தெருவின் இப்போதைய பெயர்


வயாடோரோசோ (எல்) பாடுகளின் பாதை எனப்படும்.


3.கெத்சமெனே 


எண்ணெய்செக்கு (அ) திராட்சை செக்குத் தோட்டம் எனப்படும்


வார்த்தை: லூக் 23:34 பிதாவே இவர்களுக்கு மன்னியும்: 


மத் 5:44  - துன்பப்டுத்தினோருக்காக ஜெபித்தார்.


1கொரி 4:13 -தூசிப்போருக்காக வேண்டிக்கொண்டார். 


லூக் 23:34 -அரியாதவர்களுக்காகவும் ஜெபித்தார்.



இராண்டாம் வார்த்தை துணுக்குகள்:


1.பரதீசு என்ற வார்த்தை வேதாகமத்தில் மூன்று முறை மட்டும் வருகிறது:


1.லூக் 23:43: 


2. 2கொரி 12:3; 


3. வெளி 2:7


2."பரதீசு" என்றால் 'பேரின்ப வீடு' என்பதாகும்.


3. பரதீசு (எல்) கிரேக்க மொழியில் "பாரடைசோல்" எனப்படும்.


4.பரதீசு என்ற வார்த்தையை செனபான்தான் என்பவர் ஏற்படுத்தினார்


5.பரதீசு (எல்) பூந்தோட்டம்; பாதுகாப்பான இடம் என்றும் பொருளாகும்.


6.இப்போது மரிக்கும் விசுவாசிகள் நல்ல உணர்வுகளோடு கூட

பரதீசில் இருப்பார்கள்.


7.லூக் 16:23  -ஆபிரகாமின்மடி 

 2கொரி 12:2  - மூன்றாம் வானம் , இவைகளும் கூட  பரதீசை குறிக்கும்



வார்த்தை: லூக் 23:43

 நீ இன்றைக்கு பரத்சியிலிருப்பாய்:


2 கொரி 12:2,3 பரதீசியில்


1.மனுஷர்பாஷை இருக்காது.

2.மனுஷருக்கு அந்த வார்த்தைகள் புரியாது.

3.பரதீசு மூன்றாம் வானத்திலுள்ளது


வெளி 2:7


1.தேவ சத்தம் கேட்போர் போவார்கள்


2.ஜெயங்கொள்போர் போவார்கள்


3. ஜீவ விருட்ச கனி அங்கே உண்டு.



மூன்றாம் வார்த்தை துணுக்குகள்:


1.இயேசுவின் முகத்தை துணியால் துடைத்த பெண்ணின் பெயர்: வெரோணிகா எனப்படும்


2.மரியாள் சீடனாகிய யோவானின் வீட்டில் 12 ஆண்டுகள் அதாவது சாகும் வரை இருந்தாள்.


3.யோவா 18:4,5,6 - இயேசுவை பிடிக்கவந்தோர்கள் கிட்டத்தட்ட 500 நபர்கள்.


4.இயேசு சிலுவையில் நிர்வாணமாகத் தொங்கினார்.



வார்த்தை: யோவா 19:26,27.

 அதோ உன் மகன்; அதோ உன் தாய்


1. மகன் யார்?

யோவா 13:23  -இந்த யோவான் இயேசுவின் மார்பினில் சாய்ந்தவன்


யோவா 21:7 -இயேசுவுக்கு அன்பாயிருந்தவன்


யோவா 21:20,23 -மரிப்பதில்லை என்று பெயர்பெற்றவன்


 1தீமோ 5:2 -  தாயைப்போல அன்புள்ளம் கொண்டவன்


2.தாயைப்பற்றி:


யோவா 2:5 இயேசுவின் சொல்படிசெய்கிறவள்.


லூக் 1:28  - தேவனோடு இருக்கிறவள்; ஆசீர்வதிக்கப்பட்டவள்.


லூக் 2:7 - சத்திரத்தில் தங்கினாள். [தாழ்மை]


அப் 1:13 - சீசர்களுடன் இருந்தாள். [ஐக்கியம்)


அப் 1:14 - ஜெபத்தில் தரித்திருப்பவள்



நான்காம் வார்த்தை துணுக்குகள்:


1.யூதர்களின் ஆலோசணை சங்கத்தில் 70 பேர்கள் இருந்தார்கள். 


2.இயேசுவின் மார்பின்மீது முழங்காலால் அழுத்தி கொண்டே

கையில் ஆணி அரைந்துள்ளர்கள்.


