O T Book Summary
பழைய ஏற்பாட்டின்
புத்தக சுருக்கம்
எண்ணாகமம்
இந்த புத்தகம் "எண்ணாகமம்" என்று அழைக்கப்பட காரணம் இஸ்ரவேல் ஜனங்களின் தொகையை கணக்கிட்ட இரண்டு கணக்கெடுப்புக்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே இந்த புத்தகம் எண்ணாகம் என்று அழைக்கப்படுகிறது.
சீனாய் மலையருகே எடுக்கப்பட்ட 1வது கணக்கெடுப்பு:
வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்புக்குள் பிரவேசிக்க இஸ்ரவேலர் பயணம் செய்ய ஆயத்தபட்டவேளையில், மோசே எல்லாக் கோத்திரத்தாரின் தொகையையும் கணக்கெடுத்தான்.
யுத்தம்செய்யத்தக்கவர்கள் எத்தனை பேர் என்பதை அறிவதே இந்த கணக்கெடுப்பின் பிரதான நோக்கம் எண்.
மோவாபின் சமவெளியில் எடுக்கப்பட்ட 2வது கணக்கெடுப்பு:
எண்ணாகமம் நிறைவு பெறுவதற்கு முண்ணதாக வனாந்தரத்தில் வளர்ந்தவர்களின் தொகையை அறிய மோசே இன்னுமொரு கணக்கெடுப்பதை செய்தான். (எண்.36)
மக்கள் தொகையின் எண்ணிக்கையை அறியவும், அரசின் நிர்வாகத்திற்காக பொருளாதாரத்திற்கான வளங்களை அறியவும், இராணுவத்த்திற்கு தகுதியானவர்களை கணக்கிடவும்(எண்.1:2:3,26:2-4),
மத சம்பந்தமான கடமைகளை நிறைவேற்ற தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கையை அறியவும் (எண்.4:2+3,22-23),
வரி வசூல் செய்யவும் (எண் 3:40–48), உணவு உற்பத்திக்கும்(எண்.26:33-54)
உதவிகரமாயிருக்க மக்கள்தொகை கனக்கு எடுக்கப்பட்டது.
புத்தகத்தின் ஆசிரியர்;
தோரா அல்லது ஐந்நூலில் நான்காவதாக இடம்பெற்றுள்ள இப்புத்தகத்தை எழுதியவர் மோசே என்பது பாரம்பரிய நம்பிக்கை.
எழுதப்பட்ட காலம் கி.மு.1440-1410
அதிகாரங்கள் : 36
வசனங்கள்: 1288
வரலாற்றுக் வரிசைகள்
எகிப்தை விட்டு யாத்திரை புறப்பட்ட சுமார் 13 மாதத்துக்கு பின்னர் எண்ணாகமம் எழுதப்பட்டிருக்கலாம்.
வனாந்தரத்தில் இஸ்ரவேலரின் சுமார் 39 ஆண்டுகால பிரயாண வாழ்வை எண்ணாகமம் சொல்லுகிறது.
- எண் 1:1 - 10:11 வரை - 21 நாட்கள். 
- எண் 10:1 - 33:38 வரை 38 ஆண்டுகள். 
- நிலப்பரப்பிற்குள் பிரவேசிக்க இஸ்ரவேலர்கள் சீனாய் மலையருகே ஆயத்தப்பட்டது (1:1-10:10). 
- சீனாயிலிருந்து காதேஸ்பர்ளேயா வரை பயணப்பட்டது (10:11- 42:16). 
- காதேஸ்பர்னேயா அருகில் நாற்பது ஆண்டுகள் (13:1-19:22). 
- காதேஸ்பர்னேயாவிலிருந்து மோவாபின் சமவெளிக்கு பயணப்பட்டது (20:1-21:35). 
- மோவாபின் சமவெளிகளில் இஸ்ரவேலர் (22:1-36:13). 
வேதாகமத்தின் வேறு புத்தகங்களில் காணப்படும் இப்புத்தகத்தின் நிகழ்வுகள்
- அனுப்பப்பட்ட பன்னிரண்டு வேவுகாரரில் இஸ்ரவேலரை தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள உற்சாகமூட்டியவர்கள் யோசுவாவும், காலேபும் மாத்திரமே. 
(எண்.13-14, யோசுவா 14:7).
மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, சர்ப்பத்தினால் தீண்டப்பட்டவர்கள்
அதை நோக்கிப்பார்த்துப் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான் (எண்.21:6-9, யோசுவா 3:4).
- மோசே கன்மலையை அடிக்க தண்ணீர் வந்தது. 
(எண் 20:11, சங் 106:32)
பிலேயாம் அவனது கழுதையால் கடிந்துகொள்ளப்படுதல் (எண் 22:21, வெளி 2:14)
- பேதுரு கள்ளப்போதகர்களை பிலேயாமிற்கு ஒப்பிட்டு 2 பேது 2:15-ல் அநீதத்தின் கூலியை விரும்பி என்று சொல்லி இருக்கிறார். 
