சிலுவை வரலாறு || பகுதி - 8 ||

சிலுவை வரலாறு 

பகுதி - 8 



குருத்தோலை ஞாயிறு

இயேசுவின் பவனி:


பஸ்கா பண்டிகையின் ஏழு நாட்களுக்கு முன்பு இயேசு மீண்டும் எருசலேம் நகருக்குள் வந்தார். அது நிசான் மாதத்தின் 9ம் நாள் ஞாயிற்றுக் கிழமையாகும். தீர்க்கதரிசியாகிய சகரியா வைக் கொண்டு சக. 9:9 ல் சொல்லப்பட்டுள்ளது.


"சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்." என்கிற வசனங்கள் நிறைவேறும்படியாக இவைகள் நடந்தது.



நகரத்தை நெருங்குகையில் அவரைச் சுற்றிக் கூடி வந்திருந்த மக்களில் பெரும்பாலானோர் தங்களின் மேல்அங்கிகளையும், துப்பட்டிகளையும், மற்றும் பல வஸ்திரங்களையும் வழியில் விரித்தார்கள். இன்னும் சிலரோ ஒளிவ மரக்கிளைகளை வெட்டி அவைகளை தரையில் பரப்பினார்கள். மற்றும் பலரோ ஒலிவமரத்தின் நீண்ட இலைகளை கையில் பிடித்துக்கொண்டு


"கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்" என்றுக் கூறி ஆர்பரித்தார்கள்.

சில வாரங்களுக்கு முன்புதான், இறந்த லாசருவை உயிரோடு எழுப்பியதை அவர்கள் கண்டிருந்தனர். அதை ஒருவருக்கொருவர் அந்நாட்களில் பேசிக்கொண்டும் இருந்தனர். அதனால் இயேசு நகருக்குள் நுழைந்ததும் நகரமே விழாக்கோலம் பூண்டது போல ஆனது. நகரம் முழுவதும் இயேசுவை வரவேற்கும் பேரணியால் நிறைந்தது.


முன்பு மதவாதிகளின் கூலிகளாக இயேசுவின் மீது கல்லெரிந்து கொல்லத் துரத்தியவர்கள், இப்போது மனமாற்றம் பெற்றவர்களாக கைகளில் ஒலிவமரக் கிளைகளை ஏந்தி இயேசுவை வரவேற்கிறார்கள். அன்று கல்லெறிந்த கைகள் இன்று ஒலிவ கிளைகளை ஏந்தி செல்கின்றன. “இதோ, உலகமே அவனுக்குப் பின் சென்று போயிற்றே" (மத் 21:10) என்று மதவாதிகளும், பிரிவிணைவாதிகளும் புலம்பிக்கொண்டிருந்தனர். 


கர்த்தர் ஏறிய கழுதை:-



இந்நிகழ்ச்சி சகரியா தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக இருந்தது.(சக 9:9)


கிறிஸ்துவின் அரச பவனிக்காக மனுஷரில் ஒருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டி கட்டப்பட்டிருந்தது. அதனை கிறிஸ்து தூரத்தில் கண்டார். அதனை ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பு சகரியாவின் கண்களும் தரிசனத்தில் கண்டிருந்தன.


கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய்ச் செய்கிறவரும், அனைத்தையும் திட்டமும் ஒழுங்குமாக செய்கிறவருமாவார்.


அவரது திட்டத்தில் எவரும் விதிவிலக்கல்ல. அவரது கிருபை எவரையும் புறம்பே தள்ளவுமில்லை. அவருக்குத் தெரியாமல் இங்கு எதுவும் நிகழ்ந்து விடுவதுமில்லை. பாவத்தால் அலங்கோலமான உலகத்தில் வாழ்கிற நாம் அவருக்குள் அடைக்கலம் புகும்போது அனுபவிக்கும் பராமரிப்பு எவ்வளவு அதிகம்? அவர் நம்மை மறந்து விடுகிற தெய்வமல்ல. அவரது கரங்களில் அர்ப்பணிக்கும் போது அரசனின் திட்ட வழியில் நாமும் ஒரு கருவியாகிறோம்.


அந்தகார உலகில் அதன் மகிமை புரியாது. ஆனால் ஒளியின் உலகில் நம் விழிகள் வியப்பில் விரியாமல் போவதில்லை. அவருக்காக நாம் வைத்த ஒரு சுவடுகூட அங்கு மறக்கப்பட்டிருக்காது. 



இயேசு கிறிஸ்து - யார்?


அவர் ஒரு தத்துவ சிந்தனையாளார் அல்ல.