 3.சிலுவையை முதன் முதலில் பயன்படுத்தின நாடு "பொனிசியா"


4."சிலுவை" என்ற வார்த்தை முதன்முதலில் மளையாளத்தில் வழங்கப்பட்டது.



வார்த்தை: மத் 27:46

னஎன் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?


a.சங் 22:1 - தீர்க்கதரிசனம் நிறைவேறினது.


b.ஏசா 53:10  -இயேசுவை நொறுக்க பிதா சித்தமானார்.


C.ஏசா 54:7 -  இமைப்பொழுது இயேசு கைவிடப்பட்டார்.


d.புல 1:12 - துக்கம் தாங்காமல் ஜெபித்தார்.


e.எபி 5:7 - சாவிலிருந்து இரட்சிக்கும்படி ஜெபித்தார்.


f.மத் 27:46  - மாலை 3 மணிக்கு (ஒன்பதாம் மணி) ஏன் என்னை கை விட்டீர் என்று கதறினார்.



ஐந்தாம் வார்த்தை துணுக்குகள்:


1.மத் 27:45 -  சிலுவையில் இருள் சூழ்ந்த நேரம் பகல் 12 முதல் 3மணி வரைக்கும்.


2.இயேசுவின் தலையில் சூட்டியமுள்ளின் பெயர் கிறிஸ்து முள்.


3.மாற் 16:1 - சலோமே என்பவள் இயேசுவின் சித்தி.



வார்த்தை: யோவா 19:28 தாகமாயிருக்கிறேன்:


1.காடி என்றால் என்ன?


எண் 6:3  - திராட்சைரசமும், மதுபானமும் கலந்த கலவைதான் காடி.


மத் 27:34  - காடியில் கசப்பு கலந்திருக்கும்.


2.இயேசுவுக்கு மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது.


i) சிலுவையில் அறையும் முன் கொடுத்தனர் மாற் 15:23 வெள்ளைபோலம் கலந்தது. இது வழியை மறக்க கொடுக்கப்படும். ஆனால் இயேசு அதை பருகவில்லை.


ii) லூக் 23:36 - சிலுவையில் மதியத்துக்கு முன் கொடுக்கப்பட்டது. 


iii)லூக் 23:37 இயேசுவை ஏளனம்

செய்வதற்க்காக கொடுக்கப்பட்டது.



ஆறாம் வார்த்தை துணுக்குகள்:


பிலாத்துவின் அரண்மணையின் பெயர் "அதோனியோ


ஒரு சிலுவையின் விலை 110 இரத்தால்


கிரீடம் என்பதின் கிரேக்கச் சொல் "ஸ்தேபானால்" 



வார்த்தை: யோவா 19:30.

 எல்லாம் முடிந்தது 


அப் 20:24 -  உயிரைப் பெரிதாக நிணைக்காதவர். 


யோவா 17:4 - பிதா நியமித்த வேளையை முடித்தார்.


2தீமோ 4:5,7 - ஓட்டம் முடிந்தது



ஏழாவது வார்த்தை துணுக்குகள்:


1.இயேசுவின் சிலுவை கரடு முரடாக இருந்தது.


2.லூக் 23:47 - நூற்றுக் அதிபதி "லாங்கீஸ்" இரட்சிக்கப்பட்டான்.


3.யோவா 19:39,40 - நிக்கதோமு கொடுத்த 100 இராத்தல் கொண்டு யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்தார்.


வார்த்தை: லூக் 23:45 

பிதாவே என் ஆவியைத் தருகிறேன்: 


அப் 1:18 - யூதாஸ் தான் ஆவியை தூக்கு கயிருக்கு தந்தான். 


யோசு 7:25 - ஆகான்  தான் ஆவியை கல்லுக்குத் தந்தான். 


1சாமு 31:4  - சவுல்  தான் ஆவியை பட்டயத்துக்கு தந்தான்.


ஆனால்..,

லூக் 23:46  - இயேசுவோ பிதாவின் கையில் தான்  ஆவியை தந்தார்.

Notes taken from

Rev.SSK.Samuel.



Saturday, 2 April 2022

சிலுவை வரலாறு || பகுதி -3 ||

சிலுவை வரலாறு

பகுதி -3


சிலுவையும் வாரநாட்களும் :


சிலுவையில் மரித்த இயேசுவின் கடைசி ஒரு வாரமாகிய ஞாயறு முதல் சனி வரை என்ன நடந்தது என்பதை மருத்துவராகிய லூக்கா தனது சுவிசேஷ நூல் 19ம் அதிகாரம் முதல் 24ம் அதிகாரம் வரையிலான வேதப்பகுதியில் மிக விபரமாக கூறியுள்ளார். அதனை கிழமையின் வரிசைபடி நியாணிப்பது மிக நல்லது.