யூதா 1:11ல் தனது ஆத்துமாவை கூலிக்காக விற்றுப்போடுகிறவர்களை பிலேயாமோடு ஒப்பிடுகிறார்.
- இறுதியாக இயேசு பெர்கமு சபைக்கு சொல்லும்போது பிலேயாமை சுட்டிக்காட்டி வெனி 2:14ல் "விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு” என்று சொன்னார். 
புத்தகம் ஒரு பார்வை
வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பை சுதந்தரித்துக் கொள்வதே இஸ்ரவேலருக்கு முன்னிருந் பிரதான பணி.
அவர்களது பயணத்தை தொடர ஜனங்கள் தொகையிடப்பட்டு ஆயத்தங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து இஸ்ரவேலர் முறுமுறுத்து வந்ததன் விளைவாக பல ஆயிரம் பேரை தேவன்
பல வழிகளிலும் அழித்துப்போட்டார்.
கானானின் எல்லைகளில் வந்தபோது தேசத்தை வேவுபார்க்க ஆட்கள் அனுப்பப் பட்டார்கள்.
வேவு பார்த்தவர்கள் கானான் தேசத்தின் நிலை குறித்து அளித்த பயமுண்டாக்கிய தகவல்களால் இஸ்ரவேலர் அதை சுதந்தரிக்க மறுத்தார்கள்.
தேவன் அந்த சந்ததியார் மேல் கோபமாகி புதிய சந்ததி வனாந்திரத்தில் வளர்ந்து நிலத்தை சுதந்தரிக்கும் வரை அவர்கள் வனாந்தரத்தில் மடியும்படி செய்தார்.
இஸ்ரவேலின் புதிய சந்ததியார் மோவாபின் சமவெளியில் யோர்தான் நதியை கடக்க ஆயத்தமாகுதலோடு இந்த புத்தகம் முடிவடைகிறது.
முறுமுறுப்பினால் உன்டான விளைவுகள்
எண்ணாகமத்தின் பத்தகத்தில் முறுமுறுத்த, முறையிட்ட 7 சம்பவங்கள் உள்ளன.
இவை ஒவ்வொன்றிற்கும் தேவன் நியாயத்தீர்ப்பு செய்தார். பிலி, 2:14-16 நாள் வீனாக ஓடியதும் விளாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துயின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே கடர்களைப்போலப் பிரகாசிக்கிற நாங்கள் கோணலும் மாறுபாடுமான சத்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளகைளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறப்பில்லாமலும் தாக்கிப்பு இல்லாமலும் செய்யுங்கள்.
- கடின சூழ்நிலை குறித்த முறுமுறுப்பு (எண் 11:1-3) 
கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப்பட்சித்தது. (11:1)
- உணவை குறித்த முறுமுறுப்பு இறைச்சி (எண் 11:4-5) 
கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். (11:33)
- மோசேயின் தலைமைத்துவம் குறித்த முறுமுறுப்பு (எண் 12) 
மிரியாம் ஒரு வாரம் குஷ்டம் பிடித்தவளானாள் (12: 4-15)
- வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்புக்குள் பிரவேசிப்பதை குறித்த முறுமுறுப்பு (எண் 13-14) 
புதிய தலைவனை நியமித்துக்கொண்டு எகிப்திற்கு திரும்பிப்போக தீர்மானித்தார்கள் (14:4) அவர்கள் விரும்பினதை தேவன் அவர்களுக்கு கொடுத்தார். அடுத்த 40 ஆண்டுகள் வனாந்தரத்திலேயே சுற்றிவந்து இறுதியில் மடிந்துபோனார்கள் (14:34-35)
- மோசே, ஆரோன் ஆகியோரின் தலைமைத்துவம் குறித்த முறுமுறுப்பு (எண் 16) 
கோராகு கூட்டத்தை கூட்டி விரோதமாய் எழும்பினான். அவனும் அவனது கூட்டமும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள் (16:1-33)
- தண்ணீருக்காக முறுமுறுப்பு (எண் 20:1-13) 
இறுதியில் தேவன் சொன்னதை செய்யாமல் மோசே கன்மலையை இரண்டு முறை அடித்ததால் அவன் வாக்களிப்பின் நிலத்திற்குள் பிவேசிப்பதை தேவன் தடைசெய்தார் (20:1-13)
- அப்பத்திற்காகவும், தண்ணீருக்காவும் முறுமுறுப்பு (21: 4-9) 
கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்
புத்தகத்தின் முக்கிய பகுதிகள்
- இஸ்ரவேலர்கள் சீனாயில் ஆயத்தப்படுதல் 1:1-10:10 
1.ஜனங்கள் தொகையிடப்படுதல் 1:1-4:49
- கோத்திரங்கள் தொகையிடப்படுநல் 1:1-54 
- பயணத்தின்போதும், பாளமிறங்கும்போதும் கோந்திரங்களின் வரிசை 2:1-34 
- லேவியருக்கான இடம் 3:1- 4:49 
2.ஜனங்கள் சுத்திகரிக்கப்படுதல் 5:1-10:10
- தீட்டானவற்றிற்கு விலகியிருத்தல் 5 c. 