கிரேக்க நாட்டில் சீனோ டெமோகிரீட்டஸ், பித்தாகோரஸ், சாக்ரடீஸ், பிளோட்டோ, அரிஸ்டாடில் போன்றோரும் இந்தியாவில் யக்ஞவல்கியன், உத்தாலக ஆருணி, புத்தர், போன்றோரும் சீனாவில் கன்பூசியஸ், லாவோட்சே ஆகியோரும் சிறந்த தத்துவ ஞானிகளாகப் பாராட்டப்படுகின்றனர்.



சத்தியத்தைத் தேடி அலைந்த சித்தர்களும் முனிவர்களும் 

எத்தனையோபேர் நம் தேசத்தின் சந்தியெங்கும் காணப்பட்டனர். இவர்கள் தேவன், மனிதன், ஆவி, மரணம், பிரபஞ்சம் போன்றவை பற்றி பற்ப்பல கருத்துக்களை முன் வைத்துள்ளனர். ஆனால், இவர்களில் ஒருவரைப் போல தமது சிந்தனைக் கருத்துகளை வெளியிட்டவரல்ல இயேசுகிறிஸ்து.


தேவன், மனிதன், ஆவி, மரணம், பிரபஞ்சம், சொர்க்கம், நரகம், நியாயத்தீப்பு, பாவம், சாத்தான், தூதர்கள், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், போன்றவை பற்றி தெளிவாகவும், அழுத்தமாகவும், அதிகாரமுடனும் கூறியவர் இயேசுகிறிஸ்து. அவரது அபிப்பிராயமற்ற அதிகாரமான சொற்களைக் கேட்டு மக்கள் மலைத்தனர் (லூக். 4:36). அவருக்கு அனைத்தும் தெரிந்திருந்ததால் சிந்தனையின் தத்துவங்கள் கூற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமலிருந்தது

(யோவா 1:1,2; 3:11-13; 2:25; 5:24, 30,36; 16:30).


மேலும் சத்தியத்தை அவர் தேடவில்லை. சத்தியம் என்றால் என்ன என்று அவரே பதிலளித்தார். அவரது வார்த்தை சத்தியம் (யோவா 17:17). அவரே சத்தியம் (யோவா 14:6). ஆதலால் அப்படிபட்ட இயேசுவை ஓசன்னா பாட்டுப்பாடி ஊர்வலமாக அழைத்துச் செல்வது தவறே கிடையாது.


அவரை தமக்குமுன் நிறுத்திக்கொண்டு ஆன்மீக கண்குருடனான பிலாத்து கேட்டான் சத்தியமாவது என்ன? நாமும் ஆன்மீகக் குருடர்களா...



குருத்தோலை ஏந்திய மக்கள்:


பண்டிகைக்காக கூடிவரும் மக்கள், கூடாரப்பண்டிகையின்போது ஏழுநாட்கள் ஈச்சமர குருத்தோலைகளை ஏந்தியபடி பலிபீடத்தைச் சுற்றி வந்து ஓசன்னா என்பார்கள். எட்டாவது நாள் ஏழுமுறை சுற்றி வந்து ஓசன்னா என்பர்கள். அதனை பெரிய ஓசன்னா என அழைப்பர். "ஓசன்னா" என்றால் "இப்போதே இரட்சியும்" என்பது பொருள்.


இயேசு கிறிஸ்துவைக் கண்டவுடன் ஈச்சமர குருத்தோலைகளை ஏந்தி கழுதையின்மேல் ஆடைகளை விரித்து ஓசன்னா பாடிய மக்கள் அவரை மேசியா என அறிக்கையிட்டனர். அது வெற்றி பெற்று வரும் ஓர் அரசனுக்கு அளிக்கப்படும் வரவேற்புக்கு சற்றும் குறைந்தது அல்ல. அப்போது அவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் ஆளுகையிலிருந்து வரும் சரீர மீட்பைப் பற்றி எண்ணினார்களே தவிர, ஆன்மீக விடுதலையைப் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை.


வாய் நிறைய ஓசான்னா பாடி ஆர்ப்பரித்தவர்கள் ஐந்து நாட்கள் முடிந்தவுடன் வாய்கிழியக் கத்தினர். அவனைச் சிலுவையிலறையும். ஓசன்னா பாடி அழைத்துச் சென்றவரை அபிஷேகம் செய்து அரியணை ஏற்ற வேண்டியதல்லவா கடமை. இவர்களோ சிலுவையிலறைந்து கொலை செய்யத் துணிந்தனர். தீர்க்கதரிசன நிறைவேறுதலாக இவை நிகழ்ந்ததாயினும் தற்கால சடங்காச்சாரங்கள் நம் சிந்தனையை இழுக்கின்றன.


