அகீக்காம் அறிந்து கொள்வோம் பகுதி -38

அறிந்து கொள்வோம்

பகுதி -38



அகீக்காம்

 (Ahikam)


அகிக்காம் (Ahikam) என்ற பெயருக்கு ‘என் சகோதரன் எழுந்துவிட்டான்’ என்பது பொருள்.


இவர் சாப்பானின் குமாரன்.

யோசியா இராஜாவின் நாட்களில் நியாயப்பிரமாணப் புத்தகம் கண்டெடுக்கப்பட்டபொழுது, 

இராஜா அகீக்காமையும், 

வேறு ஆட்களையும், உல்தாள் என்ற தீர்க்கதரிசியானவளிடம் 

அனுப்பி வைத்தான்.

(2.இராஜா.22:12,14, 2.நாளா.34:20). 


இவன் யூதா ராஜா யோயாக்கீம் நாட்களில் எரேமியாவை கொன்று போடாமல் பாதுகாத்தான் (எரேமியா.26:24).


இவனுடைய மகனாகிய கெதலியாவினிடம் நேபுகாத்நேச்சார் எரேமியாவைப் பாதுகாக்கும்படி ஒப்புவித்தான மற்றும் மீதமுள்ள யூதா ஜனங்களுக்கு அதிகாரியாக வைத்தான். சில வேத ஆராய்ச்சியாளர்கள் கெதலியாவை யூதாவின் 21 -ம் ராஜா என்கிறார்கள். சிலர் அதை ஏற்றுக் கொள்ளுவதில்லை.  இவன் பெஞ்சமின் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.

 (எரேமியா.39:14, 2இராஜா.25:22).”





Post a Comment

0 Comments