1.ஞாயிறு - எருசலேம் பவனி:

 (லூக் 19:25–44)


2.திங்கள் - தேலாலயம் தூய்மையாக்குதல்.

(லூக்: 19:45-48)


3.செவ்வாய் - பொதுமக்கள் நடுவில் (லூக். 20:1-21)


i) அவரது அதிகாரத்தை கேள்வி கேட்டல் (லூக் 20:1-8)


ii) அவரது அதிகாரம் உவமையின் மூலம் வெளிப்படுத்தப்படல் (லூக். 20:11-18)


iii) அதிகாரத்தைக் கொடுத்தல்

 (லூக். 20:18-40)


iv) அதிகாரம் நிரும்பவும் உரைக்கப்படுதல்.

 (லூக். 20:41 - 21:4)


v) மறைபொருளில் உரையாடல்.

(லூக். 21:8-38) 


4. புதன் - யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்க ஆயத்தம்.

 (லூக் 22:1-5)


5. வியாழன் - பஸ்காவும் இயேசுவின் கைதும்.

 (லூக். 22:7-53)


1) கர்த்தரின் பத்தி (இராபோஜனம்) (லூக். 22:7-30)


II) கெத்செமேனே தோட்டம் செல்லுதல் (லூக். 22:39-46)


III) இயேசு கைது செய்யப்படுதல்

 (லூக். 22:47-53)


6. வெள்ளி - விசாரணையும் சிலுவையில் அறைதலும்.

 (லூக் 22:54 - 23:55)


I) பேதுருவின் மறுதலிப்பு.

( லூக். 22:54-62)


ii) அடிக்கப்படும் கிறிஸ்து.

(லூக். 22:63-63)


III) ஆலோசனைச் சங்கம் முன் கிறிஸ்து (லூக். 22:66-71)


 iv) ஆளுநர் பிலாத்துவின் முன் கிறிஸ்து (லூக் 23:1-8)


v) ஏரோது ராஜாவின் முன் கிறிஸ்து (லூக். 220-12)


vi) ஆளுநர் முன் மீண்டும் கிறிஸ்து (லூக்- 23:13-20)


vii) சிலுவையில் கிறிஸ்து அறையப்படுதல்.

 (லூக். 23:25-49)


vili) கிறிஸ்து அடக்கம் பண்ணப்படுதல் (லூக். 23:50-59).


7. சனி - கல்லறையில் கிறிஸ்து இயேசு. (லூக். 23:06).


8. உயிர்த்த இயேசு மனிதருக்குக் தரிசனமாகுதல் (லூக். 24:1-53)


1) மரணத்தை வென்ற கிறிஸ்து.

 (லூக். 24:1-12)


ii) தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிய கிறிஸ்து (லூக் 24:13-35)


III) உயிர்த்த உடலில் உணவு உண்ட கிறிஸ்து [லூக். 24:36-43)


iv) சபையில் தலைவர் (லூக் 24:44-48]


v) பரிசுத்த ஆவியானவரை அருளுபவர் (லூக். 24:40)


vi) பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கிறிஸ்து

 (லூக் 2450-53)


சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள்:


அவரை இருவகை குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தினர். ஒன்று மதசம்பந்தமானது. இன்னொன்று அரசு சட்ட சம்பந்தமானது. 


1.மதத்தின் தொடர்பில் மூன்று விசாரணைகள்.அன்னா, காய்பா, மற்றும் சனகெரிப் சங்கம் முன்பு.


2. சட்ட சம்பந்தமான விசாரணைக்காக பிலாத்து, ஏரோது, மீண்டும் பிலாத்து ஆகியோர் முன்பு.

அன்னாவும், காய்பாவும், பிரதான ஆசாரியர்களாகக் கூறப்படுகின்றனர். இஸ்ரவேலில் ஒருதடவை ஒரு பிராதன ஆசாரியர்தான் இருக்க முடியும். ஆனால் கால ஒட்டத்தில் ஆண்டவரைவிட்டு அரசியல் கலந்த மதமாக அது மாறியதால் இத்தகைய நிலை ஏற்பட்டது. (மத் 26:57-68; மாற் 14:53-65; 

லூக் 22:54,63-65: யோவா 18:13-24)


இருவர் முன்பும் விசாரிக்கப்பட்ட பின்பு யூதர்களின் நீதிமன்றமாக கருதப்பட்ட 70 பேர் அடங்கிய ஆலோசனைச் சங்கத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார். அங்கும் விசாரனை நடக்கிறது. (மத் 27:1; மாற் 15:1; லூக் 22:66-71)