இன்றும் ஆண்டுதோறும் அனேகர் ஓசன்னா பாடுகின்றனர். அறியாமல், அர்த்தமின்றி... அதுவும் அவரை அறையத்தானே... 

தங்கள் இதய அரியணையில் அவரை அரசராக்கியவர்கள் பாக்கியவான்கள்...



குருத்தோலையின் பிரசங்கக் குறிப்புகள்:


1.யோவா 12:13 - 

 குருத்தோலை என்றால் என்ன?


லேவி 23:40 - ஓலை - பேரீச்ச இலைகள் 

எண் 33:9 - பேரீச்சை இலை - மாரா மறக்கப்பட்ட இடம்.

யாத் 15:23,25- இஸ்ரவேலரின் கசப்பு மாறிப்போனது.


2.மாற் 11:9 - ஓசன்னா என்றால் என்ன? 


மத் 21:9 - கர்த்தருடைய நாமம் 

யோவா 12:13 - இஸ்ரவேலின் ராஜா 

மாற் 11:10 - பிதாவாகிய தாவீதின் இராஜ்யம்.

மத் 21:15 - ஆர்பரிப்பு

யோசு 6:20 - இஸ்ரவேலர் ஆர்பரித்தனர் எரிகோ மதில் விழுந்தது.


3.மாற் 11:8 - வஸ்திரங்கள் என்றால் என்ன?


வெளி 16:15 - வஸ்திரம் - ஜீவியத்தைக் காத்துக்கொள்வது. 

ஆதி 39:12 - போத்திபாரின் மனைவி வஸ்திரத்தினல் பாவியானாள்.

ஆதி 49:11 - யோசேப்பு தன் வஸ்திரத்தை இரத்தத்தில் தோய்த்தான்.


மாற் 11:8 "வஸ்திரங்களை விரித்து" என்றால் என்ன?

2இரா 9:13-  யெகூவை வஸ்திரங்களை விரித்து இராஜாவாக்கினார்கள்.

மாற் 15:18 - இயேசுவும் யூதருடைய ராஜாவாக உயர்த்தப்பட்டார்.


4.மத் 21:8 - மரக்கிளைகள் என்றால் என்ன? 


நெகே 8:15 - ஐந்து வித கிளைகள்:


1.ஆதி 8:11  - ஒலிவ மரத்தின் இலை -  நற்செய்தி. 


2.ரோம 11:24 - காட்டு ஒலிவகிளை- சுபாவங்கள்.


3.சக 1:11 - மிருது செடியின் கிளை - அமைதலும் அமரிக்கையும்.


4.லேவி 23:40 - பேரீச்ச மரக்கிளை -  மகிழ்ச்சி 


5.எசே 19:11 - அடர்ந்த மரக்கிளை -  செங்கோல் / அதிகாரம்



5.யோவா 12:14 - கழுதைக்குட்டி என்றால் என்ன?


1.ஆதி 32:15 - பிரித்தெடுக்கப்பட்டது.


2.மத் 21:4 - சாந்த குணம்.


கழுதையின் இரண்டு தன்மைகள்:


1.மத் 21:4 - இயேசுவை ஏற்றிக்கொண்டு வந்தது. 

2.யோவா 12:15 - இயேசுவை ஏற்றிக்கொண்டு போனது.

வந்தது என்பது 

இயேசு மனுஷகுமாரனாக பூமிக்கு வந்ததையும், போனது -  பின் நாட்களில் மணவாட்டி சபையை எடுத்துக் கொண்டுப்போவதையும் குறிக்கும்.



நாடுகளும்- குருத்தோலையும்:-


கிறிஸ்தவம் பரவியிருக்கும் அணைத்து நாடுகளிலும் குருத்தோலை ஞாயிறு அனுஷரிக்கப்படுகின்றது. ஆனால், நாட்டுக்கு நாடு சில மாறுதல்களையும் காணமுடிகின்றது. குருத்தோலை ஞாயிறை கொண்டாடுகின்ற சில நாடுகளைப்பற்றி பார்போம். 


1.யோர்தான் மற்றும் இஸ்ரல் நாடுகள்:


யோர்தான் மற்றும் இஸ்ரவேல் நாடுகளில் ரோஜா பூக்களால் செய்யப்பட்ட சிலுவையை சுமந்து கொண்டு குருத்தோலைகளைப் பிடித்து ஓசன்னா என்ற முடிக்கத்தோடு செல்வார்கள்.


கத்தோலிக்கத் திருச்சபை, மரபு வழித்திருச்சபை, கீழைச்சபை, ஆங்கிலிக்கன் சபைகளைளச் சார்ந்த மக்கள் இதை முக்கிய நிகழ்வாகவே கருதி செய்கின்றனர்.


