யாத்திராகமம் | பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம் |

 O T Book Summary

பழைய ஏற்பாட்டின்

புத்தக சுருக்கம்


யாத்திராகமம்



கிரேக்க மொழியில் “Exodos" என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இது "Exodus" என்று அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் -"பாதையில் பயணித்தல்" .


இஸ்ரவேல் ஜனங்களின் மிகப்பெரிய இடப்பெயர்வு பயணத்தை முன்னிட்டே இந்த பெயர் இந்த புத்தகத்திற்கு வந்தது.


புத்தக ஆசிரியர்


இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே என்பது பாரம்பரிய நம்பிக்கை.


வேதாகமத்தின் மற்ற புத்தகங்களில் இது "மோசேயின் நியாயப்பிரமாணம்" என்று அழைக்கப்படுகிறது.

 (யோசு1:7, 1 இரா 2:4). இதனால் யாத்திராகமத்தையும் அதிலே இடம் பெற்றுள்ள கற்பனைகளையும், மோசே  தான் எழுதினார் என்பது புலனாகிறது.


மாற்கு 7:10-ல் இயேசு கிறிஸ்து“மோசே சொல்லியிருக்கிறாரே" என்று யாத் 20:12,21:17 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டியதன் மூலம் இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே என்பது உறுதிப்படுகிறது.


எகிப்தின் அரண்மனையில் வளர்க்கப்பட்டு அங்கு மோசே பெற்ற கல்வியறிவு இவற்றை எழுதுவதற்கான வாய்ப்பையும், திறமையையும் நிச்சயமாய் கொடுத்திருக்கும் (அப்7:22).


கி.மு.1445 முதல் கி.மு.1404 காலப்பகுதியில் எழுதப்பட்டது.

40 அதிகாரங்களை கொண்டது

1213 வசனங்களை கொண்டது


வரலாற்றுக் காலவரிசை


ஆதியாகமத்தில் ஆரம்பித்த யூத மக்களின் வாழ்க்கை சம்பவங்களை, சுமார் 400 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் யாத்திராகமம் தொடர்ந்து சொல்லுகிறது.

யாத்.12:40-எபிரேயர்கள் எகிப்தில் தங்கியிருந்த காலம் 430 ஆண்டுகள்.

இந்த காலகட்டத்தில் யோசேப்பும். அவனது சகோதரர்களும், அவர்களுக்கு ஆதரவாயிருந்த பார்வோனும் மரித்துப்போயிருந்தார்கள்.

மோசேயின் பிறப்பிற்கு (கி.மு.1526) சற்று முன்னான காலத்திலிருந்து வனாந்திரத்தில் ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்ட (கி.மு.1445) காலம் வரையுள்ள சுமார் 80 ஆண்டுகள் கால வரலாற்றை இந்த புத்தகம் விபரிக்கிறது. 

1இரா.6:1-ல் பார்க்கிற படி இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480 ஆண்டுகளின் பின்னர் சாலொமோன் எருசலேமில் ஆலயத்தை கட்டினான்.


புத்தக உள்ளடக்கம்


  • விரக்தி மனநிலை கொண்டவர்களாய் எகிப்தில் வாழும் இஸ்ரவேலர் (அதிகாரம் 1).


  •  மோசேயின் பிறப்பும் ஆச்சரியமான வாழ்வும் (2:1-2:10).


  • மோசே ஏற்றுக்கொள்ளபடாமையும், மீதியான் தேசத்திற்கு தப்பித்தலும் (2:11-2:21).


  • எரியும் செடியிலிருந்து தேவன் மோசேயை அழைத்தல் (3:14:17).

 

  • மோசே எகிப்திற்கு திரும்பி தன்னை வெளிப்படுத்துதல் (4:18-7:13).


  • எகிப்தின் 10 வாதைகள் (7:14-11:10).


  • பஸ்கா (12:1-13:14).


