வைரம் / வச்சிரம் || அறிந்து கொள்வோம் பகுதி - 69

அறிந்து கொள்வோம்

பகுதி - 69


வைரம் / வச்சிரம்


நவரத்தினங்களில் ஒன்றான இந்த வைரம் எபிரெய மொழியில் "yahalom" என்று அழைக்கப்படுகிறது. அதன் கடினத்தன்மைக்காகவே இந்தப் பெயர் இடப்பட்டுள்ளது. தமிழ் வேதாகமத்தில் இது வச்சிரம் என்று சொல்லப்படுகிறது.


உலகில் உள்ள எல்லாவற்றையும்விட அதிகக் கடினமான பொருள் இது பெரும்பாலான இரசாயனங்களால் இதில் எந்த பாதிப்பும் ஏற்படுத்த முடியாது.


இது மற்ற உலோகங்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது நவரத்தினங்களில் அதிக விலைமதிப்புள்ளதாகும். இது நிலத்துக்கு அடியில் புதைந்திருககும் கார்பன் என்றழைக்கப்படும் கரியிலிருந்து படிம வடியில் உருவாகிறது. 

நவரத்தினங்களில் இது மட்டுமே ஒரு கனிமத்திலிருந்து உருவாகிறது. நிலத்தில் புதையுண்ட மரங்கள் அதிக அழுத்தத்தினாலும், வெப்பத்தினாலும் கரியாக மாறி, நீண்டகாலம் கழித்து வைரமாக மாறுகின்றன.


ரஷியாவில் சைபீரியாவிலுள்ள மிர்னி வைரச் சுரங்கம் - இது உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கங்களில் ஒன்றாகும்.



பிரதான ஆசாரியனின் மார்ப்பதக்கம்


பிரதான மார்ப்பதக்கத்தில் இது இரண்டாம் வரிசையில் பதிக்கப்பட்டிருந்தது. இது வச்சிரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

(யாத். 28:18; 39:11).


உருவகத்தில் வைரம்


ஸ்திரத்தன்மைக்கும், பிரகாசத்துக்கும் இது அடையாளமாக இருக்கிறது. தேவனுக்கு முன்பாக. நீதியுள்ளவர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறவர்களை

இது குறிக்கிறது.


சாத்தானைக் குறித்து உருவகமாகக் சொல்லப் பட்டபோது "நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது" சொல்லப்பட்டிருக்கிறது.

 எசே. 28:13).


வைரத்தின் நுனியினால்

எழுதப்படுவது என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்று அர்த்தமாகும் -எரே. 17:1.

யூதாவின் பாவம் இப்படி எழுதப்பட்டிருக்கிறது இப்போதும் வைரத்தின் நுனியைக் கொண்டு கடினமான உலோகங்களில் எழுதுகிறார்கள்,வெட்டுகிறார்கள்.


நெற்றியை வச்சிரக்கல்லைப்போல ஆக்குவது என்பது - எசே. 3:9 உறுதியாக்குவது என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.


இருதயத்தை வைரமாக்குதல் 

என்பது இருதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளுவதைக் குறிக்கிறது - சக. 7:12.


பரம எருசலேம் நகரத்தின் மதில்களுக்குப் பல்வேறு இரத்தினங்கள் அஸ்திபாரங்களாக இருந்தன. முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல் என்று குறிப்பிடப் பட்டுள்ளது - வெளி.21:19.


Post a Comment

0 Comments