அரமேய மொழி || அறிந்து கொள்வோம் || பகுதி - 126 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 126


அரமேய மொழி



அரமைக் மொழி / அரமேயம் என்பது ஒரு மொழி அல்லது மொழிக்குடும்பம் ஆகும். இது ஆப்பிரிக்க-ஆசிய துணை பிரிவை சேர்ந்த செமித்திய (semitic)மொழி ஆகும்.


குறிப்பாக இது கானானிய மொழிகளான எபிரேயம்,பொனீசியம் போன்ற வடமேற்கு செமித்திய குடும்ப பிரிவாகும்.அரமேய எழுத்துமுறை பரவலாக பல மொழிகளிலும் எபிரேயம், சீரிய, அரேபிய எழுத்து முறைகளில் எடுக்கப்படுகிறது.


இந்த மொழி எபிரெய மொழியோடு மிக நெருங்கிய தொடர்புடையது,இதை எழுதுவதற்கு எபிரேய எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.


இது ஆரம்பத்தில் அரமேயர்களால் பேசப்பட்டு வந்தது.காலப்போக்கில் அசீரியா மற்றும் பாபிலோன் சாம்ராஜ்யங்களில் வர்த்தகத்துக்கும் தகவல்தொடர்புக்கும் பயன்படுத்தப்பட்ட சர்வதேச மொழியாக ஆனது.


பெர்சிய சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் இது இருந்தது. (எஸ்றா 4:7) 


எஸ்றா,எரேமியா மற்றும் தானியேல் புத்தகங்களில் சில பகுதிகள் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டன.

(எஸ்றா 4:8–6:18;7:12-26; எரோமியா 10:11;

தானி 2:4)


3000 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட அரமேயம் பல இராச்சியங்களின் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் காணப்பட்டது.


அரமேயத்தின் புகழ் அதிகமாக இருந்தபோது தற்கால ஈராக், சீரிய, லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், சோர்டான், ஈரானின் வடமேற்கு, குவைத், வடக்கு அரேபியா, கிழக்கு அரேபியா, தென்கிழக்கு தென் மத்திய துருக்கியில் அரமேயத்தின் பல வடிவங்கள் பேசப்பட்டன.


முக்கியமாக, அரமேயம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பேசிய மொழியாகும்.

ஆனால், இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீன நாட்டில் நான்கு மொழிகள் பல்வேறு அளவிலும் நிலையிலும் பயன்பாட்டில் இருந்தன. அவைகளில் இலத்தீன்,கிரேக்கம்,எபிரேயம், அரமேயம்* என்பதே.


இயேசுவின் பணி பெரும்பாலும் நாசரேத்து மற்றும் கப்பர்நாகூம் என்னும் ஊர்களில் நடந்தது.அவ்விடங்களில் மக்கள் பெரும்பாலும் அரமேய மொழிபேசினார்கள்.

மேலும்,கிறிஸ்துவுக்குப் பின் முதல் முதல் யூத மக்கள் சாதாரண,அன்றாட வாழ்வில் பயன்படுத்திய மொழி அரமேய மொழியாகும். கி.மு. 1-ம் நூற்றாண்டின் நடுவிலிருந்து கல்வெட்டுகள், கல்லறைகள், மீது பொறிக்கப்பட்ட வசனங்கள் முதலியவை அரமேய மொழியில் எழுதப்பட்டன.சாவக்கடல் அருகே கும்ரான் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சுருள்களில் சில,அரமேய மொழியில் எழுதப்பட்டிருந்தன.


இயேசு பேசிய சில அராமைக் வார்த்தைகள்:-


1)ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: * ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி,* என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்;அதற்கு *என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.*

மத்தேயு 27:46 (சங்22:1)


ஏலீ! ஏலீ! -என்பது எபிரேய மொழி!

லாமா சபக்தானி -என்பது அரமேய மொழி!*


2)பிள்ளையின் கையைப் பிடித்து:

தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன் என்று அர்த்தமாம்.மாற்கு 5:41


தலீத்தாகூமி என்ற வார்த்தை சீரிய / அரமேய வார்த்தை.


3) அப்பா பிதாவே,எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.

மாற்கு 14:36


"And He said, “Abba, Father, all things are possible for You. Take this cup away from Me; nevertheless, not what I will, but what You will.”. (மார்ச் 14:36)


அப்பா (Abba) எனும் வார்த்தை எபிரேய/அரமேய வார்த்தை.


4)வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: * எப்பத்தா * என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.

(மாற்கு 7:34)


எப்பத்தா என்பது அரமேய வார்த்தை.


5) No one can serve two masters; for either he will hate the one and love the other, or else he will be loyal to the one and despise the other. You cannot serve God and mammon.

மத்தேயு 6:24


இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

மத்தேயு 6:24


இந்த mammon என்ற வார்த்தை அரமேயக் வார்த்தை.


பவுலும் குறிப்பிட்ட ஒரு அரமேயக் வார்த்தையை பயன்படுத்தி சொல்வதை பாருங்கள்….


"அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், * அப்பா *பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்." (ரோம 8:15)


"ஏனென்றால், நீங்கள் மீண்டும் பயப்படுவதற்கு அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறவில்லை, ஆனால் நீங்கள் தத்தெடுப்பின் ஆவியைப் பெற்றுள்ளீர்கள், இதன் மூலம் நாங்கள் * அப்பா *, தந்தையே என்று அழைக்கிறோம்." (ரோமர் 8:15)


"மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால்,* அப்பா *, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்." (கலா 4:6)

"நீங்கள் மகன்களாக இருப்பதால், கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் இதயங்களில் அனுப்பினார், * அப்பா *, தந்தையே." (கலா 4:6)


நன்றி: சகோதரர்.சசிகுமார்




Post a Comment

0 Comments