  • யாத்திரையும், எகிப்தியரிடமிருந்து தப்பித்தலும் (13:15-13:22)


  • இஸ்ரவேலரின் யாத்திரை (14:1-18:27).


  • சீனாயில் உடன்படிக்கை, பத்து கற்பனைகள் வழங்கப்படுதலும் (19:1-24:18).


  • ஜனங்களின் துரோகம். உடன்படிக்கையின் புதுப்பித்தலும் (32:1-35:3).


  • ஆசரிப்புக்கூடாரத்திற்கான அறிவுறுத்தல்களும் அதன் நிறைவேற்றமும் (25:1-31:18 / 35:4-40:38)



 முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்


ஒரு முழு தேசமே சேர்ந்து பயணப்பட்ட மிகக் கடினமான பயணம் இது.

ஒரு இரவிலே தேவன் எகிப்திலிருந்து சரீரபிரகாரமாக இஸ்ரவேலரை வெளியேற்றினார். ஆனால் அவர்கள் மனதிலிருந்த எகிப்தை வெளியேற்ற 40 ஆண்டுகள் தேவைப்பட்டது.


1. ராமசேஸ்


  • 1வது மாதத்தின் 15ம் நாளில் எகிப்திலுள்ள ராமசேசை விட்டுக் சுக்கோத்துக்குப் போனார்கள்.

 (யாத் 12:37).

  •  430 ஆண்டுகால எகிப்திய அடிமை வாழ்வு முடிவுக்கு வந்தது.


2. சுக்கோத்


  • எபிரேயர்கள் முதலில் பாளயமிறங்கிய இடத்தைவிட்டு பயணப்பட்டபோது கர்த்தர் பகலில் மேகஸ்தம்பத்திலும், இரவில் அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன்சென்றார்.

 (யாத் 13:20-22).


  • தேவன் அவர்களை ஒரு காரணத்திற்காக நீண்ட பயணப்பாதையில் நடத்தினார்.

யாதி1:317-18 பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின் ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல் சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரவழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். 


  • இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.


3. ஏத்தாம்


சுக்கோத்திலிருந்து ஏத்தாமிற்கு வந்தார்கள்.யாத் 13:20 

அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு.

வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.


4. ஈரோத் பாள்ளதாக்கு


  • மிக்தோலுக்கும் சிவந்த சமுத்திரத்திற்கும் இடையே பாளயமிறங்குதல் (யாத் 14:2)

  • சிவந்த சமுத்திரத்தை கடத்தல்

  • எகிப்திய சேனைகள் அழிக்கப்படல்


5. சூர் வனாந்தரம் 

(யாத் 15:22-23)

  • மாராவின் மதுரமாய் மாறுதல்.

  • வாக்குத்தத்தம் பெறுதல்.


6. ஏலிம் 

(யாத் 15:27)

இஸ்ரவேலர்கள் 12 நீரூற்றுக்கள், 70 பேரீச்சமரங்கள் நடுவில் இளைப்பாற பாளயமிறங்குதல்


7. சீன் வனாந்தரம்

 (யாத் 16:1)


  • மன்னாவும், காடைகளும் வழங்கப்படுதல்.

  • ஒய்வு நாள் ஆசரிப்பு.


8.ரெவிதீம் 

(யாத் 17:1)


  • கன்மலையிலிருந்து தண்ணீர் உண்டாதல்.

  • இஸ்ரவேல் அமலேக்கியரோடு யுத்தம் செய்தல் (யாத் 17:8-16).

  • மோசே தன் குடும்பத்தை சந்தித்தார்.


9.சீனாய் மலையும், வனாந்தரமும்.

 (யாத் 19:1-2)

  • எகிப்தைவிட்டு புறப்பட்டு 3ம்மாதத்தில்  இங்கு சேர்ந்தார்கள்.

  • சீனாயில் 2 ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்

  • மோசேயைக் கொண்டு நியாயப்பிரமாணம்

கொடுக்கப்பட்டது.

  • ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டது.

