விரியன் அறிந்து கொள்வோம் பகுதி- 39

 அறிந்து கொள்வோம்

பகுதி- 39


விரியன் 

     Viper


கொடிய விஷம் கொண்ட பட்டியலில் ராஜ நாகம் மட்டுமல்ல, விரியன் பாம்புகளுக்கும் முக்கியமான இடம்

உண்டு பாம்புகளில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றை

நஞ்சின் தன்மையை வைத்து விஷள்ளவை, விஷமற்றவை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவற்றின் சீற்றத்தைப் பொறுத்து சாது, மூர்க்கம் என்று பிரிக்கலாம். 

ஒரு பாம்பை சாது அல்லது மூர்க்கம் எனறு பிரிப்பது அதன் விஷத்தை வைத்து மட்டுமே அல்ல; விஷம் அதிகமாக உள்ள பாம்புகளில் சாதுவான பாம்புகளும் இருக்கறது.

அதேபோல விஷம் இல்லாத பாம்புகளும் மூர்க்கத்தனமாக சீறும். ஆனால்

இந்த விரியன் பாம்பு சாதுவாகவும், மூர்க்கம் என்று இரண்டு குணங்களையும் ஒன்றாக வைத்திருக்கும்  


பொதுவாகக் கொடிய வகை விஷத்தன்மை கொண்ட நான்கு பாம்பு வகைகளில் விரியன் பாம்புக்கு முக்கியமான இடம் உண்டு. இதை கட்டு விரியன். கண்ணாடி விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன், பென்சில் விரியன் எனப் பல பெயர்கள் உண்டு.


ஆகையால் "விரியன்" கொடிய விஷமுள்ள பாம்பு வகைகளில் ஒன்றாகும்.

இதை எபிரேய மொழியில் eph'eh என்று அழைப்பது உண்டு. இந்த விரியன் பொதுவாக மணற்பாங்கான பகுதிகளில் காணப்படும்  இவைகள் சாக்கடலின் கரையில் கிடக்கும் பெரிய கற்களுக்கு அடியில் காணப்பட கூடியது. இது மிக வேகமாக ஓடக் கூடியவை.


ஆதி49:17


பாதையில் கிடக்கும் விரியன் பாம்பு குதிரையின் குதிகாலைக் கடித்து, 

அதில் செல்லுபவனைக் கீழே விழும்படி செய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது.


யோபு 20:16


துன்மார்க்கன் "விரியன் பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்” என்று வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.


ஏசாயா 59:5


இவர்கள் கட்டுவிரியன் முட்டைகளை அடைகாக்கிறார்கள் என்று வசனம் குறிப்பிடுகிறது.


ஏசாயா 30:6


"எகிப்தைக் குறித்துக் குறிப்பிடும்போது, துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசம்" என்று சொல்லப்பட்டுள்ளது.



உருவகத்தில் விரியன்


  • பரிசேயர்களும், சதுசேயர்களும் தன்னிடத்தில் வருவதைக் கண்ட யோவான்ஸ்நானன் அவர்களுடைய விஷத்தன்மையை குறிப்பிடுவதற்காக "விரியன் பாம்புக் குட்டிகளே" என்று அழைப்பதை பார்க்கிறோம் (மத்.3:7)


  • மத்.12:34;23:33). இவர்கள் விரியன்பாம்புகளைப்போல ஆண்டவராகிய இயேசுவும் இப்படி அழைக்கிறார் மற்றவர்களைப் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.


  • நீதி:23:32 - மதுபானம் விரியனைப்போலத் தீண்டுகிறது



பவுலை கவ்விய பாம்பு


அப் 28:4-5 

கப்பல்சேதத்துக்குப் பிறகு பவுலும் மற்றவர்களும்

மெலித்தா தீவில் கரையேறினார்கள். அப்போது குளிருக்காக அனல் மூட்டியபோது, பவுலும் சில விறகுகளை எடுத்து நெருப்பில் போட்டார். அப்போது ஒரு விரியன்பாம்பு அவர் கையைக் கவ்விக்கொண்டது. அவர் அதை உதறிப்போட்டு ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்தார்.


இதைக் கண்ட அந்தத் தீவின் மக்கள் பவுலை  தேவன் என்று 

தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.


இங்கு பவுலை கவ்விய பாம்பு மத்திய தரைக்கடலில் உள்ள தீவு பகுதிகளில் காணப்படும் ஒருவகை விரியன் பாம்பு வகையாகும்.


விசுவாசத்தோடு தேவனுக்காக ஊழியம் செய்கிறவர்கள் சர்ப்பங்களைக் கையில் எடுத்தாலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று இயேசுவானவர் ஏற்கெனவே முன்னறிவித்திருந்தார் -மாற்கு 16:18).


 சர்ப்பங்களை மிதிக்க அவர் அதிகாரம் கொடுத்திருக்கிறார் -லூக்கா 10:19).


தீர்க்கதரிசன புத்தகத்தில் விரியன்


ஆகாஸ் மரணமடைந்தபோது, தன்னை அடித்தவன் அழிந்துபோனான் என்று பெலிஸ்தியர் களிகூர்ந்தார்கள். 

ஆனால் "பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்" என்ற தீர்க்கதரிசனம் கொடுக்கப்பட்டது (ஏசாயா 14:29).

இதற்கு பின்பு வந்த உசியா ராஜாவைக் இந்த தீர்க்கதரிசனம் குறிக்கிறது.

உசியா ராஜா பெலிஸ்தரை அதிகமாக ஒடுக்கினான் என்பது உண்மை.


எரே.8:17-

இஸ்ரவேலர் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு ஆளாகிய போது, 'இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும்'' என்று  தேவன் முன்னறிவித்திருக்கிறார் இது அவர்களுக்கு வரவிருந்த உபத்திரவங்களை குறித்து சொன்னது.


ஆண்டவராகிய இயேசுவின் நீதியான ஆளுகையின் போது கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும் ஒருமித்திருக்கும். அதுபோல 

"பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வலையின் மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்" (ஏசாயா 11:8). இது எந்தவித நச்சின் பாதிப்பும் இல்லாத காலமாக இருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது.


Post a Comment

0 Comments