வரங்கள் வேத ஆராய்ச்சி

 வேத ஆராய்ச்சி


வரங்கள்



  • 1.வரங்களின் பெயர்களும், எண்ணிக்கையும் - 1கொரி 12:8-10.


  • 2. வரங்களை அளிக்கிறவர் யார்? -1கொரி 12:4, 8-11.


  • 3. வரங்களை செயல்படுத்துகிறவர் யார்? (1கொரி 12: 4- 51)


  • 4. வரங்களின் நோக்கம் - தேவனுடைய வார்த்தையை உறுதிபண்ணுவது.

(மாற்கு 16:17-20; யோவான் 14:12)


  • 5. வரங்களை யார் பெற்றிருக்க வேண்டும்?

எல்லா விசுவாசிகளும்,1கொரி 12:8-11; 1கொரி 1:7; ரோமர் 1:1)


  • 6.ஒருவர் எல்லா வரங்களும் பெற்றிருக்க முடியுமா? - முடியும் (மத் 17:20; மத் 21:22)


  • 7.யாராவது எல்லா வரங்களும் பெற்றிருக்கிறாரா? - பெற்றிருக்கிறார். (யோவான் 3:34; ரோமர் 15:29; அப் 5:12)


  • 8.பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வரங்களின் அநுக்கிரகம் காணப்பட்டதா? ஆம். காணப்பட்டது. (அப் 1:5; அப் 2:4)


  • 9. வரங்களை தவறாகப் பயன்படுத்த முடியுமா - முடியும். (பிர 2:9)


  • 10. பின்வாங்கிப்போன நிலைமையிலும் வரங்களைப் பயன்படுத்த முடியுமா ?- முடியும். (பிர 2:9; 1கொரி 13:1-3)


  • 11. அசுத்த ஆவியின் கிரியை வெளிப்படும்என்று பயப்பட வேண்டுமா? வேண்டாம். தேவனுடைய பிள்ளையின் மூலமாகத் தேவ ஆவியானவர் மட்டுமே கிரியை செய்வார். (லூக்கா 11:11-13)


  • 12. வரங்கள் நிரந்தரமானதா? தற்காலிகமானதா? - ஒருவர் தனிப்பட்ட ஈவாகப் பெற்றிருக்கும்போது அது நிரந்தரமானது. (ரோமர் 11:29)


  • 13. நம்முடைய சித்தத்தின் பிரகாரம் வரங்களைப் பயன்படுத்த முடியுமா? முடியும். (1கொரி 14:15,23-32


  • 14. வரங்களைப் பயன்படுத்தாமல் புறக்கணிக்க முடியுமா? - முடியும். (1தீமோ 4:14; 2தீமோ 1:6)


  • 15. வரங்களை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்? தேவைப்படும்போது கொரி 12:7; 1கொரி 14:3-6,12,1726)


  • 16.வரங்களை எங்கு பயன்படுத்த வேண்டும் ?- தேவைப்படும் இடங்களில் (1கொரி 12:7,12-31; 1கொரி 14:1-40)


  • 17. வரங்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது ?- விசுவாசத்தினாலும், ஜெபத்தினாலும் (1கொரி 12:31; 1கொரி 14:1; மத் 7:7-11)


  • 18. இன்று நமக்கு வரங்கள் தேவையா? - ஆம் தேவை. 

(மாற்கு 16:15-20)


  • 19. எந்த வரங்கள் நமக்குத் தேவையென்று

நாம் தெரிந்து கொள்ள முடியுமா? - முடியும். (1கொரி 12:31; 1கொரி 14:1,12)


  • 20. நாம் வரங்களைப் பெற்றிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?

- பரிசுத்த ஆவியானவர் நம்மூலமாகக் கிரியை செய்து தமது நோக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம் .கொரி 12: 4; 1கொரி 14:1-40)


  • 21. இந்தக் காலம் முழுவதும் வரங்கள் தொடர்ந்து கிரியை செய்யுமா? - ஆம்,கிரியை செய்யும். (மத் 3:11; மத் 28:20)


வரங்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன:


1. வெளிப்படுத்தலின் வரங்கள்

2. ஏவுதலின் வரங்கள்

3. வல்லமையின் வரங்கள்


 வெளிப்படுத்தலின் வரங்கள்


1. ஞானத்தைப் போதிக்கும் வசனம் (1ராஜா 3:16-28; மத் 2:20)


2. அறிவை உணர்த்தும் வசனம். 

(ஆதி 1:1-2:25; 1சாமு 3:7-15)


3. ஆவிகளைப் பகுத்தறிதல் (மத் 9:4; லூக்கா 13:16; யோவான் 2:25).


ஏவுதலின் வரங்கள்


1.தீர்க்கதரிசனம் உரைத்தல்.

 (அப் 3:21; அப் 11:28; அப் 21:11)


2.பற்பல பாஷைகளைப் பேசுதல்.

 (ஏசா 28:11; மாற்கு 16:17; அப் 2:4)


3.பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல் .1கொரி 12:10; 1கொரி14: 5,13-15,27-28)


வல்லமையின் வரங்கள்


1. விசுவாசம் (ரோமர் 4:17; யாக் 1:5-8)


2. குணமாக்கும் வரங்கள் மாற்கு 16:18)


3 அற்புதங்களைச் செய்யும் சக்தி (1கொரி 15:10, 27-31; எபி 2:3-4)....



Post a Comment

1 Comments