Daily Devotion - ஒப்புக்கொடுத்தேன்


Daily Devotion


ஒப்புக்கொடுத்தேன்

     (ஏசாயா-50:1-11)


   .. "அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என்    தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்: அவமானத்துக்கும்

 உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை " - ஏசாயா 50:6.


இந்த வசனம், இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும்

குறித்து, ஏசாயா தீர்க்கதரிசியினால் முன்னறிவிக்கப்பட்டவைகளாகும். இந்த வசனத்தில் அவமானத்திற்கும், பாடுகளுக்கும், மனிதர்களுடைய உமிழ் நீருக்கும்

ஒப்புக்கொடுத்தேன் என்று இயேசுவைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது 


ஆம் ! ஒப்புக்கொடுப்பது என்பது அன்பின் உச்சக் கட்டமாகும். தேவனையும், அவருடைய சித்தத்தையும் யார் ஒருவர் நேசிக்கிறார்களோ, அவர்களே தங்களை அவருக்கு ஒப்புக்கொடுக்க முடியும் திருமணத்தின்போது பெண்ணானவள் தன்னை ஆணுக்கு மனைவியாகத் தன்னையும், தன்னுடையவைகள் அனைத்தையும் ஒப்புக்கொடுக்கிறாள். 

இது அன்பின் வெளிப்பாடு ஆகும். அப்படித்தான் நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு. நாம் எந்த அளவுக்கு அவரை நேசிக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்க முடியும்.


தேவனை நேசியாமல், நம்மிடம் இருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை நேசியாமல் நாம் அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்க முடியாது.

 பிதாவாகிய தேவனை இயேசு நேசித்தத்தின் விளைவாகவே அவர் தன்னை ஒப்புக் கொடுத்தார். எனவே தேவசித்தம் வாழ்க்கையில் நிறைவேறிற்று. தேவசித்தத்தில் அவர் பாடுபடவேண்டும் என்றும், மனிதர்களுடைய உமிழ்நீரையும், அவமானங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

 என்று இருந்தது. 

எனவே தேவசித்தம் நிறைவேற அவர் தன்னை ஒப்புக்கொடுக்கும் போது, இவைகளுக்கும் தன்னை ஒப்புக்கொடுக்க அவசியமாயிருந்தது


நாமும் தேவனை நேசித்து, அவருடைய சித்தம் நிறைவேற நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, அவமானங்களும், பாடுகளும், நித்தனைகளும் வரலாம். அவைகளுக்காக நம்மையும் நாம் ஒப்புக்கொடுக்க வேண்டும். வேறு வழியில்லை என்பதற்காக அல்லாமல், தேவனை நேசித்து, எல்லாம் என்னுடைய இயேசுவிற்காக என்று எண்ணி, நம்மை ஒப்புவிக்க வேண்டும். அப்பொழுது தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் ஆமென்….


பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்" - ரோமர் 6:19..

Post a Comment

0 Comments