அதன்பின்பு சட்ட முறையிலான விசாரணைக்காக பிலாத்துவின் முன்பு கொண்டு செல்லப்படுகிறார். ஆலோசனைச் சங்கத்தில் மரண தண்டனையை தீர்ப்பளித்தாலும் ரோம அரசாங்க ஆளுநரான பிலாத்துவின் அனுமதியிருந்தால் தான் நிறைவேற்றமுடியுமென்பதால் அவரிடம் கொண்டு செல்கின்றனர். தேச துரோக குற்றமும், சமூக சமாதானத்தைக் குலைத்தார் என்ற குற்றமும் சாட்டப்பட்டன. அவர் முன் கிறிஸ்து தமது இராஜ்யத்தின் இருப்பிடத்தை விளக்கினார். ரோம சட்டப்படி இயேசு குற்றவாளியல்ல என்று தீர்ப்பு வழங்கினார் பிலாத்து.

 (மத் 27:2, 11-14; மாற் 15:1-5; லூக் 23:1-5; யோவா 18:28-38).


அதன் பின்பு தேவையின்றி அவர் ஏரோதின் முன்பு அனுப்பப்பட்டார். இந்த ஏரோதுதான் தமது சகோதரனின் மனைவியான ஏரோதியாளை மனைவியாக்கியபோது யோவானால் குற்றஞ்சாட்டப்பட்டவரும் யோவானின் தலையைப் பரிசாக்கியவரும் ஆவார்.


பிலாத்து இயேசுவை கலிலேயன் என்று கூறப்பட்டதால் ஏரோதிடம் அனுப்பி, தம்மை அந்த பழியிலிருந்து விலக்க நினைத்திருக்கலாம் (லூக் 23:7-12). மேலும் அந்த செய்கையால் முன்பு தாம் செய்த ஒரு குற்றத்துக்கு ஏரோது தம்மிடம் கொண்டிருந்த பகையை நீக்கிக் கொண்டார்.


மீண்டும் பிலாத்துவின் முன்பு விசாரணை, சூழ்நிலைக்கு முன் குற்றமற்றவரை குற்றவாளியாக்கினார் பிலாத்து. தற்பாதுகாப்பை எண்ணிப்பயந்து நீதிமானை சிலுவை மரணத்துக்குத் தீர்ப்பளித்தார்.

 (மத் 27:15-26; மாற் 15:6-15: லூக் 23:13-25; யோவா 18:39-19:6)


நியாயமற்ற விசாரணைகள்:


கிறிஸ்துவின் குற்ற விசராணைகள் பலநிலையிலும் நியாயமற்றவையாக இருந்தன.


1.குற்றம் செய்தவரைப் பிடித்து விசாரிப்பதே நியாயம். ஒருவரை பிடித்து வைத்துக் கொண்டு குற்றம் தேடுவது அநியாயம்.

 (யோவா 11:50; மாற் 14:1; 14:55)


2.பொய்சாட்சிகளை ஏற்படுத்தினார்கள்.

 (மத் 26:61)


3.குற்றவாளியின் சொற்கள் கவனிக்கப்படவில்லை (லூக் 22:67-71)


4.ஆலோசனைச் சங்கம் இரவில் கூடியதே அவர்களது சட்டப்படிதவறு.

(மத் 26:63-66)


5.பிரதான ஆசாரியனை ஆணையிட வைத்து, அந்த ஆணையைக் கொண்டு தீர்ப்பு வழங்கியது அநியாயம்.

(மத் 26:63-66)


6.ஆலோசனைச் சங்கம் கூடிய இடம் பிராத ஆசாரியனின் வீடு. முறைப்படி தேவாலயத்துடன் இணைந்திருக்கும் நீதிமன்ற அறையில் கூடிதான் தீர்ப்பிட வேண்டும் (லூக் 22:54).



அவர் குற்றமற்றவரே:


1.குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன் (மத் 27: 4)

         -யூதாஸ்-


2.நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்.(மத் 27:19)   -பிலாத்துவின் மனைவி-


3.இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை.

 (லூக் 23:4)             

        - பிலாத்து-


4.பாவமறியாதவர் (2கொரி 5:21) 

         -பவுல்-


5.அவர் பாவஞ் செய்யவில்லை 

(1பேது 2:22)

           -பேதுரு-


6. அவரிடத்தில் பாவமில்லை.

(1யோவா 3:5)

          -யோவான்- 

Notes taken from

Rev.SSK.Samuel.


காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...