அத்துடன், குருத்தோலையினால் செய்யப்பட்ட திருநீரில் அமுக்கி, அந்நீரை சபை குருவானவர் மக்கள் மீது தெளிப்பதும், தங்கள் அங்கிகளை சிலுவை வடிவில் மடிப்பது போன்ற சில பாரம்பரியமான பழக்கங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.


2.லாத்வியா நாடு


இந்நாட்டு மக்கள் ஈச்சமரத்தின் ஓலை குருத்தோலைக்கு

பதிலாக "வில்லோ" (WILLOW) மரத்தின் கிளைகளை உயர்திப் பிடித்து இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர்


3.மால்ட்டா நாடு:


மால்ட்டா நாட்டின் கிறிஸ்தவர்கள் ஒலிவ கிளைகளையும்,பனைமரத்தின் குருத்துக்களையும் பவனியில் பிடித்துச் செல்வார்கள். ஒலிவ மரக்கிளை என்பது இயேசு நமத்துகாக துயருற்றார் என்றும், பனைமரக் குருத்துக்கள் தாங்கள் எப்போதும் நிலைத்திருப்போம் என்ற விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்க்காக இப்படிச் செய்கின்றனர்.


4.ஓலாந்து நாடு;


இந்நாட்டின் சில பகுதிகளில் குருத்தோலைகளோடு கூட, அப்பத்தையும் சிலுவையின் வடிவில் செய்து கொண்டு போவார்கள். அது போலவே சேவல் வடிவத்திலும் செய்வார்கள். பேதுரு இயேசுவை மருதலித்தான் என்பதை நினைவு கூறும்வண்ணம் இப்படிச் செய்கின்றனர்.


இதில் சேவல் என்பது, பவனியில் செல்பவர்களின் பழைய ஜீவியத்தையும், அப்பம் என்பது தங்களையே மீண்டும் ஒருவிசை இயேசுவுக்காக ஒப்புகொடுப்பதாகவும் கருதுகின்றனர்.



5.போலந்து நாடு:


போலந்து நாட்டினர் ஒவ்வொறு குருத்தோலை ஞாயிறு அன்றும் செயற்கையான குருத்தோலைகளை செய்து தூக்கிக் கொண்டு வருவது இவர்களின் பழக்கம். அதில் பெரிய குருத்தோலைக்கு பரிசுகள் வழங்குவதும் உண்டு. அதன்படி கடந்த 2008ல் செய்யப்பட்ட செயற்கை குருத்தோலை ஏறத்தால 3339 மீட்டர் நீளம் உடையதாக இருந்துள்ளது.



6.உருமேனிய / பல்கேரியா நாடுகள்: 


இந்நாடுகளில், குருத்தோலை ஞாயிறு என்பதை மலர் ஞாயிறு என்று கொண்டாடப்படுகின்றது. ரோஜா, லில்லி, மார்க்கரெட், ஜாஸ்மின், வயலட் போன்ற மலர்களின் பெயர்களை சிலருக்கு சிறப்பு பெயராக சூட்டி, அவர்களை அலங்கரித்து முக்கியப்படுத்தி அழைத்து வருவார்கள்.


இயேசு எருசலேமுக்குள் நுழைந்ததை அந்நாட்களில் வாழ்ந்த யூதர்கள் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டதை நினைவு கூறும் விதமாக இவர்கள் பூக்களின் பெயர்களை சூட்டி மகிழ்கின்றனர்.


7.இந்தியா நாடு:


இந்திய நாட்டில், குறிப்பாக தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில், தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள். அதின் ஓலைகளை தனித்தனியாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக்கொள் வார்கள். இன்னும் சிலரோ, புறா, குருவி, கிலுக்கு, மணி கூண்டு போன்று விதவிதமான முறையில் ஓலைகளை கீரி பின்னிக்கொள்வார்கள். குறிப்பாக சிறுவர்கள் இதில் உற்ச்சாகத்தோடு கலந்துக் கொள்வது உண்டு.


கேரளாவிலோ, ஆலயத்தின் பரிசுத்தப்பகுதியைத் தெரிந்தெடுத்து அப்பகுதியில் செவ்வந்தாப் பூ போன்ற பலதரப்பட்ட பூக்களை தரையில் தூவுவார்கள். இன்னும் சில இடங்களில், குருத்தோலை பவனி செல்லும்போது, வழியில் துணிமணிகளை விரிக்கும் பழக்கமும் உள்ளது.


Notes taken from 

Rev.SSK.Samuel

Post a Comment

0 Comments