  • 1வது மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டது.


புத்தகத்தின் முக்கியத்துவம்


1.தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றபடும் செயல் ஆரம்பிக்கும் இடம் யாத்திரையாகமம். 


ஆதியாகமத்தில் - தேவன் ஆபிரகாமிடம்  அவன் சந்ததியார் பலம் மிக்க தேசமாக மறி கானான் தேசத்தை சுதந்தரிப்பார்கள் என்றும் அவர்களால் உலகம் முழுவதும் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் என்றும் வாக்களித்திருந்தார். யாத்திராகமத்திலிருந்துதான் வேதாகமத்தின் சம்பவங்கள் விறுவிறுப்பாக நடந்தேறுகிறது


2.தேவனுடைய வல்லமை வெளிப்படுத்தபட்டது


எகிப்தின் கசப்பான கொத்தடிமை வாழ்வும், துன்பமும் இஸ்ரவேலருக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுத்திருந்தது.


ஆனால் தேவனோ ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்தியினராகிய இவர்களை தமது ஓங்கிய புயத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும் 10 ஒப்பிடமுடியாத அதிசயங்களை எகிப்தியர், இஸ்ரவேலர் காணும்படி செய்து அவர்களை விடுவித்தார்.


3.தேவனுடைய ஜனங்களை வனாந்தரத்தில் தயார்ப்படுத்துதல்


ஆதியாகமத்தில் தேவன் ஒரு குடும்பத்தினரோடு செயற்படுகிறார். ஆனால் யாத்திராகமத்தில் தேவன் ஒரு முழு தேசத்தோடும் செயற்படுகிறார்.

யாத்திராகமம் முழுவதும் தேவன் இஸ்ரவேலை தமது ஜனமா ம் மற்ற அவரின் முழு முயற்சியின் விபரிப்பு

இப்போது அவர்கள் அவருடைய ஜனங்கள், அவர் அவர்களுடைய தேவன்

அவர்களுக்கு அவர் பத்து கற்பனைகளை கொடுத்து இஸ்ரவேல் ஜனத்திற்கும் தனக்குமான உறவை உறுதியாக குறிப்பிடுகிறார்.

 யாத் 20:2.

"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே" 


அவர்களது நம்பிக்கைகள், நடத்தைகள், வழிபாடுகளுக்கான அடிப்படை முறைகள் பற்றி அவர் அவர்களுக்கு பயிற்சி அளித்தார் இந்த நியாயப்பிரமாணத்தின் மூலமாக வாழ்வின் சகலமும் தேவனோடு சம்பந்தப்பட்டது என்பதை தெரிவிக்கிறார். அவரது ஆளுகைக்கு உட்படாதது என்று எதுவுமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறார்.


இப்போதும் அவரது பிரசன்னம் அவர் ஜனங்கள் மத்தியில் இருக்கும் படியாக

ஆசரிப்புக்கூடாரம் என்னும் கூடாரத்தை அமைக்க விரிவான விளக்கங்கள் கொடுக்கப்படுதல்.

இஸ்ரவேல் மத்தியில் வாசம்பண்ணும் நோக்கத்தில் அவரது மகிமையை செகினா மேகத்தால் வெளிப்படுத்துதல் (யாத் 40:34-35).


கிறிஸ்துவுக்கும் அவரது நற்செய்திக்கும் முன்னோடியானவை.


  • தேவனின் பஸ்காவின் ஆடு (12:1-28)

  • புளிப்பில்லா அப்பம் (13:3-10)

  • கன்மலை, வழிநடத்திய மேகஸ்தம்பம், அக்கினிஸ்தம்பம் (13:21-22) .

  • வானத்திலிருந்து வந்த மன்னா (16:1-36).

  • ஜீவத்தண்ணீரின் ஊற்று (17:1-7)

  • ஆசரிப்புக்கூடாரம் (25–40).....




Taken from Pr.Thamasraj Notes.





Post a Comment

0 Comments