எமில் ரிக்டர் ||மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு 

எமில் ரிக்டர் -Emil Richter

கிழக்கு பிரஷியாவைச் சேர்ந்த ஒரு அகதியான எமில் ரிக்டர் ராங்ஃபர்ட்டில் பணிபுரிந்தார். எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் எழுத்தராக பணிபுரிந்து, ஓய்வுபெற்றார்.ஜெர்மனி இராணுவத்தில் பணியாற்றிய தனது ஒரே மகனை இரண்டாம் உலகப் போரில் அவர் இழந்தார்.1957 ஆம் ஆண்டு பி. எம். சாமுவேல் என்ற இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு போதகரின் பிரசங்கத்தின் மூலம் இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் அவலநிலை குறித்து ரிக்டர்கேள்வி பெற்றார். அதனால் இந்தியாவின் ஏழை மற்றும் அனாதைக் குழந்தைகளின் உதவியற்ற தன்மை குறித்து அவருக்குள் ஆழ்ந்த பாரம் ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த குழந்தையின் ஆவிக்குரிய மற்றும் அன்றாட தேவைகளை எந்த வகையிலாவது சந்திக்கும்படி முடிவு செய்தார்.

ஆரம்பத்தில் ரிக்டர் தனது வருமானத்தில் ஒரு பகுதியை அந்த இந்திய போதகருக்கு கொடுத்து அந்த ஏழைக் குழந்தைகளை ஆதரிக்க முயற்சி செய்தார். இருப்பினும்,1957 ஆம் ஆண்டு தனது மனைவியின் பிறந்தநாள் விழாவில்,ஏழைகளுக்கு உதவுவதற்கான தனது முயற்சிகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்தார். அவர் ஜெபக் கூட்டங்களை ஏற்பாடு செய்து,தேவனுடைய அன்பை நடைமுறையில் காட்ட தனது சக கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினார்.

ஏழை உலகில் உள்ள ஏழை மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்று அவர் உறுதியாக நம்பினார்.அவருடைய முயற்சி இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவும்படி ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள கிறிஸ்தவர்களின் உள்ளத்தை தூண்டியது.உதவியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, எமில் ரிக்டர் எர்வின் கிளிங்குடன் சேர்ந்து,அதே ஆண்டில் ஃபிராங்ஃபர்ட்டில் "கிறிஸ்டியன் மிஷன் மிஷன் சர்வீஸ்" Service') (CMS) என்ற நிறுவனத்தை நிறுவினார்.

நிறுவப்பட்ட ஆரம்ப நாட்களில், சி.எம்.எஸ் இந்தியாவில் உள்ள அனாதை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வளர்ப்பு குழந்தைகள் திட்டம்(“ஃபோஸ்டர் சில்ட்ரன் ஸ்கீம்”) கீழ் பல்வேறு கிறிஸ்தவ குழுக்கள் மற்றும் திருச்சபைகள் மூலம் உதவியது.பின்னர் இந்தியாவின் பல கிராமப்புறங்களில் சிறப்பு குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் நிறுவப்பட்டன.

கடந்த 64 ஆண்டுகளாக ஒரு தொண்டு நிறுவனமாக சி.எம்.எஸ்., சாதி, மதம், பிரிவுகளை பொருட்படுத்தாமல் 50,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. இந்தியாவின் ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு சில நாடுகளிலும் குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு இல்லங்கள்,பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளிகளைக் கொண்ட இந்த அமைப்பு,இன்றைக்கும் கிறிஸ்தவ விசுவாசத்தை தொடர்ந்து கிரியைகளினாலே நிருபித்து வருகிறது.

பிரியமானவர்களே, ஏழைகளின் தேவைகளை சந்திப்பதில் உங்களுடைய பங்கு என்ன?

“கர்த்தாவே, ஏழைகளுக்கு உமது அன்பை கிரியைகளால் காட்ட என்னை பலப்படுத்தும். ஆமென்!





Post a Comment

0 Comments