வரி அறிந்து கொள்வோம் பகுதி - 63

 அறிந்து கொள்வோம்

பகுதி - 63


வரி 


இது ஆளுகைசெய்யும் அரசாங்கமோ அல்லது ராஜாவோ தங்களின் ஆளுகைக்கு கீழ் உள்ள மக்கள் கட்ட வேண்டும் என்று விதிக்கும் பணமாகும். இதுவே பகுதி என்று வேதத்தில்

மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 

(2 சாமு. 20:24).  

For example-ராஜா அகாஸ்வேரு தேசம் மற்றும் தீவுகளில் குடியிருக்கும் தனது மக்களிடமிருந்து பகுதி வசூலித்தான் (எஸ்தர் 10:1).


வேதாகமத்தில் வரி


வேதாகம நாட்களில் இதை வசூலிப்பதற்காகப் பகுதி விசாரிப்புக்காரர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை 1 இரா.4:6 -ல் பார்க்கலாம்.


சாலொமோன் இஸ்ரவேல் நாடெங்கும் பன்னிரண்டு மணியக்காரர்களை இதற்காக நியமித்திருந்தான். அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள் (1 இரா.4:7).


சாலொமோன் அதிகமாக வரிவசூலித்து மக்களை கடினமான நடத்தினர்.அவனுக்குப் பின்வந்த அவன் மகன் ரெகொபெயாம் அதைக் குறைக்காமல் இன்னும் அதிகமாக்குவேன் என்று சொன்னபடியினால்தான் இஸ்ரவேலின் பத்துக் கோத்திரத்தார் அவனுடைய ஆளுகையிலிருந்து பிரிந்துபோனார்கள்.

(1இரா. 12:11,14-20).


ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று எஸ்றாவின் காலத்தில் கட்டளையிடப்பட்டிருந்தது (எஸ்றா 7:24).


அரசாங்க அதிகாரிகளின் பணிகளின் தேவைக்காக நாம் வரி செலுத்துகிறோம் என்று பவுல் சுட்டிக்காட்டியிருக்கிறார் (ரோமர் 13:6).

செலுத்த வேண்டிய வரியையும், தீர்வையையம் செலுத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறியிருக்கிறார்.



  • ஒரு நாடு மற்றொரு நாட்டைப் பிடிக்கும்போது பிடிபட்ட நாடு பிடித்த நாட்டுக்குப் பகுதி கட்டவேண்டியிருந்தது. இது கப்பம் என்று அழைக்கப்

படுகிறது - நியா. 1:30). 


வேதாகம நாட்களில் தேவனுடைய ஆலயப் பணிகளுக்காகவும் வரி வசூலிக்கப்பட்டது. இருபது வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு யூதனும் இதற்காக அரை சேக்கல் பணத்தைச் செலுத்த வேண்டும் (யாத்.30:12, 13). இது அவர்களுடைய ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளாகக் கொடுக்கப்பட்டது.


  • பிற்காலத்தில் லேவியர் இதை வசூலிப்பதற்குப் பொறுப்பாக இருந்தார்கள் (2 நாளா. 24:6, 9).


இயேசுவானவர் கப்பர்நகூமுக்கு வந்தபோது வரிப் பணம் வசூலிப்பவர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்போது அவர் பேதுருவிடம் கடலில் போய் தூண்டிலைப் போட்டு கிடைக்கும் மீனின் வாயைத் திறந்து பார்த்து, அதில் இருக்கும் வெள்ளிப்பணத்தை அவர்களுக்காக வரியாகச் செலுத்தும்படி கட்டளையிட்டார் (மத். 17:24-27).

அது சமயப்பிரகாரமான வரியாகும்.



  • இது தவிர அரசாங்கமும் வரிவசூலித்தது. இயேசுவின் நாட்களில் பாலஸ்தீனம் ரோம அரசாங்கத்தின் கீழ் இருந்தபடியால் யூதர்கள் ரோம அரசாங்கத்துக்கு வரிசெலுத்த வேண்டியிருந்தது.


பரிசேயரும், ஏரோதியரும் இயேசுவைச் சோதிக்கும்படி இராயனுக்கு (ரோமர்களின் ராஜாவுக்கு) வரிகொடுப்பது நியாயமா என்ற கேள்வியை அவரிடம் கேட்டார்கள்.

அவர் ஒரு வரிக்காசைத் தம்மிடம் காட்டும்படி கேட்டுக்கொண்டார். அதிலிருந்த சூரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று இயேசு கேட்டார். இராயனுடையது என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது இயேசு இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்” என்று பதிலளித்தார் (மத். 22:21; மாற்கு 12:14; லூக்கா 20:22).


  • இயேசுவிடம் காட்டப்பட்ட வரிக்காசு இராயனின் சொரூபத்தைக் கொண்ட denarius நாணயமாகும். ஒவ்வொரு யூதனும் இந்த வரிக்காசை ரோம அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும்!

அரசாங்கத்துக்காக வரியையும், 

தீர்வையும் வசூலிக்கும்படி ஆயக்காரர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள்.

இதனால்தான் யூத மக்கள் ஆயக்காரர்களை  வெறுத்தார்கள்!


யூதர்கள் ஒவ்வொரு குடிமதிப்பு எழுதப்படும்போது (லூக்கா 2:1), ஒவ்வொருவரும் தலைவரி என்ற வரியையையும் செலுத்த வேண்டியிருந்தது! சிறுபிள்ளைகள், வயது முதிர்ந்தவர் தவிர அடிமைகள், பெண்கள் உட்பட எல்லோரும் இந்த வரியைச் செலுத்த வேண்டியிருந்தது.




Post a Comment

1 Comments