- நசரேயவிரதம் காத்தல் 6:1-27 
- தலைவர்களின் காணிக்கைகள் 7:1-89 
- லேவியர் பிரித்துவைக்கப்படுதல் 8:1-26 
- வனாந்தரத்தில் முதலாவது பஸ்கா ஆசரிப்பு 9:1-14 
- தேவனால் வழிநடத்தபடுதல் 9:15-10:10 
- இஸ்ரவேல் காதேஸ்பர்னேயாவை நோக்கி பயணித்தல் 10:11-12:16 
- பயணத்தின் ஆரம்பம் 10:11-36 
- முறுமுறுப்புக்களின் ஆரம்பம் 11:4-42:16 
- ஜனங்களின் முறுமுறுப்பு (எழுபது மூப்பர்கள் - காடைகள்) 11:1-35 
- மிரியாம், ஆரோன் ஆகியவர்களின் முறமுறப்பு (மிரியாமின் குஷ்டம்) 12:4-16 
- காதேஸ்பர்ளேயாவில் இஸ்ரவேலர் 13:1-20:13 
- தேவனுக்கு கீழ்படியாதிருத்தல் 13:1-14:45 
- தேசத்தை வேவு பார்த்தலும் அறிக்கை சமர்ப்பித்தலும் 13 -14 
- ஜளங்களின் கீழ்படியாமை தேவனின் தண்டனை 14:1-45 
- தேவன் கட்ளையிட்ட ஒழுங்குகள் 15:1-20:13 
- காணிக்கைகள் குறித்த ஒழுங்குகள், ஒய்வுநாளை கட்டளை மீறப்படுதல், வஸ்திரத்தில் உண்டாக்கப்படவேண்டிய நொங்கல்கள் 15:1-4 
- கோராருவின் எதிர்ப்பு 16:1-50 
- ஆரோனின் ஆசாரித்துவம் உறுதிப்படுத்தபடுதன் ஆரோனின் கோல் துளிர்த்தல் 17:1-13 
- லேவியர்களுக்கான பணிகளும், பலண்களும் 18:1-32 
- பலிசெலுத்தப்படும் சிவப்பான கிடாரி 19:1-22 
- மோசே இழைத்த தவறு 20:1+13 
- இஸ்ரவேல் மோவாபை நோக்கி பயணித்தல் 20:14-21:35 
- ஏதோமின் எதிர்ப்பு 20:14-22 
- ஆரோனின் மரணம் 20:23.29 
- ஆராத் தோற்கடிக்கப்படல் 21:1-3 
- இஸ்ரவேலர் மீது ஒழுங்கு நடவடிக்கை; வென்கல சர்ப்பம் 21:4-9 
- சீகோன், ஓக தோற்கடிக்கப்படல் 21:10-35. 
- மோவாபின் சமவெளியில் இஸ்ரவேலர் 22:1-36:13 
- இஸ்ரவேலை சபிக்க பாலாக பிலேயாமை கேட்டுக்கொள்ளல் 
- இஸ்ரவேலை பிலேயாம் ஆசீர்வதித்தல் 23:1-24:25 
- இஸ்ரவேலர் பாகாலையும், பேயோரையும் வழிபடுதன் 25:4-18 
- புதிய சந்தநியார் தொகையிடப்படுதல் 26:1-65 
- ஜனங்கள் அறிவுறுத்தப்படுதல் 27:1-30:16 . 
- காளியாட்சி உரிமை குறித்த சட்டங்கள் 27:4-11 2. 
- யோகளாலின் நியமனம் 27:12-23 
- காணிக்கைகள், பண்டிகைகள் குறித்த ஒழுங்குகள் 28:1-29:40 
- பொருத்தனைகள் குறித்த கட்டளைகள் 30:1-16. 
- மீதியானியர்களை தோற்கடித்தல்- 31:1-54. 
- இரண்டரை கோத்திரத்தார் யோர்தானுக்கு இப்புறத்தில் குடியேறுகல் 321–42. 
- எகிப்திலிருந்து மோவாப் வரையான பயணம் மீளாய்வு செய்யப்படுதல் 3:1-49 
- நிலத்தை கையகப்படுத்த அறிவுறுத்தல்கள் 38:50-56. 
- கானாள் தேசத்தை பாப்மிடுதல் 341-36:13 
- எல்லைகள் 34:1.42 
- பமிர்ந்தளிப்பு 34:13-29 
- லேவியர்களுக்கான பட்டணங்கள் 35:1-8 
- அடைக்கலப் பட்டணங்கள் 35:9-34 
- பெண்களுக்கான காணியட்சி உரிமை 36c. 
Taken from Pr. Thamas Raj Notes
 
 
0 Comments