வேதாகமம் / திருவிவிலியம் ||அறிந்து கொள்வோம் || பகுதி - 125 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 125


வேதாகமம் / திருவிவிலியம்


"Holy Bible" என்ற   வார்த்தையின் நேரடி மொழிபெயர்ப்பே "பரிசுத்த வேதாகமம் / திருவிவிலியம்" எனப்படுகிறது.


"பிப்ளோஸ்" என்பது லெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுகப் பட்டிணத்தின் பெயர் ஆகும்.


புத்தகம் செய்யப் பயன்படும் பாப்பிரஸ் என்ற நாணல் புல் ஓலை விற்கப்பட்ட இடம் அது. 


இந்த பாப்பிரஸ் என்ற வார்த்தை பேப்பர் (Paper) ஆயிற்று.பாப்பிரஸ் விற்கப்பட்ட `பிப்ளோஸ்’ என்ற நகரத்தின் பெயரால் Biblion - Book - புத்தகம் ஆயிற்று.


"விவிலியம்" என்ற சொல்லின் மூலபதம் “Biblion” என்ற கிரேக்க சொல்லாகும்.* இச்சொல்லிற்கு `புத்தகம்’ அல்லது "சுருள்" என்று பொருள். 


ஒருமைச்சொல் - Biblion, பன்மைச்சொல் -Biblia. 

இந்த பன்மைச்சொல் இலத்தீன் மொழியில் ஒருமைச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது.


Biblia என்றால் = Book என்பதாகும்.

இந்த இலத்தீன் வார்த்தையை வேறு ஐரோப்பிய மொழிகளில் இப்படி சொந்தமாக்கிக் கொண்டனர்.

(உம்) 

Bible (English),

Biblia (Italian),

Bibel (German),

Bible (French)..


விவிலியத்தின் வேறு பெயர்கள்:


(i) Scripture- எழுதப்பட்டது.

(இலத்தீன் - - Scriptura).


(ii) Testament - உடன்படிக்கை; (லத்தீன் Testamentum); பழைய ஏற்பாடு (உடன்படிக்கை): கடவுளுக்கும் பழைய இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே உள்ளது; புதிய ஏற்பாடு (உடன்படிக்கை): கடவுளுக்கும் புதிய இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவுவது.


(iii) தமிழில்: வேதாகமம், விவிலியம், திருமறை நூல், மற்றும் திருநூல் என்று சொல்லப்படுகிறது.


வேதாகமத்தின் வசனங்கள் 

16-ம் நூற்றாண்டின் பிரெஞ்சு அச்சகர் ராபர்ட் எஸ்டியென் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

______________________

Thanks to Brother.Sasikumar




Post a Comment

0 Comments